Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 220

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 220

by Thenaruvi Tamil Novels
6 views

அத்தியாயம் 220: ஏண்டா இடியட் இப்படி பண்ண (பார்ட் 2)

அது மட்டும் இன்றி தன்னுடைய ஸ்மார்ட் வாட்ச் இன் மூலம் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் போது இது தன்னுடைய கைகளையும் மீறி சென்று கொண்டு இருக்கிறது. என்று அவளுக்கு எப்போது தோன்றியதோ அப்போதே எமெர்ஜென்சி அலர்ட் மெசேஜ் ஐ வருணிக்கு அனுப்பிவிட்டாள். அதனால் அவளுடைய லைவ் லொகேஷன் ஐ பர்சனல் ஆக காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களை முன்னே சென்று க்ரிஷாவையும், சந்தோஷையும், காப்பாற்றும் படி சொல்லி அனுப்பிய வருண்; பின்னே தானும் தன்னுடைய பாடி கார்டுகள் படையுடன் அங்கே வந்து கொண்டு இருந்தான்.

சந்தோஷின் உடம்பில் இருந்த கத்திக்குத்து மிகவும் ஆழமாக இருந்ததால், அவனுடைய உடலில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறி கொண்டு இருந்தது. அதை கவனித்த க்ரிஷா வேகமாக தன்னுடைய  கார் நின்று கொண்டு இருந்த இடத்திற்கு சென்று அதன் உள்ளே இருந்த தன்னுடைய சால் ஒன்றை எடுத்து கொண்டு வந்து அதை சந்தோஷின் காயத்தை சுற்றி இறுக்கமாக கட்டினாள். அப்போது க்ரிஷாவின் அருகே வந்த ஒரு இன்ஸ்பெக்டர், “மேடம் நான் வேணும்னா ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணட்டுமா..??”  என்று கேட்டார்.

ஏற்கனவே கை தாங்களாக சந்தோஷை பிடித்து தூக்கி கொண்டு இருந்த க்ரிஷா, “இல்ல சார் இதுக்கு மேல ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி அவங்க இந்த லொகேஷன் ஐ ரீச் பண்றதுக்கு டைம் ஆயிடும். ஆல்ரெடி இவனுக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆயிடுச்சு. நான் பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு இவனை கூட்டிட்டு போய் அட்மிட் பண்றேன். வருண் ப்ரோ இங்க வந்தாருன்னா, அவர் கிட்ட நடந்ததை இன்ஃபார்ம் பண்ணிருங்க. மத்த ப்ரசீஜர்ஸ் எல்லாத்தையும் அவரே பாத்துக்குவாரு.” என்றாள். அதனால் சந்தோஷை அவள் அவளுடைய காரில் ஏற்றுவதற்கு உதவிய அந்த இன்ஸ்பெக்டர், அனைத்தையும் தன் பார்த்துக் கொள்வதாக அவளுக்கு உறுதி அளித்துவிட்டு அவளை அங்கு இருந்து அனுப்பி வைத்தார். 

செல்லும் வழியிலேயே வருணின் கால் செய்த க்ரிஷா, அவர்கள் இருக்கும் லொகேஷன் -க்கு அருகே உள்ள மருத்துவமனை எது என்று கேட்டு தெரிந்து கொண்டவள்; அவள் அங்கே செல்வதற்கு முன் அந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு தாங்கள் அங்கே வரும் தகவலை அவர்களுக்கு சொல்லி வாசலிலேயே அனைத்தையும் தயாராக வைத்துவிடும் படி சொல்லி விடுங்கள் என வருணிக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தாள். 

வருனும் அவள் சொன்னதைப் போல் அப்படியே செய்தான். அதனால் அடுத்த ஐந்தே நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவமனையில் எந்த ப்ரொசீஜரும் இல்லாமலும், இடையூறு இல்லாமலும், அட்மிட் செய்து விட்டாள் க்ரிஷா. சிவாவின் மூலம் சந்தோஷம் அம்மா சாரதாவிற்கு சந்தோஷின் நிலையை பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது. அந்நேரம் பள்ளியில் இருந்த சாரதா, அந்த தகவலை கேட்டு அதிர்ந்து கண்ணீர் நிறைந்த கண்களுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஆட்டோவை பிடித்து கனத்த இதயத்துடன் தன் மகனை பார்ப்பதற்காக ஓடோடி வந்தாள். சாரதா வருவதற்குள் வருனும் அங்கே சிவாவுடன் வந்து சேர்ந்தான். 

 சந்தோஷ் அட்மிட் செய்யப்பட்டு இருந்த அறைக்கு வெளியே சோகமாக தன்னுடைய தலையை கீழே குனிந்த படி அமர்ந்து இருந்தாள் க்ரிஷா. 😓 😣 ஒரு வேளை தான் முன்பே சந்தோஷ் சொன்னதை கேட்டு அப்படியே செய்து இருந்தால் இப்போது தன்னால் அவனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று நினைத்த கிரிஷா, குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டு இருந்தாள். 💔 அதனால் பல வருடங்களுக்கு பின்பு அவள் இல்லை என்று முடிவு செய்து வைத்து இருந்த எல்லாம் வல்ல இறைவனை, சந்தோஷ் குணமடைய வேண்டும் என்பதற்காக மனம் உருகி தனக்குள் பிரார்த்தித்தாள். 🙏

க்ரிஷாவை குற்ற உணர்ச்சி நிறைந்த கண்களுடன் பார்த்து சோகமாக வந்து அவள் அருகே அமர்ந்த வருண், “ஐ அம் சாரி க்ரிஷா  இட்ஸ் மை மிஸ்டேக். நான் எல்லாருக்குமே ப்ரொடெக்ஷன் கொடுத்தேன். சேஃப்டி மேச்ர்ஸ் எல்லாத்தையும் இன்க்ரீஸ் பண்ணுனேன். ஆனா உன்ன மட்டும் மறந்துட்டேன். என்ன டெஸ்ட் ட்ரை பண்ணனும்னு நினைக்கிறவங்க உன்ன கூட டார்கெட் பண்ணுவாங்கன்னு நான் யோசித்துக் கூட பாக்கல. 

எது எப்படி இருந்தாலும் நான் இப்ப வந்து இப்படி பேசுறது தப்பு தான். நான் எல்லாத்தையும்் யோசிச்சி இருக்கணும். எனக்கு இருந்த பிரச்சனைல இப்போ நான் உன்னையும் உள்ள இழுத்து விட்டுட்டேன். ரியலி ஐ அம் வெரி சாரி மா.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னான். 😓 💔 🙏

க்ரிஷா: “ஐயோ ப்ரோ நீங்க இவ்ளோ கில்டியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. உங்களால எல்லாரையும் 24/ 7 சர்வேலென்ஸிலேயே வைத்திருக்க முடியாது. ஆக்சுவலி இட்ஸ் ஆல் மை மிஸ்டேக். நான் தான் சந்தோஷ் சொல்லியும் கேட்காமல் கார்ல இருந்து கீழே இறங்கி வெளியில வந்தேன். நான் போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டதுனால எப்படியும் அவங்க சீக்கிரம் வந்துருவாங்க.. அவங்க வர்ற வரைக்கும் என்னால சமாளித்து விட முடியும்ன்ற நம்பிக்கையில நான் இருந்துட்டேன். ஆனா நான் அப்படி பண்ணி இருக்காம சந்தோஷ் சொன்னத ஒழுங்கா கேட்டு இருந்தா, இப்போ சந்தோஷுக்கு இப்படி ஆகி இருக்காது. நான் தான் உங்ககிட்ட சாரி கேட்கணும். ப்ளீஸ் அக்சப்ட் மை அப்பாலஜிஸ் ப்ரோ. என்னோட ஸ்டாஃப் ஐ நான் தான் ஒழுங்கா பாத்துக்கல. பட் சந்தோஷ் சேவ்டு மை லைஃப். அவன் இல்லைனா இந்நேரம் நான் உங்க முன்னாடி உயிரோட இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருப்பனான்னு எனக்கு தெரியல. அவனுக்கு எதுவும் ஆக கூடாது ப்ரோ.” என்று கண்கள் கலங்க வலி நிறைந்த குரலில் சொன்னாள். 😣🥺

