Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 221

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 221

by Thenaruvi Tamil Novels
12 views

அத்தியாயம் 221: சும்மா ஒரு ஹக் (பார்ட் 1)

மருத்துவமனையில்

அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலடைந்த க்ரிஷா கோவமாக அவன் அருகே சென்றவள் அவனுடைய தலையில் லேசாக ஒரு கொட்டு கொட்டி விட்டு, “இன்னொரு தடவ வேற இதே மாதிரி உனக்கு நடக்கணுமா இடியட்.” என்றவள், அவனை அப்படியே கட்டி பிடித்து அவனுடைய காதோரம், “தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் சந்தோஷ்.” என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு வெட்கத்துடன் லேசாக புன்னகைத்த சந்தோஷ் அவனும் மெல்லிய குரலில், “தேங்க்ஸ்” என்றான். 

இவன் ஏன் தனக்கு இந்நேரத்தில் தேங்க்ஸ் சொல்கிறான் என்று நினைத்து குழம்பிய க்ரிஷா, அதை அவனிடமே கேட்டாள். “இல்ல… நான் ஆபீஸ்ல ஜாயின் பண்ணி இத்தனை நாள் ஆகுது. எப்பயுமே நீங்க என்ன இடியட்னு தான் கூப்பிடுவீங்க. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் நீங்க என்ன சந்தோஷ்ன்னு என் நேம் ஐ சொல்லி கூப்பிட்டு இருக்கீங்க. அதான் தேங்க்ஸ் சொன்னேன்.” என்றான். அவன் சொன்னதைக் கேட்டு அவன் மீது இருந்து எழுந்த க்ரிஷா, “நீ சரியான இடியட் தான் டா. நான் உன்னை காருக்குள்ள இரு. அங்க  இருந்து வெளியே வராதன்னு தானே சொன்னேன். நீ வெளியில வந்ததுனால தானே இதெல்லாம்..!!!” என்றவள் சந்தோஷின் அருகே இருந்து வேகமாக எழுந்து நின்றாள். 

அதில் அவள் தெரியாமல் சந்தோஷின் காயத்தின் மீது மோதி விட, “அம்மா..!!!” என்று வலியில் அலறினான் சந்தோஷ். அதனால் பயந்து போன க்ரிஷா, “ஐ அம் சாரி.. சாரி  சந்தோஷ்..!!!” என்று  அவசரமான குரலில் சொன்னாள். “இட்ஸ் ஓகே மேடம் எனக்கு இப்படி ஆனது எங்க அம்மாவுக்கு தெரியுமா..?? அவங்க கிட்டகிட்ட எல்லாம் சொல்லிடாதீங்க. அவங்க ரொம்ப பயந்துருவாங்க.” என்று தன்னுடைய வலியை மறைத்து கொண்டு மெல்லிய குரலில் அவளிடம் கேட்டான்.

தன்னுடைய தலையை குனிந்து கொண்டு அமைதியான குரலில், “அதெல்லாம் ஆல்ரெடி உங்க அம்மாவுக்கு வருண்ப்ரோ இன்பார்ம் பண்ணிட்டாரு. அவங்களும் இப்ப ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க. நான் உனக்காக அவங்க கிட்ட சாரி கூட கேட்டேன் தெரியுமா…??? ஆனா அவங்க என்கிட்ட லாஸ்ட் வரைக்கும் பேசவே இல்ல. என்னோட அப்பாலஜிசையும் அக்செப்ட் பண்ணல. என்னால தான் உனக்கு இப்படி ஆயிடுச்சுன்னு அவங்க என் மேல ரொம்ப கோவமா இருக்காங்க போல.” என்று சோகமாக சொன்னாள் க்ரிஷா. 😟 😞.

சந்தோஷ்: “நீங்க ரெண்டு பேரும் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றீங்க. இப்பவே உங்களுக்குள்ள மெஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா..???” என்று கேட்டுவிட்டு பெருமூச்சு ஒன்றை விட்டவன், “நீங்க அவங்கள உள்ள வர சொல்லுங்க. நான் என் அம்மாகிட்ட பேசிக்கிறேன்.”  என்றான். 

