அத்தியாயம் 219: ஏண்டா இடியட் இப்படி பண்ண (பார்ட் 1)
க்ரிஷா என்ன சொன்னாலும் சந்தோஷ் காரை நிறுத்துவதாக இல்லை. அதனால் அவனால் முடிந்த வரை வேகமாக அந்த ரோட்டில் இருந்து வெளியே வர முயன்றான். அப்போது திடீரென்று எங்கு இருந்தோ வந்த இரு கார்கள் அவர்களுடைய காரை முன்னேயும் பின்னேயும் சுற்றி வளைத்தது. இப்போது தான் அவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்ற சீரியஸ்னஸ் -ஐயே க்ரிஷா புரிந்து கொண்டாள். முதல் முறையாக கோபம் நிறைந்த கண்களுடன் க்ரிஷாவை பார்த்த சந்தோஷ், “நான் அப்பவே சொன்னேன்ல இப்ப பாருங்க… உங்களால தான் நம்ப நல்லா மாட்டிக்கிட்டோம். இப்ப என்ன பண்றது நீங்களே சொல்லுங்க.” என்று எரிச்சலான குரலில் சொன்னான். 😒
திமிராக சந்தோஷ் ஐ பரார்த க்ரிஷா, போதும் நிறுத்து என்பது போல தன்னுடைய ஒரு கையை அவன் முன்னே நீட்டி சைகை செய்தவள், தைரியமாக காரின் கதவை திறந்த கீழே இறங்க முயன்றாள். அவளுடைய இந்த முட்டாள் தனமான செய்கைகளை பார்த்து பதட்டம் அடைந்த சந்தோஷ், வேகமாக தன்னுடைய சீட்டில் இருந்து எழுந்து அவளுடைய கைகளை பிடித்து இழுத்து அவளை தடுத்து நிறுத்தினான். “ஏங்க லூசாங்க நீங்க..??? வாலண்டியரா போய் பிரச்சனைக்குள்ள இப்படி தான் மாட்டிக்கிவிங்களா..???” என்று தனக்குள் பொங்கிக் கொண்டு வந்த கோபத்தை அடக்கியபடி க்ரிஷாவை பார்த்து கேட்டான் சந்தோஷ்.
சந்தோஷை எரித்து விடும் பார்வை பார்த்து க்ரிஷா, “ஆம்பள பையன் தானே டா நீ..!! இப்படி தான் எல்லாத்துக்கும் பயந்து நடக்கிவியா..?? எதா இருந்தாலும் தைரியமா பேஸ் பண்ணனும். உன்னால முடியலனா, உன் வாயில நிப்பிள் வச்சுகிட்டு காருக்குள்ளேயே உட்கார்ந்திரு. என்ன ஆனாலும் வெளியில வந்துடாத. எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன். ஓகே…??” என்று நக்கலாக சொன்னவள் சந்தோஷின் வார்த்தைகளை உதாசீனப்படுத்திவிட்டு வேகமாக காரை திறந்து வெளியே சென்று அங்கு இருந்தவர்களை தைரியமாக பார்த்தாள்.
“லூசு…!!! சரியான லூசு இவ. என்னோட உயிர் ஐ எடுக்கறதுக்குனே இவளை இவ பேரன்ட்ஸ் பெத்து இருப்பாங்க போல. இவளோட தினமும் பெரிய ரோதனையா இருக்கு.” என்று நினைத்தவன் அவனும் வேகமாக இறங்கி க்ரிஷாவின் அருகே வந்து நின்றான். அவர்கள் இருவரையும் பார்த்த சீரிய ரவுடிகள் க்ரிஷாவை பார்த்து, “அவளை கொல்லுங்க டா. அவ உயிரோடவே இருக்க கூடாது.” என்று அலறியவர்கள், தங்களுடைய கைகளில் ஆயுதங்களுடன் சந்தோஷையும், க்ரிஷாவையும், நோக்கி ஓடி வந்தார்கள்.
அந்த காட்சியை பார்த்து பதட்டமடைந்த சந்தோஷ், க்ரிஷாவை தான் எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்து ஒரு பெரிய சண்டைக்காக தயாராகி தன்னுடைய சட்டையின் ஸ்லீவை மேலே ஏற்றி கொண்டு இருந்தான். அவனுடைய கண்கள் கூர்மையாக தங்களை நோக்கி வந்து கொண்டு இருப்பவர்களை பார்த்து கொண்டு இருந்தது. 😒 🤨
அப்போது கையில் உருட்டு கட்டையுடன் ஒருவன் க்ரிஷாவை நோக்கி வர, சந்தோஷ் அவனை அடிக்க தயாராக, அதற்குள் முந்தி கொண்ட க்ரிஷா; அவனுடைய மென் பாயிண்ட்டில் தன்னுடைய ஹீல்ஸ் காலால் எட்டி உதைத்தவள், அவனுடைய கைகளை பிடித்து மடக்கி அவனை வேறு பக்கம் திருப்பி அவன் கைகளில் இருந்த உருட்டு கட்டையை லாபகமாக பிடுங்கினாள்.
அவளுடைய அந்த அசைவு ப்ரொபஷனல் ஃபைட்டருக்கு இணையாக இருந்தது அதனால் அவளை வாயை பிளந்து கொண்டு பார்த்து கொண்டு இருந்தான் சந்தோஷ். 🙄 😮 அதில் அவன் தன்னை நோக்கி ஒருவன் அடிக்க பாய்ந்து வருவதை கவனிக்கவில்லை. ஆனால் அதை சரியாக கவனித்து விட்ட க்ரிஷா, “இடியட்.. நான் தான் உன்னை வெளியில வராதன்னு சொன்னேன்ல்ல…!!!” என்று அவனைப் பார்த்து கத்தியவள், தன் கையில் இருந்த உருட்டு கட்டையை வைத்து சந்தோஷை அடிக்க வந்தவனின் மண்டையில் பலமாக அடித்து அவன் மண்டையை உடைத்தாள். 😡
பின் சந்தோஷ் சுதாரிப்பதற்குள், அவர்களின் பின்னே இருந்த ரவுடிகளும் அவர்களை தாக்க தொடங்கினார்கள். அதனால் முன்னே இருந்தவர்களை க்ரிஷாவும், பின்னே இருந்தவர்களை சந்தோஷ் -ம், அடித்து சமாளிக்க தொடங்கினர். என்ன தான் அவர்கள் தங்களால் முடிந்தவரை அங்கே இருந்த ரவுடிகளை சமாளிக்க போராடினாலும், அது அவர்களுக்கு எளிதாக இருக்கவில்லை. க்ரிஷா நன்றாக சண்டை போடுவதை வைத்து அவளுக்கு நன்றாக சண்டை போட தெரியும் என்பதால் அவள் தன்னை தானே தற்காத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை சந்தோஷுக்கு இருந்தாலும் கூட, அவனால் அவ்வப்போது க்ரிஷா பாதுகாப்பாக இருக்கிறாளா என்று திரும்பி பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இப்போது வேறு புறமாக நின்று சண்டை போட்டுக் கொண்டே இருந்தவர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு அவர்களை தாக்க முயன்றனர். அதனால் சந்தோஷ் -ம், க்ரிஷாவும், ஒன்றாக இணைந்து அவர்களுடன் சண்டை போட தொடங்கினார்கள். அந்நேரம் க்ரிஷா ஒருவனுடன் மும்முறமாக சண்டை போட்டுக் கொண்டு இருக்க, இன்னொருவன் கையில் கூர்மையான கத்தியுடன் அவளுடைய வயிற்றில் அதை குத்துவதற்காக வேகமாக அவள் அருகே வந்து கொண்டு இருந்தாள். தன்னிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தவர்களிடம் தான் கல்லூரியில் படிக்கும்போது கற்று கொண்ட கிக் பாக்ஸிங் வித்தைகளை எல்லாம் மொத்தமாக காட்டிக்கொண்டு இருந்த சந்தோஷ், ஒருவன் க்ரிஷாவை தாக்க செல்வதை கவனித்தான்.