பல வருடங்களுக்குப் பிறகு க்ரிஷா இவ்வளவு எமோஷனல் ஆகி பேசுவதை இப்போது தான் வருண் பார்க்கிறான். அதனால் சந்தோஷ் தன்னுடைய உயிரை காப்பாற்றியதால் அவள் இப்படி இருக்கிறாள் என்பதை தாண்டி அவளுக்கு சந்தோஷின் மீது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு இருக்கிறது என்று வருணிக்கு  தோன்றியது அதனால் ஆறுதலாக அவளுடைய தோள்களில் தட்டி வருண், “டோன்ட் வரி க்ரிஷா. சந்தோஷுக்கு எதுவும் ஆகாது. நீ உன்னையே பிளேம் பண்ணிக்கிட்டு கில்டியா ஃபீல் பண்ணாத.” என்று அவன் க்ரிஷாவிடம் சொல்லி கொண்டு இருக்க அங்கே வந்து சேர்ந்தாள் சந்தோஷின் அம்மா சாரதா.

சாரதாவை பார்த்தவுடன் எழுந்து அவள் அருகே சென்ற வருண், நடந்தவற்றை அனைத்தையும் அவளிடம் தெளிவாக எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டு பயந்து போன சாரதா, “இப்போ என்னோட பையன் எப்படி இருக்கான் சார் டாக்டர் என்ன சொன்னாரு..??? எனக்கு அவனை விட்டா வேற யாரும் இல்ல சார். அவனுக்கு ஏதாவது ஆச்சின்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.” என்று உணர்ச்சி பொங்க அழுது கொண்டே சொன்னாள். 😭 😭 😭 “டாக்டர் உள்ள அவனுக்கு ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்காங்க மேடம். நான் ஆல்ரெடி இந்த ஹாஸ்பிடல் ஓனர் கிட்ட பேசிட்டேன். இங்க இருக்கிற பெஸ்ட் டாக்டர் தான் அவன ட்ரீட் பண்ணிட்டு இருக்காங்க. அவனுக்கு எதுவும் ஆகாது மேடம். பழையபடி அவனை உங்ககிட்ட ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.” என்று சொல்லி வருண் சாரதாவிற்கு வாக்குறுதி கொடுத்தான்.

இருப்பினும் வருண் தன் வாயை திறந்து சந்தோஷ் நன்றாக இருக்கிறான் என்று டாக்டர் சொன்னதாக சொல்லவில்லை என்பதால் அதை நினைத்து கவலைப்பட்ட சாரதா, வருணிக்கு  பதில் சொல்லாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். 😭 😭 😭 அந்த பாவப்பட்ட தாயின் அழுகுரலை பொறுத்துக் கொள்ள முடியாமல் சாரதாவின் அருகே எழுந்து சென்ற க்ரிஷா, “சாரி மேடம். இட்ஸ் மை ஃபால்ட்.” என்றவள் கையெடுத்துக் கும்பிட்டு சாரதாவிடம் மன்னிப்பு கேட்டாள். 🥺 🥺 🙏

சாரதாவின் மனம் முழுவதும் இப்போது அவளுடைய மகன் சந்தோஷ் தான் நிறைந்து இருந்தான். அதனால் க்ரிஷாவின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவளுக்கு மன்னிப்பு வழங்கும் மன நிலையில் எல்லாம் அவள் இருக்கவில்லை. சாரதா க்ரிஷாவை கண்டு கொள்ளாமல் மீண்டும் அழ தொடங்கினாள்.😭 😭 😭 அதனால் கனத்த இதயத்துடன் மீண்டும் சென்று தான் அமர்ந்து இருந்த சேரிலேயே அமர்ந்து கொண்டாள் க்ரிஷா. வருனும் அவள் அருகே அமர்ந்த டாக்டரின் வருகைக்காக காத்திருந்தான். 

