Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 200

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 200

by Thenaruvi Tamil Novels
10 views

அத்தியாயம் 200

சந்தோஷ் தங்கள் குடும்பத்திற்கு செய்த துரோகத்தை எல்லாம் ஒவ்வொன்றாக ஜனனியிடம் விளக்கி சொன்ன அர்ஜுன் “நான் சொல்றேன்.. இந்த சந்தோஷ் உயிரோட வாழவே தகுதி இல்லாதவன். இன்னைக்கு இவன என் கையால நான் கொல்ல தான் போறேன் ஜனனி. நீ உன் அண்ணனை நம்புவியா மாட்டியா?” என்று கேட்டுவிட்டு ஜனனியின் தோள்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவளது கண்களையே ஆழ்ந்து பார்த்தான்.

தன் அண்ணனை அவளால் எப்படி சந்தேகப்பட முடியும்? இந்த உலகத்தில் அவள் குடும்பத்தை தவிர வேறு யாரை அவளால் நம்ப முடியும்? அதேசமயம் அர்ஜுன் சந்தோஷுன் உயிரைப் பறித்தே தீருவேன் என்று இருக்கிறான். அவன் இறந்துவிட்டால் தன்னுடைய நிலைமையும் தனது குழந்தைகளின் நிலைமையும் என்னவாகும்! என்று யோசித்து தொடர்ந்து அழுத ஜனனி தன் குழந்தைகளை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு “என்னால உங்கள நம்பாம இருக்கவும் முடியல. அதேசமயம் சந்தோஷ் எப்படியோ போகட்டும்னு விடவும் முடியல அண்ணா. ஐ லவ் ஹிம் சோ மச்! என்னால அவன் இல்லாம வாழ முடியாது அண்ணா.” என்று உடைந்த குரலில் சொன்ன ஜனனி அர்ஜுனை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.

திமிராக அர்ஜுனை பார்த்துக் கொண்டு இருந்த சந்தோஷ் “ஜனனிக்கு என் மேல இருக்கிற நம்பிக்கை உங்களுக்கு ஏன் இல்லாம போச்சு சீஃப்? நான் செய்யாத தப்பை எல்லாம் செஞ்சதா ஏன் என் என் மேல பழி போடுறீங்க? உங்களுக்கு என்ன கொல்லனும்னு தோணுச்சுன்னா தாராளமா சொல்லுங்க. பட் ப்ளீஸ்.. இதையெல்லாம் ரீசன் நான் சொல்லாதீங்க. அப்புறம் நான் இத்தனை வருஷம் ஜனனியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி அவ கூட சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை பொய்யாயிடும்.” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு தரையில் மண்டியிட்டு நல்லவனை போல கதறி அழுதான்.

இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று நினைத்த அர்ஜுனின் கோபம் அதன் எல்லையை கடந்து கொண்டிருந்தது. அதனால் ஜனனியை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்திய அர்ஜூன் “உண்மை உன் கண்ணு முன்னாடி இருந்தாலும் காதல் உன் கண்ண மறைக்குது ஜனனி. இந்த மாதிரி எல்லாம் சின்சியரா லவ் பண்றது தப்பில்ல. ஆனா நீ இவன மாதிரி ஒரு கேவலமானவன சூஸ் பண்ணுது ரொம்ப தப்பு. இவன பத்தி தெரியாம நான் இவனை வீட்டுக்குள்ள விட்டது அதைவிட பெரிய தப்பு. இப்ப இன்னையோட இது எல்லாத்துக்கும் எண்டு கார்ட் போட வேண்டிய டைம் வந்துடுச்சு. இந்த டோட்டல் ஃபுளோரோட சிசிடிவி ஃபுட்டேஜ் என்‌ கிட்ட லைவா இருக்கு. இவன் பண்ண வேலையை எல்லாம் தனியா கட் பண்ணி எனக்கு அனுப்ப சொல்லி இருக்கேன். நீயே அந்த வீடியோவை பாரு. இவன் பேசின ஆடியோவோட எல்லாமே சிசிடிவில லெக்கார்ட் ஆயிருக்கு.” என்று சொல்லிவிட்டு மொபைல் ஃபோனில் இருந்த வீடியோவை ப்ளே செய்து ஜனனியின் கையில் தன் ஃபோனை கொடுத்தான்.

