அத்தியாயம் 189: உங்களுக்கு சிரிக்கவே தெரியாதா? (பார்ட் 2)
மேடையின் கீழே நின்று பார்ப்பவர்களுக்கு மேடையில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் நன்றாக ஸ்கிரீனின் வழியாக தெரியுமே தவிர அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ஒருவருக்கும் கேட்கப் போவதில்லை. அதனால் தைரியமாக வருனை பார்த்த செண்பகம், “இந்த ஷேர்ஸ் யாரோடது..???” என்று கம்பீரமான குரலில் கேட்டாள்.
வருண்: “ உங்களுடையது தான் அம்மா. பட்…” என்று எதையோ சொல்ல வந்தான்.
செண்பகம்: அவனுடைய பேச்சில் குறுக்கிட்டவள், “இந்த ஷேர்ஸ் ஐ என்னோட பேர்ல வாங்குனது யாரு..???” என்ற விடாமல் மீண்டும் அவனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.
வருண்: “அப்பா” என்று தாழ்மையான குரலில் சொன்னான்.
செண்பகம்: “அப்போ என்ன கேள்வி கேட்கிற உரிமை உன் அப்பாவ தவிர வேற யாருக்காவது இருக்கா..???” என்று அதிகார தோரணையில் கேட்டாள்.
செண்பகம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான் வருண். இன்னும் தன்னுடைய மகள் இந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து போகவே இல்லை அதற்குள் இத்தனை பிரச்சனைகளா என்று ரேவதி: “ஆமா அம்மா. நீங்க ஏற்கனவே ரித்திகாவுக்கு நிறைய செஞ்சுட்டீங்க. நீங்க முன்னாடியே உங்க மருமகளுக்கு நீங்க ஆசைப்படறது எல்லாம் செய்யறதுக்கு நாங்க குறுக்க நிக்க கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அதனால தான் நாங்க எதுவும் சொல்லாம இருந்தோம். ஆனா இது ரொம்ப அதிகம் சம்மந்தி அம்மா.
இப்ப நீங்க சொல்றீங்கன்னு என் பொண்ணு இத வாங்கிக்கிட்டான்னா, காசுக்காக தான் அவ இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறான்னு எல்லாரும் அவளை தப்பா பேசுவாங்க. அந்த அவப்பெயர் எங்க ரித்திகாக்கு வேண்டாம்.” என்று அமைதியான குரலில் சொன்னாள்.
செண்பகம்: அங்கு இருந்த அனைவரையும் தீர்க்கமாக பார்த்தவள், “நான் முன்னாடியே சொன்ன மாதிரி என்னோட மருமகளுக்கு நான் குடுக்கிற ஆசீர்வாதம் இது. நீங்க ஊர் வாய பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க சம்மந்தி . ஊர் வாயை மூடுறது நம்ப வேலை இல்ல. நான் என் மருமகளுக்கு செய்ய நினைக்கிறது வேண்டாம்னு தடுப்பதற்கு யாருக்குமே உரிமை இல்ல. ஏன் ரித்திகாவிற்கு இத வாங்கிக்க மாட்டேன்னு சொல்றதுக்கு உரிமை இல்லை. என் வீட்டு மருமக என்னோட பேச்சுக்கு மரியாதை தருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று சொன்னவள், வருணின் கையில் இருந்த டாக்குமெண்ட் ஐ வாங்கி அதை ரித்திகாவின் கையில் வலுக்கட்டாயமாக திணித்தாள்.
ஏற்கனவே செண்பகத்திற்கு இருதய கோளாறுகள் இருப்பதால் எங்கே தாங்கள் அவளிடம் வாக்குவாதம் செய்து இந்த நல்ல நேரத்தில் அவளுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த அனைவரும் செண்பகம் பேசியவற்றுக்கு மறுப்பு சொல்லாமல் அமைதியாகவே நின்று கொண்டு இருந்தனர். இப்போது இந்த டாக்குமெண்ட் வைத்து கொண்டு தான் என்ன செய்வது என்று ரித்திகாவிக்கு தெரியவில்லை. அதனால் இதை வருணின் ஒப்படைத்து விடலாம் என்று நினைத்தவள், இப்போது தானே சென்று அவனிடம் கொடுத்தாலும் அவன் அதை வாங்கப் போவதில்லை என்று நினைத்து சிவாவை அழைத்து.. “அண்ணா, இந்த டாக்குமெண்ட் ஐ நீங்க பத்திரமா வச்சிருங்க. முடிஞ்சா இந்த மாதிரி டாக்குமெண்ட் எல்லாத்தையும் நீங்க பொதுவா எங்க வைப்பீங்களோ அங்கே வச்சுடுங்க. எனக்கு எப்படியும் இதுல என்ன இருக்கணும் புரிய போறதும் இல்ல. இத எனக்கு பத்திரமா வச்சுக்கவும் தெரியாது.” என்று அமைதியான குரலில் சொன்னாள்.
சிவா வால் ரித்திகாவின் நிலைமையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் வருண் தன்னை பார்த்து முறைப்பதை கூட கண்டு கொள்ளாமல், அவள் கையில் இருந்த டாக்குமென்ட்டை வாங்கிக் கொண்டு வருணின் அறையை நோக்கி சென்றான். நிலமை மிகவும் சீரியஸ் ஆகவே இருப்பதால் இதை சாதாரணமாக மாற்ற நினைத்த விஷ்ணு, “என்ன நம்ம வீட்டு பங்க்ஷனுக்கு வந்துட்டு எல்லாரும் இப்படி அமைதியா ஒருத்தர் ஃபேஸ் ஐ ஒருததர் பாத்துட்டு நிக்கிறீங்க..??? வாங்க எல்லாரும் டான்ஸ் பாட்டுன்னு செலிப்ரேட் பண்ணலாம். நம்ப அண்ணி வேற டான்ஸர். அண்ணாவும் சூப்பரா ஆடுவாரு. வாங்க எல்லாரும் ஃபன் பண்ணலாம்.” என்று சொன்னவன், எதையாவது ஒரு பாடலை ப்ளே செய்து விடுமாறு டி. ஜே. -வை பார்த்து சைகை செய்தான்.
சுதாகர்: “அம்மா நீங்க என் பொண்ண சந்தோஷமா வாழ வச்சாலே போதும். எங்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை. நாங்க இதுக்கு எல்லாம் ஆசை படுறவங்க கிடையாது. எங்க பொண்ணையும் நாங்க அப்படி தான் வளர்த்திருக்கோம்.” என்று அவசரமான குரலில் சொன்னான்.
“இவனுக்கு வேற வேலை இல்ல. இப்ப இது தான் ரொம்ப முக்கியம்.” என்று நினைத்த வருண் சலிப்பாக அங்கு இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். அவன் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த ரித்திகா, அவளும் சென்று அவன் அருகே அமைதியாக அமர்ந்து கொண்டாள். ரித்திகா தன் அருகே வந்து அமர்ந்ததை கண்டு கடுப்பான வருண், தான் என்ன செய்தாவது இவளை தன் வாழ்க்கையில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அப்போது பாட்டு ஒலித்தது
“சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…”
எந்த பாடல் வரிகள் பிலே ஆக விஷ்ணுவை ஓர கண்ணால் பார்த்த ஷாலினி வெட்கத்துடன் ஸ்டேஜில் ஆட தொடங்கினாள். ☺️ 💃 அவள் பெரிய டான்ஸர் இல்லை என்றாலும், விஷ்ணுவோடு தான் செலவிட கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதை நினைத்தவள், தனக்கு தோன்றியவற்றை எல்லாம் டான்ஸ் என்று நினைத்து ஆடினாள்.
தொடர்ந்து அந்த பாடல் ஓடி கொண்டு இருந்தது….
மேடையின் அருகே நின்று கொண்டு இருந்த பிராத்தனாவும் ஷாலினியுடன் இணைந்து ஆட தொடங்கி விட்டாள். 💃
“உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…”
என்ற வரிகள் ஓடி கொண்டு இருக்க, தங்களுடைய காதல் தேவதைகள் ஆடி கொண்டு இருக்கும்போது தாங்கள் எப்படி சும்மா இருப்பது என்று நினைத்த சூர்யாவும், விஷ்ணுவும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். 🕺 💃🕺 💃
அடி வெத்தலபோட்ட…
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு…
நான் கொடுத்த கடன…
திருப்பிக் கொடுக்க…
சத்தியம் பண்ணிக்குடு…
என் இரத்தம் சூடு கொள்ள.
பத்து நிமிசம் தான்…
ராசாத்தி…
ஆணுக்கோ…
பத்து நிமிசம்… ஹா…
பொண்ணுக்கோ… அஞ்சு நிமிசம் ஹா…
பொதுவா சண்டித்தனம் பண்ணும்…
ஆம்பளைய பொண்ணு…
கிண்டி கெழங்கெடுப்பா…
சேலைக்கு சாயம்
போகு மட்டும்…
உன்ன நான் வெளுக்க வேணுமடி…
பாடுபட்டு விடியும் பொழுது…
வெளியில் சொல்ல..
பொய்கள் வேணுமடி…
புது பொண்ணே… ஏ…
அதுதாண்டி தமிழ் நாட்டு பாணி…
என்ற வரிகள் வரும் வரை நால்வரும் தங்களுடைய ஜோடிகளுடன் இணைந்து ஆடிவிட்டு பின்… ரித்திகாவின் அருகே சென்ற ஷாலினி அவளுடைய கையை பிடித்துக் கொண்டு அவளை டான்ஸ் ஆட இழுத்து வர, பிராத்தனா வருணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள். ஒருவேளை வந்தது விஷ்ணுவாக இருந்தால் அவனுடைய மண்டையில் இரண்டு தட்டு தட்டி அவனை அனுப்பி வைத்திருப்பான் வருண். ஆனால் இப்போது அவனை அழைத்தது அவனுடைய குட்டி தங்கை என்பதால் அவனால் அவளை நிராகரிக்க முடியவில்லை.
அதனால் வேறு வழி இன்றி அவன் பிராத்தனாவுடன் இணைந்து ஆட, அவர்களுடன் இணைந்து கொண்ட ரித்திகா ஆடத் தொடங்கினாள். 🕺 💃 இப்போது மேடையில் மூன்று ஜோடிகள் ஆடி கொண்டு இருந்தனர். விஷ்ணுவும் ஷாலினியும் ஜோடியாக ஆடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத வைஷாலி, தான் புடவை அணிந்திருந்தும் ஹில்ஸ் அணிந்து வந்து இருப்பதை மறந்து விட்டு, ஷாலினிக்கும் விஷ்ணுவிற்கும் நடுவே வந்து நின்று கொண்டு ஆடத் தொடங்கினாள். 💃
குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்….
என்ற வரிகள் வரும் போது வருணையும் ரித்திகாவையும் நடுவே நிக்க வைத்து மற்றவர்கள் அனைவரும் அவர்களை சுற்றி ஆடி கொண்டு இருந்தனர். 🕺 💃 பிராத்தனா தன்னை கண்டுகொள்ளவில்லை என்றாலும், சூர்யா அவ்வப்போது அவளை வெட்கத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். 😍 🥰 வைஷாலி தங்களின் நடுவே வந்து நின்றாலும் அவளை புறக்கணித்த விஷ்ணு ஷாலினியை பார்த்து எக்ஸ்பிரஷன்களுடன் அந்த பாடல்வரிகளை பாடி ஆடிக்கொண்டு இருந்தான் அதனால் கடுப்பான வைஷாலி, தன்னுடைய கால் ஐ ஷாலினியின் புடவையின் மீது வைத்து மிதித்து எப்படியாவது அவளை கீழே தள்ளி விட வேண்டும் என்று திட்டம் போட்டாள்.
ஆனால் அவள் வேகமாக சென்று ஷாலினியை கீழே தள்ளி விட முயற்சிக்க அப்போது அவள் அணிந்து இருந்த ஹீல்ஸ் செருப்பு அவளுடைய காலையே வாரி விட கீழே விழச் சென்ற வைஷாலியை முதன் முதலில் அவள் விஷ்ணுவை எப்படி தாங்கி பிடித்தாளோ அதேபோல் தாங்கி பிடித்தாள் ஷாலினி. அதைக் கண்டு ஆடுவதை நிறுத்திவிட்டு வைஷாலியை பார்த்து சத்தமாக சிரித்த விஷ்ணு, “ஓய் வைஷு.. என் ஆள் கூட நான் தான் இப்படி எல்லாம் ரொமான்ஸ் பண்ணனும். நீ ஏன் அவ கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க..??” என்று நக்கலாக கேட்டு சிரித்தான். 😂 😂 😂
அவன் சொன்னதைக் கேட்டு வருனை தவிர அங்கு இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். 😂 😂 😂 நல்ல வேளை அங்கு செண்பகம் இல்லாததால் தப்பித்தான் விஷ்ணு. வைஷாலியை ஒரு கை பிடித்து தூக்கி நிறுத்தினாள் ஷாலினி. இவள் தன்னை தாங்கி பிடித்து தான் கீழே விழாமல் நின்றதற்கு பதிலாக தான் கீழேயே விழுந்து இருக்கலாம் என்று நினைத்த வைஷாலி, கோபமாக அங்கு இருந்து சென்றுவிட்டாள். 😡 😤
அதன் பின்னே சில நடன கலைஞர்களும் வருனும் ரித்திகாவும் மாறி மாறி நடனங்கள் ஆடி அந்த ஸ்டேஜை அலங்கரித்தனர். ஏக்கம் நிறைந்த கண்களுடன் கீழே அமர்ந்து அவற்றையெல்லாம் பார்த்து கொண்டு இருந்தாள் ஆராதனா. ஹரி அவள் அருகே அமர்ந்து இருந்தாலும் அவளிடம் சும்மா பேசுவதற்கு கூட அவனுக்கு தைரியம் இல்லை. அதனால் தான் எங்கே சென்று அவளை சமாதானப்படுத்துவது என்று நினைத்து அவனும் அமைதியாக அவளையும் ஸ்டேஜையும் மாறி மாறி சோகமாக பார்த்து கொண்டு இருந்தான்.
அந்த ஸ்டேஜ் மூளையில் எதிர் எதிரே நின்று கொண்டு இருந்த தர்ஷனும், தர்ஷினியும், வலி நிறைந்த கண்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர். 💔 🥲 வெளியில் தன்னை நார்மலாக காட்டிக்கொண்டு பம்பரமாக சுழன்று அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருந்தாலும் சிவா, தனக்குள் திவ்யாவை பற்றியே யோசித்து கொண்டு இருந்தான். 💔 🥺 😨
சில நிமிடங்களுக்கு பின்…
நிச்சயதார்த்தத்திற்கான நேரம் நெருங்கியது. வருணனின் நண்பர்கள் அங்கே வந்துவிட்டதாக ஆதித்யாவிடம் இருந்து சிவாவிற்கு தகவல் வர, அவர்களை அழைத்து வருவதற்காக வாசலை நோக்கி சென்றான் சிவா. இப்போது மேடையில் நாராயணன் குடும்பத்தினரும், ரித்திகாவின் குடும்பத்தினரும், மட்டுமே இருந்தனர். பிராத்தனாவும், தர்ஷினியும், கையில் ஒரு தட்டில் மோதிரங்களை வைத்து கொண்டு மெல்ல வருண் மற்றும் ரித்திகாவின் அருகே நடந்து வந்து அதை அவர்களின் முன்னே நீட்டினர்.
ரித்திகாவிற்கு வருண் ஏற்கனவே பரிசளித்த பிளாட்டினம் பென்டன்ட் செயினிற்கு மேட்ச் ஆக அந்த பிளாட்டினம் மோதிரம் விலை உயர்ந்த வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டு இருந்தது. முதலில் வருண் மோதிரத்தை எடுத்து ரித்திகாவின் விரலில் அதை அணிவித்தான். அந்த ஒரு கணம் தான் இனி அவனுடையவள் என்று உணர்ந்தாள் ரித்திகா. ஆனால் வருணின் முகத்தில் அப்படி எந்த ஒரு உணர்ச்சியும் தென்படவில்லை. அவன் சலிப்பாக ரித்திகாவின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.
வருணின் மோதிரத்தை தன் கைகளில் எடுத்த ரித்திகா நிமிர்ந்து அவனுடைய முகத்தை பார்த்தாள். 😍 இந்த சென்ட்ரலைஸ்ட் ஏசி ஹாலிலும் அவனுடைய முகத்தில் லேசான வியர்வை துளிகள் படிந்து இருந்தன. ஒரு வேளை அவன் இந்த திருமணத்தை நினைத்து டென்ஷனாக இருந்ததால் அப்படி அவனுக்கு வியர்த்து இருக்கலாம் என்று நினைத்த ரித்திகா, தன்னை அறியாமல் தன்னுடைய மற்றொரு கையால் அவனுடைய நெற்றியில் இருந்து வழிந்து வந்த ஒரு வியர்வைத் துளியை துடைத்து விட்டாள். அதை சற்றும் எதிர்பார்த்து இருக்காத வருண் குழப்பமான முக பாவனைகளுடன் ரித்திகாவை பார்க்க அதை கண்டு கொள்ளாதவள், “உங்க கையை குடுங்க.” என்று சொன்னபடியே தானாக அவனுடைய கையை பிடித்து அவனுடைய மோதிர விரலில் தன் கையில் இருந்த மோதிரத்தை அணிவித்தாள் ரித்திகா. 😍 ❤️
இத்தனை தைரியம் அவளுக்கு எங்கு இருந்து வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் அதை செய்து முடித்து இருந்தாள். இப்போது அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு விட்டதால் அங்கு இருந்த அனைவரும் உற்சாகமாக தங்களுடைய கைகளை தட்டி அதை அந்த தருணத்தை கொண்டாடினர். 👏
அங்கு இருந்த அனைத்து கேமராக்களும் அவர்களை தான் போக்கஸ் செய்து கொண்டு இருந்தது. அதனால் ரித்திகா கேமராவை பார்த்து அழகாக புன்னகைத்தாள். 😁 😁 😁 வருணுக்கு பேய் அறைந்ததை போல் அவளையே தான் பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தான். அதனால் இன்னும் சற்று அவன் அருகே சென்ற ரித்திகா, தன்னுடைய பாதங்களை தரையில் ஊன்றி அவனுடைய உயரத்திற்கு எக்கியவள், “உங்களுக்கு சிரிக்கவே தெரியாதா..?? எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க. ஒரு ஃபார்மாலிட்டிக்காகவாவது சிரிங்க.” என்று அவனுடைய காதில் கிசுகிசுத்தாள்.
ரித்திகாவை குறும்பாக பார்த்த வருண், “எனக்கு சிரிக்க எல்லாம் நல்லாவே தெரியும் டி. ஆனா உன் பக்கத்துல இருக்கும் போது தான் எனக்கு சிரிப்பே வர மாட்டேங்குது. இத்தனை நாளா நான் ஜாலியா சுத்திக்கிட்டு இருந்தேன். இப்ப தான் நீ இந்த ரிங் ஐ என் பிங்கர்ல மாட்டி என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுட்டியே… இதுக்கு மேல நான் எங்க போய் சந்தோசமா இருக்கிறது..??” என்று கேட்டுவிட்டு சிரித்தான். 😂 😂 😂 😂
ரித்திகா: “அப்டி பார்த்தா உங்க கூட சேந்து அந்த ஜெயில்ல நானும் தான் இருக்க போறேன்.” என்று சொன்னவள் தன்னுடைய முகத்தை வேறு புறமாக கோபத்தில் திருப்பிக் கொண்டாள். 😒
- நேசம் தொடரும் ❤️