அத்தியாயம் 198
பிரிட்டோ சந்தோஷை பற்றி சொல்லி ஜனனிக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான். ஆனால் அவன் சொல்வதை எல்லாம் காதில் கூட வாங்காமல் சந்தோஷின் மீது இருந்த காதல் மயக்கத்தில் தனது மூளையை வேலை செய்ய விடாமல் தடுத்த ஜனனி “போதும் பிரிட்டோ! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். இது எங்க ஃபேமிலி மேட்டர். இத நாங்க பாத்துக்கிறோம். முதல்ல என் கைய விடுங்க. நீங்க யாரு என்ன ஸ்டாப் பண்றதுக்கு?
எதுவா இருந்தாலும் நான் என் அண்ணா கிட்ட பேசிக்கிறேன். அவன் என்ன பண்ணி இருந்தாலும் அவன் என்னோட ஹஸ்பண்ட். என் குழந்தைங்களுக்கு அப்பா. எப்படி என்னால அவனை எப்படியோ போகட்டும்னு விட முடியும்? முதல்ல என் கைய விடுங்க!” என்று அவள் பாட்டிற்கு பேசிவிட்டு மீண்டும் அர்ஜுனை பார்த்து “ப்ளீஸ் அண்ணா நான் உங்க கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன்.. எனக்காக நீங்க என் சந்தோஷ விட்டுருங்க ப்ளீஸ்!” என்ற விட்டு அழுதாள்.
“யாரு இவன விடனுமா? இவன விட்டா மொத்தமா நம்ம ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா கொன்னு புதைத்துவிடுவான். இன்னைக்கி ஒரே இடத்துல வச்சு நம்ம எல்லாரையும் லாக் பண்ணி நம்ம கிட்ட இருக்கிறது எல்லாத்தையும் புடிங்கிட்டு நம்மள போட்டு தள்ளுறது தான் இவங்க பிளானே! அது தெரியாம லூசு மாதிரி பேசிட்டு இருக்க?
உன் கூடயே இருந்து இத்தனை வருஷமா அவன் நமக்கு அகென்ஸ்டா அத்தனை வேலை பண்ணி இருக்கான். அத கண்டுபிடிக்க தெரியாத முட்டாளா இருந்திருக்க ஜனனி நீ! சரி அது கூட பரவால்ல இருந்துட்டு போகட்டும். இங்க இவன கையும் களவுமா புடிச்சு நிக்க வச்சு நானும் பிரிட்டோவும் மாறி மாறி இவன பத்தி சொல்லிட்டு இருக்கோம்.. இப்ப கூட உனக்கு புரியலையா? அந்த அளவுக்கு கொஞ்சம் கூட யோசிக்க தெரியாத அறிவு இல்லாத முட்டாளா ஜனனி நீ?” என்று அர்ஜுன் கோபமாக கேட்க, அப்போதும் ஜனனி சந்தோஷின் அருகில் செல்ல துடித்துக் கொண்டு இருந்ததால் பிரிட்டோ அவள் கையை விடாமல் இறுக்கி பிடித்துக் கொண்டு இருந்தான்.
நடப்பதை தனது கூர்மையான கண்களால் பார்த்துக் கொண்டு இருந்த சந்தோஷ் “இன்னைக்கு ஸ்டார்டிங்ல இருந்தே எதுவும் நான் நினைச்ச மாதிரி நடக்கல! எனக்கு என்னமோ இப்ப என் ஆட்டம் இன்னையோட முடிய போகுதுன்னு ஸ்ட்ராங்கா தோணுது. இந்த ஜனனி எனக்காக எவ்வளவு பேசினாலும் அர்ஜுன் என்ன பத்தி எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டதனால எப்படியாவது என்ன கொல்லனும்னு தான் பார்ப்பான்.