அந்த வீடியோவில் ஜனனியை தனியாக குழந்தைகளுடன் விட்டுவிட்டு சென்ற சந்தோஷ் யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக சென்று அந்த டெரரிஸ்ட் கும்பலுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தது, அர்ஜுனின் ஆட்களையே அவன் தன் துப்பாக்கியால் சுட்டது அர்ஜுனை பின்னே இருந்து சுட முயற்சி செய்தது அதில் இருந்து அவன் தப்பித்தது என அனைத்தும் ரெக்கார்ட் ஆகி இருந்தது.‌

தன் கணவனின் மீது அதீத காதலில் இருந்த ஜனனிக்கு அவளது காதல் கனவு கோட்டையை மொத்தமாக சுக்கு நூறாக உடைக்கும்படியாக அந்த போனில் ஓடிக் கொண்டிருந்த வீடியோ கத்தி போல வந்து அவள் இதயத்தை தாக்க, அவள் கையில் இருந்த ஃபோன் கூட அவளுக்கு அத்தனை கனமாக இருந்தது.

அதை பார்த்த பிறகு தான் முழுமையாக அவள் மனம் இவ்வளவு நேரமாக பிரிட்டோ அர்ஜுன் சொன்னது அனைத்தும் உண்மைதான் என்று அவள் மூளைக்கு உரைத்தது. அதனால் ஜனனி சிவந்த கண்களுடன் பாவமாக சந்தோஷை பார்த்து, “நீ என்ன யூஸ் பண்ணிக்கிட்டியா சந்தோஷ்?” என்று உடைந்த குரலில் கேட்டாள். அர்ஜுனின் ஃபோனை பிடித்து இருந்த அவளது கைகள் நடுங்கின.

அர்ஜுன் என்ன எவிடன்ஸ் காட்டினாலும் ஜனனி அதையும் நம்பாமல் தன் பக்கம் நிற்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவளது ரியாக்சனுக்காக காத்திருந்த சந்தோஷ் “ஐ அம் சாரி ஜனனி.. டைரக்டா உனக்கும் எனக்கும் நடுவுல எந்த பகையும் இல்ல. பட் எனக்கு வேற ஆப்ஷன் இல்ல.” என்று சொல்லிவிட்டு யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அப்படியே தரையில் ஒரு பல்டி அடித்து பிரிட்டோவின் அருகில் சென்று அவன் பேபி வாக்கரில் வைத்து இருந்த குழந்தைகளில் ஒன்றை தூக்கிக் கொண்டு வேகமாக இரண்டடி பின்னே சென்று தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை குழந்தையின் தலையில் வைத்து “நீங்க என்ன ஏதாவது பண்ண ட்ரை பண்ணீங்கன்னா நான் பெத்த பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன். நான் தப்பிக்கிறதுக்காக இவளை சுட்டுக் கொன்றுவேன்.” என்று அர்ஜுனையும் பிரிட்டோவையும் பார்த்து மிரட்டினான்.

“வர்ணி!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்திய ஜனனி “ப்ளீஸ் சந்தோஷ் என் பொண்ணை விட்று!” என்றபடி சந்தோஷை நோக்கி ஓடினாள். நடுங்கும் கைகளுடன் துப்பாக்கியை தன் மகளின் நெற்றி பொட்டுக்கு நேராக பிடித்துக் கொண்டு இருந்த சந்தோஷ் ட்ரிகரின் மீது தன் ஒற்றை விரலை வைத்து “அங்கயே நில்லு டி! கிட்ட வந்தினா சுட்றுவேன்.” என்று கணீர் குரலில் சொல்லி அவளை மிரட்டினான்.

அதனால் அப்படியே பாதி வழியில் நின்ற ஜனனி சிவந்த கண்களுடன் பயத்தில் நடுநடுங்க “நான்.. நான் நின்னுட்டேன். உன் கிட்ட வரல. நான் சொல்றேன்ல.. நான் பேசுறேன் சந்தோஷ்.‌ யாரும் உன்னை எதுவும் பண்ண மாட்டாங்க.” என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு பின் அர்ஜுனை திரும்பி பார்த்து “ப்ளீஸ் அண்ணா நீங்க அவனை விட்டுருங்க.. அவன் எப்படியோ போய் தொலையட்டும். எனக்கு என் பொண்ணு வேணும். என் வர்ணிக்காவ அவன் கிட்ட இருந்து வாங்கி கொடுங்க. என் பொண்ணு… அண்ணா!” என்று பதட்டத்துடன் சொன்னாள்.

தன்னிடம் இருந்த துப்பாக்கியை சந்தோஷுற்க்கு நேராக நீட்டிக்கு அர்ஜூன் “வர்ணிகாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ இங்க இருந்து உயிரோட போக முடியாது சந்தோஷ். ஒழுங்கா குழந்தையை ஜனனி கிட்ட குடுத்துரு.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.

“நான் ஜனனி கிட்ட என் பொண்ண குடுத்தாலும் நீ என்ன உயிரோட விட மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும் அர்ஜுன். என்ன இப்படியே விட்டுரு.. இவ என் பொண்ணு தானே.. என் பொண்ண எனக்கு பார்த்துக்க தெரியும். சேஃபா நானும் என் பொண்ணும் இங்க இருந்து வெளிய போறதுக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ணலனா, கண்டிப்பா நான் இவளை சுட்றுவேன்.” என்று விடாப்பிடியாக சொன்னான் சந்தோஷ்.

அவ்வளவு நேரமாக அங்கே இருந்தவர்கள் அனைவரும் மாறி மாறி கத்தி கத்தி பேசிக் கொண்டு இருந்ததால் பயந்து போன குழந்தைகள் இருவரும் அழுது கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது தன் அப்பா தன்னை தூக்கிக் கொண்டதால் பாதுகாப்பாக உணர்ந்த வர்ணிகா அவன் தன்னை சுட்டுக் கொள்ள முயற்சிக்கிறான் என்று எல்லாம் தெரியாமல் அவனது தோள்களின் மீது சாய்ந்து கொண்டு தனது மழலை குரலில் “டா.. டா.. டாடா..!!” என்றபடி அவன் தன்னை நோக்கி பாயிண்ட் செய்து இருந்த துப்பாக்கியை தனது குட்டி கைகளால் பிடித்து விளையாட தொடங்கி விட்டாள்.

ஆனால் பேபி வாக்கரில் இருந்த சுவஸ்திகா அதன் கைப் பிடியை மெல்ல பிடித்துக் கொண்டு எழுந்து நின்றபடி தன் முன்னே ஜனனி அழுது கொண்டு நின்றிருந்ததால் “மா.. மா.. மி மம்மி..!!” என்று அவளைப் பார்த்து தன்னை வந்து தூக்கும் படி அழைத்தாள். அதை கவனித்த பிரிட்டோ “இந்த சைக்கோ சந்தோஷ் எப்ப என்ன பண்ணுவானு யாருக்கும் தெரியாது. வர்ணிகாவை எப்படியாவது அவன் கிட்ட இருந்து வாங்கணும். அதுக்கு முன்னாடி ஸ்வஸ்திகாவை சேஃபா இங்க இருந்து வெளியே கூட்டிட்டு போகணும்.” என்று நினைத்தவன் ஸ்வஸ்திகாவை தூக்கிக் கொண்டு நேராக ஜனனியை தாண்டி அர்ஜுனின் அருகில் சென்றான்.

அவனை பார்த்த அர்ஜுன் சந்தோஷை நோக்கி இருந்த தன் துப்பாக்கியை கீழே இறக்க, “சீஃப்.. ஜனனி கிட்ட ஸ்வஸ்திகாவை கொடுத்து அவங்கள வெளியே அனுப்புங்க. எப்படியாவது வர்ணிகாவை நான் சந்தோஷ் கிட்ட இருந்து வாங்குகிறேன்.” என்றான்.

அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு பிரிட்டோவின் அருகில் சென்ற ஜனனி ஸ்வஸ்திகாவை அவனிடம்‌ இருந்து  வாங்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டு தரையில் அமர்ந்து சந்தோஷை பார்த்து மண்டியிட்டு அமர்ந்து “ப்ளீஸ் சந்தோஷ்.. நான் உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன். என் பொண்ண விட்டுரு. நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன். அர்ஜுன் அண்ணா என்ன மீறி உன்னை எதுவும் பண்ண மாட்டாரு. நான் என் உயிரை குடுத்தாவது உன்னை காப்பாத்துறேன்.  நீ இங்க இருந்து போ. என்னமோ பண்ணு. பட் ப்ளீஸ் என் பொண்ணு என் கிட்ட குடுத்துரு!  அவ சின்ன குழந்தை டா அவளுக்கு எதுவும் தெரியாது. அவ பாவம் அவள விட்று. உன்னோட பொண்ணு தானே அவ… உனக்கு அவ மேல பாசமே இல்லையா?” என்று கேட்டுவிட்டு ஆற்றாமையில் அழுதாள்.

இப்போது ஜனனி அழுவதை கவனித்த வர்ணிகா சந்தோஷ் ஜனனி இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் சுவஸ்திகாவும் அழுததால் தானும்  அழ தொடங்கி விட்டாள்.

“ஐயோ அக்கா இவன் கிட்ட என்னக்கா பேசிட்டு இருக்கீங்க? இன்னுமா இவன நம்பிட்டு இருக்கீங்க? பிரிட்டோ ப்ரோ வந்து இவன் கிட்ட இருந்து குழந்தை புடுங்குங்க. நம்மள மீறி இவன் வர்ணிகாவை என்ன பண்றான்னு பாக்கலாம்.” என்று சந்தோஷுக்கு பின்னே இருந்து சொன்ன சுனில் சந்தோஷை நோக்கி கையில் துப்பாக்கியுடன் சென்றான்.

அர்ஜுன் ஒரு பக்கம் சந்தோஷை பார்த்து தன் துப்பாக்கியை நீட்டியபடி அங்கே நிற்க, பிரிட்டோவும் ‌ எப்படியாவது அவனிடம் இருந்து வர்ணிகாவை வாங்க வேண்டும் என்பதற்காக ‌ கையில் துப்பாக்கியுடன் அவன் அருகில் சென்றான். அவர்களை சுற்றி அர்ஜுனின் ஆட்கள் ஆர்மி ஃபோர்ஸ் போல கையில் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டு இருந்தார்கள்.

அனைவரையும் 360 டிகிரியில் சுற்றி ஒரு பார்வை பார்த்த சந்தோஷ் “எல்லாரும் என்ன சுத்து போட்டுட்டாங்க. என்ன ஆனாலும் நான் வர்ணிகாவை இவங்க கிட்ட திரும்ப குடுக்க கூடாது. நான் உயிரோட இருக்கணும்னா அதுக்கு இவ என் கூட இருக்கணும்.” என்று நினைத்து இரக்கமே இன்றி அழுது அழுது சிவந்து போன வர்ணிகாவின் அப்பாவி முகத்தை வஞ்சத்துடன் பார்த்தான்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured