அத்தியாயம் 227: வெகு நாள் ஆசை (பார்ட் 1)
ரித்திகா வீட்டில்…
ரித்திகா வீட்டில் உள்ள சிறிய டைனிங் டேபிளில் விஷ்ணு, ஷாலினி, வருண் மற்றும் ரித்திகா , சுதாகர், சித்தார்த் என அனைவரும் அமர்ந்து பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, ரேவதி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தாள். இட்லி, வடை, பூரி, பொங்கல் என காலை நேரத்தில் ஒரு ஹோட்டலில் என்னென்ன உணவுகள் எல்லாம் தயார் செய்து வைத்திருப்பார்களோ அதை அனைத்தையும் தன்னுடைய மகன் மற்றும் மருமகளுக்காக தயார் செய்து வைத்து இருந்தாள் ரேவதி.
ரித்திகா தன்னுடைய வீட்டிற்கு செல்லும்போது தான் மட்டும் இங்கே இருந்து கொண்டு என்ன செய்வது என்று நினைத ஷாலினி, செண்பகத்திடம் சொல்லிவிட்டு தன்னுடைய ஆடைகள் அனைத்தையும் பேக் செய்து கொண்டு நாராயணன் பேலசில் இருந்து கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டாள். ஷாலினியோடு தன்னுடைய நேரத்தை செலவிட விரும்பிய விஷ்ணு, “அம்மா வருண் அண்ணனை மட்டும் தனியா அண்ணியோட வீட்டுக்கு அனுப்ப கூடாது. அவர் அங்க போயிட்டு கேக்குறதுக்கு யாரும் ஆள் இல்லைன்னு உடனே ஆபீசுக்கு கிளம்பி போயிடுவாரு. நைட் அப்புறம் தூங்குறதுக்கு தான் வருவாரு. அதனால நானும் அவங்க கூட போறேன். அங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்கு அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கேன்.” என்று செண்பகத்திடம் சொல்லி அவளிடம் பர்மிஷன் வாங்கிவிட்டு விஷ்ணுவும் அவர்களுடன் கிளம்பி வந்தான்.
டேபிளில் அடுக்கி இருந்த நிறைய உணவுகளை கவனித்த வருண், “என்ன அத்தை நீங்க தனியாளா இவ்ளோ சமைச்சிங்களா..?? நாங்க மட்டும் தானே வந்து இருக்கோம்… எங்களுக்காக ஏன் இவ்ளோ சிரமப்படுறீங்க..???” என்று சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.
ரேவதி: “எங்க பொண்ணும், மாப்பிள்ளையும், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இப்ப தான் முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வரீங்க. உங்கள கவனிச்சு நல்லபடியா உங்களுக்கு தேவையானது எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறது எங்களுக்கு கடமை மட்டும் இல்லாம அது எங்களோட சந்தோஷம். இத நாங்க சிரமமா பாக்கல.
அண்ட் நான் மட்டும் ஒன்னும் தனியா சமைக்கல மாப்பிள்ளை. உங்க மாமாவும் எனக்கு ஹெல்ப் பண்ணாரு. அவரும் நல்லா சமைப்பாரு. அதுவும் அவரோட செல்ல பொண்ணுக்குனு அவர் சமைச்சாலே அதோட டேஸ்ட் வேற லெவலா இருக்கும். அவளுக்கும் என்னோட சமையல விட அவரோட சமையல் தான் ரொம்ப பிடிக்கும்.” என்று ஓர கண்ணால் சுதாகரை பார்த்து லேசாக புன்னகைத்த படி சொன்னாள். 😁 😁 😁
பதிலுக்கு சுதாகரும் ரேவதியை பார்த்து புன்னகைத்தார். 😁 😁 😁 சுதாகரை பார்த்த வருண், “நீங்க ஃப்ரீயா இருக்கும்போது எனக்கும் ஏதாவது குக் பண்ணி தாங்க மாமா. நானும் உங்க சமையல் எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணி பார்க்கிறேன்.” என்று சொல்ல அவர்களுடைய பேச்சில் குறுக்கிட்ட ரித்திகா, “ஆமா அப்பா. எனக்கும் நீங்க செய்ற மட்டன் பிரியாணி வேணும். நீங்க அத செஞ்சு ரொம்ப நாள் ஆகுது. இப்ப நினைச்சா கூட என்னோட நாக்கில அந்த டேஸ்ட் இருக்கிற மாதிரியே இருக்கு. சீக்கிரமா எனக்கும் செஞ்சு குடுங்க.” என்று அவள் சொல்லி கொண்டு இருக்க; “நானும் இந்த ஆட்டத்துக்குள்ள வரலாமா..???” என்று சிரித்துக் கொண்டே கேட்ட விஷ்ணு, “அம்மா, அப்பா.. சாப்பாட்டு விஷயத்தை பொருத்தவரைக்கும் எதுவா இருந்தாலும் இந்த விஷ்ணு பேர்ல ஒரு பார்சல் ஐ ரெடி பண்ணி வச்சிருங்க. நீங்க நடுராத்திரி எழுப்பி எனக்கு சாப்பாடு குடுத்தா கூட நான் சந்தோஷமா சாப்பிடுவேன்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁
ஷாலினி: “ஆமா.. ஆமா.. பத்து பேர் சாப்பிட வேண்டிய சாப்பாட்டை இவன் ஒரே ஆளா சாப்பிடுவான். இவனை எல்லாம் சாப்பிட கூப்பிடுறீங்கன்னா, நாலு பேர் எக்ஸ்ட்ரா சாப்பிடற மாதிரி சேர்த்து சமைங்க மா. அப்ப தான் பத்தும்.” என்று வழக்கம்போல் கேஷுவலாக சொல்லிவிட்டு சிரித்தவள் அப்போது தான் விஷ்ணுவின் அருகே அமர்ந்து இருக்கும் வருணை கவனித்து விட்டு, “மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டியே ஷாலினி… இவரை வச்சுக்கிட்டு இவரு முன்னாடியே அவர் தம்பியை நீ பாட்டுக்கு கலாய்ச்சி கிட்டு இருக்க. அவர் கோபப்பட்டு உன்னை ஏதாச்சும் சொல்லி திட்ட போறாரு பாரு.” என்று நினைத்து பயந்தவள் தயக்கத்துடன் வருணை பார்த்து, “சாரி சார். நீங்க இங்கே இருக்கீங்கன்னு நான் மறந்துட்டேன். பழக்க தோஷத்துல எதையோ சொல்லிட்டேன். நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க.” என்று பயந்த குரலில் சொன்னாள்.
வருண்: “இப்ப நீ எதுக்கு என்ன பாத்து பயப்படுற..??? ஏன் நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றது எனக்கு தெரியும்னு அவன் உன்கிட்ட இந்நேரம் சொல்லி இருப்பான்ல.. அப்புறம் என்ன…?? பீல் பண்ணாதே விடு. நீயும் எங்க ஃபேமிலில ஒருத்தி தான். அம்மா முன்னாடி மட்டும் கொஞ்சம் பாத்து இருந்துக்கோங்க. ஆல்ரெடி ஹரி, ஆராதனா, விஷயத்துல பெருசா பிராப்ளம்ஸ் போயிட்டு இருக்கு.
தர்ஷினி கல்யாணத்தை நிறுத்தி ஹரியையும் ஆராதனாவையும் எப்படி சேர்த்து வைக்கிறதுன்னு தெரியாம நாங்களே முழிச்சிட்டு இருக்கோம். இப்ப உங்க பிரச்சனையும் வந்திருச்சுன்னா, அம்மா ரொம்ப ரொம்ப டென்சிட் ஆயிடுவாங்க. தென் அவங்கள ஹேண்டில் பண்றது ரொம்ப டஃப் ஆய்டும்.” என்று நிதானமான குரலில் பொறுமையாக சொன்னான்.
ஷாலினி: “அவன் பேசி முடிக்கும் வரை அனைத்தையும் பொறுமையாக கேட்டவள், “ஓகே மாமா. தேங்க்ஸ் ஃபார் அக்செப்ட்டிங் அவர் ரிலேஷன்ஷிப். நீங்க எங்களை பத்தி தெரிஞ்சும் அமைதியாவே இருந்ததால உங்க மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரியாம எனக்கு ஒரு பயம் இருந்துகிட்டே இருந்துச்சு. அது இப்போ போயிடுச்சு. நீங்களும், ரித்திகாஅக்காவும் தான் எங்க ரெண்டு பெரிய சேர்த்து வைக்கணும். நாங்கள் உங்கள நம்பி தான் இருக்கோம்.” என்று அமைதியான குரலில் சொன்னாள்.
வருண்: “ஹரியும், ஆராதனாகவும், கூட என்கிட்ட இப்படி தான் சொன்னாங்க. நானும் எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்னு ஆராதனாவ எங்க வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தேன். ஆனா இப்போ அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம போய் சிச்சுவேஷன் டோட்டலா சேன்ஜ் ஆகிடுச்சு.
இப்போ நானே நினைச்சாலும் அவங்களுக்கு என்னால எதுவும் பண்ண முடியல. அதான் உங்ககிட்ட பொறுமையா இருக்க சொல்றேன். அம்மா ஹார்ட் பேஷன்ட். அவங்கள டென்ஷன் பண்ற மாதிரி நம்ம ஏதாவது பண்ணா அவங்க உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் அட்வைஸ் பண்ணி இருக்காரு. சோ எது பண்ணாலும் கேர்ஃபுல்லா தான் பண்ணனும். உங்க லவ் மேட்டர் இப்போதைக்கு அம்மாவுக்கு தெரியாத மாதிரி பாத்துக்கோங்க. ஹரி மேரேஜ் என்ன ஆகுதுன்னு பாத்துட்டு உங்களோட ரிலேஷன்ஷிப்பை எப்படி ப்ரோசீட் பண்ணலாம்னு நம்ம யோசிக்கலாம்.” என்றான்.
தங்களுக்காக வருண் இவ்வளவு தூரம் யோசிப்பதையும் பேசுவதையும் நினைத்து மகிழ்ந்த விஷ்ணுவும், ஷாலினியும், அவனுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தனர். அமைதியாக அமர்ந்து இருந்த சுதாகர் அவர்கள் பேசுவது அனைத்தையும் கவனித்தார். அவர் கேள்விப்பட்டவரை வருண் நாராயணன் மிகவும் கம்பீரமான, மற்றவர்களை கண்டு கொள்ளாத, யாரைப் பற்றியும் யோசித்துக் கூட பார்க்காத ஒரு திமிர் பிடித்த ஆள். ஆனால் அவர் கேள்விப்பட்ட வருனிற்கும் இப்போது அவர் கண் முன்னே அமர்ந்து கொண்டு இருக்கும் இந்த வருனிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவருக்கு தோன்றியது.
வருணின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அவன் அருகே இருந்து பார்க்க பார்க்க சுதாகருக்கு தன்னுடைய மகளை தான் சரியான நபருக்கு தான் திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது. அதனால் அன்புடன் வருணை பார்த்த சுதாகர், “இன்னைக்கு லஞ்ச் என்னோட ஸ்பெஷல் தான். ரித்திகாபாப்பா கேட்ட மாதிரி மட்டன் பிரியாணி செய்யலாம்னு இருக்கேன். உங்களுக்கும் என்ன பிடிக்கும்னு சொல்லுங்க மாப்ள அதையும் செஞ்சிடலாம். இன்னைக்கு லஞ்ச் தெறிக்க விடுறோம்.” என்றார். 😁 😁 😁
வருண்: “நீங்க எனக்காக எதுவும் ஸ்பெஷலா செய்ய வேண்டாம் மாமா. எனக்கு சாப்பாட்டு விஷயத்துல எல்லாம் பெருசா இன்டெரெஸ்ட் இல்ல. எதுவா இருந்தாலும் சாப்பிட்டுக்குவேன்.” என்று சாப்பிட்டுக் கொண்டே சொன்னான்.
சுதாகர்: சரிங்க மாப்பிள்ளை, எனக்கு நல்லா சமைக்க தெரிஞ்ச எல்லாத்தையுமே நான் சமைச்சு வைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
விஷ்ணு: “அப்பா நீங்க எது வேணும்னாலும் செய்ங்க. ஆனா, நான் வெஜ் தானே சமைக்கிறோம்ன்னு பாயாசத்தை மட்டும் மறந்துடாதீங்க. எனக்கு சேமியா பாயாசம் வேணும்.” என்று சிறு குழந்தை தனக்கு பிடித்த உணவிற்காக அடம் பிடிப்பதை போல் அடம் பிடித்தான்.
சித்தார்த்: “அப்ப எனக்கு நிறைய ஐஸ் கிரீம் வேணும். அதையும் உங்க மெனுவுல ஆட் பண்ணிக்கோங்க தாத்தா.” என்று ரித்திகா தனக்கு ஊட்டிவிடும் உணவுகளைை மென்றபடியே சொன்னான். 🍨🍦
வருண்: “ஐஸ்கிரீம் எல்லாம் நிறைய சாப்பிடக்கூடாது சித்தார்த், கோல்ட் வந்துரும். அண்ட் அதுல கெமிக்கல்ஸ் வேற நிறைய ஆட் பண்ணி இருப்பாங்க. சோ ஹெல்தியா இருக்காது.” என்று ஸ்ட்ரிக்ட் ஆன குரலில் சொன்னான்.