ஒரு மணி நேரத்திற்கு பின்…

சந்தோஷ் அட்மிட் செய்யப்பட்டு இருந்த அறையில் இருந்து வெளியே வந்தார் டாக்டர். அவரை கண்டவுடன் வேகமாக அவர் அருகே சென்று சந்தோஷை பற்றி விசாரித்தாள் க்ரிஷா. க்ரிஷாவை முந்திக்கொண்டு முன்னே சென்ற சாரதா, “நான் தான் சார் அவனோட அம்மா. சந்தோஷ் இப்ப எப்படி இருக்கான்..?? அவனோட உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே..??” என்று பதட்டமான குரலில் கேட்டாள். 🥺 😣 😟

டாக்டர்: அந்தக் கத்திக்குத்து ரொம்ப ஆழமா தான் இறங்கி இருக்கு. ஆனா நீங்க இப்ப அத நினைச்சு கவலைப்பட தேவை இல்லை. ஸ்டார்டிங்ல அவருக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆகி இருந்துச்சு. எங்க பிளட் பேங்க்லயே அவரோட பிளட் குரூப் அவைலபிலாய் இருந்துச்சு. அதனால நாங்க உடனே அவருக்கு ஆபரேஷன் பண்ணிட்டோம். அவருக்கு  ஸ்டிச்சஸ் போட்டு இருக்கோம். 

பட் ஆபரேஷன் சக்சஸ். இப்போ அவர் டேஞ்சரான சுச்சுவேஷன் எல்லாத்தையும் தாண்டி வந்துட்டாரு. அவருக்கு மயக்கம் தெளியறதுக்கு மட்டும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மேல ஆகும். அவரு கண்ணு முழிச்சுட்டார்னா, நீங்க அதுக்கு அப்புறமா போய் பாருங்க மேடம்.” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டார். 

அதனால் வருண், க்ரிஷா, சாரதா, மூவரும் சந்தோஷ் கண் விழிப்பதற்காக காத்ருக்க தொடங்கினர். இதற்கிடையில் மீண்டும் எதிரிகளால் தங்களுக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக வருண் இந்த மருத்துவமனைக்கும் அவனுடைய குடும்பத்தினர் இருக்கும் இடம் அனைத்திற்கும் பாதுகாப்பை அதிகரித்தான். சில நிமிடங்களுக்கு பின் அங்கே ஹரியுடன் சிவாவும் வந்து சேர்ந்தான். வழக்கம் போல் க்ரிஷா ஹரியை புறக்கணித்து விட்டாள்.  அதனால் வருனிடம் நடந்தது என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டான் ஹரி. 

சந்தோஷ் நாராயணன் குரூப்ஸ் உடன் இணைந்து வெகுசில நாட்களே கடந்து இருந்தாலும், கூட நிறைய முக்கியமான விஷயங்களில் க்ரிஷாவிற்கு துணையாக சந்தோஷ் நாராயணன் குரூப்ஸ் -க்கு உதவி இருக்கிறான் என்பதால்் வருண், ஹரி, சிவா, என அனைவரும் அவன் கண் முழித்த பிறகு அவனை பார்த்துவிட்டு செல்லலாம் என அங்கேயே காத்திருந்தனர்.

நாலரை மணி நேரத்திற்கு பின்பு..

