அத்தியாயம் 229: என் ஆளுடா அவ (பார்ட் 1)
ரித்திகாவின் வீட்டில்…
வருண் தன்னுடன் க்ரிஷா, பிராங்கிளின் மற்றும் சிவா உடன் ரித்திகாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரையும் இன் முகத்துடன் ரித்திகா தன்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து வரவேற்றாள். 😍 🙏 க்ரிஷா அவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைத்ததோடு நிறுத்திக் கொண்டாள். ரித்திகாவை பார்த்து நட்புடன் புன்னகைத்த பிராங்கிளின், “ஹலோ லேடி பாஸ்..!!! நைஸ் டு மீட் யூ மேம்.” என்றான். 😁 😁 😁
ரித்திகா: அவனுக்கு ஒரு வேளை தமிழ் தெரியாது போல என்று நினைத்துக் கொண்டவள், “ஹலோ சார். குட் ஈவினிங். நைஸ் டூ மீட் யூ டூ. மே ஐ நோ யுவர் நேம்…??” என்று சரளமான ஆங்கிலத்தில் கேட்டாள்.
பிராங்கிளின்: “ஐ அம் பிராங்கிளின் மேடம். நீங்க ரித்திகா தானே… உங்கள தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க. உங்க மேரேஜ்க்கு நான் வந்து இருந்தேன். பட் உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வாய்ப்பில்ல. நீங்க தான் அப்ப மயக்கத்துல இருந்தீங்களே.. பட் ஐ ஹவ் டு சே ஒன் திங்க் மேம். நீங்களும் வருண் சாரும் ட்ருலி மேட் ஃபார் ஈச் அதர்.” என்று சொல்லி மனதார வாழ்த்தினான். 😍 😁 😁 😁
ரித்திகா: பிராங்களின் தமிழில் பேசுவதை கண்டு ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்தவள், “ஓ மிஸ்டர் பிராங்க்ளின் உங்களுக்கு நல்லா தமிழ் தெரியும் போல..!!!” என்று கேட்டாள்.
பிராங்கிளின்: “எஸ் மேடம். ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டு மை டியர் ஃப்ரெண்ட் க்ரிஷா. அவகிட்ட இருந்து தான் நான் தமிழ் கத்துக்கிட்டேன். அண்ட் இப்போ இந்தியாவோட பெரிய ஃப்பேன் ஆகிட்டான். அதான் ஃப்புல் டைம் அதான் இங்கவே வந்து செட்டில் ஆயிட்டேன். அண்ட் லக்கிலீ வருண் சார் எனக்கு ஒரு குட் ஜாப் ஆஃபர் பண்ணி இருக்காரு.” என்று ரித்திகா சொன்னவன் பின் வருணை பார்த்து, “தேங்க்யூ சோ மச் சார் பார் தி ஜாப் அண்ட் திஸ் லன்ச்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁
வருண் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தபடி, “யூ ஆர் வெல்கம் மை மேன்.” என்று சொன்னவன், சிவாவை அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் க்ரிஷாவையும், பிராங்க்ளினையும், மட்டும் அங்கு இருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் வருண்.
பின் இத்தனை பேரையும் ஒரே நேரத்தில் அமர்த்தி சாப்பிட வைக்கும் அளவிற்கு ரித்திகாவின் வீட்டின் டைமிங் டேபிளில் இடம் இல்லாததால், தரையில் ஒரு விரிப்பை விரித்து வரிசையாக அதில் அவர்களை அமர வைத்து விட்டு அவர்களின் முன்னே தலை வாழை இலையை போட்டு ஷாலினியும், ரேவதியும், அனைவருக்கும் பரிமாற தொடங்கினார்கள். ரித்திகா தானும் அவர்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னாலும், அவள் வருண் மற்றும் சித்தார்த்துடன் ஒரு குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவது தான் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவளையும் வருணின் அருகே அமர வைத்து விட்டனர்.
வழக்கம்போல் சித்தார்த் ரித்திகாவின் அருகே அமர்ந்து கொண்டான். இதற்கு முன்பு பிராங்க்ளின் இதுபோன்று எங்கேயும் தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிட்டது இல்லை என்பதால், இந்த முறையில் இந்திய உணவை சாப்பிடுவதற்கு அவன் மிகவும் ஆர்வத்துடன் இருந்தான். இது வெயில் அதிகமாக இருக்கும் காலம் என்பதால் எப்போதும் ஏசியிலேயே இருந்து பழகியவர்களுக்கு தங்களுடைய வீட்டில் தங்குவது அசௌகரியமாக இருக்கும் என்று நினைத்த ரித்திகாவின் பெற்றோர்கள் எக்ஸ்ட்ராவாக இரண்டு டேபிள் பேன்களை வாங்கி வைத்து இருந்தனர். சுதாகர் அதில் ஒன்றை வருணின் அருகே வைத்து ஆன் செய்து விட்டார்.
அதனால் ஷாலினி வருணின் அருகே தரையில் போட்டுவிட்டு சென்ற இலை காற்றில் பறந்து ரித்திகாவின் இலையின் மீது விழுந்தது. அதைக் கண்டு சிரித்த விஷ்ணு, “என்ன அண்ணா எவ்ளோ பெரிய பிசினஸ் மேன் நீங்க.. ஃபேன் போட்டா காத்துக்கு வெயிட் இல்லாத இலை பறக்கும்னு உங்களுக்கு தெரியாதா… அத போய் பறக்கவிட்டு இப்டி வேடிக்கைக்கை பாக்குறீங்க..???” 😂 😂 😂 என்று விஷ்ணு சிரித்ததால் அங்கே இருந்த அனைவரும் வருணை பார்த்து வழக்கம் போல் சிரிக்க தொடங்கி விட்டனர். “என்ன அப்பா நீங்க நான் கூட என்னுடைய இலையை பத்திரமா வச்சிருக்கேன் பாருங்க..!!!” என்ற சித்தார்த், தன் இலையை அவனிடம் சுட்டிக்காட்டினான். 😂😂 😂 😂
வருணை பார்த்து லேசாக புன்னகைத்த ரித்திகா, தன்னுடைய இலையின் மீது விழுந்து கிடந்த வருணின் இலையை எடுத்து சரியாக போட்டவள் அதன் மீது மீண்டும் தண்ணீரை தெளித்து துடைத்து இப்போது அதன் மீது ஒரு தண்ணீர் கிளாசை வெயிட்டிற்காக வைத்தாள். ரித்திகா தனக்கு உதவினாலும் அவளையும், விஷ்ணுவையும், பார்த்து முறைத்த வருண் அமைதியாக அமர்ந்து இருந்தான். 😒 🤨
ஷாலினி வரிசையாக ஒவ்வொரு உணவுகளாக கொண்டு வந்து அவர்களின் முன்னே தரையில் வைத்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவளைப் பார்த்து பிராங்கிளின் சைட் அடிக்க அதை கவனித்த அவன் அருகே அமர்ந்து இருந்த விஷ்ணு பிராங்க்ளினின் காதுகளில், “ப்ரோ ஷீ இஸ் மை கேர்ள்.” என்றான் சிறு பொறாமையுடன். 😒
பிராங்கிளின்: விஷ்ணு வருண் தம்பி என்று ஏற்கனவே அறிந்து வைத்து இருந்தவன், “ஓ சூப்பர் சார். சி இஸ் சிம்ப்ளி பியூட்டிஃபுல். யூ ஆர் சோ லக்கி டு ஹேவ் ஹெர்.” 👌 என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
விஷ்ணு: “அது எனக்கே தெரியும் டா மைதா மாவு மூஞ்சி. வந்துட்டான் வெளி நாட்டுல இருந்து என்னோட ஆள சைட் அடிக்கிறதுக்கு.” என்று நினைத்துக் கொண்ட விஷ்ணு வெளியில் அவனிடம் சிரித்து கொண்டே, “யா ஐ நோ. தேங்க்யூ சோ மச் மிஸ்டர் பிராங்க்ளின். ” என்றான். 😁 😁 😁
அவர்களுடைய இலையில் ரேவதியும், ஷாலினியும், அசைவ உணவுகளாக கொண்டு வந்து பறப்பன, ஊர்வன, நடப்பன என அந்த பெரிய இலையே பத்தாமல் போகும் அளவிற்கு வரிசையாக கொண்டு வந்து அடுக்கிக் கொண்டே இருந்தனர். கிச்சனில் இருந்து சுதாகர் சூடாக ஒரு அடுப்பில் மீன்களையும் இன்னொரு அடுப்பில் சில்லி சிக்கனையும், பொரித்துக் கொண்டே இருந்தார்.
வழக்கம்போல் ரித்திகா சித்தார்த்துக்கு ஊட்டி விட்டு கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். “ரித்தி அம்மா பிரியாணி சூப்பர். தாத்தா செமயா செஞ்சுருக்காரு.” என்று சொன்னபடியே அவற்றையெல்லாம் ரசித்து சாப்பிட்டான். 😍 பொறுமையாக அவனுக்கு அனைத்தையும் ஊட்டி விட்ட ரித்திகா, சிக்கன் மட்டன் மற்றும் மீன்கள் போன்றவற்றை சித்தார்த் சாப்பிடுவதற்கு ஏதுவாக எலும்புகள் மற்றும் முள்ளும் அனைத்தையும் நீக்கிவிட்டு அவனுக்கு தேவையான அளவிற்கு சிறிது சிறிதாக ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் டேஸ்ட் செய்து அனைத்து உணவுகளையும் சாப்பிட பழக வேண்டும் என்பதற்காக பொறுமையாக அவை அனைத்தையும் அவனுக்கு ஊட்டி விட்டுக்கொண்டு இருந்தாள்.
இந்த காட்சியை ரித்திகாவை பற்றியும் சித்தார்த்தை பற்றியும் தெரியாதவர்கள் வேறு யாராவது கண்டால், சத்தியமாக சித்தார்த்தை வேற்று தாயின் வயிற்றில் பிறந்த மகன் தான் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரித்திகா ஒவ்வொரு சிறிய விஷயத்தை கூட கவனமாக பார்த்து பார்த்து சித்தார்த்திற்காக செய்தாள். இதற்கிடையில் அவள் வருண் எப்படி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதையும் கவனிக்க தவறவில்லை.
வருணின் இலையில் இருந்த பிரியாணியும், சிக்கன் கிரேவியும் மட்டும் காலியாகி இருந்தது. மற்றவை அனைத்தையும் வைத்து மெதுவாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் வருண். அதை கவனித்த ரித்திகா, அவனுக்கு அதுதான் மிகவும் பிடித்திருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டு ஷாலினியை அழைத்தவள், “ஷாலு உங்க மாமாவுக்கு கொஞ்சம் மட்டன் பிரியாணியும், சிக்கன் கிரேவியும், வை டி.” 🍛🍗 என்றாள். அவள் குரலைக் கேட்டு வேகமாக அங்கே வந்த ஷாலினி வருணிற்கு பரிமாறுவதற்காக பிரியாணி குண்டாவையும், சிக்கன் கிரேவி இருந்த பாத்திரத்தையும், எடுத்து கொண்டு அவன் அருகே வந்தாள்.
அதை கவனித்த வருண், “இல்லை மா பரவால்ல போதும். நான் யூஸ்வலா சாப்பிடுவதை விட இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிட்டேன்.” என்று சொல்லி மறுத்தான். ஆனால் அதை எல்லாம் துளியும் தன் காதில் வாங்காத ஷாலினி, “சிக்கன் கிரேவி ரித்திகா அக்கா தான் செஞ்சாங்க. விஷ்ணு எல்லாம் சமைக்கும்போதே இரண்டு பிளேட் உள்ள தள்ளிட்டான். நீங்களும் நல்லா கூச்சப்படாம சாப்பிடுங்க மாமா.” என்றவள், வருண் சொல்ல சொல்ல கேட்காமல் அவனுடைய இலையில் மீண்டும் மட்டன் பிரியாணியையும், சிக்கன் கிரேவியையும், வைத்துவிட்டு சென்றாள்.
அப்போது வழக்கம் போல் செல்பவளை தடுத்த விஷ்ணு, “எனக்கும் வச்சுட்டு போ டி. நான் மட்டும் ஒன்ஸ் மோர் சாப்பிட மாட்டானா..??” என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு கேட்டான். தன் கையில் இருந்த பிரியாணி குண்டாவை அவன் அருகே வைத்த ஷாலினி, “நீ இத பாக்குறப்ப எல்லாம் எப்படியும் உனக்கு வேணும்னு கேப்ப. சோ சும்மா சும்மா எதுக்கு எடுத்துட்டு போயிட்டு நான் கொண்டு வந்து மறுபடியும் உனக்கு போட்டுக்கிட்டு… இந்தா நான் இத உன் பக்கத்திலேயே வைக்கிறேன் நீயே போட்டு சாப்பிடு. எப்படியும் மிச்சம் மீதி எதுவும் இருக்காது. ஒரு வேளை இருந்துச்சுன்னா அதை அப்படியே வை ஓரமா. அப்பா சில்லி போட்டு இருக்காரு. நான் போய் அத வாங்கிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
விஷ்ணு: “சூடு ஆறுறதுக்குள்ள சீக்கிரம் கொண்டு வா.” என்று செல்பவளின் முதுகை பார்த்து கத்தினான்.
தன் சிறு வயதில் அம்மா, அப்பா என்று அழகான குடும்பமாக இருந்த தன்னுடைய குடும்பம் இப்போது இப்படி சிதைந்து போய் கிடக்கிறதே என்று நினைத்து எத்தனையோ நாட்கள் வருந்தி இருக்கிறாள் க்ரிஷா. அதனால் இப்போது ரித்திகாவின் இந்த நிறைவான அன்பான குடும்பத்தை பார்க்கும் போது அவளுடைய மனமும் சற்று நிம்மதி அடைந்தது. பிராங்க்ளினை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்தியர்களின் மீதும், குறிப்பாக தமிழ் மக்களின் மீதும், அவர்களுடைய விருந்தோம்பல் மற்றும் கலாச்சாரத்தின் மீதும், அதீத காதலை கொண்டு இருந்த பிராங்கிளின் ரித்திகாவின் வீட்டில் அவன் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தான். இதே போன்று தனக்கும் ஒரு அன்பான குடும்பம் இங்கே கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன், கட்டினால் ஒரு தமிழ் பெண் ஐ தான் கட்ட வேண்டும் என்ற தன்னுடைய ஆசையாக இருந்ததில் இன்று உறுதியான தீர்மானமாக மாற்றி விட்டான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் பிராங்க்ளினும், சிவாவும், க்ரிஷாவும், தாங்கள் கிளம்புவதாக சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டனர். அவர்களைப் போல் தானும் விருந்தாளியை போல் உடனே கிளம்பி சென்றுவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்த வருண், சிறிது நேரம் கழித்து செல்லலாம் என்று நினைத்து வந்து சோபாவில் அமர்ந்தான். அவர்கள் பெண் பார்க்க வரும் போது நடந்ததைப் போல ரித்திகாவும் கேஷுவலாக சித்தார்த்துடன் வந்து வருணின் அருகே அமர, அந்த அழகான தருணத்தை தன்னுடைய மொபைல் போனில் படம் பிடித்தான் விஷ்ணு.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)