அத்தியாயம் 90: எனக்கு விஷ்ணுவை பிடிக்கும் (பார்ட் 2)
ராகவி: “எனக்கும் அப்படி தான் தோணுது.” என்று கேஷுவலாக சொன்னாள்.
ஷாலினி: அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள், “என்ன -க்கா ஈஸியா ஆமாம்ன்னு சொல்றீங்க..??” என்றாள் சோகமாக. 🥺
ராகவி: “நான் தான் நீ மார்னிங் அவங்கள பாத்து பொலம்புனப்பவே சொன்னேன்ல, நீ அவன லவ் பண்ணாலன்னும் போது, அவன் வேற யாரையாவது லவ் பண்ணா உனக்கு என்ன..?? இல்ல அவன வேற யாராவது லவ் பண்ணா உனக்கு என்ன..?? நீ பாட்டுக்கு உன் வேலையை பார்க்க வேண்டியது தானே…!!! சும்மா நீயும் டென்ஷனாகி என்னயும் எதுக்கு டி டென்ஷன் பண்ணிட்டுு இருக்க..???” என்று காட்டமாக கேட்டாள். 😒
ஷாலினி: நீங்க சொல்ற மாதிரி நான் அவன லவ் பண்ணலேன்னாலும், என்னால என் பாட்டுக்கு நிம்மதியா இருக்க:முடியல. வேற ஒரு பொண்ணு கூட அவன் சுத்திட்டு இருக்கிறது எனக்கு இரிடேட் ஆகுது.
ரித்திகா: “அவ ஒன்னும் யாரோ ஒரு பொண்ணு இல்லையே…!!! அவ விஷ்ணுவோட அத்தை பொண்ணு. அவளுக்கு விஷ்ணுவை கட்டிக்கிற முறையும் இருக்கு, உரிமையும் இருக்கு. அவள பாத்து பொறாமை படுறதுக்கோ, அவ கூட எங்கயும் வெளில போகாதுன்னு விஷ்ணு கிட்ட சொல்றதுக்கோ உனக்கு என்ன உரிமை இருக்கு…???” என்று பாயிண்டாக கேட்டு ஷாலினியை மடக்கினாள்.
ஷாலினி: ராகவியின் இந்த கேள்வி அவளை மிகவும் யோசிக்க வைத்தது. நன்கு யோசித்துப் பார்த்தவள் தீர்க்கமான குரலில், “எனக்கு கேட்க உரிமை இருக்கு அக்கா. ஏன்னா எனக்கு அவன பிடிக்கும். அவன் எனக்கு மட்டும் தான்னு எனக்கு தோணுது.” என்றாள்.
ரித்திகா: “குட் கேர்ள். அப்படி உண்மைய ஒத்துக்கோ. உன் கிட்ட இருந்து இந்த உண்மைய வாங்குறதுக்கு இவ்ளோ நேரமா நான் என் தொண்டை தண்ணி வற்ற பேசிட்டு இருக்கேன். இப்பவாது நல்லா யோசிச்சு பாரு ஷாலினி. நீயும் அவனை லவ் பண்ற, அவனும் உன்ன லவ் பண்றான். அப்புறம் என்ன..??
அவன் உன் கிட்ட பிராங்கா அவனோட பீலிங்ஸ்ச ஷேர் பண்ற மாதிரி, நீயும் உன் மனசுல இருக்கிறத அவன் கிட்ட பிராங்கா சொல்லு. நீ இப்படியே அமைதியா இருந்தினா, கடைசில அந்த வைஷாலி விஷ்ணுவ கொத்திட்டு போயிருவா… பத்துக்கோ.” என்று சீரியஸ் ஆனா குரலில் சொன்னாள்.
ஷாலினி: “ஓகே அக்கா. உடனே பேச முடியுமான்னு தெரியல. ஆனா கண்டிப்பா சீக்கிரம் அவன் கிட்ட பேச ட்ரைை பண்றேன்.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
ஷாலினி: “ஓகே அக்கா. உடனே பேச முடியுமான்னு தெரியல. ஆனா கண்டிப்பா சீக்கிரம் அவன் கிட்ட பேச ட்ரைை பண்றேன்.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
நாராயணன் பேலஸில்….
நேரம் இரவு 8:00 மணி…
வைஷாலி இங்கு வந்து வெகு நாட்கள் ஆகி இருந்ததால், அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் இறுதியாக இங்கு வந்தபோது இருந்ததை விட இப்போது அந்த வீட்டில் நிறைய மாறி இருந்தன. அப்படியே, ஒவ்வொரு தலமாக சென்று வந்து கொண்டு இருந்தவள், இறுதியாக மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தாள். பல ஆயிரம் சதுர மீட்டர் உடைய அந்த பெரிய மொட்டை மாடியில், அங்கேயும் இங்கேயும் சுற்றிக் கொண்டு இருந்தாள் வைஷாலி.
அந்த பெரிய டெரசில் இருக்கும் ரெஸ்டிங் ஏரியாவில் ஒரு மூலையில் அமர்ந்து இருந்த ஆராதனா, தன்னுடைய மொபைல் போனில் அவளுடைய அண்ணன் பிரவீன் ஐ பற்றி வந்து இருந்த செய்திகளை இணையதளத்தில் வாசித்து கொண்டு இருந்தாள். அந்த செய்திகளில்….
இது மாதிரியான தரம் குறைவான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், இனி எப்போதும் செயல்பட கூடாது என்று மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், போலீசர்கள் கோர்ட்டின் உத்தரவின் பேரில்… பிரவீனுக்கு சொந்தமான காஸ்மெட்டிக்ஸ் மற்றும் ஃபார்மா சிட்டிகள் கம்பெனியை இழுத்து மூடி சீல் வைத்து இருந்தனர். என்றும்,
கோர்ட்டிலும் போலீஸார்கள் பிரவீனுக்கு எதிராக நிறைய ஆதாரங்களை சரியான முறையில் சமர்ப்பித்து இருந்ததால், அவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி; அந்த ஆதாரங்களின் அடிப்படையில், பிரவீன் குற்றவாளி என்று அறிவித்தது விட்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருவருக்கு தலா பத்து லட்சம் என்று அவனுடைய கம்பெனியின் சார்பாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், அது மட்டுமல்லாமல், அவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையையும் அறிவித்தார். என்று அந்த செய்திகளில் வெளி வந்து இருந்தது.
இவற்றை எல்லாம் கனத்த இதயத்தோடு படித்துக் கொண்டு இருந்த ஆராதனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. 😭 இப்போது காலை அவளிடம் அவளுடைய குடும்பத்தை பற்றி செண்பகம் பேசியது எல்லாம் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதை நினைத்துப் பார்த்தவளுக்கு, தன்னுடைய அண்ணன் ஏன் இவ்வளவு தவறானவனாக இருக்கிறான் என்று மிகவும் வருத்தமாக இருந்தது. 😞
இணையமெங்கும் வைரலாகி வளம் வந்து கொண்டு இருக்கும் பிரவீன் அரெஸ்ட் செய்யப்பட்ட போது எடுத்த அவனுடைய புகைப்படத்தை பார்த்தாள், ஆராதனா. ஏனோ சிறுவயதில் இருந்து அவள் பார்த்து வளர்ந்த, அவளுக்கு மிகவும் பிடித்த, அவள் மீது அதிகம் பாசம் வைத்திருக்கும், அவளுடைய பிரவீன் அண்ணா தான் இவன், என்று அவளால் நம்ப முடியவில்லை. அதை நினைத்துப் பார்த்தவள், சிறு வயதில் அவனும், அவளும், ஒன்றாக விளையாடிய தருணங்களை நினைத்து பார்த்து விரக்தியாக புன்னகைத்தாள். 😁
அப்போது அவளுக்கு பின்னே இருந்து, “நீ நினைக்கிறது எதுவும் நடக்காது.” என்று கோபமாக சொன்ன ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அந்த குரலை வைத்தே வந்திருப்பது வைஷாலி தான் என்று கண்டுபிடித்து விட்டாள் ஆராதனா. அதனால், சலிப்பாக இப்போது இவள் என்ன சொல்ல போகிறாளோ என்று நினைத்துக் கொண்டே திரும்பி அவளைப் பார்த்தாள். தன்னுடைய இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு நின்றிருந்த வைஷாலி, ஆராதனாவை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள். 😒 🤨
சிறு வயதில்.. ஹரியோடும், ஆராதனாவோடும், வைஷாலியும் ஒன்றாக விளையாடி சுற்றி திரிந்தவள் தான். ஆனால் இப்போது ஒருவர் மற்றொருவரை பார்க்கும் பார்வை முற்றிலும் மாறிவிட்டது. ஆராதனாகிற்கு சகஜமாக வைஷாலியுடன் பேசி, அவளுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் குழப்பங்களை தீர்த்து வைக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால், அவளிடம் பேசும் நிலைமையில் அவள் இப்பொது இல்லாததால், ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அவளுடைய மௌனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த வைஷாலி, இன்று தன் மனதில் இருக்கும் அனைத்தையும் அவளிடம் கொட்டி விட வேண்டும் என்று நினைத்து பேச தொடங்கினாள்.
வைஷாலி: “தன்னுடைய ஆள் காட்டி விரலை அவரை நோக்கி நீட்டியவள், “இங்க பாரு ஆராதனா…!!! உனக்கு இந்த வீட்ல மிச்சம் இருக்குற கொஞ்சம் நெஞ்ச மரியாதைய காப்பாத்திகிட்டு ஒழுங்கா இங்க இருந்து ஓடி போயிரு. நீயா இங்க இருந்து போகலேன்னா… நான் உன்ன இங்க இருந்து போக வைப்பேன். நீ நினைக்கிற மாதிரி உனக்கும், ஹரி மாமாவுக்கும், கல்யாணம் நடக்காது.
உனக்கு விஷ்வா மாமாவோட சப்போர்ட் இருக்குன்னு நினைச்சு ஓவரா ஆடாத. எப்பயும் எங்க செண்பா அத்தை எங்க பக்கம் தான் இருப்பாங்க. என்னோட அக்கா தேவ தர்ஷினிக்கும், ஹரி மாமாவுக்கும், தான் கல்யாணம் நடக்கும். ஏற்கனவே ஒரு தடவ ஜான்வி வந்து என் அக்காவுக்கு கிடைக்க இருந்த இடத்த புடிங்கிட்டாங்க. இன்னொரு தடவ நாங்க அப்டி நடக்க விட மாட்டோம். என் அக்கா இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுக்கப்புறம், நீ அசிங்கப்பட்டு இங்க இருந்து வெளிய போவதற்கு, நீ இப்பவே இங்க இருந்து போயிடு. அதான் உனக்கு நல்லது.” என்று சொல்லி மிரட்டியவள், கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
ஒரு மனுசி எத்தன பிரச்சனைய தான் டா சமாளிக்கிறது..?? என்று நினைத்த ஆராதனா, அழுவதற்கு கூட தெம்பின்றி சலிப்பாக அங்கே இருந்த ரெஸ்டிங் சோபாவில் அமர்ந்தாள். 😞 😕
அடுத்த நாள் காலை….
இன்று எப்படியாவது ராகவியை சந்தித்து திருமணம் பற்றி பேசி விட வேண்டும் என்று நினைத்த செண்பகம், பள்ளிக்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்த சித்தார்த்தை அழைத்து, “நான் இன்னைக்கு உன் பிரண்டு ராகவிய மீட் பண்ணனும். அதனால இன்னைக்கு அவள சாயங்காலம் கோயிலுக்கு வர சொல்லு.” என்றாள். அதைக் கேட்டு மகிழ்ந்த சித்தார்த், “சூப்பர் பாட்டி. இன்னைக்கு நம்ம ராகவி கூட கோயிலுக்கு போக போறோமா..??? ரொம்ப ஜாலியா இருக்கும்.” என்றவன் உற்சாகத்தில் குதித்து கொண்டு இருந்தான். 😍 😍 🥰
ஒரு வேளை இது பற்றி சித்தார்த் ராகவியிடம் சொல்ல மறந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்த செண்பகம், சேஃப்டிக்காக இது பற்றி ராகவியிடம் பேசும் படி சுகந்தி இடமும் சொல்லி வைத்தாள்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)