அத்தியாயம் 196
அர்ஜுன் சொன்ன பிளானை அப்படியே எக்ஸிக்யூட் செய்து இரண்டாவதாக வந்த ரேஸ்கியூ டீமை சேர்ந்தவர்கள் அர்ஜூனின் குடும்பத்தில் உள்ளவர்களை தங்களது பாதுகாப்பு வளையத்திற்கு கீழே கொண்டு வந்து தனித் தனி குடும்பமாக அப்படியே வெளியில் அழைத்து சென்றார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த சர்வேலென்ஸ் டீமில் உள்ளவர்கள் அர்ஜுனிற்க்கு நொடிக்கு நொடி இன்டர்காம் மூலமாக அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
“சார் நீங்க சொன்ன மாதிரி 10 மினிட்ஸ்ல எல்லாரையும் நாங்க பத்திரமா வெளிய அனுப்பிட்டோம். மிச்சம் இருந்த டெரரிஸ்ட் எல்லாரையும் ஒரே இடத்துல லாக் பண்ணி கன் பாயிண்ட்ல உட்கார வச்சிருக்கோம். இப்போ உள்ளே ஜனனி மேடம் அவங்களோட குழந்தைங்க கூட சந்தோஷ் சார் பக்கத்துல இருக்காங்க. பிரிட்டோ சார் இன்னும் அவங்க செக்யூரிட்டிக்காக அவங்க கூட இருக்காரு. இப்ப வரைக்கும் ரேஸ்கியூ டீம் வந்தது பத்தியோ, மத்தவங்க எல்லாரும் வெளிய போயிட்டதை பத்தியோ ஜனனி மேடமுக்கும் சந்தோஷ் சாருக்கும் தெரியாது. இப்போ அவங்களை என்ன பண்றது சார்?” என்று சர்வைலென்ஸ் டிமில் இருந்த ஒருவன் இன்டர்காம் மூலமாக கேட்க, சில நொடிகள் அமைதியாக எதையோ யோசித்த அர்ஜுன் “அவங்க இங்கயே இருக்கட்டும். நான் அவங்கள பார்த்துக்கிறேன். நீ பிரிட்டோ கூட எனக்கு கனெக்ட் பண்ணு. நான் அவன் கிட்ட பேசணும். நீயும் என்னோட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாத்தையும் கிளியரா கேட்டுக்கோ. நம்ம மிஷின்ல இது தான் லாஸ்ட் ஸ்டேஜ். இத மட்டும் கரெக்டா கிராஸ் பண்ணிட்டா, இவ்ளோ தூரம் நான் ரிஸ்க் எடுத்து எல்லாமே பண்ணுதுக்கு ஒரு பலன் கிடைக்கும்.” என்றான் அர்ஜுன்.
“ஓகே சார்! நாங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க. நம்ம ஆளுங்க எல்லாரும் ரெடியா தான் இருக்காங்க.” என்று அவன் உறுதியான குரலில் சொல்ல, “ம்ம்.. தேன்மொழிக்கு என்ன ஆச்சு? அவளை என் பேரன்ட்ஸ் கூட ரேஸ்கியூ டீமோட ஹாஸ்பிடலுக்கு அனுப்ப சொன்னனே.. அது என்ன ஆச்சு அவங்க அங்க ரீச் ஆயிட்டாங்களா? என் வைஃப் இப்ப எப்படி இருக்கா?” என்று சோகமான குரலில் கேட்டான் அர்ஜுன்.
“தேன்மொழி மேடமோட ஹெல்த் கண்டிஷன் பத்தி இன்னும் எந்த அப்டேட்டும் வரல சார். பட் இங்க இருந்து எல்லாரும் ரெஸ்க்யூ டீமோட சேஃபா வெளிய போய்ட்டாங்க. மேபி அவங்க இப்ப தேன்மொழி மேடமை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு இருக்கலாம்.” என்று மறுமுனையில் இருந்தவன் சொல்ல, அப்படித் தான் இருக்கும் என்று நினைத்த அர்ஜுன் இந்த விளையாட்டை சீக்கிரம் முடித்து வைத்துவிட்டு அவனது தேன்மொழியிடம் சீக்கிரமாக செல்ல வேண்டும் என நினைத்தான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஜனனியின் ஒரு குழந்தையை பேபி வாக்கெரில் படுக்க வைத்து தள்ளிக் கொண்டு சென்ற பிரிட்டோ “மேடம் சீக்கிரம் உங்க குழந்தையை தூக்கிட்டு வாங்க! சீஃப் நம்மள என்ட்ரன்ஸ் கிட்ட வர சொல்லி இருக்காரு. நம்மள பத்திரமா வெளிய கூட்டிட்டு போக இன்னும் நிறைய பேர் வந்திருக்காங்க.” என்று ஜனனியிடம் சொல்ல, தன் கையில் இருந்த இன்னொரு குழந்தையை பேபி வாக்கரில் படுக்க வைத்த ஜனனி சந்தோஷின் கைகளைப் பிடித்துக் கொண்டு “சீக்கிரம் வா சந்தோஷ்! முதல்ல இந்த இடத்தை விட்டு நம்ம வெளியே போகணும். எனக்கு இங்க இருக்கிற ஒவ்வொரு செகண்டும் பயமா இருக்கு. நமக்கு ஏதாவது ஆயிட்டா, குழந்தைங்க என்ன பண்ணுவாங்கன்னு கவலையா இருக்கு. குழந்தைகளுக்கு ஏதாவது ஆயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சா உயிரே போகுற மாதிரி இருக்கு.” என்று சொல்லிவிட்டு அழுதாள்.
“வரேண்டி சரியான அழுமூஞ்சி! அந்த அர்ஜுனுக்கு போய் தங்கச்சியா பொறந்துட்டு எப்படித் தான் நீ இவ்ளோ டம்மி பிசா இருக்கியோ தெரியல! ஆனா நீ மட்டும் இப்படி இல்லனா, என்னால உன்னை ஈசியா கரெக்ட் பண்ணி இருக்க முடியாது. இந்த அர்ஜுன் எனக்கு தெரியாம என்னமோ பண்றானு மட்டும் புரியுது. ஆனா அது என்னன்னு மட்டும் தெரியல. இருக்கட்டும் எதுவா இருந்தாலும், எனக்கு தெரியாம எங்க போகப்போகுது?
நான் இந்த வீட்டோட மாப்பிள்ளை. என்ன யாராலயும் எதுவும் பண்ண முடியாது. மறுபடியும் பக்காவா பிளான் போட்டு ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்க எல்லாரையும் கூண்டோட கைலாசம் அனுப்பிவிட்டு நான் இந்த மொத்த சாம்ராஜ்யத்துக்கும் ராஜாவா வாழத்தான் போறேன். அன்னைக்கு அர்ஜூனும் இருக்க மாட்டான். இந்த ஜனனியும் இருக்க மாட்டா.” என்று நினைத்து தனக்குத் தானே வில்லத் தனமாக சிரித்துக் கொண்ட சந்தோஷ், “ஆமா ஆமா ஜானு சீக்கரம் வா நம்ம வெளிய போயிடலாம்! நான் தனியா இங்க வந்து இருந்தா கூட எனக்கு ஏதாவது ஆயிடுமோனு நெனச்சு நான் பயந்து இருக்க மாட்டேன். இப்ப நீயும் நம்ம குழந்தைகளும் என் கூட இருக்கும்போது உங்கள பத்திரமா காப்பாத்தி இங்க இருந்து கூட்டிட்டு போக வேண்டியது என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. நீ பயப்படாத. என் உயிரை கொடுத்தாவது நான் உங்க மூணு பேரையும் காப்பாத்துவேன்.” என்று அவளை நம்ப வைப்பதற்காக மூச்சுப்பிடித்து லெந்தியாக டயலாக் பேசினான்.
“ஐயோ ப்ளீஸ் சந்தோஷ் அப்படியெல்லாம் பேசாத! நீ இல்லாம நாங்க மூணு பேரும் மட்டும் எப்படி ஹாப்பியா இருப்போம்? அண்ணா நம்ம எல்லாரையும் சேஃபா வெளிய கூட்டிட்டு போயிடுவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று எமோஷனலாகி சொல்லிவிட்டு ஜனனி அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.
இந்த சந்தோஷ் போடும் டிராமாவை எல்லாம் பார்த்து பார்த்து கடுப்பாகி கொண்டு இருந்த பிரிட்டோ “சார் சீக்கிரம் வாங்க! லேட் ஆகுது. சீஃப் நம்ம ரெண்டு நிமிஷத்துல அங்க இருக்கணும்னு சொன்னாரு.” என்று எரிச்சலுடன் சொன்னான்.
ஜனனியை அணைத்தவாறு அங்கே நின்று கொண்டு இருந்த சந்தோஷ் “ம்ம்.. போலாம்!” என்று சொல்லிவிட்டு பிரிட்டோவை பார்த்து முறைத்தான். பின் அவன் தன்னை கவனிப்பதற்குள் தனது பேஸ் எக்ஸ்பிரஷனை மாற்றிக் கொண்டு ஜனனியுடன் என்ட்ரன்ஸை நோக்கி நடக்க தொடங்கினான். அவர்களது குழந்தைகள் இரண்டும் பேபி வாக்கரில் பிரிட்டோவின் பாதுகாப்பில் இருந்தது.
அவர்கள் அனைவரும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு எண்ட்ரன்ஸ் அருகில் செல்ல, அங்கே கவச உடையில் அர்ஜுன் நின்று கொண்டு இருந்தான். முதலில் அவனை அடையாளம் தெரியாமல் குழப்பத்துடன் பார்த்த ஜனனி பிரிட்டோ அவனைப் பார்த்து சீஃப் என்று சொல்லி பேசியதை வைத்து அது அர்ஜுன் தான் என புரிந்து கொண்டு ஓடி சென்று அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு “அண்ணா எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா! ப்ளீஸ் எங்கள இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க.” என்று சொல்லிவிட்டு கதறி கதறி அழுதாள்.
அவளை அன்புடன் அனைத்து கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டு இருந்த ஹெல்மெட்டை கழட்டி தரையில் வீசி எறிந்த அர்ஜுன் “அழாத ஜனனி! உனக்கு உன் அண்ணன் நான் இருக்கேன். என்ன மீறி யாராலயும் இங்க ஒன்னு புடுங்க முடியாது. என்னை தாண்டி தான் எவனா இருந்தாலும் உன் பக்கத்துல வர முடியும்.” என்று சந்தோஷை பார்த்து முறைத்தபடியே சொன்னான்.
“இவன் எதுக்கு என்னை இப்படி பார்க்கிறான்? இவன் பார்வையே சரியில்லையே! ஒருவேளை நம்மள பத்தியும் இவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சா? சேச்சே.. அதுக்கு எல்லாம் சான்சே இல்லையே! எத்தனை வருஷமா நான் இவங்க ஃபேமிலி கூடவே இருக்கேன்.. அதுவும் நான் அவனோட தங்கச்சி புருஷன்.
என் மேல இவனுக்கு எதுக்கு சந்தேகம் வரப்போகுது? ஒருவேளை நடுவுல நான் ஜனனியை தனியா விட்டுட்டு போனது தெரிஞ்சு இவன் அதுக்காக என் மேல கோபத்துல இருக்கான்னு நினைக்கிறேன்.” என்று தனக்கு தானே பேசிக் கொண்ட சந்தோஷ் அர்ஜுனின் மனதில் இருப்பதை படிக்கும் நோக்கில் அவனை குறுகுறு என்று ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று ஜனனியை தன்னை விட்டு பிரித்து நிறுத்திய அர்ஜூன் அவளை தனக்கு பின்னே நகர்த்தி நிற்க வைத்துவிட்டு அவன் கையில் இருந்த பெரிய பிஸ்டலை சந்தோஷின் நெற்றி பொட்டுக்கு நேராக நீட்டி “இன்னைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரிய போகு!” என்று கோபத்தில் சிவந்த கண்களோடு சொன்னான்.
அதில் ஷாக்கான சந்தோஷ் அர்ஜுனை விரிந்த விழிகளுடன் பார்க்க, அவன் பார்வை பின் பிரிட்டோவின் பக்கம் செல்லும்போது அவனும் தன் கையில் இருந்த துப்பாக்கியை சந்தோஷ் பக்கம் நீட்டி பிடிக்க தொடங்கினான். ஏற்கனவே அங்கே வந்திருந்த டெரரிஸ்ட் கும்பலில் இருந்தவர்கள் செத்துவிட்ட நிலையில், மீதம் இருப்பவர்கள் அர்ஜுனனின் பிடியில் இருந்தார்கள். ஆனால் இப்போது அவன் எதற்காக சந்தோஷை டார்கெட் செய்கிறான்??
மீண்டும் வருவாள் 💕