அவன் சொல்ற மாதிரி இந்த ஜனனி சரியான முட்டாள் தான். அர்ஜுனை எதிர்த்து அவன் கூட சண்டை போட்டு என்னை காப்பாத்துற அளவுக்கெல்லாம் அவளுக்கு அறிவில்ல. இனிமே அவளை நம்பி நம்ம டைம் வேஸ்ட் பண்ண கூடாது. எப்படியாவது இங்க இருந்து நம்ம தப்பிச்சு போய் ஆகணும். அதுக்கப்புறம் ஏதாச்சும் சொல்லி ஜனனியை நம்ப வச்சு நம்ம இடத்துக்கு அவள வரவைக்கணும். அவ நம்ம கூட இருந்தா மட்டும் தான் அர்ஜுன் அவளுக்காக நம்மள உயிரோட விட்டு வைப்பான்.” என்று நினைத்து தப்பிக்க ஏதேனும் வழி கிடைக்கிறதா என சுற்றிமுற்றி பார்த்தான்.
அவனது திருட்டு முழியை கவனித்த சுனில் சட்டென்று சந்தோஷின் கால்களுக்கு அருகில் சுட்டு ”என்னடா கிடைக்கிற கேப்ல அப்படியே எஸ்கேப்பாகி இங்க இருந்து தப்பிச்சு ஓடிப் போயிடலாம்னு நினைக்கிறியா? நீதான் இது எல்லாத்தையும் எங்க பக்கத்துல இருந்து பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நாங்க கண்டுபிடிச்ச அப்பவே மாமா கிட்ட யாருக்கும் தெரியாம உங்க கதை முடிக்க சொன்னேன்.
அவர் தான் நீ செத்துப் போனாலும் உன்ன மாதிரி ஒருத்தனை நினைச்சு ஃபீல் பண்ணி ஜனனி அக்கா அவங்க லைஃபை கெடுத்துக்குவாங்கன்னு அவங்க முன்னாடி எல்லாம் உண்மையும் தெரியணும்ன்னு எங்களை வெயிட் பண்ண சொன்னாரு. மாமா மட்டும் அப்படி சொல்லலன்னா ஏற்கனவே என் அக்கா சியாவை கொலை பண்ணது இல்லாம என் அக்கா மாதிரியே இருக்கிற தேன்மொழி அக்காவையும் நீ கொல்ல பார்த்தப்பையே நான் உன்னை போட்டு தள்ளிருப்பேன்.” என்று மிரட்டும் தோரணையில் சொன்னான்.
சுனில் சொன்னதை கேட்ட பிறகும் கூட ஜனனி சந்தோஷ் மீது இருந்த பாசத்தில் “இல்ல அண்ணா எனக்கு அவர் அப்படியெல்லாம் பண்ணி இருப்பாருன்னு தோணல. அந்த அளவுக்கு ஒன்னும் என் சந்தோஷ் மோசமான ஆள் இல்ல. அவன் எதுக்காக சியா போய் கொலை பண்ண போறான்? ரொம்ப வருஷமா அவனும் நம்ம வீட்ல தானே இருக்கான்.. நம்ப அண்ணி மேல அவனுக்கு மட்டும் பாசம் இருக்காதா?
சியா அண்ணி இறந்ததுல சந்தோஷுக்கு சம்பந்தம் இருக்குன்னு சுனில் சொல்றதையே என்னால நம்ப முடியல. இதுல தேன்மொழி அண்ணிய வேற அவன் கொல்ல ட்ரை பண்ணான்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு அண்ணா. உங்க எல்லாருக்கும் சந்தோஷ் மேல அப்படி என்ன கோபமோ எனக்கு தெரியல! எதுக்காக இப்படி எல்லாரும் மாறி மாறி அவன் மேல பழி போடுறீங்க? உங்களுக்கு நாங்க இங்க இருக்கிறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நானும், என் ஹஸ்பண்டும், குழந்தைகளும் எங்கயாவது தனியா போயிடரோம். உங்க கண்ணுலையே படாம எங்கயாவது போய் நிம்மதியா வாழ்த்துகிறோம். எங்களை விட்ருங்க ப்ளீஸ்!” என்று சொல்லிவிட்டு அழுது கெஞ்சினாள்.
இவ்வளவு நடந்தும் ஜனனி தன் பக்கம் நிற்பதை கண்டு சந்தோஷிற்க்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த அளவிற்கு அவள் தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை காதலிக்க இருக்கிறாள் என்று அவனே இன்று தான் உணர்ந்தான். அவள் இப்போது தன் பக்கம் உறுதியாக நிற்பதால் இதை பயன்படுத்தி இந்த இடத்தில் இருந்து முதலில் வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்த சந்தோஷ் அழுது கொண்டே ஜனனியின் அருகில் சென்று “ஆமா ஜனனி இவங்க எல்லாருக்கும் என் மேல என்ன கோபம்ன்னே தெரியல.. எல்லாரும் எனக்கு எதிரா உன்ன திருப்ப பார்க்குறாங்க. சிஃப்க்கு என் மேல கோபம் இருந்திருந்தா, என்னை அவர் அடிச்சு டார்ச்சர் பண்ணி கொன்னு இருந்தா கூட நான் அத நெனச்சு வருத்தப்பட மாட்டேன்.
ஏன்னா எனக்கு இந்த வாழ்க்கையே அவர் போட்ட பிச்சை தான். அவருக்காக சந்தோஷமா நான் செத்து கூட போவேன். ஆனா இப்படி ஒரு பழியோட என்னால நிம்மதியா சாக கூட முடியாது. நான் போய் எப்படி சியா சிஸ்டரை கொல்வேன்? அவங்க எனக்கு அக்கா மாதிரி. அதுவும் தேன்மொழியையும் கொல்ல பார்த்தேன்னு சொல்றதெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது. என்னால இதை தாங்கவே முடியல.
என்னை இங்க யாருக்கும் பிடிக்கலைன்னு தெரிஞ்சு போச்சு ஜனனி. அதனால தான் என் மேல வீண் பழி போட்டு உன்னையும் என்னையும் பிரிக்க பாக்குறாங்க. ப்ளீஸ் ஜனனி அவங்க சொல்றத எதையும் நீ நம்பாத! உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா நீ என்ன நம்பி என் கூட வா. பிச்சை எடுத்தாவது நான் உன்னையும், நம்ம குழந்தைகளையும் காப்பாத்துறேன்.” என்று நல்லவனை போல டயலாக் பேசிவிட்டு அவளைப் பார்த்து அழுது கொட்டினான்.
சந்தோஷிற்க்கு பின்னே இன்னும் யாராவது இருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்வதற்காகத் தான் அர்ஜுன் இவ்வளவு நேரமாக பொறுமையாக அவனிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தான். ஆனால் இப்படி அழுது அழுது பேசி தன் கண் முன்னேயே மீண்டும் மீண்டும் நல்லவன் வேஷம் போட்டு அவன் ஜனனியை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருப்பதை பார்க்க பார்க்க அவனுக்கு ஒரு அண்ணனாக கோபம் பற்றி கொண்டு வந்தது.
அதனால் வந்த ஆயிரத்தில் தன் கையில் இருந்த துப்பாக்கியை லோட் செய்த அர்ஜுன் “என்னால இதுக்கு மேல எல்லாம் இவன் பேசுறத கேட்டுட்டு இருக்க முடியாது! உன்ன விட்டு வச்சு இருக்கிறதுனால தானே இப்படி சென்டிமென்ட்டா பேசிப்பேசி என் தங்கச்சிய ஏமாத்திட்டே இருக்க நீ.. அவள எப்படி பாத்துக்குறதுன்னு எனக்கு தெரியும். சாவுடா நீ!” என்று சொல்லிவிட்டு ட்ரிகரை அழுத்தினான். அதனால் பதறிய ஜனனி “ஐயோ சந்தோஷ்!” என்று அழுதினாள்.
மீண்டும் வருவாள் 💕