அத்தியாயம் 143
“Already night ஆயிடுச்சு. கம்முனு வீட்டுக்கு போய் சாப்பிட்டு தூங்கலாம்டி. இதுக்கு மேல shopping mallல போய் என்ன purchase பண்ண போற நீ..?? உனக்கு என்ன வேணுமோ list போட்டு குடுத்தினா.. எவனாவது கொண்டு வந்து வீட்டில கொடுக்கப் போறான். நம்ம எதுக்குடி தேவை இல்லாம இப்டி வெளிய அலையனும்..??” என்று சோர்ந்த குரலில் விஷ்வா கேட்க, “என்ன இருந்தாலும் நமக்கு வேணுங்கிறத நம்மளே பார்த்து பார்த்து வாங்குற மாதிரி வருமா..?? நான் mostly window shoppingதான் பண்ணுவேன். So ஒரு 10 o’clock வரைக்கும் அங்க இருந்துட்டு கிளம்பி கிளம்பிடலாம்.” என்றாள் மேகா.
“சும்மா window shopping பண்றதுக்கு உனக்கு எதுக்குடி அவ்ளோ டைம்..??” என்று அவன் ஷாக்காகி கேட்க, “window shopping பண்றதெல்லாம் ஒரு தனி feel தெரியுமா..?? உன்ன மாதிரி shoppingக்கு எங்கேயுமே வெளிய போகாத ஆளுங்களுக்கு அதெல்லாம் அது புரியாது. எனக்கு இப்ப நம்ம போற VS mall ரொம்ப பிடிக்கும். அங்க இருக்கிற items எல்லாமே classyயா இருக்கும். priceம் அதுக்கு தகுந்த மாதிரி அதிகமா இருக்கும். என்கிட்ட அவ்ளோ budget எல்லாம் இருக்காது. so கால் வலிக்கிற வரைக்கும் அந்த mallஐ சுத்தி பாத்துட்டு கடைசில ஏதாவது simpleஆ ஒன்ன வாங்கிட்டு வந்துருவேன். இப்பதான் எனக்கு செலவு பண்ண புருஷன் நீ இருக்கியே.. எனக்கு புடிச்சதெல்லாம் நீ வாங்கி கொடு.” என்றாள் மேகா.
அதுவரை அவள் தோள்களில் இருந்த தன் கையை அவள் இடுப்பில் வைத்து அழுத்திய விஷ்வா “நான்தான் உன்கிட்ட என் credit cardஐ குடுத்தனே.. அதை use பண்ணி உனக்கு பிடிச்சதை வாங்கிக்க வேண்டியதுதானே..!! அதோட credit limit முடிஞ்சிருச்சுன்னா உன்கிட்ட கொடுக்க சொல்லி இன்னொரு cardஐ கூட நான் மகேஷ்கிட்ட குடுத்து வச்சிருக்கேன். But நீ இன்னும் அதுல இருந்து 500 rupees கூட எடுத்து செலவு பண்ணாம இருக்க. ஏன்..?? என் காசை use பண்றதுக்கு ego பாக்குறியா நீ…??” என்று கேட்க, “சேச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான்தான் நமக்கு மேரேஜ் ஆகும் போதே சொன்னனே.. எது எல்லாம் உன்னோடதோ அது எல்லாமே என்னோடதுன்னு.. எனக்கு வேணுங்கறது எல்லாமே already நம்ம வீட்டிலேயே இருக்கு. அப்புறம் புதுசா நான் வெளியே போய் என்ன வாங்குறது..?? அப்படியே ஏதாவது தேவைப்பட்டாலும், எனக்கு தான் every month salary வருதே.. அதுல இருந்து வாங்கிப்பேன். அதுவும் இல்லாம நானா போய் ஏதாவது எனக்கு வாங்கிக்கிறத விட, நீ எனக்கு வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான் உன்ன கூட்டிட்டு shopping போறேன்.” என்றாள் அவள்.
Side mirrorல் தெரிந்த அவளது முகத்தை பார்த்து லேசாக புன்னகைத்த விஷ்வா காற்றில் பறந்து கொண்டிருந்த அவளது கலைந்த கூந்தலை மெதுவாக சரி படுத்திவிட்டு, அவளது சிறிய தோள்களில் சாய்ந்துக்கொண்டு அவள் வயிற்றோடு சேர்த்து அவளைப் பின்னே இருந்து அணைத்துக் கொண்டான். அவனுக்கு அப்படி அவளுடன் ஜில்லென்ற காற்று வீசும் அந்த தார் சாலையில் bikeல் செல்வது மிகவும் பிடித்திருந்தது. இன்னும் அவர்கள் இருவரும் mask அணிந்திருந்ததால் யாரும் அவர்களை கண்டு கொண்டு அவர்களிடம் பேச முயற்சி செய்து தொந்தரவு செய்யவில்லை.
