Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 191

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 191

by Thenaruvi Tamil Novels
31 views

அத்தியாயம் 191

அர்ஜுன் ஒரு பக்கம் கையில் துப்பாக்கியுடன் வெளியில் இருந்த தீவிரவாதிகளை நோக்கி செல்ல, என்ன ஆனாலும் தன் குழந்தைகளையும், அவர்களுக்காக தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த தேன்மொழி கிளாரா கொடுத்த துப்பாக்கியை தன் கையில் இறுக்கிப் பிடித்தாள்.

ஆவேசமாக வெளியில் சென்ற அர்ஜூன் கையில் இருந்த துப்பாக்கியை தனக்கு எதிரில் இருந்தவனுக்கு முன்னே நீட்டியவாறு “யாருடா நீ? உனக்கும் எனக்கும் நடுவுல அப்படி என்ன இருக்கு? ரொம்ப நாளா என் ஃபேமிலிய ஃபாலோ பண்ணி வந்து குடைச்சலுக்கு மேல குடச்சல் கொடுத்துக்கிட்டு இருக்கிறது நீயும் உன் ஆளுகளும் தானே..

நீ கேட்ட மாதிரி இப்ப நான் உன் முன்னாடி வந்து நின்னுட்டேன். உனக்கும் எனக்கும் அப்படி என்ன பிரச்சனைன்னு  இப்பயாவது சொல்லி தொலை டா. ரொம்ப நாளா நானும் உங்கள தான் தேடிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு தெளிவா பேசி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிடலாம்.” என்று கேட்டான். ஆனால் அவனிடம் பதட்டமும் பயமும் கொஞ்சம் கூட இல்லை.

இன்று அவர்களால் இல்லை நானா என ஒரு கை பார்த்து விடலாம் என்ற ரீதியில் கையில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு அவர்களை முறைத்து பார்த்தவாறு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்று கொண்டிருந்தான் அர்ஜுன்.

“எது பேசி தீக்கிறதா?” என்று கேட்டுவிட்டு அவனுக்கு எதிரில் இருந்தவன் கலகலவென சிரித்தான். பின்ன “என்ன உனக்கு எங்கள பார்த்தா அவ்ளோ சாதாரணமா தெரியுதா ஈஸியா ஏதாவது பேசி எங்கள சமாளிச்சிட முடியும்னு எப்படி அர்ஜுன் உன்னால நம்ப முடியுது? அந்த அளவுக்கு சின்ன சின்ன வேலையா பண்ணி இருக்க நீ? உன் கிட்ட பேச்சு வார்த்தைக்கு எல்லாம் வேலையே இல்ல. உன்ன முதல்ல தீர்த்து கட்டிட்டு அப்புறம் உன் டெட் பாடியையும் உன் ஃபேமிலில இருக்குறவங்களையும் என்ன பண்றதுன்னு வேணும்னா நாங்க எங்களுக்குள்ள பேசி டிஸ்கஸ் பண்ணி ஒரு டிசிஷனுக்கு வர்றோம்.” என்று கோபமாக சொன்னான் அவன்.

“ஓஹோ அப்படியா? அப்ப இன்னைக்கு யார் யாரை முடிக்க போறாங்கன்னு பார்க்கலாம். சேலஞ்சா?” என்று அர்ஜுன் கேட்க, மீண்டும் அவனைப் பார்த்து நக்கலாக கலகலவென்று சிரித்த அந்த டெரரிஸ்ட் கும்பலின் தலைவன், “யாருடா நீ சரியான பைத்தியக்காரனா இருப்ப போல.. உன்ன போய் இத்தனை நாளா நீ எனக்கு பெரிய எனிமியின்னு நினைச்சுட்டு இருந்து இருக்கேன்.. நீ தொக்கா எங்க கிட்ட வந்து மாட்டிருக்க. உன் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் இங்க தான் இருக்காங்க. இந்த மொத்த ஃப்ளோரையும் நாங்க எங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டோம். அப்ப கூட உன் திமிரு அடங்கலையா? எந்த நம்பிக்கைல உன்னால எங்களை ஜெயிக்க முடியும்னு நினைக்கிற?” என்று நக்கலாக கேட்டான்.

தானும் நக்கலாக அவனைப் பார்த்து சிரித்த அர்ஜுன் “இப்படித் தான்!” என்று சொல்லிவிட்டு சிறிதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் தனக்கு எதிரில் இருந்தவனின் நெற்றி பொட்டில் சுட்டான். உடனே அவன் சுயநினைவின்றி தரையில் விழ, அங்கே இருந்தவர்கள் எல்லாம் இப்போது என்ன நடந்தது என்று புரியாமல் ஷாக்காகி ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றார்கள். அந்த ஒரு நொடி கேப்பை பயன்படுத்திக் கொண்டு தனது துப்பாக்கியில் இருந்த குண்டுகள் அனைத்தும் தீரும் வரை பட்டு பட்டென்று அங்கே இருந்த அனைவரையும் ஒவ்வொருவராக சுட்டுத் தள்ளினான்.

அதனால் சுதாரித்துக் கொண்டு பதிலுக்கு அவர்கள் அவனை தாக்க முயற்சி செய்ய, தான் அணிந்து இருந்த கனமான கோட்டை கழட்டி கீழே வீசி எறிந்த அர்ஜுன் அதற்குள் அவன் அணிந்து இருந்த புல்லட் ப்ரூப் ஆடை போன்று இருந்த ஷீல்ட்டை வைத்து தனது மொத்த உடலையும் பாதுகாப்பாக கவர் செய்து கொண்டிருந்தான்.

பின் அவர்கள் தன்னை நோக்கி வர வேண்டும் என்பதற்காக அவன் வேண்டுமென்றே அவர்கள் உள்ளே வந்த அதே எமர்ஜென்சி எக்ஸிடை நோக்கி ஓடினான். அவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வரும்போது தனது ஆட்களை வைத்து அவர்களை லாக் செய்து பிடிப்பது தான் அர்ஜுனின் ப்ளானாக இருந்தது.

அது தெரியாமல் அந்த டெரரிஸ்ட் கும்பலும் அர்ஜுனை பின் தொடர்ந்து அவனை நோக்கி சுட்டவாறு ஓடினார்கள். அவன் பாதுகாப்பாக புல்லட் ப்ரூப் ஆடை அணிந்து இருந்ததால், அவர்களது துப்பாக்கி தோட்டாக்களால் அவனை எதுவும் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் அந்த எமர்ஜென்சி எக்ஸிட்டை நோக்கி மீண்டும் ஓடி சென்று கொண்டு இருந்த தருணம் அவர்களுடன் இன்டர்காமில் கனெக்ஷனில் இருந்த இன்னொருவன் “டேய் நீங்க எல்லாரும் முட்டாளா? எல்லாத்தையும் நம்ம தான் பிளான் பண்ணி பண்ணிட்டு இருக்கோம்னு இவ்ளோ நேரமா நெனச்சிட்டு இருந்தோம். ஜஸ்ட் ஃபேமிலி கூட இங்க என்ஜாய் பண்றதுக்கு வந்து அர்ஜுன் எப்படி புல்லட் ப்ரூப் டிரஸ் எல்லாம் போட்டு இருப்பான்?

எப்படியோ அவன் இப்படி எல்லாம் நடக்க போகுதுன்னு முன்னாடியே ஸ்மெல் பண்ணிட்டான். அது தெரியாம லூசுத் தனமா அவன் பின்னாடி ஓடிப் போய் நீங்களாவே அவன் பிளான்ல மாட்டிக்கப் போறீங்களா? ஒழுங்கா அவன விட்டுட்டு அவனோட மத்த ஃபேமிலி மெம்பர்சை டார்கெட் பண்ணுங்கடா.

அவங்க உங்க கண்ட்ரோல்ல இருந்தா மட்டும் தான் உங்களால அர்ஜுனை ஏதாவது பண்ணிட்டு உயிரோட இங்கிருந்து வெளியே போக முடியும்.” என்று அவர்களது மூளைக்கு உரைக்கும்படி  தெளிவாக instruction கொடுத்தான்.‌

அவன் அப்படி சொன்ன பிறகு தான் தங்களது திட்டம் எப்படியோ அர்ஜுனுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவன் முன்னெச்சரிக்கையாக அனைத்தையும் தயார் செய்துவிட்டு வந்திருக்கிறான் ‌ என புரிந்து கொண்டு அந்த டெரரிஸ்ட் கும்பல் உடனே அர்ஜுனை பின் தொடர்ந்து செல்வதை நிறுத்திவிட்டு தங்களுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்தவன் சொன்னதைப் போல அந்த விசாலமான கேமிங் ஏரியாவில் ஆங்காங்கே ஒழிந்து இருந்த அர்ஜுனின் குடும்பத்தினரை பிடிக்கும் நோக்கில் ஆளுக்கு ஒரு திசையில் கலைந்து சென்றார்கள்.

அர்ஜுனும் இன்டர்காம் வைத்து இருந்ததால் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி அவனுக்கும் இன்பர்மேஷன் சென்றது. உடனே ஓடி செல்வதை நிறுத்திவிட்டு தனது டீமில் உள்ள அனைவருக்கும் “அட்டாக்!” என்று ஒற்றை வார்த்தையில் கமெண்ட் கொடுத்தான்.

அவனது வாயில் இருந்து இந்த வார்த்தை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்த ஆங்காங்கே பதுங்கி இருந்த அவனது ஆட்கள் எல்லாம் கையில் துப்பாக்கியோடு குபுகுபுவென்று வெளியில் ஓடி வந்தார்கள். இப்போது அதே எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக கிட்டத்தட்ட  நூற்றிற்கும் மேற்பட்ட அர்ஜுனனின் பாடிகார்டுகள் அந்த இடத்திற்குள் நுழைந்து இப்போது அந்த மொத்த ஏரியாவையும் சுற்றி வளைத்து அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.

இதற்கு நடுவில் அந்த மாலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எல்லாம் எங்கே செல்வது? தாங்கள் என்ன செய்வது? என புரியாமல் குழப்பத்துடன் அங்கும் இங்கும் அலைமோதியபடி ஓடிக் கொண்டு இருந்தார்கள். ஒரு இடத்தில் மைக்கேல், மீரா, மகேஷ், மகாலட்சுமி நால்வரும் மறைந்து இருந்தார்கள்.

அர்ஜுனிடம் இருந்து அட்டாக் செய்ய சொல்லி கமெண்ட் வந்து விட்டதால் அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த மைக்கேல் மகேஷின் கையில் ஒரு துப்பாக்கியை கொடுத்து “இவங்க ரெண்டு பேரும் இப்ப உன் பொறுப்பு. நீதான் இவங்கள பாத்துக்கணும். நடுவுல எவன் வந்தாலும் சுட்டுத் தள்ளு. ஏதாவது எமர்ஜென்சின்னா, இன்டர்காம்ல நம்ம பசங்களுக்கு இன்ஃபர்மேஷன் குடு. சுத்தி நம்ம ஆளுங்க தான் இருக்காங்க.” என்று சொல்லிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த இன்னொரு இன்டர்காமை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கே இருந்து மீராவை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது கையில் இருந்த துப்பாக்கியை லோடு செய்தவாறு ஓடி சென்றான்.

தன் இரண்டு கைகளையும் கூப்பியவாறு கடவுளிடம் “கடவுளே ப்ளீஸ் யாருக்கும் எதுவும் ஆயிட கூடாது. இப்ப தான் என் லைஃப்ல எனக்குன்னு ஒருத்தர் கிடைச்சிருக்காரு. நான் அவர் கூட கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன். என் ஆசையில மண்ணள்ளி போட்டுடாதீங்க.” என்று கண்ணீருடன் தரையில் மண்டியிட்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தாள் மீரா.

தன் கையில் இருந்த துப்பாக்கியை அவசரமாக மகேஷ் லோடு செய்து கொண்டு இருக்க, அதை வாயை பிளந்து கொண்டு பார்த்த மகாலட்சுமி “என்ன மாமா பண்றீங்க? அந்த அண்ணா என்னமோ உங்க கையில துப்பாக்கிய கொடுத்து எவன் வந்தாலும் சுடுன்னு சொல்லிட்டு போறாரு.. நீங்களும் இது போட்டு திருப்பி என்னமோ பண்ணிட்டு இருக்கீங்க.. ஆமா முதல்ல உங்களுக்கு துப்பாக்கில சுட தெரியுமா? அப்படியே நீங்க யாரையாவது சுட்டு கொன்னுட்டாலும் உங்க மேல கொலை கேஸ் போட்ருவாங்களே..

இப்ப தான் நமக்கு கல்யாணம் ஆயிருக்கு. அதுக்குள்ள கொலை கேஸ்ல நீங்க ஜெயிலுக்கு போயிட்டா நான் என்ன பண்ணுவேன் மாமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்த பணக்காரங்க சமாச்சாரம் எல்லாம் நமக்கு வேண்டாம். நீங்க வாங்க எப்படியாவது நம்ம அந்த கேட் வழியா தப்பிச்சு வெளியே போயிடலாம். நம்ம யாருன்னு கூட அவங்களுக்கு தெரியாது. அதனால அவங்க நம்மள கண்டுக்க மாட்டாங்க.” என்று இருந்த பதட்டத்தில் எதை எதையோ உளறியவாறு  மகேஷின் கையைப் பிடித்து இழுத்தாள்‌.

அதில் எரிச்சல் அடைந்த மகேஷ் “ஏய் கைய விடு டி முதல்ல. அப்படி எல்லாம் நீ சொல்ற மாதிரி யாரும் இங்க இருந்து போக முடியாது. இங்க இருந்து நம்ம உயிரோட போகணும்னா, அர்ஜுன் சார் என்ன சொல்றாரோ அதை கண்ண மூடிட்டு கேட்டு மட்டும் தான் முடியும்.

அதுவும் இல்லாம, அவர் கிட்ட வேலை பாக்குறவங்க யாரா இருந்தாலும் சரி.. அவங்க உயிரை கொடுத்தாவது அர்ஜுன் சரையும், அவர் குடும்பத்தில் இருக்கிறவங்களையும் காப்பாத்தணும்னு தான் நினைப்பாங்க. பாதில விட்டுட்டு ஓடிப் போக மாட்டாங்க. இத்தனை நாளா அர்ஜுன் சார் வீட்ல எங்க அம்மா மாதிரி அவங்க கூட சேர்ந்து நான் தோசை சுட்டுட்டு இருந்தேன்னு நினைச்சியா? இங்க இருக்கிறவங்க எல்லாருமே professional trained killers. எங்க எல்லாருக்குமே அர்ஜுன் சார் தான் chief.” என்று அவள் மண்டையில் உரைக்கும்படி சொல்லிவிட்டு அவளையும் மீராவையும் பத்திரமாக ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு அந்த பக்கம் யாரேனும் வருகிறார்களா என வேடிக்கை பார்த்தபடி முன்னே சென்று கையில் துப்பாக்கியுடன் நின்றான்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured