அத்தியாயம் 190: எனக்கு அவளை புடிக்கல (பார்ட் 1)
பிரவீனின் வீட்டில்…
காலை முகூர்த்தத்திலேயே பிரவீன் மற்றும் லக்ஷனாவின் திருமணம் முடிந்து விட்டதால், சாயங்கால நேரத்தில் ரிசப்ஷனையும் முடித்துவிட்டு பிரம்மாண்டமாக டெகரேஷன் செய்து இருந்த தன்னுடைய காரில் லக்ஷனாவை அழைத்து கொண்டு வந்தான் பிரவீன். அவன் தன்னுடைய வீட்டை வந்து அடையும் போது அந்த பெரிய வில்லாவே விழா கோலம் பூண்டு இருந்தது.
எங்க பார்த்தாலும் மலர்கள் முதல் சிறிய சிறிய டெக்கரேஷன் லைட்டுகள் என அலங்கரித்து வைத்திருந்தனர். பார்க்கிங் ஏரியா முதலே பிரவீன் லக்ஷனாவை தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. காரின் பின் சீட்டில் பிரவீன் உடன் அமர்ந்து இருந்த லக்ஷனா, விலை உயர்ந்த சிவப்பு நிற லெகங்காவில் அவனுடன் காரில் இருந்து கீழே இறங்கினாள். அவளைப் பார்த்து புன்னகைத்த பிரவீன், “லெட்ஸ் கோ பேபி.” என்று சொன்னவன், அவளுடைய கைகளுடன் தன்னுடைய கைகளை கோர்த்துக் கொண்டான். நடந்து வரவர தன் அருகே வந்து கொண்டு இருக்கும் தன்னுடைய கணவன் பிரவீனை ஓர கண்ணால் பார்த்தாள் லக்ஷனா.
அவன் என்ன தான் உயர்தர பர்பியும் பயன்படுத்தி இருந்தாலும், அவன் மீது இன்னும் ஆல்கஹாலின் வாசனை வீசுவதைப் போல் அவளுக்கு இருந்தது. அவன் அதிகமாக குடித்து இருந்ததால் அவனுடைய கண்கள் இன்னும் சிவப்பாகவே இருந்தன. அதையெல்லாம் நோட்டமிட்ட லக்ஷனாவிற்கு அவனுடன் நடந்து வருவது கூட மிகவும் அவமானதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருந்தது. ஆனால் பாவம் அவளால் என்ன செய்து விட முடியும்..??? இனி அவளுடைய வாழ்க்கை முழுவதும் இவனுடைய முகத்தை பார்த்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்கிறாளே..!!!
இவர்கள் நடந்துவரும் காட்சி முதல் வீட்டில் உள்ளே செல்லும் காட்சி வரை அனைத்தும் கேமராவில் படமாக்கப்பட்டது. ஆனால் லக்ஷனாவின் முகத்தில் இருக்கும் சோகம் மட்டும் யாராலும் கவனிக்கப்படவில்லை. தன்னுடைய வீட்டின் வாசலில் வந்து பிரவீனும் லக்ஷனாவும் நிற்க, பிரவீனின் இரண்டாவது தங்கை அபர்ணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே வரவேற்றாள்.
லக்ஷனா ஏற்கனவே இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறாள் என்பதால் அவளை இங்கே தனியாக அனுப்ப விரும்பாத மங்கை, மறு வீட்டிற்கு லக்ஷனா பிரவீன் உடன் வரும் வரை பிரவீன் உடைய வீட்டிலேயே தங்கி இருக்கும் படி தன்னுடைய இரண்டாவது மகள் சௌபரணிகாவையும் லக்ஷனாவுடன் அனுப்பி வைத்திருந்தாள். தன்னுடைய மகனை திருமண கோலத்தில் பார்த்து ஆனந்தத்தில் கண் கலங்கிய தேவி, பாசமுடன் லக்ஷனாவையும், பிரவினையும் அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு சென்று லக்ஷனாவை விளக்கேற்றி வைக்கும் படி சொன்னாள்.
இது போன்ற விஷயங்களை எல்லாம் செய்து லக்ஷனாவிற்கு பழக்கம் இல்லை என்பதால், அவள் இரண்டு மூன்று முறை முயன்றும் அவளால் ஒரு விளக்கை கூட ஏற்ற முடியவில்லை. இதனால் தன்னுடைய அக்காவை யாராவது ஏதாவது குறை கூறி விடுவார்களோ என்று நினைத்து பயந்த சௌபர்ணிகா, வேகமாக லக்ஷனாவின் அருகே வந்து நின்று அதை எப்படி சரியாக ஏற்ற வேண்டும் என்று அவளுக்கு சொல்லிக் கொடுத்தாள்.
அப்போது தன் முன்னே நின்று கொண்டு இருந்த தன் மனைவியையும், மச்சினிச்சியையும், மாறி மாறி பார்த்தான் பிரவீன். “அக்கா காரி மாதிரி தங்கச்சி காரியம் நல்லா கும்முனு தான் இருக்கா. இவளுங்க ரெண்டு பேருமே செம்ம கட்ட தான். ஒன்னு நமக்கு இன்னொன்னு எவனுக்கு குடுத்து வச்சிருக்குன்னு தெரியல. அது எவனுக்கா இருந்தாலும் நம்மளும் சான்ஸ் கிடைச்சா, ஒரு கை பார்த்துடனும்.” என்று கேவலமாக தனக்குள் நினைத்த பிரவீன், ஒரு கதை விஷமத்தனமாக புன்னகை சிந்தினான். 😁 😁 😁
லக்ஷனாவிற்கு இங்கே இருந்து எங்கேயாவது தான் ஓடிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவளால் அப்படி செய்து விட முடியாதே… அதனால் சலிப்புடன் தன் அருகே இருந்த அபர்ணாவை பார்த்தவள், “சிஸ்டர் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. சோ கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகணும். எங்க ரூம் எங்க இருக்கு..???” என்று கேட்டாள். “வாங்க அண்ணி நான் உங்கள கூட்டிட்டு போறேன்.” என்று அபர்ணா சொல்ல அவளை தடுத்து நிறுத்திய தேவி, “பிரவீன், உன்னோட பொண்டாட்டிய நீ உன் ரூமுக்கு கூட்டிட்டு போ.” என்றாள்.
இதை தான் அவனிடம் கேட்க வேண்டாம் என்று நினைத்து தான் லக்ஷனா அபர்ணாவிடம் கேட்டாள். ஆனால் இறுதியில் தேவி பிரவீன் இடமே அவளை கோர்த்து விட்டு விட்டாள். அதனால் எரிச்சல் அடைந்த லக்ஷனா வேறு வழியின்றி பிரவீன் உடன் சென்றாள். சௌபர்ணிகா தங்குவதற்கான அறையை அபர்ணா அவளுக்கு காட்டினாள். செல்லும் வழி எல்லாம் லக்ஷனாவிடம் தொலைத்தொனவென்று பிரவீன், “நம்ப ஹனிமூன் -க்கு நான் நிறைய பிளான் பண்ணி வச்சிருக்கேன். இப்ப கொஞ்சம் வேலை இருக்கு சோ ஒரு ஒன் வீக் கழிச்சு போலாம். உனக்கு எங்க போக பிடிக்கும்..?? உன்னோட ட்ரீம் டெஸ்டினேஷன் ஏதாவது இருந்தா சொல்லு. நம்ம அங்க போயிட்டு வரலாம்.” என்று நல்லவனை போல் லக்ஷனாவிடம் கேட்டான்.
“ஆமா அப்படியே இவனுக்கு என் மேல லவ் பொங்குற மாதிரி தான். வெளியில மட்டும் இவனால எல்லாம் எப்படி தான் நடிக்க முடியுதோ தெரியல. உன் கூட எங்க இருந்தாலும் அது எனக்கு ஹெல் தான் டா. இந்த சைக்கோ மண்டையன் கிட்ட மாட்டிக்கிட்டு நான் என்னலாம் கஷ்டப்பட போறேனோ தெரியல.” என்று நினைத்த லக்ஷனா, “அப்படியெல்லாம் எனக்கு எதுவும் இல்ல. எங்க போனாலும் ஓகே தான். இல்ல.. போகவே இல்லைனாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல. இட்ஸ் ஓகே.” என்றாள்.
பிரவீன்: “அது எப்படி எங்கயும் ஹனிமூன் போகாமல் இருக்க முடியும்..?? நம்ப இந்த வேர்ல்ட் ஃபுல்லா சுத்தணும். ஒன்னும் இல்லாதவனே ஸ்விட்சர்லாந்து, மால்தீவ்ஸ் -ன்னு ஹனிமூன் போறான். இந்த பிரவீன் மட்டும் போகாம இருந்தா நல்லாவா இருக்கும்..??” என்றவன், லக்ஷனாவின் தோளில் தன்னுடைய கையை போற்றப்படும் அவளை தன்னுடைய அறைக்குள் அழைத்து சென்றான்.
உள்ளே வந்தவுடன் தன்னுடைய தோளின் மீது இருந்த அவனுடைய கையை எடுத்துவிட்ட லக்ஷனா, “நான் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன்.” என்றவள், அவனுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல் தான் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் ட்ரெஸ்ஸிங் டேபிளில் கழட்டி எறிந்து விட்டு ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்து கொண்டாள். அவள் கண்ணாடிகள் தெரிந்த தன்னுடைய முகத்தை பார்த்தாள். அதில் பிரவீன் தனக்கு வைத்த குங்குமமும் அவன் கட்டிய தாலியும் அவள் கண்ணில் பட, அவளை இப்படி பார்ப்பதற்கு அவளுக்கே பாவமாக இருந்தது. அந்த நொடி, “எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது கடவுளே..!!!” என்று நினைத்த லக்ஷனாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.
இப்போது அவளிற்கு தான் இந்த பிரவினை திருமணம் செய்வதற்கு வருணை திருமணம் செய்திருந்தால், குறைந்தபட்சம் தனக்கு வீட்டிற்குள்ளே அன்பும், மரியாதையும், கிடைக்கவில்லை என்றாலும் சொசைட்டியில் ஒரு நல்ல பேராவது கிடைத்திருக்கும் என்று தோன்றியது. இப்படி அவள் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து கண்ணீர் சிந்தி கொண்டு இருந்ததில் நேரம் கலந்து கொண்டே இருப்பதை அவள் கவனிக்கவில்லை.
அவளுடைய வருகைக்காக காத்திருந்து கடுப்பான பிரவீன், “லக்ஷனா வாட் ஆர் யூ டூயிங்..?? கம் பாஸ்ட்.” என்று சொல்லிய படியே ரெஸ்ட் ரூம் இன் மின் கதவை வேகமாக தட்டினான். “வெயிட் ஐ ஆம் கம்மிங்.” என்று சொன்னபடி தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இருந்த லக்ஷனாவிற்கு இப்போதும் வெளியே செல்ல மனமில்லை. இன்று தனக்கு அவனுடன் முதலிரவு என்று நினைக்கும் போதே அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. பிரவீன் மீண்டும் மீண்டும் வெளியே இருந்து கதவை வேகமாக தட்டிக் கொண்டே இருந்ததால் அதனால் கடுப்பான லக்ஷனா, வேகமாக சென்று கதவை திறந்தாள்.
லக்ஷனா கதவை திறந்தவுடன் அவளை வாயை பிளந்து கொண்டு பார்த்தான் பிரவீன். அவள் தன்னுடைய முகத்தை கழுவி இருந்ததால், ஆங்காங்கே அவளுடைய ஆடைகள் லேசாக நினைந்து இருந்தது. இருந்த நீர்த்துளிகளை இன்னும் அவள் ஒழுங்காக துடைக்காததால் அது ஆங்காங்கே அது அவள் மீது நீர் துளிகள் ஒட்டி கொண்டு இருந்தது. மொத்தத்தில் புதிதாக பூத்த மலரை போல் பிரெஷ் ஆக இருந்தாள் லக்ஷனா.
அவளை அப்படி பார்த்தவுடன் தன்னுடைய கண்ட்ரோலை ஒட்டு மொத்தமாக இழந்துவிட்ட பிரவீன், ரெஸ்ட் ரூம் இன் உள்ளே வந்து அதன் கதவை சாற்றினான். அவனுடைய இந்த திடீர் செய்கையால் பயந்து போன லக்ஷனா, “இப்ப எதுக்கு டோர் ஐ லாக் பண்ணீங்க..??” என்ற பதட்டமான குரலில் கேட்டாள்.
பிரவீன்: அவள் அருகே நெருங்கி சென்றவன், “ஏன்னு உனக்கு தெரியாதா..??” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டான்.
லக்ஷனா: “தெரியாது” என்பது போல தன்னுடைய தலையை ஆட்டினாள்.
பிரவீன்: “உனக்கு எதுவுமே தெரியலைன்னாலும் பரவால்ல. நான் உனக்கு எல்லாத்தையும் சொல்லி தரேன் டார்லிங்.” என்றவன்அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு, அவளுடைய இதழ்களில் வெறித்தனமாக முத்தம் கொடுக்க தொடங்கினான்.
அவர்களுடைய இந்த முதல் இதழ் முத்தம் லக்ஷனாவை இன்பமுற செய்வதற்கு பதிலாக அவளை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியது. இதில் அவளுக்கு விருப்பம் இருக்கிறதா.. இல்லையா.. அவள் எப்படி உணர்கிறாள் என்பதை எல்லாம் துணியும் பொருட்படுத்தாமல், அவளுடைய உதட்டை கடித்து சுவைத்துக் கொண்டு இருந்தான் பிரவீன். 😚 😚 😘 🤗
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)