Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 145

மூர்கனின் காதலி CH 145

by Thenaruvi Tamil Novels
13 views

அத்தியாயம் 145

“உன்னை நான் trueஆ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் நான் செஞ்ச தப்பா..??” என்று கண்ணீருடன் ஆத்திரம் பொங்க கோபமாக சௌபர்ணிகா கேட்க, “No, நீ இப்படி ஒரு பணக்கார வீட்டுல பிறந்தது தான் நீ செஞ்ச தப்பு.” என்றான் சேரன்.

புரியாமல் அவள் அவனை பார்க்க, “என்னடி அப்படி பாக்குற..?? பின்ன.. நான் எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணேன்னு நீ நினைக்கிற..?? எல்லாம் உன் கிட்ட இருக்கிற பணத்துக்காக மட்டும்தான். பார்க்கவும் நல்லா வெள்ளை தோலோட பளபளன்னு அழகா இருக்க. அதைவிட இந்தியாவோட top 5 richest people இருக்கிற familyல இருக்க. இதைவிட வேற என்ன வேணும்..?? அதான் jackpot மாதிரி நீ தானா வந்து என் வலையில விழவும், உன்னை ஈஸியா correct பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
நானும் நமக்கு marriage ஆனதுக்கப்புறம் நீ அப்படியே என்னை பணத்திலேயே குளிப்பாட்டுவன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீ நான் செலவுக்கு காசு இல்லைன்னு கேட்டாலும்.. ஏதோ பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுற மாதிரி ஐயாயிரம், பத்தாயிரத்துக்கு மேல ஒரு ரூபாக் கூட ‌கொடுக்க மாட்டேங்குற. உனக்கு என்னடி அவ்ளோ திமிரு..?? எல்லா காசையும் நீயே வச்சுக்கணுமா..?? நான் இருக்கிற வரைக்கும் அதெல்லாம் நடக்காதுடி.” என்று சொல்லிவிட்டு வில்லத்தனமாக அவளைப் பார்த்து சிரித்தான் சேரன்.

அவன் சொல்லும் ஒவ்வொன்றும் மேலும் மேலும் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்க, “அப்போ உனக்கு 1% கூட என் மேல லவ் இல்லையா..??” என்று அவள் உடைந்த குரலில் கேட்க, “எனக்கு உன் money and இந்த luxurious lifestyle மேலதான் 100% love இருக்கு.” என்ற சேரன் தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டு அண்ணாது ceilingஐ பார்த்தபடி சுற்றிவிட்டு “இதுக்காக மட்டும்தான் நான் உன்ன லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” என்று சொல்லிவிட்டு ஹிஹிஹி என்று இளித்தான்.

“போச்சு.. இவனால என் வாழ்க்கை மொத்தமா நாசமா போச்சு. உருகி உருகி லவ் பண்ண தெரிஞ்ச எனக்கு, யாரை லவ் பண்ணனும்னு தெரியாம போயிடுச்சே… ஐயோ.. இப்ப நான் என்ன பண்ணுவேன்..?? இதுக்கு மேல என்ன பண்ணி நான் பண்ண தப்ப என்னால சரி பண்ண முடியும்னு தெரியலையே..!!” என்று யோசித்த சௌபர்ணிகா தன் தலையில் அடித்துக் கொண்டு அழ, அவள் கையைப் பிடித்து தடுத்த சேரன் “போதும்டி எவ்ளோ நேரம் அழுவ..?? என்னதான் இருந்தாலும்.. நீ என் பொண்டாட்டி ஆச்சே.. நீ சும்மா ஒக்காந்து ஒப்பாரி வச்சுட்டே இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்குல்ல.. so இனிமே நான் உன்னை எதுவும் பண்ணி கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இதுக்கு மேல இருக்கிற என் lifeஐ நான் உன்க்கூட தானே வாழ்ந்தாகணும்.. சோ அந்த lifeஐ சந்தோஷமா வாழனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா..??” என்று கேட்டான்.‌

“யாருடா இவன்.. சரியான psychoகிட்ட வந்து நான் நல்லா மாட்டிக்கிட்டேன். ஆல்ரெடி எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. இப்போ இவன் இப்படி மாத்தி மாத்தி பேசினா.. நான் என்ன பண்றது..?? ஆஆஆ.. இவனோட original characterதான் என்ன..?? கடவுளே.. எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.” என்று நினைத்து குழப்பமான முகத்துடன் அவள் அவனைப் பார்க்க, “என்னடி பாக்குற..?? நான் நெஜமா தான் சொல்றேன். நமக்கு இருக்கிறது ஒரு life. இத நம்ம Happyஆ enjoy‌ பணி வாழ வேண்டாமா..?? Futureல நான் உன்ன trueஆ love பண்ணக் கூட try பண்றேண்டி. Promiseஆ.. I mean it.” என்ற சேரன் அவளது கலைந்திருந்த தலைமுடியை சரி செய்தான். அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது.

அதனால் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவள் கண்களை அன்புடன் பார்த்த சேரன் “நான் உன் புருஷன்டி. எதுக்கு என்னை பார்த்து பயப்படுற நீ..?? Relax… நான் சொல்றதை எல்லாம் பட்டுக்குட்டியாட்டம் நீ அப்படியே கேட்டு செஞ்சினா.. நான் உன்னை எதுவுமே பண்ண மாட்டேன். In fact நம்ம லவ் பண்ணப்ப இருந்தோமே.. அதை விட lovableஆ carryingஆ நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்.” என்று சொல்ல, “நான் என்ன செய்யணும்..??” என்று எழும்பாத குரலில் கேட்டாள் அவள். “நீ பேசறதே எனக்கு கேக்கல. கொஞ்சம் சத்தமா சொல்லு baby.” என்று அவன் சொல்ல, “நான் என்ன பண்ணனும்னு சொல்லு. கடைசியா அதையும் உனக்காக பண்ணிடறேன். அப்பவாவது நீ மாருறியான்னு பார்க்கலாம்.” என்றாள் சௌபர்ணிகா.

“Good decision. You are a sweet girl.” என்று சொல்லிவிட்டு அவள் கன்னங்களை கிள்ளி முத்தம் வைத்த சேரன்,
“பெருசா ஒன்னும் இல்ல. இப்போதைக்கு முதல்ல உன் பேர்ல இருக்குற properties, shares எல்லாத்தையும் என் பேருக்கு register பண்ணி கொடுத்துடு. அப்புறம் கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம், உன் தம்பி பேருல என்னென்ன properties இருக்குன்னு list out பண்ணி அவன்கிட்ட ஏதாவது சொல்லி அவனை convince பண்ணி அவன் பேர்ல இருக்கிற சொத்தையும் என் பேர்ல எழுதி வைக்க சொல்லு. நீங்க ரெண்டு பேரும்தான் பாசமலர்கள் ஆச்சே.. கூட பொறந்த அக்கா.. அவ புருஷன்க்கூட சந்தோஷமா நல்லா வாழனும்ன்னு விஷ்வா இதக்கூட பண்ண மாட்டானா..?? அதெல்லாம் அவன் பண்ணுவான். ஆனா நீ அத கேக்குற விதத்துல ஒழுங்கா கேட்டு வாங்கணும்.” என்று அவ்வளவு பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த சௌபர்ணிகா “முடியாது. என்னால முடியாது.” என்று சொல்லிவிட்டு வேகமாக அவள் தலையை இடவலமாக ஆட்ட, “என்னடி சொன்ன..??” என்று உச்ச ஸ்ருதியில் கத்தி கேட்ட சேரன் மீண்டும் அவள் தலை முடியை கொத்தாக பற்றி அவளை தர தரவென இழுத்துக்கொண்டு பாத்ரூமிற்க்கு சென்று அங்கு முழுவதாக நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த bathtubக்குள் அவள் தலையை முக்கினான்.‌ தண்ணீருக்குள் மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்த சௌபர்ணிகா, தன் கூந்தலை பிடித்திருந்த அவன் கையை தன்மீதிருந்து எடுத்துவிட போராடி தோற்றுப்போனாள். அவளுக்கு மூச்சு முட்டி மயக்கம் வருவதை போல இருந்தது.

“இவ செத்துட்டா நான் எப்படி இவளோட சொத்தை எல்லாம் எழுதி வாங்குறது..??” என்று நினைத்து சேரன் அவள் முடியை பிடித்து சட்டென மேலே இழுக்க, தண்ணீருக்குள் இருந்து வெளியில் வந்த சௌகர்ணிகா அவள் வாயில் இருந்த தண்ணீரை துப்பிவிட்டு லொக்.. லொக்.. என்று இரும்பினாள்.

இப்போதும்க்கூட அவளுக்கு மூச்சுவிட சிரமமாக இருக்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “என்ன விடு.. என்ன விடுடா..!!” என்ற திக்கி திணறி சொன்னபடி, அவன் கையில் சிக்கிக் கொண்டிருந்த தனது நீண்ட கூந்தலை விடுவிக்க போராடினாள். அதனால் அவன் அவள் முடியை விட்டுவிட, நடுங்கிய உடலுடன் எழுந்து நின்ற சௌபர்ணிகா சேரனை பார்த்து பயந்து வேகமாக பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று அந்த அறைக்குள் அவளது பொருட்கள் இருந்த secret roomற்க்குள் புகுந்து கொண்டு அவன் வருவதற்குள் doorஐ lock செய்து விட்டாள்.

“என்ன இவ இதுக்கே ஓடிப்போய் இப்படி ரூமுக்குள்ள ஒளிஞ்சிகிட்டா..?? ஒருவேளை அப்படியே பயத்துல suicide பண்ணி இவ செத்துட்டானா என்ன பண்றது..?? இவளால நமக்கு ஆக வேண்டிய காரியம் நிறைய இருக்கு..!!” என்று நினைத்த சேரன்,

“ஏய் சௌபர்ணிகா.. கதவ தொரடி. நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் வெளிய வா… ப்ளீஸ் கதவை திற. எனக்கு பயமா இருக்கு. Open the door சௌபர்ணிகா.. உன் தம்பியோட சொத்தை எழுதி கொடுக்கறதுலதானே உனக்கு பிரச்சனை.. பரவால்ல. எனக்கு அவன் சொத்து வேணாம். எனக்கு அதை விட நீ தாண்டி முக்கியம்.‌

பேசாம நம்ம இப்படி பண்ணலாம்.. நீயும் நானும் husband and wife தானே.. உன்னோடது எல்லாம் என்னோடது. என்னோடதெல்லாம் உன்னோடது. எப்பயும் நீ அப்படித்தானே சொல்லுவ.. அப்போ உன்னோட properties எல்லாம் உன் பேர்ல இருந்தா என்ன..?? இல்ல, என் பெயர்ல இருந்தா என்ன..?? சோ அத மட்டும் எனக்கு எழுதி குடுத்துடு‌ baby. அதுக்கப்புறம் நான் உன்ன disturb பண்ணவே மாட்டேன். நம்ம எல்லாரும் இதே வீட்ல உன் தம்பிக் கூட happy familyஆ வாழலாம்.

இதுக்கு மேல என்னால இறங்கி வர முடியாதுடி. இத கூட நான் உனக்காக தான் சொல்றேன். உனக்கு வேற option இல்ல. நீ இந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் சொல்றத கேட்டா, lifelong நீ சொல்றத கேட்டு நான் ஒழுங்கா இருக்கேன். I promise you. நான் உன்கிட்ட கோபமா.. சத்தமாக்கூட பேச மாட்டேன். உன்னை என் queenஆ நினைச்சு உனக்கு நான் slaveஆ இருந்து நான் சாகுற வரைக்கும் உன்னை சந்தோஷமா பாத்துக்குறேன். என்ன நம்பு டி.” என்று தேனொழுக இனிக்க இனிக்க பேசி அவளை வெளியே வர சொல்லி தொடர்ந்து கதவை தட்டிக் கொண்டு இருந்தான்.
உள்ளே அவன் குரலைக் கேட்டு பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள் சௌபர்ணிகா. அவள் தன் சொத்துக்களை அவனுக்கு எழுதிக் கொடுத்துவிடுவாளா..??

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured