Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 134

மூர்கனின் காதலி CH 134

by Thenaruvi Tamil Novels
45 views

அத்தியாயம் 134

“அரவிந்த் அண்ணாவும் நிலாவும் இந்த கல்யாணத்தை நிறுத்த நம்மகிட்ட help கேட்டாங்களே..!! நம்ம என்ன பண்ண போறோம்..??” என்று மேகா கேட்க, “முதல்ல நிலாவை பொண்ணு பாக்க வர்றவங்க வந்து அவளை பாத்துட்டு போகட்டும். இப்ப எதுவும் நம்ம பேச வேண்டாம்.” என்றான் விஷ்வா.

“அதுவும் correct தான். அவங்கள பொண்ணு பாக்க வர சொல்லிட்டு, அவங்க முன்னாடி நிலாவும் அரவிந்த் அண்ணாவும் லவ் பண்றாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னா, அண்ணாவுக்கு அசிங்கமா போயிடும். ஏற்கனவே நாங்கெல்லாம் அவர் மரியாதையையும், குடும்ப கௌரவத்தையும் கெடுத்துட்டோம்னு சொல்லிட்டே இருக்காரு. இதுல இது வேற எதுக்கு..??” என்று நினைத்த மேகாவும் அமைதியாக இருந்து விட்டாள்.

ஆனால் அரவிந்தும், நிலாவும்தான் தங்களது காதல் என்னாகுமோ என்ற பயத்தில் தித்திக் இதயத்துடன் இருந்தார்கள்.
சில நிமிடங்களுக்கு பிறகு மேகாவின் வீட்டின் முன்னே ஒரு பழைய ambassador car வந்து நின்றது. அதில் இருந்து ஒரு குடும்பம் இறங்கி வர, காளீஸ்வரனும் வசந்தியும் வாசல் வரை சென்று அவர்களை “வாங்க சம்மந்தி.. வாங்க சம்பந்தியம்மா..‌‌ வாங்க மாப்ள…!!” என்று வாய் நிறைய சொல்லி வரவேற்றார்கள். அவர்களும் சிரித்த முகமாக உள்ளே நுழைந்தார்கள். வெளியில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த அரவிந்த் வந்திருக்கும் மாப்பிள்ளையை கண்டான்.

அவனது பெயர் அஸ்வின். வயது 26. Software professional. ஆண்டுக்கு 15 லட்சம் வரை சம்பாதிக்கிறான். பார்க்கவும் ஓரளவிற்கு நன்றாகத்தான் இருந்தான். அதனால் அவனையும் தன்னையும் compare செய்து பார்த்த அரவிந்த் நேரடியாக சென்று அவனை திட்ட முடியாது என்பதால் “என்னடா கொடுமை இது..?? அஸ்வின் V/s அரவிந்தா..?? டேய் நீ computer முன்னாடி உட்கார்ந்து வேலை செஞ்சு 15 lacs per annum earn பன்றீனா, எங்க பாஸ் எனக்கு 30+ lacs per annum கொடுக்கிறாருடா. நீ சுமார் மூஞ்சி குமாருன்னா, நான் gym body அரவிந்த் டா. நான் ஒரே ஒரு அடி அடிச்சா தாங்குவியாடா நீ..?? உனக்கு என் நிலா கேக்குதா..?? ஒழுங்கா அப்படியே ஓடிப் போயிரு. இல்லனா நீயும் இருக்க மாட்ட. உங்களோட இந்த டப்பா காரும் இருக்காது.” என்று அவர்கள் வந்த காரை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.‌

“அம்மாடி நிலா.. வந்தவங்களுக்கு டீ கொண்டு வந்து குடுமா. வசந்தி நீ போய் புள்ளையை கூட்டிட்டு வா.” என்று காளீஸ்வரன் சொல்ல,

கிச்சனுக்கு சென்று டீ போட்டுக் கொண்டு நிலாவின் ரூமிற்கு சென்ற வசந்தி அவள் கையில் tea trayஐ கொடுத்து “ஏய் இங்க பாருடி.. மெதுவா நடந்து போ. அப்படியே எப்பயும் போல.. டங்கு டங்குனு ஆடிட்டு போகக்கூடாது. குனிஞ்சு தல நிமிராம போய் எல்லாருக்கும் டீ குடுத்துட்டு, அப்புறம் எல்லாரையும் பார்த்து வணக்கம் சொல்லணும். என்ன புரிஞ்சுதா..?? நீ அவங்க முன்னாடி ஏதாவது பண்ணி சொதப்பிட்டினா.. உங்க அப்பா சாமி ஆடிடுவாரு. ஞாபகத்துல வச்சுக்கோ.” என்று வசந்தி adviceஐ போட, “எனக்கு வர்ற கடுப்புக்கு இந்த டீய வந்திருக்க மாப்பிள்ளை அந்த சோடாபுட்டி மூஞ்சிலேயே ஊத்தணும் போல இருக்கு. இதுல நீ வேற tension பண்ணாம போமா..!!” என்று நினைத்த நிலா “எல்லாம் எனக்கு தெரியும்.” என்றுவிட்டு வேண்டா வெறுப்பாக சென்று வசந்தி சொன்னதை எல்லாம் செய்தாள்.

அவளுக்கு இப்படி textile showroomல் உள்ள பொம்மை போல தன்னை ரெடியாகி வரச் சொல்லி தனக்கு பிடிக்காதவர்களின் முன்னே நிற்க வைத்து, அவர்கள் தன்னை வாங்க தனது உரிமையாளரான அப்பாவிடம் வியாபாரம் பேசுவதைப் போல தோன்றியது.‌ அதனால் அவள் கடுகடுவென தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்க, “உங்களுக்கு என் பொண்ண புடிச்சிருக்கா தம்பி..??” என்று கேட்டார் காளீஸ்வரன்.

நிலாவையே அதுவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின் “ரொம்ப புடிச்சிருக்கு மாமா. நான்தான் photoல பார்த்தப்பவே உங்க பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேனே..!! photoல பார்த்ததைவிட வெண்ணிலா நேர்ல இன்னும் அழகா இருக்காங்க.” என்று வேகமாக சொன்னான்.‌ அவன் முகத்தில் அப்படி ஒரு வெட்கம். ஆனால் கொஞ்சம்க்கூட சூட்சமே இல்லை.

“ரொம்ப சந்தோஷம் தம்பி. அப்போ ஏற்கனவே நம்ம முடிவு பண்ண மாதிரி ஆடி மாதம் முடிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம். உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைங்களே சமந்தி..??” என்று காளீஸ்வரன் அஸ்வினையும் அவனது அப்பாவையும் பார்த்து கேட்க,

“பையன் சீக்கிரம் வெளிநாடு போகணும்னு plan பண்ணிட்டு இருக்கான் சமந்தி. அதனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணி என் மகனையும் மருமகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சிட்டா.. நான் நிம்மதியா இருப்பேன். பிள்ளைங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்குறதவிட நம்மள மாதிரி பெத்தவங்களுக்கு வேற என்ன சந்தோஷம் இருந்திட போகுது..??” என்றார் அஸ்வினின் அப்பா.
இப்படியே அனைவரும் மாறி மாறி பேச, “இன்னொரு நாள் எங்க சொந்த பந்தங்களோட வந்து நாங்க உறுதி பேசுறோம் அண்ணா.” என்று அஸ்வினின் அம்மா சொல்ல, சரி என்றார் காளீஸ்வரன்.

“ச்ச்ச்.. எனக்கு இந்த கல்யாணத்துல சம்மந்தமா? இல்லையான்னு யாராவது ஒரு வார்த்தை கேக்குறாங்களா..?? இந்த கல்யாணம் நடக்க போறது எனக்கு. ஆனா என்ன தவிர மத்தவங்க எல்லாரும் மாறி மாறி அவங்களுக்குள்ள பேசி எல்லாம் அவங்களுக்கு கரெக்டா இருக்கான்னு பார்த்து முடிவு பண்றாங்க. நான் நினைச்ச மாதிரி இங்க நான் வெறும் தலையாட்டி பொம்மைதான். இவங்க சொல்றதுக்கு எல்லாம் நான் தலையாட்டிட்டே இருக்கணும்.” என்று நினைத்து சோகமான நிலா மீண்டும் தன் ரூமிற்கு சென்று விட்டாள்.

வந்தவர்கள் அனைவரும் வெளியில் சென்ற பின் காளீஸ்வரன் வசந்தியிடம் “நான் நம்ம தோட்டம் வரைக்கும் போயிட்டு ஆளுங்க எல்லாம் நேரத்துக்கு வந்து வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களான்னு பாத்துட்டு வரேன். இன்னைக்கு ரெண்டு load நெல்லு ஏத்தி அனுப்ப வேண்டியது இருக்கு. எனக்கு மதியான சாப்பாடு அங்க கொண்டு வந்துரு.” என்று சொல்லிவிட்டு தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெளியில் செல்லப் போனார்.

“ஒரு நிமிஷம் நில்லுங்க.” என்று தனது கனீர் குரலில் சொன்ன விஷ்வா சட்டென எழுந்து நின்றான். “ஐஐஐ.. என் புருஷன் களத்துல இறங்கிட்டான்.” என்று நினைத்த மேகா ஆர்வமாக அவனைப் பார்க்க, தன் அருகே நின்றிருந்த ‌ மகேஷின் காதுகளில்‌ ஏதோ கிசுகிசுத்தான் அவன்.‌ “ஓகே பாஸ். ஒரு 10 minutes மட்டும் wait பண்ணுங்க. நான் சீக்கிரம் வந்துடுறேன்.” என்ற மகேஷ் வேகமாக வெளியில் சென்றான். “எதுக்கு என்னை நிக்க சொன்னீங்க மாப்ள..??” என்று அதுவரை அவனைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த காளீஸ்வரன் கேட்க, “மகேஷ் வந்துரட்டும் மாமா. கொஞ்ச நேரம் wait பண்ணுங்க.” என்ற விஷ்வா கூலாக மீண்டும் sofaல் அமர்ந்து தனது mobile phoneஐ பார்க்கத் தொடங்கி விட்டான்.