சில நிமிட பயணத்திற்கு பின், அவர்கள் அனைவரும் சாதாரணமாக அந்த மாலிற்குள் நுழைய, வாசலில் இருந்த security “உள்ள யாரும் இப்படி முகத்தை மறைச்சிகிட்டு mask போட்டுட்டு போக கூடாதுன்னு rules இருக்கு. நீங்க உள்ள போற வரைக்குமாவது mask இல்லாம போங்க. Once CCTV cameraல உங்க face register ஆயிடுச்சின்னா ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்று சொல்ல, அனைவரும் தங்களது maskஐ அகற்றினார்கள். அதுவரை அவர்களிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த security விஷ்வாவைப் பார்த்தவுடன் shockஆகி “விஷ்வா சார் நீங்களா..?? வாங்க சார்.. உள்ள வாங்க..!! நீங்க உங்க wifeஓட இங்க வர போறீங்கன்னு முன்னாடியே inform பண்ணிருந்தா, manager Sirஏ directஆ வந்து உங்க எல்லாரையும் welcome பண்ணிருப்பார்.” என்று பதட்டமான குரலில் சொல்லிவிட்டு உடனே intercomல் managerக்கு call செய்தான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் இங்க personalலா என் wife கூட shopping வந்திருக்கேன். என்னை யாரும் தேவையில்லாம disturb பண்ணாதீங்க. இப்படி யாரும் எங்கள notice பண்ண கூடாதுன்னு தான் நான் maskஏ போட்டுட்டு வந்தேன்.” என்று விஷ்வா கண்டிப்பான குரலில் சொல்ல, “ஓகே சார்.. ஓகே சார்.. யாரும் உங்க privacyஐ disturb பண்ணாம நாங்க பாத்துக்குறோம். நீங்க உள்ள போங்க.” என்று சொல்லி அவர்களை உள்ளே அனுப்பி வைத்தான் security.
“இவன் கூட சேர்ந்து எங்க போனாலும் எல்லாரும் நம்மள differentஆ தான் treat பண்றாங்க. Sometimes எல்லாரும் நம்மள இவ்ளோ respect பண்றாங்களேன்னு சந்தோஷமா இருந்தாலும், இந்த over attention irritate ஆகுது.” என்று நினைத்த மேகா மீண்டும் mask அணிந்து கொண்டு அவனுடன் உள்ளே சென்றாள்.
விஷ்வா தங்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தாலும் கூட, அவன் மேகாவுடன் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் அங்கிருந்த staffகள் managerஇடம் இருந்து அவர்களுக்கு கிடைத்த உத்தரவின் பெயரில் அவனுக்கும், அவனுடன் வந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து பொருட்கள் வாங்க உதவினார்கள்.
விஷ்வாவின் கையை பிடித்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து நடந்த மேகா “எனக்கு என்ன வாங்கி தர போற..??” என்று கேட்க, “முதல்ல உனக்கு என்ன வேணும்னு சொல்லு.” என்றான் அவன். சுற்றி முற்றி பார்த்துவிட்டு சில நொடிகள் யோசித்த மேகா “எனக்கு எதுவும் தோனலையே! இங்க இருக்கிற எத பார்த்தாலும் நல்லா தான் இருக்கு. அதுக்குன்னு எல்லாத்தையுமா வாங்க முடியும்..??” என்று சாதாரணமாக கேட்க, “ம்ம்.. புடிச்சிருந்தா எல்லாத்தையும் வாங்கிக்கோ.” என்றான் அவன்.
இதற்கு அவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்து ஆர்வமான முகத்துடன் விஷ்வா அவளை பார்க்க, அவனை முறைத்துப் பார்த்த மேகா “என்ன காசு பணம் நிறைய இருக்குன்னு திமிரா உனக்கு..?? இங்க இருக்குற எல்லாத்தையும் வாங்கிட்டு போய் நம்ம என்ன பண்ண போறோம்..?? நம்மகிட்ட எவ்ளோ Money இருந்தாலும், தேவைக்கு மட்டும்தான் செலவு பண்ணனும். Learn to respect your wealth.” என்று strictஆக சொல்லி விட்டாள்.