சந்தோஷ் அட்மிட் செய்ய பட்டு இருந்த அறையில் இருந்து வெளியே வந்த ஒரு நர்ஸ்; அவனுக்கு மயக்கம் தெளிந்து விட்டதாகவும், அவன் கண் விழித்த அடுத்த நொடியில் இருந்து க்ரிஷா என்று யாரோ ஒருவரை பற்றி மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருப்பதாகவும் சொன்னாள். அதைக் கேட்டவுடன் வேகமாக உள்ளே செல்ல நினைத்து நடந்த க்ரிஷா, சாரதாவை திரும்பி பார்த்தாள். அவளுடைய அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட சாரதா, “உள்ள போய் பாருங்க மேடம்.” என்றாள். 

சந்தோஷின் அறைக்குள் வந்த க்ரிஷா, ஹாஸ்பிடல் பெட்டில் பல ட்யூபுகள் மற்றும் ஒயறுடனும், வயிற்றில் பெரிய கட்டுடனும் படுத்து இருந்த சந்தோஷை வலி நிறைந்த கண்களுடன் பார்த்தாள். 🥺 💔 அந்நிலையிலும் வழக்கம்போல் க்ரிஷாவை பார்த்து அழகாக புன்னகைத்தான் சந்தோஷ். 😁 😁 😁 அந்த புன்னகையால் கடுப்பான க்ரிஷா கோபத்தில் அவன் அருகே சென்று, “இடியட்..!!! ஆர் யூ மேட் ஆர் வாட்..?? ஏன் டா இடியட் இப்படி பண்ண..??” என்று அவனைப் பார்த்து முறைத்தபடி கேட்டாள். 😒 🤨

சந்தோஷ்: மீண்டும் அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தவன், “தெரிலையே மேடம். எனக்கு உங்களை காப்பாத்தணும்னு மட்டும் தான் தோணுச்சு. அதான் அப்படி பண்ணினேன். இப்ப நீங்க நல்லா இருக்கீங்க. என்னையும் காப்பாத்திட்டீங்க அப்புறம் என்ன ப்ரீயா விடுங்க.” என்று கேஷுவலாக சொன்னான். 😁 😁 😁

க்ரிஷா: “லூசா டா நீ..?? அவனுங்க என்ன தான் கொல்ல வந்திருக்காங்க. என்னால நீ இப்படி குத்து வாங்கிட்டு படுத்து இருக்க. இது என்னால வந்தது. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ப்ளட் லாஸ் ஆகி இருந்தா கூட, இந்நேரம் நீ போய் சேர்ந்திருப்ப. ஆனா எப்படி உன்னால இப்ப கூட இவ்ளோ கூலா பேச முடியுது…??” என்று ஆச்சரியமான குரலில் கேட்டாள்.

சந்தோஷ்: “தெரியலையே மேடம். என்னோட டிசைன் ஏ அப்படிதான்னு நினைக்கிறேன். நான் பெருசா எந்த விஷயத்துக்கும் அப்படியே ரொம்ப நேரம் பீல் எல்லாம் பண்ணிட்டு இருக்க மாட்டேன்.” என்று சாதாரண குரலில் சொன்னான்.

க்ரிஷா: “ஒரு வேளை என்னோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா கூட, அப்பயும் இப்படி தான் உன்னோட உயிரை கூட மதிக்காம அவங்கள காப்பாற்றி இருப்பியா…???” என்று அழுத்தமான குரலில் கேட்டாள். 

சந்தோஷ்: “தெரியல மேடம். இன்கேஸ் இப்படி ஒரு சுச்சுவேஷன் திருப்பியும் வேற யார் கூடயாவது எனக்கு அமைஞ்சதுனா, அப்பவும் இப்படி உயிரோட நான்  இருந்தேன்னா  கண்டிப்பா நான் என்ன பண்ணேன்னு உங்ககிட்ட வந்து சொல்றேன் ஓகேவா..??” என்று மீண்டும் சிரித்துக் கொண்டே சொன்னான்.

  • நேசம் தொடரும் ❤️

You may also like

Leave a Comment

About Me

Featured