அதனால் “க்ரிஷா” என்று கத்திய படி அவள் அருகே ஓடி சென்றான் சந்தோஷ். அதனால் தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தவனை ஒரே குத்தாக குத்தி கீழே தள்ளிய க்ரிஷா, அப்போது தான் தன் அருகே கத்தியுடன் வருபவனை கவனித்தாள். அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலை நடத்துவதற்கும் முன் அந்த கத்தி வேகமாக அவளுடைய வயிற்றின் அருகே வந்து விட்டது. அவ்வளவு தான் இனி இதில் இருந்து தன்னை தன்னால் தற்காத்துக் கொள்ள முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்த க்ரிஷா, பயத்தில் தன்னுடைய கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.
அப்படியே இரண்டு நொடிகள் கடந்துவிட்டன. பின் இரண்டு நொடிகள் 10 நொடிகள் ஆனது. இருப்பினும் க்ரிஷா எதிர்பார்த்ததைப் போல் அவள் எந்த வலியையும் உணரவில்லை. அதனால் என்ன ஆனது என்று தெரிந்து கொள்வதற்காக அவள் தன்னுடைய கண்களை திறந்து பார்க்க அப்போது “ஆஆ.ஆ…!!!” என்ற அலறல் சத்தத்துடன் கீழே விழுந்தான் சந்தோஷ். க்ரிஷாவின் வயிற்றில் இறங்க வேண்டிய கத்தி குத்தை தன்னுடைய வயிற்றில் வாங்கி கொண்டு தரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தோஷ், வலியில் முனகி கொண்டு இருந்தான்.
அதனால் அதிர்ச்சி அடைந்த க்ரிஷா, “சந்தோஷ்..!!!” என்று வலி நிறைந்த குரலில் சத்தமாக அலறினாள். 💔 அவளுடைய தந்தையின் இறப்பிற்கு பிறகு இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது அவளுடைய கண்கள் சந்தோஷிற்காக கண்ணீர் சிந்த தொடங்கின. 😭 😭 😭 இப்போது கிரிஷா சற்று பலவீனமான நிலையில் இருப்பதால் அவளை எளிதாக கத்தியால் குத்தி கொன்று விடலாம் என்று நினைத்த ரவுடிகள், மீண்டும் அவளை சுற்றி வளைத்தனர்.
அந்த வலியிலும் க்ரிஷாவின் பாதுகாப்பை பற்றி யோசித்த சந்தோஷ் அவர்களின் திட்டத்தை உடனே புரிந்து கொண்டு, “க்ரிஷா அங்க பாரு. நெக்ஸ்ட் அவங்க உன்ன தான் டார்கெட் பண்றாங்க.” என்று பேச கூட முடியாமல் பெருமூச்சுகளுடன் திக்கி திக்கி சொன்னான். அவர்கள் மீண்டும் தன்னை கொல்ல முயற்சிக்கிறார்கள் என்ற கோபத்தை விட க்ரிஷாவிற்கு அவர்கள் சந்தோஷை குத்தி விட்டார்கள் என்று கோபம் தான் அதிகமாக இருந்தது. 😡 🔥
அதனால் கோபத்தில் சிவந்த கண்களுடன் தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை சாதாரணமாக துடைத்தவள், வெறிபிடித்தவளை போல அவர்களுடன் சண்டையிட தொடங்கினாள். அந்த ரவுடிகளும் தங்களுடைய பாஸ் தங்களுக்கு கொடுத்த இந்த முக்கியமான அசைன்மெண்டை எப்படியாவது செய்து முடித்துவிட்டு அவர் சொன்ன பணத்தைவிட சற்று கூடுதலாக கேட்டு வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கொலை வெறியில் க்ரிஷாவுடன் சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென்று போலீசாரின் வாகனத்தின் சைரன் சத்தம் அந்த இடத்தின் அமைதியை கிழித்து கொண்டு காற்றெங்கும் பரவியது. வழக்கமாக தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் இல் வருவதை போல போலீசார்கள் இப்போது அங்கே தங்களுடைய டீம் உடன் வந்து குவிந்தனர். காரில் இருந்து இறங்குவதற்கு முன் தன் கையில் இருந்த டேப்லெட்டை ஆட்டி எஸ் வை எஸ் சிக்னலை போலீசாருக்கு க்ரிஷா தான் அனுப்பிவிட்டு இருந்தாள்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)