பெருமூச்சுவிட்ட விஷ்வா “நீயும் எதுவும் வாங்க மாட்டேங்குற.. உனக்கு என்ன பிடிக்கும்னும் சொல்ல மாட்டேங்குற.. அப்புறம் எதுக்கு என்ன உன் கூட கூட்டிட்டு வந்து.. எதையாவது வாங்கித்தா வாங்கி தான்னு கேட்டு என்னை இம்சை பண்ற நீ..??” என்று சலிப்புடன் கேட்க, “நீ ஒன்னும் எனக்கு எதுவும் வாங்கி தர வேண்டாம். எனக்கு என்ன வேணுமோ அத நானே வாங்கிக்கிறேன்.” என்று வேகமாக சொல்லிவிட்டு தன் உதட்டை சுழித்த மேகா அவன் கையை உதறிவிட்டு தனியாக நடந்து சென்றாள். அதனால் கொஞ்சம் gap விட்டு அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அனுப்பமாவையும், சாராவையும் அவன் அர்த்தத்துடன் பார்க்க; “நாங்க மேடம் கூட போறோம் சார்.” என்ற அவர்கள் இருவரும் மேகாவை follow செய்து சென்றார்கள்.
திடீரென தன் அருகில் வந்து நின்ற அனுப்பமாவையும் சாராவையும் பார்த்த மேகா “நான் என்ன பண்ணாலும், இங்க எது வாங்கினாலும் அத பத்தி நீங்க அவர்கிட்ட சொல்லக்கூடாது. ஓகேவா..??” என்று கேட்க, வழக்கம்போல அவர்கள் இருவரும் “ஓகே மேம்.” என்று கோரசாக சொன்னார்கள்.
அவர்கள் இருவருடன் சேர்ந்து அந்த mall முழுவதும் சுற்றிய மேகா அவள் கண்களுக்கும் மனதிற்கும் பிடித்த சில பொருட்களை வாங்கி யாருக்கும் தெரியாமல் அதை பத்திரமாக வைத்துக்கொள்ள சொல்லி சாராவிடம் கொடுத்தாள்.
விஷ்வா தனியாக இருந்ததால் அவனை பார்க்க சென்ற manager “Sir பல வருஷமா நீங்க இங்க எப்ப வருவீங்கன்னு நாங்க wait பண்ணிட்டு இருக்கோம். இப்பதான் நீங்க பெரிய மனசு பண்ணி இங்க வந்து இருக்கீங்க. அப்பவும் நீங்க எதுலையும் தலையிடாம அப்படியே போனா எப்படி..??” என்று கேட்க, “என் decision என்னனு already உங்களுக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன். அது தெரிஞ்சிருந்தும், இப்படி unwanted questions கேட்டு ஏன் என் timeஐ waste பண்றீங்க..?? யாரும் என்ன disturb பண்ண கூடாதுன்னு நான் warning கொடுத்தாலும் யாரும் அதை மதிக்க மாட்டீங்க.. அப்படித்தானே..!!” என்று கோபமாக கேட்டான் விஷ்வா.
அதனால் பயந்துப்போன அந்த mallன் manager “Sorry Sir. இனிமே இப்படி நடக்காம பாத்துக்கிறேன். Happy shopping.” என்று சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கே இருந்து ஓடி விட்டார்.
சில நிமிடங்களுக்கு பின் மேகா அவளது bodyguards உடன் entranceக்கு வர, “சப்பா.. நல்லவேளை 10 மணிக்கு முன்னாடியே வந்துட்ட. வா போலாம்.” என்ற விஷ்வா அவள் கையை பிடித்து இழுத்தான். “நம்மள இவன் கடுப்பேத்துற மாதிரி பேசினான்ல.. இவன் கூட நம்ம போகக்கூடாது.” என்று நினைத்த மேகா, “நான் சாரா கூட போறேன். நீ ரிஷி கூட போ.” என்றுவிட்டு தன் உதட்டை சுளித்தாள்.
“அடச்சே.. நான் return போகும்போது சாராக்கூட பேசிட்டே ஜாலியா போகலாம்னு நினைச்சனே.. இந்த அண்ணி எல்லாத்தையும் கெடுத்து விட்டுருவாங்க போல..!!” என்று நினைத்த ரிஷி “என்ன நீங்க இவ்ளோ நேரம் shopping mallல இருந்துட்டு எதுவுமே வாங்காம வந்து இருக்கீங்க..??” என்று மேகாவிடம் கேட்டு பேச்சை மாற்றினான்.
“அதுவா.. அது.. இங்க இருக்கிற எல்லா itemsம் costlyயா இருக்கு. அவ்ளோ amount spend பண்ணி எனக்கு எதையும் வாங்க மனசு வரல. அதான் வந்துட்டேன்.” என்று மேகா சொல்ல, ஏதோ பெரிய காமெடியை கேட்டதை போல வாய்விட்டு கலகலவென சத்தமாக சிரித்த ரிஷி “அட அண்ணி.. உங்களுக்கு இன்னும் விஷயமே தெரியாதா..??” என்று கேட்டான். “எனக்கு என்ன தெரியாதான்னு கேட்கிற நீ..??” என்று குழப்பமாக கேட்டாள் மேகா.
தொடரும்..