வருண் சொன்னதை கேட்டு சோகமாக ரித்திகாவின் முகத்தை திரும்பிப் பார்த்தான் சித்தார்த்.😟 😞 ரேவதியை பார்த்த ரித்திகா , “அம்மா நேத்தே நான் உன்கிட்ட சித்தார்த்துக்கு பிடிக்கும்னு பிரெஷ் ஃப்ரூட்ஸ் ஓட பல்பை எடுத்து ஐஸ்கிரீம் பண்ணி பிரிட்ஜில வைக்க சொன்னேனே வச்சீங்களா..???” என்று கேட்டாள். “வெச்சிருக்கேன் ரித்திகா. இந்நேரம் நல்லா செட் ஆகியிருக்கும். பிரேக் பாஸ்ட் முடிச்ச உடனே பிரிட்ஜில இருந்து எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் சேர்வ் பண்ணு.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
சித்தார்த்: அவர்கள் பேசுவதை கேட்டு மகிழ்ந்தவன், “அப்போ எனக்கு ஐஸ்கிரீம் இருக்கா ரித்தி..???” என்று கேட்டான். 😍 😁 😁 😁
ரித்திகா: வருணை ஓர கண்ணால் பார்த்தவள், “என் சித்து குட்டிக்கு என்ன பிடிக்கும்னு அம்மாவுக்கு தெரியாதா..??? அதான் ரேவதி பாட்டிகிட்ட நான் நேத்தே உனக்காக ஃப்ரூட்ஸ்ல இருந்து பிரஷ்ஷா ஐஸ்கிரீம் செய்ய சொன்னேன். பாட்டி செய்ற அந்த ஐஸ்கிரீம் சூப்பராவும் இருக்கும். அது சாப்பிட்டா உடம்புக்கு எதுவும் ஆகாது.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😁 😁 😁
சித்தார்த்: ரித்திகாவை கட்டிப்பிடித்துக் கொண்டவன், “சூப்பர் ரித்திஅம்மா. நீ தான் பெஸ்ட் மம்மி.” என்று உற்சாகமான குரலில் சொன்னான். 😍 🤗 😁 😁 😁
ரித்திகா: அவளும் சித்தார்த்தை கட்டிப்பிடித்து கொண்டவள், “சித்து குட்டி தான் இந்த பெஸ்ட் மாம் ஓட பெஸ்ட் சன். அம்மா லவ்ஸ் யூ சோ மச்.” என்று மனதார பாசத்துடன் சொன்னாள். 🤗 😍 ❤️
இந்த காட்சியை பார்க்க பார்க்க வருணிற்கு வழக்கம் போல் அவனுடைய வயிறு எல்லாம் கப கபவென்று எறிய தொடங்கியது. 😒 😡 🔥 “இப்படி தான் எதையாச்சும் பண்ணி என்னோட பையன ஈஸியா கரெக்ட் பண்ணி என்கிட்ட இருந்து பிரிச்சுடறா இவ சரியான சூனியக்காரி. இப்ப ஐஸ்கிரீம் வேணான்னு சொன்ன நான் என் பையனுக்கு கெட்டவனாகவும், அத குடுக்கிற இவ நல்லவளாவும் தெரியுவா. ச்சே.!!! இனிமே சித்தார்த் எது கேட்டாலும் நோ சொல்லவே கூடாது.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.
பின் தான் மத்திய உணவிற்கு வீட்டுக்கு வருவதாக ரித்திகாவின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு தன்னுடைய ஆபிஸுக்கு கிளம்பி சென்று விட்டான் வருண். வருண் சென்ற பின் தங்களுடைய மதிய உணவை சமைப்பதற்காக ரேவதியும் சுதாகர் கிச்சனுக்குள் புகுந்து கொள்ள, அவர்களுக்கு உதவுவதற்காக ரித்திகாவும் சென்று விட்டாள். “நானும் வரேன் அக்கா. வெங்காயம் தக்காளி ஏதாச்சு கட் பண்ணி தரேன்.” என்று சொன்ன ஷாலினி அவளும் கிச்சனுக்குள் செல்ல முயன்றாள்.
அவளுடைய கையைப் பிடித்து இழுத்த விஷ்ணு, “அக்கா நானும் ஷாலினியும் அப்புறமா வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றோம்.” என்று ஹாலில் இருந்து கொண்டு கிச்சனை பார்த்து சத்தமாக சொன்ன விஷ்ணு, ஷாலினியை அழைத்து கொண்டு அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டான். ஷாலினியை அவளுடைய வீட்டிற்குள் தள்ளி அவனும் உள்ளே வந்து கதவை சாத்திவிட்டு அதில் சாய்ந்து கொண்டு அழகாக அவளை பார்த்து புன்னகைத்தான் விஷ்ணு. 😁 😁 😁
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)