அதுவரை வாடிய முகத்துடன் இருந்த வெண்ணிலாவும் அரவிந்தும், இப்போது பிரகாசமான முகத்துடன் விஷ்வாவையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

“நடக்கிறது எதுவும் சரின்னு படலையே..!!” என்று நினைத்த காளீஸ்வரன், “எதுவா இருந்தாலும் நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம் மாப்ள. எனக்கு வெளிய நிறைய வேலை இருக்கு.” என்று சொல்ல, “அப்போ எனக்கு வேற வேலை இல்லையா..?? நீங்க சொன்னதுக்காக தானே நான் ஊருக்கு கிளம்பாம இங்கயே இவ்ளோ நாளா உக்காந்திருந்தேன்..!! நான் இருக்க சொல்லும்போது, நீங்க கிளம்புறேன்னு சொன்னா என்ன அர்த்தம்..??” என்று கேட்ட விஷ்வா தலையை தூக்கி தனது கூர்மையான விழிகளால் காளீஸ்வரனை பார்த்தான்.

“சூப்பர் மாமா அப்படி நல்லா கேளுங்க. எங்க அப்பாவ சமாளிக்க நீங்கதான் perfectஆன ஆளு. அச்சோ.. எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கும் என் அத்தைக்கும் மட்டும் கல்யாணம் ஆகாம இருந்திருந்துச்சின்னா..‌ உங்கள meet பண்ண‌ Chance‌ கிடைச்சா.. கண்டிப்பா நான் உங்களைத்தான் correct பண்ணி கல்யாணம் பண்ணிருப்பேன்.‌” என்று நினைத்த வெண்ணிலா விஷ்வாவை பெருமையாக பார்க்க,‌ “என்னடி எங்க பாஸ எல்லார் முன்னாடியும் இப்படி வச்ச கண் வாங்காம பாத்துட்டு இருக்க..??” என்று அவள் அருகில் சென்று கேட்டான் ‌ அரவிந்த்.

“எனக்கு மாமா மாதிரி ஒருத்தர் husbandஆ கிடைக்கலையேன்னு‌‌ ஒரே feelingஆ இருக்கு. அதான் அவர பாத்துட்டு இருக்கேன்.” என்று சாதாரணமாக நிலா சொல்ல, அரவிந்துக்கு தூக்கி வாரி போட்டது. “என்னடி சொல்ற..??” ஷாக்காகி அவன் கேட்க, “நெஜமாதான் சொல்றேன். அங்க பாரு..‌‌ எங்க மாமா எவ்வளவு கெத்தா இருக்காரு.. நீயும் தான் இருக்கியே..‌‌ எல்லாத்துக்கும் பயந்துட்டு‌. சரியான பயந்தாங்கோலி. நீ போ அந்த பக்கம். அவர் என்ன செய்யப் போறாருன்னு பாக்க எனக்கு ரொம்ப interestingஆ இருக்கு.” என்ற நிலா அரவிந்தை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து விஷ்வாவையே உற்று நோக்கினாள்‌.

“என்ன இவ இப்பவே இப்படி சொல்றா..?? எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கப்புறம் இவளோட நான் விஷ்வா சார் பங்களாவுல இருக்கவே கூடாது. எங்கேயாவது தூரமா இருக்கிற வீட்டுக்கு குடி போடணும்.” என்று நினைத்த அரவிந்த் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்க, அங்கே கையில் சில பொருட்களுடன் உள்ளே வந்தான் மகேஷ்.‌

சற்று முன் நிலாவை பெண் பார்க்க வந்தவர்கள் என்னென்ன கொண்டு வந்தார்களோ அவை அத்தனையையும் இப்போது வாங்கி வந்து விஷ்வாவிடம் கொடுத்திருந்தான் அவன்.
“இது எதுக்கு இப்போ..??” என்பதைப்போல அனைவரும் குழப்பமாக விஷ்வாவை பார்க்க,

உறுதி பேசுவதற்காக ஒரு தட்டு பூ, பழம், புடவை மற்றும் சில பொருட்களை வைத்து அதை காளீஸ்வரனின் முன்னே நீட்டிய விஷ்வா “நான் எங்க அரவிந்துக்கு ‌ உங்க பொண்ணு வெண்ணிலாவ பொண்ணு கேட்கிறேன். அவனுக்கு 200% நான் guarantee குடுக்கறேன். நீங்க‌ எங்க வீட்டு பையனுக்கு உங்க பொண்ண கொடுப்பீங்களா மாட்டிங்களா..??” என்று கேட்டான். அவன் குரல் கம்பீரமாக இருந்ததால் அதை அவன் requestஆக கேட்கிறானா, இல்லை symbolicஆக காளீஸ்வரனை மிரட்டுகிறானா என்று அவர் உட்பட ஒருவருக்கும் புரியவில்லை.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured