Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 142

மூர்கனின் காதலி CH 142

by Thenaruvi Tamil Novels
10 views

அத்தியாயம் 142

விஷ்வாவும், மேகாவும் அவர்களுடன் வந்த மற்றவர்களும் ஒரு amusement parkக்கு சென்றார்கள். விஷ்வா தன்னை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தன் முகத்தை மூடிக்கொண்டு வர, அதை கவனித்துவிட்டு சிரித்த மேகா “நீ இப்படி பண்றத CCTV cameraவுல பார்த்து உன்ன terroristன்னு நெனச்சு புடிச்சிட்டு போயிடப் போறாங்க.. ஒழுங்கா நார்மலா வா.‌” என்று கிண்டலாக சொன்னாள்.

“ச்சீ.. போ.. எல்லாம் உன்னால தாண்டி. வெளிய சுத்தறதுக்கு உனக்கு வேற இடமே கிடைக்கலையா..?? Public place எனக்கு set ஆகாதுன்னு தெரிஞ்சு தானே வேணும்னே இங்க என்ன கூட்டிட்டு வந்த நீ..!!” என்று விஷ்வா சற்று கோபமாக சொல்ல, “இப்ப என்ன உனக்கு.. உன் faceஐ பார்த்து யாரும் உன்னை அடையாளம் கண்டுபிடிக்க கூடாது. அவ்வளவு தானே..!! என்கூட வா.” என்ற மேகா அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்று குழந்தைகள் போடுவதைப் போல ஒரு அழகிய மஞ்சள் நிற புலிக்குட்டி மாஸ்க்கை வாங்கி வலுக்கட்டாயமாக அவன் முகத்தில் மாட்டி விட்டாள்.

“அண்ணா.. இப்பதான் நீங்க cuteஆ இருக்கீங்க..!! இருங்க அப்படியே உங்கள நான் ஒரு photo எடுக்கிறேன்.” என்ற ரிஷி விஷ்வாவை அந்த மாஸ்குடன் photo எடுக்க try செய்தான். “டேய் சும்மா இருடா. Photo எடுத்தினா.. public placeன்னு கூட பாக்காம அடிச்சு உன் கைய காலை உடைச்சு விட்டுவிடுவேன் பாத்துக்கோ..!!” என்று விஷ்வா அவனை மிரட்ட, “அண்ணி.. பாருங்க அண்ணி.. உங்க முன்னாடியே இவர் எப்படி பேசுறாருன்னு..!!” என்று மேகாவை பார்த்து சினுங்கினான் ரிஷி. “நீ எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அழகா photo எடு. அவர் pose கொடுப்பாரு.” என்ற மேகா அப்படியே சைடாக விஷ்வாவை hug செய்து கொண்டு ரிஷியின் phone cameraஐ பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

அதனால் விஷ்வா அவர்களை பார்த்து முறைக்க, “டேய்.. இந்த புலிக்குட்டி நம்மள பாத்து முறைக்கிதுடா. அது‌ காண்டுல பாஞ்சு நம்மளை கடிச்சு கொதர்றத்துக்குள்ள சீக்கிரம் photo எடு..!!” என்ற மேகா சிரிக்க, விஷ்வாவும் லேசாக சிரித்து விட்டான்.‌ அதனால் அந்த photo perfectஆக வந்தது. மேகா ஒரு முயல் குட்டி மாஸ்கை வாங்கி அணிந்து கொள்ள, மகேஷ் சென்றுவிட்டதால் சோகமாக இருந்த அணுவை தவிர மற்றவர்களும் அவர்களுக்கு பிடித்த maskகளை வாங்கி அணிந்து கொண்டார்கள்.‌
சாரா ஆசையாக மேகாவை போல தானும் ஒரு முயல் குட்டி மாஸ்க்கை வாங்கி அணிந்து கொள்ள, “உன்னோட terror faceக்கு அந்த devil mask தான்டி set ஆகும். அதை வேணும்னா try பண்ணி பாரு.” கிண்டலாக ரிஷி சொல்ல, “நான் என்ன போட்டா உனக்கு என்ன..?? நீ எதுக்கு என் faceஐ பாக்குற..?? இன்னொரு தடவை நீ இப்படி தேவை இல்லாம என்கிட்ட பேசிட்டு இருந்தா, உன்ன பத்தி நான் விஷ்வா சார் கிட்ட complaint பண்ண வேண்டியது இருக்கும். So be careful.” என்று அவனை மிரட்டினாள் சாரா.

“ஐயோ‌‌.. விஷ்வா அண்ணா பேர கேட்டவுடனே எனக்கு ரொம்ப பயமா இருக்கே… நீ போய் என்ன பத்தி அவர்கிட்ட எதுவும் சொல்லிடாத சாரா ப்ளீஸ்..!!” என்று பயந்த குரலில் சொன்ன ரிஷி, பின் அவளை பார்த்து விழத்தனமாக சிரித்து “போய் சொல்லிக்கோ.. போடி.” என்று திமிராக சொன்னான். “ச்சீ.. போ… ஆளும்.. மண்டையும்.. brainless idiot.” என்று தானும் பதிலுக்கு irritateஆகி சொன்ன சாரா தன் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். கூட்டமான இடத்தில் பயப்படும் குழந்தை போல விஷ்வாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அந்த பெரிய amusement park முழுவதும் சுற்றி வந்த மேகா, “அதுல ஒரு ride போலாம் வா.” என்று எதிரில் இருந்த Megha size roller coasterஐ காட்டினாள்.

“Are you sure..??” என்று விஷ்வா அவள் என்னத்தை உறுதி செய்வது கொள்வதற்காக கேட்க, “yeah sure. அதுல போறதுக்கு என்ன..?? என்னை என்ன உன்ன மாதிரி பயந்தாங்கோலினு நினைச்சியா..??” என்று கேட்டாள் அவள்.‌ “ஓஹோ அப்படியா.. நீ எவ்ளோ தைரியசாலினு இப்ப தெரிஞ்சிரும் வா..” என்ற விஷ்வா அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ticket வாங்கிவிட்டு அவளுடன் அதில் ஏறி ‌ அமர்ந்தான். அவர்களுடன் வந்தவர்களும் அவர்களுக்காக அதில் ஏறி அமர்ந்தார்கள். “உனக்கு heightன்னா பயம் இல்லையா..??” என்று ரிஷி கேட்க, “என்ன பாத்தா இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் மாதிரி தெரியுதா உனக்கு..??” என்று வழக்கம்போல் திமிராக கேட்டாள் சாரா.

“ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்.. யார் பயப்படுறாங்கன்னு.” என்று வெளியில் தைரியமாக சொன்ன ரிஷி “ஐயோ எனக்கு height-ன்னா பயமாச்சே..  நான் வேற இவர்கிட்ட ஏதோ ரொம்ப தைரியமான ஆள் மாதிரி பேசி build up பண்ணி வச்சுட்டேன். இப்ப இவ மட்டும் நான் பயப்படுறதை பாத்துட்டானா.. அவ்வளவுதான்.  எப்பவும் இத சொல்லியே என்ன அசிங்கப்படுத்திட்டே இருப்பா.” என்று நினைத்தான்.

அவர்கள் அமர்ந்திருந்த giant size roller சுற்ற தொடங்கி விட; பயத்தில் ரிஷிக்கும், மேகாவிற்கும் தங்கள் வயிறு கலக்குவதைப் போல இருந்தது. அது முழுதாக ஒரு சுற்று சுற்றி முடிப்பதற்குள்ளையே “Oh my God.. பயமா இருக்கே..!! இந்த Heart பக்கு பக்குன்னு துடிச்சு வெளியே வந்து விழுந்துரும் போல..!! போதும் இதுக்கு மேல கௌரவம் எல்லாம் பார்க்க கூடாது.” என்று நினைத்த மேகா, தன் அருகில் அமர்ந்திருந்த விஷ்வாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “ஆஆஆ… அம்ம்மாமாமா..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து சத்தமாக அலறினாள்.

“அவ்ளோதான் உன் தைரியமா..??” என்று கேட்டுவிட்டு விஷ்வா அவளை பார்த்து சிரிக்க, “சிரிக்காத லூசு, வாய மூடு. குழந்தைங்கன்னா  இப்படி பயப்படத்தான் செய்வாங்க.” என்றாள் அவள். அவளோடு சேர்ந்து மற்ற சிலரும் கூட பயத்தில் ஆஆஆஊஊஊ என்று கத்தி கொண்டிருந்ததால் அவர்கள் பேசியது இருவருக்குமே கேட்கவில்லை.

இருப்பினும் மனதால் இணைந்தவர்களுக்கு வாய்மொழி தேவையில்லாமல் போக, அந்த சத்தத்திலும் மற்றவரின் உணர்வை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
“டேய் ரிஷி.. control.. control.. பயத்த மட்டும் தெரியாம கூட உன் மூஞ்சில காட்டிடாதடா.” என்று தனக்குள் ஓராயிரம் முறை சொல்லிக் கொண்ட ரிஷி, தன் கைகளை இறுக்கமாக மூடி அவன் பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க அரும்பாடுபட்டு கொண்டு இருந்தான்.

ஆனால் அவன் கண்களில் அது அப்பட்டமாக தெரிய, “ம்ம்ஹும்ம்.. பாக்கதான் நல்லா மல மாடு மாதிரி வளந்திருக்கான். ஆனா பண்றது எல்லாம் அப்படியே குழந்தை மாதிரிதான்.” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்த சாரா அவன் பயப்படுவதை பார்க்க முடியாமல் தானாக அவன் கையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

அதனால் ஆச்சரியமாக ரிஷி அவளைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் கண்கள் நான்கும் தங்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத காதலை அதன் போக்கில் பரிமாறிக்கொள்ள, அவளது ஆளை மயக்கும் பார்வையில் சொக்கிப் போய் கிடந்த ரிஷிக்கு பயம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகி இருந்தது.

ஒரு வழியாக அந்த roller coaster சுற்றி முடித்துவிட்டு நிற்க, மூச்சு வாங்க விஷ்வாவின் கையை பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள் மேகா. “என்னடி இன்னொரு round போலாமா..??” என்று அவன் கிண்டலாக கேட்க, “ஐயோ வேண்டாம். ஆள விடுங்க. என்ன.. கூட்டிட்டு போய் என்னை கொல்ல பார்க்கிறாயா?” என்று கேட்டாள் அவள். “நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே.. அப்புறம் என்ன…??” விஷ்வா கிண்டலாக கேட்க, “நான் ரொம்ப தைரியமான ஆள் தான். ஆமா என் தைரியம் உங்களுக்கெல்லாம் இருக்காதுல்ல.. அதான் உங்களுக்காக வேண்டாம்னு சொல்றேன்.” என்று சொல்லி சமாளித்தாள் அவள்.

“ஓஹோ அப்படி..!!” என்று அவன் இழுக்க, “ஆமா அப்படித்தான் டா. முதல்ல இங்கே இருந்து போலாம்  வா..!!” என்ற மேகா அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

அனைவரும் கீழே இறங்கி வெகு நேரம் ஆகியும் சாராவின் கையை ரிஷி விடாமல் பிடித்திருக்க, “என்ன.. அதான் எல்லாரும் கீழ வந்தாச்சுல்ல.. அப்புறம் ஏன் இன்னும் என் கைய விடாம புடிச்சிட்டு இருக்க..??” என்று கேட்டாள் அவள். “ஏன்.. நான் உன் கைய பிடிச்சிட்டு இருக்கிறது உனக்கு பிடிக்கலையா..??” என்று அவன் உடைந்த குரலில் கேட்க, “நான் அப்படி சொல்லவே இல்லையே…!!” என்றாள் சாரா. “அப்புறம் ஏன்டி என்ன விட சொல்ற..??” என்று அவன் கேட்க, “அப்போ விட சொன்னா விட்டுருவியா..??” என்று கேட்ட சாரா அவன் கண்களைப் பார்த்தாள். “No. அப்பவும் விடமாட்டேன். எப்பவும் விடமாட்டேன்.” என்ற ரிஷி இன்னும் இருக்கமாக அவள் கையை பிடித்துக் கொள்ள, லேசாக அவனைப் பார்த்து புன்னகைத்த சாரா அவனுடன் தொடர்ந்து நடந்தாள்.

Trampolineஐ பார்த்தவுடன் குழந்தையாய் மகிழ்ந்த மேகா, விஷ்வாவால் சேர்ந்து அதில் குதித்து விளையாடி மகிழ்ந்தாள். முதலில் இருக்கமான முகத்துடன் மேகாவிற்காக அவளுடன் சேர்ந்து விளையாட தொடங்கிய விஷ்வா, நேரம் செல்ல செல்ல அவளைப் போல தானும் குழந்தையாக மாறி தனது குழந்தை பருவத்தில் அவன் தவற விட்டிருந்த அனைத்தையும் இப்போது அவனது முதல் பெரிய குழந்தையான மேகாவுடன் அனுபவித்து மகிழ்ந்தான்.

அங்கே இருந்து பின் அவர்கள் water race, roll a ball, balloon bust, bumper cars, water slides மற்றும் இன்னும் சில விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்கள்.
தயாளன் மற்ற இரண்டு ஜோடிகள் உடன் சேர்ந்து ஜாலியாக இருக்க, “ச்சே.. இவங்கள மாதிரி நானும் மகேஷும் ஜோடியா இதையெல்லாம் சேர்ந்து விளையாடி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்..??” என்று நினைத்து சோகமானாள் அனுப்பமா.

பின் “அடக்கடவுளே.. எனக்கு என்னாச்சு..?? நான் ஏன் திடீர்னு இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்..?? எனக்கு ஏன் மகேஷ் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது..?? ஒருவேளை எனக்கே தெரியாம நான் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனா.??” என்று யோசித்து குழம்பினாள்.
அவர்கள் அனைவரும் அந்த amusement parkஐ விட்டு வெளியேறும்போதே மணி கிட்டத்தட்ட இரவு ஏழாகி இருந்தது. அப்போதும் மேகா கொஞ்சம் கூட tired ஆகாமல் freshஆன முகத்துடன் அவளது favourite shopping complexஐ நோக்கி வேகமாக விஷ்வாவுடன் bikeல் சென்று கொண்டு இருந்தாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured