Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 228

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 228

by Thenaruvi Tamil Novels
17 views

அத்தியாயம் 228: வெகு நாள் ஆசை (பார்ட் 2)

ஷாலினி: அவனைப் பார்த்து முறைத்தவள், “டேய் லூசு அறிவு இருக்கா உனக்கு..??? உன் முன்னாடி தானே வருண் மாமா நம்மளைய பார்த்து இருக்க சொன்னாரு… நீ பாட்டுக்கு அங்க இருந்து என்னை தனியா கைய புடிச்சு இழுத்துட்டு வர பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க..???

மத்தவங்கள விடு ரித்திகா அக்காவும் அம்மா அப்பாவும் நம்மள கேவலமா நினைக்க மாட்டாங்களா..?? இதுல சத்தமா நாங்க அப்புறம்  வரோம்ன்னு வேற டயலாக் பேசிட்டு வர.. அதுல அவங்க கன்பார்மே பண்ணி இருப்பாங்க. உன்னால  என் மானம் போகுது..!!” என்று சொல்லிவிட்டு தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள். 😒 🤨

விஷ்ணு: மெது மெதுவாக ஷாலினியின் அருகே சென்றவன், “என்னது உன் மானம் போகுதா..?? அது எப்படி போகும்..??? உன் மானம் என்னால போகிற அளவுக்கு நான் எதுவுமே பண்ணலையே…..!!! நான் எதுவுமே பண்ணாம இப்படி உன்கிட்ட திட்டு வாங்குறதுக்கு பேசாம பேட் பாயா மாறி ஏதாவது பண்ணிட்டு திட்டு வாங்கிட்டுமா..?? சொல்லு டி..!!!!” என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டான். 

ஷாலினி: “பாக்குறதுக்கு நல்லா மூஞ்சிய அப்பாவி பையன் மாதிரி வச்சுக்கிட்டு பேசுறதை பாரு…!!! போட பொறுக்கி பயா.” என்றவள், விஷ்ணுவை கண்டு கொள்ளாமல் தன்னுடைய அறையை நோக்கி திரும்பி நடக்க தொடங்கினாள். 

விஷ்ணு: அவள் பின்னே ஓடி சென்று மீண்டும் அவளுடைய கையைப் பிடித்து இழுத்து தடுத்தவன், “இப்ப அங்க எதுக்கு டி போற..??? நான் உன் கூட கொஞ்ச நேரம் சும்மா பேசிட்டு இருக்கலாம்ன்னு தானே உன்ன இங்கே கூட்டிட்டு வந்தேன்… ஏன் என்ன தனியா விட்டுட்டு போற ஷாலு..???” என்ற சோகமான குரலில் கேட்டான். 😟 😞

ஷாலினி: நீ என் கூட எப்படி பேசிட்டு இருப்பேன்னு எனக்கு தெரியும். என் கையை விடு. நான் அங்க இருந்து கிளம்பும் போது தெரியாம சில்க் சேரீயா கட்டிட்டு வந்துட்டேன். அங்க சென்ட்ரலைஸ்ட் ஏ. சி. இருந்ததுனால அப்போ தெரியல. இப்போ அடிக்கிற வெயிலுக்கு இங்க வந்த உடனே இரிடேடிங்கா இருக்கு. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்றேன்.” என்றவள், அவனுடைய கையை உதறிவிட்டு மீண்டும் தன்னுடைய அறைக்குள் செல்ல முயன்றாள். 

விஷ்ணு: “நானும் உள்ள வந்து உனக்கு ஹெல்ப் பண்றேன் வேலை சீக்கிரமா முடியும்ல..!!!” என்றவன், அவளுடைய புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு அவள் பின்னையே சென்றான்.

ஷாலினி: தன்னுடைய அறைக்குள் சென்றவள் விஷ்ணுவைப் பார்த்து, “உன்னோட சேவை எனக்கு இங்க தேவை இல்லை.” என்றவள், அந்த அறையின் கதவை அறைந்து சாற்றி விட்டு தான் அங்கே வந்த வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

ஷாலினி வருவதற்குள் தன்னுடைய வீட்டில் வேலை பார்க்கும் பாடி கார்டுகளில் ஒருவனுக்கு கால் செய்து நாராயணன் பேலஸ் இல் இருக்கும் மினி தியேட்டரில் உள்ள ப்ரொஜெக்டரையும், மினி ஸ்கிரீனையும், எடுத்துக்கொண்டு வந்து ஷாலினியின் வீட்டில் இருக்கும் தன்னிடம் தருமாறு சொன்னான். அவனும் அடுத்த பத்து நிமிடத்தில் அதைக் கொண்டு வந்து விஷ்ணுவிடம் தந்துவிட, அதைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு அதை சரியான இடம் பார்த்து வைத்து கொண்டு இருந்தான்.

அப்போது சாதாரண சுடிதார் ஐ அணிந்து கொண்டே வெளியே வந்த ஷாலினி அவன் ப்ரொஜெக்டரை செட் செய்ய முயற்சி செய்து கொண்டு இருப்பதை பார்த்தவள், “ஒய்…  யாரோட ப்ரொஜெக்டர் இது இதை எதுக்கு இங்க பிக்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க..???” என்று கேட்டாள். 

விஷ்ணு: “எல்லாம் நம்மளோடது தான். அங்க வீட்ல இருந்து ஒரு ஆள விட்டு கொண்டு வர சொன்னேன். எனக்கு ரொம்ப நாளா உன் கூட இந்த மாதிரி இங்க வீட்ல உக்காந்து படம் பாக்கணும்னு ஆசை. அதான் இதை பிக்ஸ் பண்ணிட்டு இருக்கேன்.” என்று ஒரு வெள்ளை ஸ்கிரீனை சுவற்றோடு சேர்த்து பிக்ஸ் செய்தபடியே அவளிடம் சொன்னான்.

 ஷாலினி: “பார்ரா உனக்கு அந்த மாதிரி மட்டும் தான் தோணும்னு நினைச்சேன் இந்த மாதிரி கூட தோணுமா..??? வாட் எவர் ஐ லைக் இட். என்ன மூவி பார்க்க போறோம்.???” என்று ஆர்வமான குரலில் கேட்டாள். 

விஷ்ணு: “உன் கிட்ட எனக்கு எந்த மாதிரி தோணுனாலும் அது தப்பு இல்ல டி.” என்று சிரித்துக் கொண்டே சொன்னவன், “நீயே சொல்லு. என்ன மூவி பார்க்கலாம்..??” என்று கேட்டான். 😁 😁 😁

ஷாலினி: “மூவிஸ் எல்லாம் வேண்டாம். அதுக்கு ரொம்ப நேரம் ஆயிடும். நம்ம ரொம்ப நேரமா தனியா இங்கே இருந்தா நல்லா இருக்காது. அதனால இப்ப புதுசா வந்து இருக்கே மாடர்ன் லவ் சென்னைன்னு அந்த சீரிஸ்ல ஏதாவது ஒரு எபிசோடு போடு பாக்கலாம்.” என்றாள். 

விஷ்ணு: “பார்றா.. நானும் அத பாக்கணும்னு நேத்துல இருந்து நினைச்சுக்கிட்டே இருக்கேன். இப்படி உன் கூட சேர்ந்து தான் பார்க்கணும்னு இருக்கு போல… நம்ம அதையே பார்க்கலாம்.” என்றவன், ஷாலினியின் லேப் டாப்பின் உதவியுடன் அதை பிளே செய்ய, அவர்கள் இருவரும் தங்களுடைய வீட்டில் ஒன்றாக அமர்ந்து அந்த காதல் ரசம் சொட்ட சொட்ட இருக்கும் சீரிசை பார்த்து மகிழுந்தனர். 😍  👩‍❤️‍👨 ❤️ 🥰

வருணின் அலுவலக அறை…

வருண் அறையில் உள்ள சோபாவில் அமர்ந்து சிவாவும் வருணும் பேசி கொண்டு இருந்தனர். 

சிவா: “நாராயணன் சார் டெத் -ல இருந்து இப்ப லாஸ்ட்டா க்ரிஷா மேடம் மேல நடந்த மர்டர் அட்டெம்ப்ட் வரைக்கும் எல்லாத்தையும் பிரவீன் தான் பண்ணி இருப்பான்னு நமக்கே நல்லா தெரியும். அப்புறம் எதுக்கு சார் இந்த இன்வெஸ்டிகேஷன் எல்லாம்..??? நம்ம அப்படியே இன்வெஸ்டிகேட் பண்ணி ஏதாவது ப்ரூஸ் ஐ கண்டுபிடிச்சு போலீஸ்கிட்ட அவன சரண்டர் பண்ணா கூட, அவன் ஏதாவது பண்ணி உடனே வெளியில வந்துருவான். அதுலையும் நமக்கு ஒரு யூஸும் இல்லையே…!!!

மோர் ஓவர் அப்போல இருந்து இப்போ வரைக்கும் நம்பலும் இன்வெஸ்டிகேஷன் ஐ ஸ்டாப் பண்ணாம ஏதாச்சு தேடிக்கிட்டே தான் இருக்கோம். பட் ஸ்டில் உருப்படியா நம்ப எதுவுமே கண்டுபுடிக்கிலையே சார்… இப்போ பிரவீன் புதுசா ஒரு கவர்மெண்ட் பிரிட்ஜ் கட்டுவதற்கான டெண்டர் ஐ எடுக்க போறான். 

செட்டில் பண்ண வேண்டிய ஆட்களுக்கு எல்லாம் ஆல்ரெடி அவன் நிறைய செட்டில் பண்ணிட்டான் போல…. அந்த டெண்டர் அவனுக்கு தான் கிடைக்கும்னு கன்ஃபார்மா நம்ப சோர்ஸ்ல இருந்து சொல்றாங்க. அந்த டெண்டர் மட்டும் அவனுக்கு கிடைச்சிருச்சுன்னா, அவன் நம்ப அவன் கம்பெனியில கிரியேட் பண்ண லாஸ்ல இருந்து ஈஸியா வெளில வந்துருவான். இதுல அவனுக்கு பல கோடி பிராஃபிட் கிடைக்கும். இப்ப நம்ம என்ன சார் பண்றது…???” என்று வருனை பார்த்து குழப்பத்துடன் கேட்டான். 

வருண்: “அந்த கவர்மெண்ட் பிரிட்ஜ் கட்ற டெண்டர் ஐ நாராயணன் குரூப்ஸ் தான் எடுக்கணும்.” என்று உறுதியான குரலில் சொன்னான். 

சிவா: “ஆனா சார்.. நம்ப தான் கன்ஸ்ட்ரக்சன் ஃபீல்டிலயே இல்லையே.. அப்புறம் எப்படி.??” என்று ஆச்சரியமான குரலில் கேட்டான். 😮 🙄

வருண்: “நானும் அத பத்தி கேள்விப்பட்டேன் சிவா. அந்த டென்டருக்கு இன்னும் ஒன் மந்த் டைம் இருக்கு. அதுக்குள்ள நம்ம நினைச்சா அந்த பீல்டுகுள்ள போக முடியாதா என்ன…?? அந்த டெண்டர் நாராயணன் குரூப்ஸ்க்கு தான் கிடைக்கணும். 

விஷ்ணுவுக்கு இந்த மாதிரி கன்ஸ்ட்ரக்ஷன் பண்றதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் அதிகம். சோ அவன் பேர்ல இந்த கம்பெனியை ஸ்டார்ட் பண்ணிடு. இப்போதைக்கு க்ரிஷாவும், நீயும், அந்த மேனேஜ் பண்ணிக்கோங்க. விஷ்ணு எம்பிஏ கம்ப்ளீட் பண்ணதுக்கு அப்புறமா அவன பிராங்க்ளினுக்கு அசிஸ்டன்ட்டா ஜாயின் பண்ண சொல்லு. அவன் கூடையும், க்ரஷா கூடையும், இருந்து அவனோட ப்ரொபஷனல் ஸ்கில்ஸ் எல்லாத்தையும் அவன் டெவலப் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமா அவனோட மேரேஜ் அப்போ இந்த கம்பெனியை அவன் கிட்ட குடுத்துரலாம்.” என்று உறுதியான குரலில் சொன்னான். 

சிவா: “நான் ஏதோ பெரிய விஷயத்தை கண்டு பிடிச்சுட்டு வந்து உங்க கிட்ட சொல்றதா நினைச்சு சொல்லிக்கிட்டு இருந்தேன். பட் நீங்க எல்லாத்தையும் ஆல்ரெடி பிளான் பண்ணி வச்சிருக்கீங்க போல… சூப்பர் சார். நான் போய் கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் ஒர்க் ஐ பார்க்கிறேன்.” என்றவன் அதற்கான வேலைகளை க்ரிஷாவுடன் இணைந்து பார்ப்பதற்காக அவளுடைய கேபினுக்கு சென்று விட்டான்.

மதியம் மூன்று மணி…

ரித்திகா வீட்டில்…

தடபுடலாக தங்களுடைய மாப்பிள்ளைக்காக ரித்திகாவின் பெற்றோர்கள் அசைவ விருந்து உணவை சமைத்து வைத்துவிட்டு அவனுடைய வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் வருண் மட்டும் அங்கே வந்து இருக்கவில்லை. “அண்ணா வரும்போது வரட்டும். நம்ப எல்லாரும் சாப்பிடலாம் அண்ணி.” என்று விஷ்ணு பலமுறை சொல்லிவிட்டான். இருப்பினும் அவர்கள் யாருக்கும் வருணை விருந்திற்காக சாப்பிட அழைத்துவிட்டு அவனை விட்டுவிட்டு சாப்பிட மனமில்லை.

அதனால் தன்னுடைய மொபைல் போனை எடுத்து கொண்டு வெளியே வந்த ரித்திகா, வருணிற்கு கால் செய்தாள். க்ரிஷா மற்றும் பிராங்கிளின் உடன் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்த வருண் தன் மொபைல் ஸ்கிரீனில் தெரிந்த ரித்திகாவின் பெயரையும்,  போட்டோவையும் பார்த்துவிட்டு; “எக்ஸ்க்யூஸ் மீ…!!!” என்று அங்கு இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, அவளுடைய கால் ஐ அட்டென்ட் செய்து ஹலோ என்றான். 

ரித்திகா: தன் போனில் கேட்ட அவனுடைய குரலைக் கேட்டு சற்று பதட்டமடைந்தவள், “பிஸியா இருக்கீங்களா…?? சாரி நான் உங்களை கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..!!!” என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள். 

வருண்: “இட்ஸ் ஓகே. சொல்லு..!!!” என்று அமைதியான குரலில் கேட்டான். 

ரித்திகா: “சாப்பாடு எல்லாம் அப்பவே ரெடி ஆயிடுச்சு. நீங்க வருவீங்கன்னு நாங்க எல்லாரும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். அப்பா அம்மா இரண்டு பேருமே டைமுக்கு சாப்பிட்டு டேப்லெட் போடுறவங்க. நீங்க சீக்கிரம் கிளம்பி வந்தீங்கன்னா, எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம். ஆல்ரெடி மணி மூணுக்கு மேல ஆயிடுச்சு.” என்று பயந்து பயந்து சொன்னாள். 

ரித்திகா கால் செய்த பின்பு தான் நேரத்தை பார்த்தவன் தான் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் சிலரையும் பிடித்து வைத்துக் கொண்டு மீட்டிங் என்ற பெயரில் கொடுமை செய்து கொண்டு இருக்கிறோமோ என்று நினைத்த வருண் தன் முன்னே இருந்த பிராங்கிளின், க்ரிஷா மற்றும் சிவாவை பார்த்துவிட்டு; “என் கூட எனக்கு வேண்டியவங்க மூணு பேர் இருக்காங்க. லஞ்சுக்கு  அவங்களையும் கூட்டிட்டு வரட்டுமா..???” என்று அமைதியான குரலில் கேட்டான். 

ரித்திகா: “ம்ம்ம்… பரவால்ல அவங்களையும் கூட்டிட்டு வாங்க. எக்ஸ்ட்ரா தான் சமைச்சு வச்சு இருக்கோம்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😁 😁 😁

வருண்: “ஓகே இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல நாங்க அங்க இருப்போம். பாய்.” என்று சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தவன் தன் முன்னே இருந்தவர்களை பார்த்து, ”இன்னைக்கு லஞ்ச் நீங்க மூணு பேரும் என் கூட ரித்திகா வீட்ல சாப்பிடுங்க.” என்றான்.

க்ரிஷா: “இட்ஸ் ஓகே ப்ரோ, நாங்க இன்னொரு நாள்  வரோம். நீங்களே இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் உங்க வைஃப் வீட்டுக்கு விருந்துக்கு போய் இருக்கீங்க. அங்க நாங்க எதுக்கு…???” என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள். 

பிராங்கிளின்: “ஹே க்ரிஷா ப்ளீஸ் யா… கிடைக்க இருக்கிற நல்ல வீட்டு சாப்பாட்டை கெடுத்து விட்டுறாத. இந்தியன் ஹவுஸ்ல குக் பண்ற புட் ஐ சாப்பிடணுன்றது என்னோட எவ்வளவு நாள் ட்ரீம் தெரியுமா..???” என்று க்ரிஷாவை பார்த்து கேட்டவன் பின் வருணை பார்த்து, “சார் இவ வரலைனா விடுங்க. நான் உங்க கூட வரேன்.” 🙋 என்று ஆர்வமான குரலில் சொன்னான்.

வருண்: நீயும் வா மா க்ரிஷா.

சிவா: “நீங்களும் வாங்க மேடம். ரேவதி ஆன்ட்டி ஓட சமையல் சூப்பரா இருக்கும்.” என்று அவனும் தன் பங்கிற்கு சொன்னான். அதனால் வேறு வழி என்று க்ரிஷாவும் அவர்களுடன் வர சம்மதிக்க, அவர்கள் மூவரும் அங்கே இருந்து வருணின் காரில் ரித்திகாவின் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள். 🚗

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured