அத்தியாயம் 135
“எங்க வீட்டு பையனுக்கு நீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணி குடுப்பீங்களா மாட்டிங்களா..??” என்று விஷ்வா நேரடியாக காளீஸ்வரனிடம் கேட்டு விட, அவர் உட்பட அனைவரும் ஷாக்காகி நின்று கொண்டிருந்தார்கள்.
“நம்ம மாப்பிள்ளையே நேரடியா அரவிந்த் தம்பிய அவங்க வீட்டு பையன்னு சொல்லி அவருக்காக பொண்ணு கேக்குறாருன்னா.. அவருக்கு அரவிந்த் தம்பி மேல எவ்வளவு நம்பிக்கை இருக்கணும்..?? மேகாவை கட்டிக் கொடுத்த வீட்ல நிலாவையும் கட்டிக் கொடுத்தா அவங்க ரெண்டு பேரும் எப்பயும் ஒன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தையா சந்தோஷமா இருப்பாங்க. என் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்ப போறனேன்னு ஒரே கவலையா இருந்துச்சு. இப்போ அரவிந்த் தம்பிக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா பரவால்லைன்னு தோணுது. ஆனா இந்த கூறு கெட்ட மனுஷன் என்ன சொல்ல போறாரோ தெரியலையே..!!” என்று நினைத்து தன் கணவனை பார்த்தாள் வசந்தி.
ஓரக்கண்ணால் தன் மகளை முறைத்து பார்த்த காளீஸ்வரன் ”என் பொண்ணுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து பேசி முடிச்சாச்சுன்னு நல்லா தெரிஞ்சிருந்தும், இப்ப வந்து நீங்க ஏன் மாப்பிள்ளை இப்படி கேக்குறீங்க..??” என்று கேட்க, “இப்பயும் நம்ம சும்மாவே இருந்தா நல்லா இருக்காது. இந்த நிலா வேற நமக்கு தைரியமே இல்லைன்னு செல்லி காட்டி அசிங்கப்படுத்துறா..!! Come on அரவிந்த் உனக்காக நீதான் பேசனும்” என்று நினைத்த அரவிந்த்,
“நானும் உங்க பொண்ணு வெண்ணிலாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம் சார். எனக்கு ரொம்ப நாளாவே நிலா மேல லவ் இருந்துச்சு. ஆனா அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம குழம்பிட்டே இருந்து இத்தனை நாளா என் லவ்வ அவகிட்ட சொல்லாமயே இருந்துட்டேன். இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நேத்து மனசு உடைஞ்சு அவ அழுததை பார்த்ததுக்கு அப்புறம்தான் அவளுக்கும் என்னை புடிச்சிருக்குன்னே எனக்கு புரிஞ்சது. ஏதோ தைரியத்துல நான் என் மனசுல இருந்ததை அவகிட்ட சொல்லிட்டேன். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மனசார உண்மையா லவ் பண்றோம். ப்ளீஸ் சார்.. எங்களை பிரிச்சிடாதீங்க…!!” என்றவன் நேராக சென்று காளீஸ்வரனின் காலில் விழுந்தான்.
வந்த கோபத்தில் அப்படியே அவனை உதித்து தள்ளிய காளீஸ்வரன், “உனக்கு எவ்ளோ திமிரு தெனாவட்டு இருந்தா, என் பொண்ண காதலிக்கிறேன்னு வந்து என் முன்னாடியே இத்தனை பேர் இருக்கும்போது நெஞ்சை நிமித்திக்கிட்டு சொல்லுவ..??” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்த, தானும் கோபப்பட்டு தன் கையில் இருந்த தட்டை விசிறி அருகில் இருந்த சுவற்றில் அடுத்த விஷ்வா “நான் அவன எங்க வீட்டு பையன்னு சொன்னேன்.
உங்களுக்கு அது ஞாபகம் இருக்கா இல்லையா..?? அவன் என் தம்பி மாதிரி. என் கண்ணு முன்னாடியே நீங்க அவன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டா இந்த வீட்ல எனக்கு என்ன மரியாதை..??” என்று தன் பங்கிற்கு கேட்டான்.
“நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளைன்னா, உங்களை மட்டும்தான் எங்களால மதிக்க முடியும். கண்டவன் எல்லாம் என் பொண்ண காதலிக்கிறேன்னு வந்து நிற்பான்.. உடனே நான் பல்ல ஈளிச்சிகிட்டு அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணுமா..?? இவன் உங்கக்கூட பிறந்த தம்பியா இருந்தாக்கூட நான் இவனுக்கு என் பொண்ண கட்டி கொடுக்க மாட்டேன். உங்களுக்கு தம்பி மாதிரி தானே அவனுக்காக நீங்க ஏன் இவ்ளோ பேசுறிங்க..??” என்று காளீஸ்வரன் கோபமாக கேட்க, அவரை முறைத்துப் பார்த்தான் விஷ்வா.
“என்ன அண்ணா பேசுறீங்க நீங்க..?? அப்போ நான் உங்க வீட்ல பொண்ணு எடுத்தா, உங்க வீட்ல இருக்கிறவங்கள மட்டும்தான் மதிப்பேன். உங்க சொந்த பந்தத்தை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. அவங்களையெல்லாம் நான் ஒரு ஆளாவே மதிக்க மாட்டேன்னு அவர் சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா..?? இவங்கக்கூட எல்லாம் சேர்ந்து நான் பேசி பழகி கொஞ்ச நாள் தான் ஆகுது. அதுக்குள்ள நாங்க எல்லாரும் ஒரு family ஆகிட்டும். உங்களையும், முத்து அண்ணாவையும் மாதிரி அரவிந்த் அண்ணாவும் எனக்கு முக்கியம் தான். நீங்க அவர்கிட்ட இப்படி பேசுறது எனக்கே பிடிக்கல. என் வீட்டுக்காரர் இதையெல்லாம் எப்படி பார்த்துட்டு சும்மா இருப்பாரு..?? எங்களுக்கு அரவிந்த் அண்ணா, நிலா இரண்டு பேருமே முக்கியம். அதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழட்டும்னு நாங்க நினைக்கிறோம்.” என்று மேகா தன் பங்கிற்கு செல்ல,
அதுவரை தன் முகத்தை மூடிக்கொண்டு ஓரமாக நின்று அழுதபடி இருந்த வெண்ணிலா “அப்பா ப்ளீஸ் அப்பா.. சொன்னா புரிஞ்சுக்கோங்க. என் மனசுல அரவிந்த் தான் இருக்காரு. இப்படி மனசுல ஒருத்தன வச்சுக்கிட்டு, இன்னொருத்தன்க் கூட என்னால எப்படி வாழ முடியும்…?? உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன் அப்பா… தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைங்க. இத தவிர நான் உங்க கிட்ட வேற எதையுமே கேட்க மாட்டேன். முடியாதுன்னு சொல்லிடாதீங்கப்பா. ப்ளீஸ்..!!” என்றுவிட்டு காளீஸ்வரனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
அதனால் வேகமாக அவள் அருகில் சென்று காளீஸ்வரன் அவருக்கு மற்றவர்கள் மீது இருந்த கோபத்தையும் மனதில் வைத்து பளார் பளார் என்று தனது இரும்பு கரங்களால் நிலாவின் கன்னத்தில் அறைய, “ஆஆஆ.. அம்மா..!!” என்று சத்தமாக அலறினாள் நிலா.
அதிர்ந்த மேகா, “என்ன அண்ணா பண்றீங்க..?? விடுங்க அவள. அவ பொறந்ததுல இருந்து நீங்க அவகிட்ட கோவமா பேசிக்கூட நான் பாத்தது இல்ல. இன்னைக்கு நீங்க அவளுக்கு புடிச்சி இருக்கா இல்லையான்னுக் கூட கேட்காம கல்யாண பேச்ச ஆரம்பிச்சீங்க. அதான் அவ அவளோட மனசுல இருக்குறத சொல்லிட்டா. அதுக்குன்னு இப்படி எல்லார் முன்னாடியும் நிக்க வச்சு அவளை அடிப்பீங்களா..?? இதெல்லாம் கொஞ்சம்க்கூட நல்லா இல்ல அண்ணா. நம்ம வீட்டு பொண்ணு சந்தோஷத்தை விட உங்களுக்கு உங்க குடும்ப கவுரவமும், egoவும் தான் முக்கியமா..??” என்று கேட்டாள்.
“உன்னை நாங்க கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பியாச்சு. இனிமே உன் புருஷன் வீடு தான் உனக்கு எல்லாம். என் பொண்ணு வாழ்க்கையில முடிவு எடுக்கிற அதிகாரம் உனக்கும் இல்லை. இங்க இருக்கிற வேற யாருக்கும் இல்ல. இன்னொரு தடவை இந்த வீட்ல காதல் கண்டிறாவின்னு யார் பேசினாலும் சரி. நான் பதிலுக்கு வாயில பேசிட்டு இருக்க மாட்டேன். என் அருவாதான் பேசும். நிலாவோட கல்யாணம் ஏற்கனவே அஸ்வினோட தான்னு முடிவு பண்ணியாச்சு. அந்த தம்பி தான் இந்த வீட்டு மாப்பிள்ளை.
இத யார் மாத்த நினைச்சாலும் இங்க பல கொலைகள் விழும். உயிரை விட ஆசை இருக்கிறவங்க உங்க இஷ்டத்துக்கு என்னமோ பண்ணுங்க. என்னால என்ன முடியுமோ அத நான் பண்ணிக்கிறேன்.” என்ற காளீஸ்வரன் வேக எட்டுகள் வைத்து வெளியே சென்று விட்டார்.
“நமக்கு மரியாதை இல்லாத இடத்தில நம்ம ஒரு second கூட இருக்கக் கூடாது. வாடி போலம்.” என்ற விஷ்வா மேகாவின் கையை பிடித்து அவளை இழுத்துக்கொண்டு வெளியே செல்ல, “கொஞ்சம் இருங்க விஷ்வா தம்பி. அந்த மனுஷன்தான் எதையும் புரிஞ்சிக்காம வீம்புக்கு பண்றாருன்னா.. எல்லாம் தெரிஞ்ச விவரமான ஆளு நீங்க… நீங்களும் ஏன் கோச்சிக்கிட்டு கிளம்பறீங்க..??” என்ற வசந்தி ஓட்டமும் நடையுமாக அவர்களை பின் தொடர்ந்து சென்றாள்.
கீழே விழுந்து கிடந்த அரவிந்தும் எழுந்து காரை நோக்கி செல்ல, “அவ்ளோதான்.. இனிமே நான் ஆசைப்பட்டது எதுவும் நடக்காது.” என்று நினைத்த நிலா அழுது கொண்டே அவளது ரூமிற்கு ஒடி சென்று doorஐ lock செய்து விட்டாள்.
வாசலுக்கு சென்று விஷ்வா அவனது carஐ Start செய்வதற்குள் அவர்களிடம் வசந்தி தொடர்ந்து கெஞ்ச “sorry அண்ணி. இதுக்கு மேல நாங்க இங்க இருந்தா நல்லா இருக்காது. நீங்க எங்கள பத்தி யோசிக்காம உள்ள போய் நிலாவ பாருங்க. அவ ரொம்ப மனசு உடைஞ்சு போயிருப்பா.” என்று மேகா சொல்ல சொல்ல அவர்களது கார் அங்கிருந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.
அரவிந்த் விஷ்வாவின் காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்க, “நீங்க feel பண்ணாதீங்க அண்ணா. கொஞ்ச நாள் போகட்டும். என்ன பண்ணலாம்னு பாக்கலாம்.” என்று சொல்ல,
“இல்லம்மா வேண்டாம். எப்போ என்னால இத்தனை வருஷமா பாசமா வளர்த்த அவ அப்பாவே அவள கை நீட்டி அடிச்சுட்டாரோ.. இதுக்கு மேலயும் அவ தான் வேணும்னு போய் நின்னு தேவையில்லாம நல்லா இருக்கிற குடும்பத்துல நான் problem create பண்ண விரும்பல. இப்ப பாரு.. நீயும், விஷ்வா சாரும், எங்களுக்காக சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு வந்துட்டீங்க..!! எனக்கு இதையெல்லாம் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்குமா. இதை இப்படியே விட்டுரலாம். நடக்கிறது நடக்கட்டும். எனக்கு நிலா இல்லைன்னு என் தலையில எழுதி இருந்தா அத யாரால மாத்த முடியும் சொல்லு..?? நிலாக் கூட பேசி இனிமே சத்தியமா நான் அவளை disturb பண்ண மாட்டேன். So இனிமே அவளை அடிக்க வேண்டாம்னு மட்டும் உங்க அண்ணா கிட்ட சொல்லிருமா ப்ளீஸ்..!! எனக்கு நீங்க எல்லாம் இருக்கீங்கள்ல.. அது போதும்.” என்ற அரவிந்தின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் அருவி போல கொட்டியது.
தொடரும்.