அதனால் வெளியே சென்ற க்ரிஷா, சாரதாவை சந்தோஷ் அவளை அழைப்பதாக சொல்லி உள்ளே அனுப்பி வைத்தாள். சந்தோஷ் எதையெதையோ சொல்லி சாரதாவை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தான். அதனால் சற்று தெளிவான முகத்துடன் வெளியே வந்த சாரதா தன்னுடைய மகன் நலமாக இருப்பதை தன்னுடைய கண்களால் பார்த்து உறுதி செய்து விட்டதால் நார்மல் ஆகி, க்ரிஷா மற்றும் அங்கு இருந்தவர்களுடன் சகஜமாக பேச தொடங்கினாள்.

சில நிமிடங்களுக்கு பின் வருண், சிவா, ஹரி, மூவரும் சந்தோஷ் ஐ பார்த்து நலம் விசாரித்து விட்டு அந்த ஹாஸ்பிடலின் பில் அனைத்தையும் செட்டில் செய்து விட்டு அவனை நாராயணன் மருத்துவமனைக்கு வேறு ஒரு ஆம்புலன்ஸை வைத்து ஷிப்ட் செய்துவிட்டு; அவனிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கு இருந்து தங்களுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டனர். ஆனால் க்ரிஷா மட்டும் நாராயணன் மருத்துவமனையில் சாரதாவுடன் சந்தோஷ் உடனே இருந்தாள். அதனால் சாரதாவிற்கு க்ரிஷாவுடன் பேசி பழக இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

நாராயணன் பேலஸுல்… 

ரித்திகாவின் பெற்றோர்கள் ரித்திகாவிக்கு தொடர்ந்து கால் செய்தும் அவள் எடுக்கவில்லை என்பதாலும், புது மண தம்பதிகளான தன்னுடைய மகளையும், மருமகனையும், தங்களுடைய வீட்டிற்கு மறு வீட்டிற்கு அவர்களை அழைப்பதற்காகவும் அவர்கள் நாராயணன் பேலஸிற்கு வந்து இருந்தனர். செண்பகம் புன்னகை முகத்துடனும், மன நிறைவுடனும் அவர்களை வரவேற்று உபசரித்தாள்.😁 😁 😁 தாங்கள் வந்த நோக்கத்தை பற்றி செண்பகத்திடம் சொன்ன ரேவதி, “நாளைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு சம்மந்தி அம்மா. அதான் ரித்திகாவையும் மாப்பிள்ளையையும் மறு வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்னு வந்தோம். உங்களுக்கு சம்மதம்னா, நாளைக்கு அவங்களை நம்ம வீட்டுக்கு அனுப்பி வைங்க.” என்று பணிவான குரலில் சொன்னாள். 

சுதாகரின் அருகே நின்று கொண்டு இருந்த ரித்திகாவை பார்த்த செண்பகம், “என்ன மா ரித்திகா நாளைக்கு நீயும் வருனும உங்க வீட்டுக்கு மறு வீட்டுக்கு போயிட்டு வரீங்களா..???” என்று அவளுடைய விருப்பத்தை கேட்டாள். 

ரேவதி: ஆச்சரியமாக செண்பகத்தை பார்த்தவள், “என்ன சம்பந்தி நீங்க நாங்க உங்ககிட்ட பர்மிஷன் கேட்டா, நீங்க எங்க பொண்ணு கிட்டயே பர்மிஷன் கேட்கிறீங்க…???” என்று கேட்டாள். 

செண்பகம்: அவர்களை பார்த்து லேசாக புன்னகைத்தவள், “உங்க பொண்ணு இப்ப எங்க வீட்டோட மூத்த மருமகள் சம்பந்தி. என் பையன் வருண் தான் இந்த நாராயணன் குடும்பத்தோட தலைவன்னா, ரித்திகா தான் தலைவி. அதான் நான் அவளோட விருப்பத்தை கேட்டேன். அவ இங்க இப்ப தான் புதுசா வந்திருக்கா. இந்த வீட்டில அவளுக்கு எவ்ளோ உரிமையும், அதிகாரமும், இருக்குன்னு அவ தெரிஞ்சுக்கணும்.” என்று தன்னுடைய மருமகள் ரித்திகாவை பார்த்து பெருமையாக சொன்னாள். 

இந்த காலத்தில் இப்படி ஒரு மாமியாரா என்பது போல் ஷாலினியும், ரித்திகாவின் பெற்றோர்களும், வியப்புடன் செண்பகத்தை பார்த்து கொண்டு இருந்தனர். ரித்திகாவின் திருமண பேச்சு தொடங்கிய நாள் முதலே செண்பகத்தை அருகில் இருந்து பார்த்து பழகிய ஷாலினிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. அவளுக்கு இருந்த ஒரே ஒரு ஆசை விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டு அவள் இங்கே வரும்போது செண்பகம் ரித்திகாவின் மீது காட்டும் பாசத்தில் பாதியை ஆவது தன்னிடம் காட்டினால் கூட போதும் என்பதே ஆகும்.

பின் சில நிமிடங்கள் ரித்திகாவின் பெற்றோர்களுடன் பேசிய செண்பகம் ரித்திகாவை பார்த்து, “அப்பா அம்மாவ உங்க ரூமுக்கு கூட்டிட்டு போ மா ரித்திகா. அன்னைக்கு அவங்க வந்தப்ப என் பையன் வருண் ஓட ரூம்ம அவங்க பார்க்கவே இல்லை. அப்புறம் அவங்களுக்கும் அவங்களோட பொண்ணு கிட்ட பேசுறதுக்கு கேக்குறதுக்கு நிறைய இருக்கும்ல… அவங்கள கூட்டிட்டு போய் தனியா பேசு போ.” என்று உரிமையாக சிரித்துக் கொண்டே சொன்னாள். 

அவள் சொன்னதை கேட்டு, “அப்படி எல்லாம் எதுவும் இல்லை சம்மந்தி . நாங்க அவகிட்ட தனியா பேச என்ன இருக்கு..???” என்று அவசரமான குரலில் கேட்டாள் ரேவதி. மீண்டும் அவர்களை பார்த்து லேசாக புன்னகைத்த செண்பகம், “பதட்டப்படாதீங்க அண்ணி. நான் சும்மா விளையாட்டா தான் சொன்னேன். நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து தான் இன்னைக்கு மாமியாரா ஆகி இருக்கேன். அதுவும் இல்லாம எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. புதுசா நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருக்கும் போது, அந்த வீட்ல அவ எப்படி இருக்கான்னு நெனச்சு பெத்தவங்களோட மனசு எப்படி தவிக்கும்ன்னு எனக்கும் தெரியும். அதே மாதிரி ரித்திகாவுக்கு இது புது இடம் தானே.. அவளுக்கும் இங்க செட்டாகறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். நாங்க எல்லாரும் என்னதான் அவகிட்ட நல்லபடியா நடந்துக்கிட்டாலும், பெத்தவங்கள மாதிரி வராதுல்ல…. அவளுக்கு ஏதாவது சொல்லனும்னு தோணுச்சுன்னா, அத அவ உங்ககிட்ட தான் உரிமையா மனசுல இருக்கிறது எல்லாத்தையும் சொல்ல முடியும்.” என்றவள் ரித்திகாவை  பார்த்து, “நீ அப்பா அம்மாவ உங்க ரூமுக்கு கூட்டிட்டு போ மா. உங்களுக்கு ஏதாவது வேணும்னு இன்டர்காம்ல கால் பண்ணி கிச்சன்ல  ஆர்டர் பண்ணி வாங்கிக்கோ. இப்ப எல்லாம் வருண் என்ன சமைக்க விடவே மாட்டேங்கிறான். அதனால செப் ரெண்டு பேரை புதுசா அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி இருக்கோம். நான் பார்த்த வரைக்கும் அவங்க நல்லா தான் சமைக்கிறாங்க இருந்தாலும் புதுசு புதுசா நீ ஏதாவது கேட்டு அவங்கள சமைச்சு தர சொல்லு. அப்ப தான் எல்லா வகையான டிஷ் ஐயும் அவங்க நல்லா சமைக்கிறாங்களான்னு தெரியும். 

உனக்கு இன்டர் காம் யூஸ் பண்றதுல ஏதாவது டவுட்னா, எனக்கு கால் பண்ணி கேளு. சும்மா மேலையும், கீழையும், அலையாத. முடிஞ்சவரைக்கும் ரெஸ்ட் எடுத்து உடம்ப தேத்து. அப்புறம் சித்தார்த் ரொம்ப நேரமா டி. வி. பாத்துக்கிட்டே இருக்கான். அவனையும் என்னானு செத்த பாத்துக்கோ மா   .”  என்றாள். “ஓகே அம்மா நான் பாத்துக்கிறேன். நான் அவனை கையோட என் கூட மேல கூட்டிட்டு போய்டுறேன். கொஞ்ச நேரம் படிக்க வைக்கிறேன்.” என்ற ரித்திகா சித்தார்த்தையும், தன்னுடைய பெற்றோர்களையும், ஷாலினியையும், அழைத்துக் கொண்டு தங்களுடைய அறைக்கு சென்றாள். 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured