Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 211

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 211

by Thenaruvi Tamil Novels
49 views

அத்தியாயம் 211: ரித்திகாவின் பதிலடி (பார்ட் 2)

தன்னுடைய அலுவலகத்தில் இருந்து ரித்திகா பேட்டி கொடுத்ததை லைவாக பார்த்த வருண், “பரவால்ல இவளுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு. பி. ஆர். டீம் இல்லாமலேயே மீடியா பீப்பிள்ச கரெக்டா ஹாண்டில் பண்ணிட்டா. நம்ம என்ன தான் ஆயிரம் கதை சொல்லி இருந்தாலும் அவ வாயாலயே அத சொல்லும் போது தான் எல்லாரும் முழுசா நம்புவாங்க. இவள மேரேஜ் பண்ணதுக்கு அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது இவ நமக்கு யூஸ்ஃபுல்லா இருக்கா.” என்று நினைத்துக் கொண்ட வருண், மீண்டும் தன்னுடைய வேலைகளை பார்க்க தொடங்கினான். 

சிங்காரச் சென்னையில்…

ஒரு பிரபல இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் ஆண் ஆசிரியர்களுக்கான ஸ்டாப் ரூமில் அமர்ந்து இருந்த கௌத்தம், தன்னுடைய மொபைல் போனில் ரித்திகா பேசியவற்றை நேரலையில் பார்த்து கொண்டு இருந்தான். இப்போது அவன் ரித்திகாவை பார்க்கும்போது அவனுடைய கண்களுக்கு ரித்திகா வேறு ஒருத்தியாக  தெரிந்தாள். அவனுக்குத் தெரிந்த அவன் பேசி பழகிய ரித்திகாவை இப்போது அவனால் பார்க்க முடியவில்லை. அவளுடைய நடை உடை பாவனை அனைத்திலும் ஒரே நாளில் அவள் மிஸ்ஸஸ் வருண் நாராயணன் ஆக மாறிவிட்டதாக கௌத்தமிற்கு தோன்றியது.  

ஸ்கிரீனில் தெரிந்த ரித்திகாவின் முகத்தை வலி நிறைந்த கண்களுடன் பார்த்த கௌத்தம், “உன்ன பார்த்தாலே நீ நல்லா இருக்கிற மாதிரி தான் தெரியுது ரித்திகா. உண்மையாவே நீ சந்தோஷமா இருந்தா, எனக்கும் சந்தோஷம் தான். என்னைக்காவது ஒரு நாள் அவர் உன்ன கஷ்டப்படுத்துறாருன்னு எனக்கு தெரிஞ்சுதுன்னா, நான் கண்டிப்பா உனக்காக திரும்பி அங்க வருவேன். அவர் என்ன கொன்னு போட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன்.” என்று தனக்குள் அவளிடம் பேசியவன் பின் எழுந்து தன்னுடைய வேலையை பார்ப்பதற்காக சென்று விட்டான். 

பிரவீனின் அலுவலக அறையில்…

ஏற்கனவே தன்னுடைய அனைத்து திட்டங்களையும் மீறியும் வருண் மற்றும் ரித்திகாவின் திருமணம் நல்லபடியாக நடந்துவிட்ட கடுப்பில் இருந்த பிரவீனுக்கு நேற்றில் இருந்து இணையம் எங்கும் வளம் வரும் வருண் மற்றும் ரித்திகாவை பற்றிய செய்திகள் அவனை இன்னும் எரிச்சலூட்டியது. அவனும் இப்போது தான் திருமணம் செய்தான். ஆனால் அவனுடைய திருமணம் இந்த அளவிற்கு பேசப்படவில்லை. ஆனால் வருண் மற்றும் ரித்திகாவின் திருமணம் நடந்து முடிந்து 24 மணி நேரத்தை கடந்து இருந்தும் கூட இன்னும் டக் ஆப் தி டவுன் ஆக இருப்பது மட்டும் அல்லாமல், ஆன்லைன் சர்ச் இன்ஜின்களில் தேடல்கள் பட்டியலில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. 

வருணிக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விட கூடாது என்பதற்காக கேமராவின் முன் ஒருபோதும் வந்து நின்றிடாத ரித்திகா, அவனுக்காக ஒரு பேட்டியை கொடுத்ததை பார்த்த பிரவீனிற்கு கூட ஒரு வேலை இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் எங்கே நன்றாக வாழ்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் தன்னுடைய அடுத்த திட்டத்தை தயார் செய்ய தொடங்கினான். அவனைப் பொறுத்தவரை வருண் எப்போது என்ன மன நிலையில் இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். 

இதில் தன்னால் ரித்திகாவை அடைய முடியவில்லை என்ற வருத்தம் கலந்த கோபம் வேறு அவனுக்கு வருணின் மீது இருந்தது. அதனால் சங்கரை அழைத்த பிரவீன், தன்னுடைய டேபிள் டிராயரில் இருந்து அவன் மறைத்து வைத்து இருந்த ஒரு குட்டி பாக்ஸை எடுத்து திறந்து அதில் இருந்த ஒரு பென் டிரைவை எடுத்து ஏதோ அவனிடம் சொல்லி கொடுத்துவிட்டு தனக்குள் மர்மமாக புன்னகைத்துக் கொண்டான். 😁 😁 😁

ஜே. வி. இன்டர்நேஷனல் ஸ்கூலில்…

உணவு இடைவேளை…

வீட்டில் இருந்து கொண்டு ஷாலினி மற்றும் விஷ்ணு செய்யும் அழும்பல்களை எல்லாம் பார்க்க சகிக்காமல் வைஷாலி இன்று பள்ளிக்கு வந்திருந்தாள். அவளுடைய மன நிலைமையை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்ட மகேஷ் அவளை சகஜமாக்க முயற்சித்தான் ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. உணவு இடைவேளை நேரத்திலும் சாப்பிட பிடிக்காமல் கிரவுண்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தாள் வைஷாலி.

அவள் என்ன தான் தனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்று சொன்னாலும் அவளை சாப்பிட வைத்தே தீருவேன் என்ற எண்ணத்தில் இருந்த மகேஷ், அவளுக்காக உணவு வாங்குவதற்காக கேண்டீன் -க்கு சென்று இருந்தான். ஷாலினி தொடர்ந்து ஒரு வாரம் லீவு போட்டு இருப்பதால் அவள் செல்ல வேண்டிய பெரும்பாலான வகுப்புகளின் சப்ஸ்டியூசன் லாவண்யாவின் தலையில் தான் விடிந்தது. அதனால் ஒரு பிரியட் கூட கேப் இல்லாமல் வேலை செய்து களைத்து போய் ஷாலினியின் மீது கடுப்பில் இருந்தாள் லாவண்யா.

இதில் வேறு ரித்திகாவின் இன்டர்வியூவை அவளும் பார்த்து இருந்தாள். அதனால் அவளுக்கு ரித்திகாவின் மீது இருந்த பொறாமை ஒருபுறம் அதிகரித்து இருக்க, இன்னொரு புறம் நாராயணன் குடும்பத்தினருடன் அந்த வீடியோவில் ஷாலினி நிற்பதையும் அவள் கவனித்து இருந்ததால் ஷாலினியின் மீதும் அவளுக்கு இருந்த வெறுப்பு அதிகரித்தது. 😒 😡

இதில் அந்த பள்ளியில் அவளுடன் வேலை பார்க்கும் பலரும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு ரித்திகா விற்கும்  ஷாலினிக்கும் திடீரென்று கிடைத்த இந்த வாய்ப்பைப் பற்றி பேசி லாவண்யாவை இன்னும் வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தனர். 😒 ரித்திகா வருணை திருமணம் செய்து கொண்டதை கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் ஷாலினியும் அந்த குடும்பத்தினருடன் ஒட்டி கொண்டதை லாவண்யாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லைலை.

அதனால் தனக்கு இந்த கடுப்பில் சாப்பிட கூட பிடிக்காமல் அங்கும் இங்கும் பள்ளி வளாகத்திற்குள் உலாவி கொண்டு இருந்த லாவண்யாவின் கண்களில் ஓரமாக அமர்ந்து இருந்த வைஷாலி தென்பட்டாள். தன்னுடைய ஆழ்மனக்குமுறல்களை இவளை தவிர இந்த பள்ளியில் வேறு யாரிடத்திலும் சொல்லி தன்னுடைய மனதை தேற்றிக் கொள்ள முடியாது என்று நினைத்தால் லாவண்யா அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வரலாம் என்று நினைத்து வைஷாலியின் அருகே சென்று அமர்ந்தாள். 

தன் அருகே வந்து அமர்ந்த லாவண்யாவை நீதானா என்பது போல ஒரு பார்வை பார்த்த வைஷாலி மீண்டும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து கொண்டாள். வைஷாலிக்குள் விஷ்ணுவுடன் ஷாலினி இருக்கிறாளே என்ற வேதனையை தாண்டி அப்படி அந்த ஷாலினியை விட தான் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டோம் என்ற மன வருத்தமே அதிகமாக இருந்தது. அதனால் அவள் யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை .

லாவண்யா: “நீங்க இன்னும் சாப்பிட போகலையா வைஷு..??” என்று பொய்யான அக்கறையுடன் கேட்டாள். 

வைஷாலி: “எனக்கு சாப்பிட பிடிக்கல.” என்று இரண்டே வார்த்தையில் எரிச்சலான குரலில் அவளுக்கு பதில் சொன்னாள். 😒 

அவள் பேசிய விதத்தை வைத்து அவள் கண்டிப்பாக ஷாலினியின் மீதுதான் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்து கொண்ட லாவண்யா எரிகிற நெருப்பில் தன்னால் முடிந்த வரைஎண்ணையை ஊற்றிவிட்டு செல்வோம் என்று நினைத்த லாவண்யா வைஷாலியிடம் பேசத் தொடங்கினாள்.

லாவண்யா: “எனக்கு உங்களோட நிலைமை என்னானு நல்லாவே புரியுது வைஷு. ஷாலினி என்ன தான் என்னோட பிரண்டு ஆ இருந்தாலும் சில சமயம் அவ பண்றத பாத்தா எனக்கே கடுப்பா தான் வருது. ஆனா என்ன பண்றது அந்த ரித்திகா அக்காவை அப்படியே கெட்டியமா புடிச்சுகிட்டு நாராயணன் குடும்பத்தோட போய் இவளும் ஒட்டிக்கிட்டா. இப்ப கூட ரித்திகா அக்காவோட ஒரு நியூஸ் வந்துச்சு. அதுல கூட அவங்க கூட ஷாலினியும் இருந்தா. அவங்க ஃபேமிலியா எங்க போனாலும் இவளையும் கூட கூட்டிட்டு தான் போவாங்க போல.” என்று சலிப்பான குரலில் சொன்னாள். 

லாவண்யா எந்த நியூஸ் ஐ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறாளோ அந்த நியூஸ் ஐ இன்னும் வைஷாலி பார்த்திருக்கவில்லை. அதனால் குழப்பமாக அவளை பார்த்தவள், “என்ன நியூஸ்…??” என்று கேட்டாள். 🙄 தன்னுடைய மொபைல் போனை வேகமாக யாருக்கும் தெரியாமல் எடுத்த லாவண்யா, அதில் இருந்த ரித்திகா பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வீடியோவை அவளிடம் பிளே செய்து காட்டினாள். அந்த வீடியோவில் நிருபர்கள் ரித்திகாவிடம் என்ன கேட்கிறார்கள், அதற்கு அவள்என்ன பதில் சொல்கிறாள் என்றெல்லாம் வைஷாலி கண்டுக் கொள்ளவில்லை. 

அவளுடைய எரித்து விடும் பார்வை ரித்திகாவின் பின்னே விஷ்ணுவின் அருகே நின்று கொண்டு இருந்த ஷாலினியின் மீது தான் நிலை கொத்தி நின்றது. 😡 🔥 ஏற்கனவே கடுப்பில் இருந்த வைஷாலியை இன்னும் கொஞ்சம் ஏற்றிவிட நினைத்த லாவண்யா, “பாருங்க சிஸ்டர் நீங்க அவங்களோட ரிலேட்டிவ் நீங்களே வொர்க் தான் முக்கியம்னு ஸ்கூலுக்கு கிளம்பி வந்துட்டீங்க. ஆனா அவ ஒன் வீக் லீவ் போட்டுட்டு நாராயணன்  பேலஸ் லையே குடியா இருக்கா. இப்போ அவளோட வேலையையும் சேர்த்து நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன் இப்போ நான் எக்ஸ்ட்ரா ஒர்க் பாக்குறேனே இதுக்கு என்ன எனக்கு எக்ஸ்ட்ரா சேலரியா கொடுக்க போறாங்க…???” என்று வேலையை நினைத்து சலித்து கொள்பவளை போல சொல்லி ஷாலினியின் மீது அவளுக்கு இருக்கும் வெறுப்பை ஏற்றி விட்டாள் லாவண்யா.

ஏற்கனவே அவள் மீது கோபத்தில் இருந்த வைஷாலி இப்போது லாவண்யா பேசுவதை கேட்டு இன்னும் கடுப்பானவள், தன் கையில் இருந்த மொபைல் போனை இறுக்கி பிடித்தாள். வைஷாலி இன்னும் அவளுடைய வாயைத் திறந்து தன்னிடம் எதுவும் பேசாததால் திருப்தி அடையாத லாவண்யா, “நான் எல்லாம் ரொம்ப சாதாரணமான ஆளுங்க என்னால இப்படி யார்கிட்டயாவது சொல்லி புலம்பறத தவிர வேற என்ன பண்ண முடியும்….?? நம்ம கைல எதுவும் இல்லைங்கிறப்ப அத நெனச்சு வருத்தப்படுறது வேஸ்ட். ஏற்கனவே டைம் ரொம்ப ஆகிருச்சு. லஞ்ச் பீரியட் முடியறதுக்குள்ள வாங்க போய் சாப்பிடலாம்.” என்றாள். 

வைஷாலி: “நான் ஒன்னும் உங்கள மாதிரி சாதாரண ஆள் இல்ல. உங்களால வேணா எதுவும் பண்ண முடியாமல் இருக்கலாம் ஆனால் நான் நினைச்சா, யாரை வேணாலும் எது வேணாலும் பண்ணுவேன். நான் ஆல்ரெடி அந்த ஷாலினிக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்த்தேன். அவ அதை யூஸ் பண்ணிக்காம விட்டு பெரிய தப்பு பண்ணிட்டா. அதுக்கான பனிஷ்மென்ட் அவளுக்கு கிடைத்தே தீரனும். என்னால என்ன பண்ண முடியும்னு நான் காட்டுறேன். நீங்க வெயிட் பண்ணி பாருங்க.” என்று சொன்னவள் வில்லத்தனமாக சிரித்தாள். 😁 😁 😁

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured