Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 61

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 61

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 61: கொஞ்சம் சண்டை நிறைய காதல் (part 2) 

லாவண்யா: “அவர் உனக்கு ஹெல்ப் பண்ணது எல்லாம் சரி தான். ஒரு ஆம்பள பையன் ஒரு பொண்ணுக்கு இவ்ளோ செய்றான்னா அதுக்கு ஒரு காரணம் இல்லாமைய இருக்கும்…???” என்று இழுத்தவள், ஷாலினியின் முக பாவங்களை வைத்து அவளுடைய மன எண்ணங்களை படிக்க முயன்றாள்.

ஷாலினி: “அவன் ரொம்ப நல்ல பையன் தான். நான் கூட அவன் ஏதோ விளையாட்டுத்தனமா சும்மா உளறிட்டு இருக்கான்னு தான் நினைச்சேன். ஆனா அவன் சீரியஸா தான் இருக்கான்னு நினைக்கிறேன்.” என்று லாவண்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அவள் விஷ்ணுவை பற்றி யோசித்துக் கொண்டு இருந்ததை அப்படியே லாவண்யாவிடம்   சொல்லிவிட்டாள்.

லாவண்யா: அவள் சொன்னதை கேட்டு கடுப்பானவள், “இப்ப இவ என்ன தான் சொல்ல வர்றா..?? அவன் இவள லவ் பண்றான்னு சொல்றாளா..?? இல்ல இவ அவன லவ் பண்றேன்னு சொல்றாளா..?? லூசு மாதிரி உளறிட்டு இருக்கா..???” என்று தன் மனதிற்குள் நினைத்தவள் ஷாலினியை பார்த்து, “நான் என்ன கேக்றேன்..!! நீ என்ன சொல்ற..?? அவர பத்தி நீ என்ன நினைக்கிற…?? அவர் ஏன் உனக்கு இவ்ளோ செய்யணும்..??” என்றாள். இப்போது ஷாலினியும் விஷ்ணுவை காதலிக்கிறாள் போல என்று அவளுக்கு தோன்றியது. அதனால் ஷாலினியின் வாயில் இருந்து நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்ற வார்த்தை மட்டும் வந்து விட கூடாது என்று அவளுக்கு தெரிந்த அத்தனை கடவுளிடமும் வேண்டி கொண்டு இருந்தாள். 

ஷாலினி: நீ கேக்குற மாதிரி தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கும் தோணுச்சு, அவன் ஏன் எனக்கு இதெல்லாம் பண்ணனும்னு. அவன் ஜாலியா எல்லார்கிட்டயும் ஈஸியா பழகுற டைப் தான். அவன் கேரக்டருக்கு யாருக்கு ஹெல்ப் தேவைப்பட்டாலும் அவன் செய்வான் தான். ஆனா எனக்கு ஒன்னுனா  என்ன விட அதிகமா அவன தான் அது பாதிச்ச மாதிரி அவன் தான் ரொம்ப கஷ்டப்படுறான். எனக்கு ஏதாவது பிரச்சனைனா எங்க இருந்தாலும் உடனே ஓடி வந்து நிக்கிறான்.

நாங்க பழகுனது கொஞ்ச நாளா இருந்தாலும் அவ என் மேல ரொம்ப பாசம் வெச்சிருக்கான். ஒரு ஆம்பள பையன் அழுது நான் நேத்து தான் பாத்தேன். எனக்காக அவன் கண்ணு கலங்குச்சு. அவன் எப்பவுமே என் கிட்ட சும்மா நீ தான் என் ஆளுன்னு சொல்லி விளையாண்டுட்டு இருப்பான். அவன் என்ன லவ் பண்ற மாதிரி கூட என் கிட்ட பேசி இருக்கான். அதெல்லாம் அவன் சும்மா டைம் பாஸ்க்கு பண்ணிட்டு இருக்கான்னு தான் நான் நினைச்சேன்.

ஆனா இப்ப அத எல்லாம் யோசிச்சு பாத்தா அவன் என்ன உண்மையாவே லவ் பண்றான் போலன்னு தோணுது. இருந்தாலும் எனக்கு ஒரு டவுட் இருக்கு தான். என்னால கன்ஃபார்மா சொல்ல முடியல.

ஷாலினி குழப்பத்தில் இருந்தாலும் அவள் சொன்னதை கேட்ட லாவண்யா தெளிவாக இருந்தாள். ஏனென்றால் அவளுக்கு விஷ்ணு ஷாலினியை உண்மையாக காதலிக்கிறான் என்று ஸ்ட்ராங்காக தோன்றியது. ஏனென்றால் அவளுக்கு தெரிந்து அவளும் சரி, ஷாலினியும் சரி, ஒரே நாளில் தான் விஷ்ணுவிற்கு   அறிமுகமானார்கள். ஆனால் அவன் ஷாலினியிடம் நடந்து கொள்வதற்கும், தன்னிடம் நடந்து கொள்வதற்கும், இருக்கும் வித்தியாசத்தை அவளால் நன்கு உணர முடிந்தது. எது எப்படி இருந்தாலும் ஷாலினி விஷ்ணுவை காதலிக்கும் வரை தனக்கு ஒரு வாய்ப்பு  இருக்கிறது என்று நினைத்தவள், அது பற்றி அவளிடம் கேட்க தொடங்கினாள்.

லாவண்யா: “அவரு என்னமோ நெனச்சிட்டு போறாரு. உன் மனசுல என்ன இருக்கு…?? நீ அவர லவ் பண்றியா..??” என்று வெளிப்படையாக கேட்டு விட்டாள். 

ஷாலினி: சில நொடிகள் அமைதியாக எதையோ யோசித்தவள், சோகமான முகத்துடன் லாவண்யாவை பார்த்து, “எனக்கு அவன பிடிக்கும். அவன மாதிரி ஒரு பையனை என் லைஃப் நான் பாத்ததே இல்ல. இதுக்கு மேல பாப்பேன்னானும் தெரியல. என்னால எப்பயும் அவன மறக்க முடியாது. ஆனா நான் அவன லவ் பண்றனான்னு கேட்டா.. சத்தியமா எனக்கு அத சொல்ல தெரியல. நான் அவன லவ் பண்ற நிலைமையிலும் இல்லை.” என்று விரக்தி புன்னகையுடன் சொன்னாள். 😁

அதை கேட்ட லாவண்யா அதிர்ச்சி அடைந்து, “அப்ப இவளுக்கும் இவ மனசுல எங்கயோ அவன லவ் பண்ணனும்னு ஒரு எண்ணம் இருக்கும் போலவே..!! இது நமக்கு டேஞ்சர் ஆச்சே..!!! ஆனா இதெல்லாம் செட் ஆகாதுன்ற மாதிரியும் சொல்றாளே என்னவா இருக்கும்..??” என்று யோசித்தவள் ஷாலினியின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்வதற்காக நல்லவளை போல் தன் முகத்தை வைத்துக் கொண்டு, “நீயே அவன நல்ல பையன்னு சொல்ற.. அப்புறம் வேற என்ன பிரச்சனை..?? இந்த மாதிரி நல்ல பசங்க எல்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் டி. ஒரு வேளை அவரே வந்து உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணா ஓகேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா செட்டில் வேண்டியது தானே..?? எத நினைத்து நீ தயங்கிட்டு இருக்க..??” என்றவள் எதை எதையோ சொல்லி ஷாலினியின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

நாராயணன் பேலஸுல்…

 பல வருடங்களுக்குப் பின் நாராயணன் பேலசிற்கு வந்த ஆராதனா, முதல் முறையாக இந்த இடத்தை சுத்தி பார்ப்பதை போல் வியந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். சிறுவயதில் அவள் அந்த இடத்தை எப்படி பார்த்தாளோ இப்போதும் அது அப்படியே தான் இருந்தது. பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை என்றாலும் அங்கு புது வரவாக சில பொருட்களை அவளால் பார்க்க முடிந்தது. ஆராதனா இப்படி ஆச்சரியம் நிறைந்த கண்களோடு தன்னுடைய வீட்டை சுத்தி பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த ஹரி, சிறு புன்னகையுடன் அவள் அருகே வந்து அவளுடைய கையை இறுக்கமாக பற்றி கொண்டான். 😁

முதலில் ஹரியை பார்த்து பதிலுக்கு புன்னகைத்த ஆராதனா, பின் தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்து அவர்களுடைய நெருக்கத்தை செண்பகம் பார்த்துவிட்டால் இதை வைத்து பெரிய பிரச்சினையே வர கூடும் என்று நினைத்து பயந்தவள், வேகமாக ஹரியிடம் இருந்து தன்னுடைய கையை விடுவித்துக் கொண்டாள். ஆராதனாவின் இந்த செயலால் ஏமாற்றம் அடைந்த ஹரி, “ஹலோ மிஸஸ். ஹரி என்ன இதெல்லாம்..?? இப்ப எதுக்கு நீ உன் ஹஸ்பண்ட் கைய தட்டி விட்ட..??” என்றான் குறும்பாக. 😜

ஆராதனா: ஏன்னா..!! நான் இன்னும் மிஸ். ஆராதனா தான். மிஸஸ். ஹரி நாராயணன் இல்ல அதான். இப்ப மட்டும் ஆன்ட்டி நம்மளைய இப்டி பாத்தாங்கன்னு வையேன் என்ன பத்தி என்ன நினைப்பாங்க..?? அண்ட் இதையே ஒரு விஷயமா பேசி பெருசா பிரச்சனை பண்ணிட மாட்டாங்களா..??

ஹரி: அப்படி அம்மாவே வந்து ஏதாவது கேட்டாலும்… நான் என் வைஃப் உடைய கைய புடிப்பேன், ஏன் கட்டி கூட பிடிப்பேன், எனக்கு ரைட்ஸ் இருக்குன்னு சொல்லுவேன். 😜

ஆராதனா: “சொல்லுவா..!! சொல்லுவா…!! சொல்லி தான் பாரேன்… ஆன்ட்டி உன் வாய்லையே குத்துவாங்க.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😂 😂 😂 

ஹரி: “எதுக்கு குத்துவாங்க..!!! அதான் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல அப்புறம் என்ன..??” என்று அவனுடைய முகத்தில் தோன்றும் அரிதான வெட்கம் கலந்த புன்னகையோடு சொன்னான். ☺️ 😁

ஆராதனா: “என்னது..!!! நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?? இது எப்ப..?? ஒரு வேளை எனக்கே தெரியாம ஏதாவது பேப்பர்ல என் கிட்ட சைன் வாங்கி நம்ம மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிட்டியா டா..??” என்றாள், ஆச்சரியமான குரலில்… 😳

ஹரி: “அட லூசு இதுக்கு எதுக்கு டி உன் கிட்ட திருட்டுத்தனமா நான் சைன்லாம் வாங்கணும்..?? அப்படியே நான் சைன் வேணும்ன்னு கேட்டா நீ ஏன் போட மாட்டியா என்ன…???” என்றவன் மீண்டும் சிரித்தான். 😂 😂 😂

ஆராதனா: “ஆமால்ல.. நீ கேட்டா நானே சைன் போட்டு குடுத்து இருப்பேனே..!! அப்படியும் இல்லனா வேற எப்படி நமக்கு கல்யாணம் நடந்து இருக்கும்..??” என்றாள் குழப்பமான குரலில் அப்பாவியாக. 🙄

இம்முறை ஆராதனாவின் தோளில் கை போட்ட ஹரி,  அவளை தன் பக்கம் இழுத்து தனக்கு நெருக்கமாக அவளை நிறுத்தியவன் “நீ other கண்ட்ரீஸ் மூவிஸ் அண்ட் சீரிஸ் எல்லாம் பாத்ததில்லையா பேபி..??” என்று அவளுடைய காதில் கிசுகிசுத்தான். அப்போது அவனுடைய இதழ்கள் ஆராதனாவின் காதோரம் லேசாக உரச.. அது அவளுடைய உடம்பில் சட்டென்ரு ஒரு மின்சாரத்தை பாய்ச்சியது. கூச்சத்தில் நெலிந்த ஆராதனா, “பாத்திருக்கேன்..!! பாத்திருக்கேன்..!! அத கொஞ்சம் தள்ளி நின்னு கேட்டா என்ன..??” என்று திக்கி திக்கி  கேட்டாள். 🙄

அவளை அப்படியே தன்னுடைய ஒரு கையால் இறுக்கி அணைத்த ஹரி, “நீ அத என்னத்த பாத்தியோ போ. அதுல வருமே… அந்த காலத்துல ஒரு பையனும் பொண்ணும் லிப் லாக் பண்ணாலே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தான் அர்த்தம். ஏன் இப்ப கூட கிறிஸ்டியன் வெட்டிங்ல கிஸ் பண்றாங்கல்ல…?? அப்டி பாத்தா நமக்கு எத்தன தடவை கல்யாணம் ஆயிருக்குன்னு கணக்கே இல்ல… இப்ப சொல்லு டி என் பொம்ம குட்டி நீ என் வைஃப் தானே…!!!” ☺️ 😁 😜 என்றான் குறும்பாக. 

அவன் சொன்னதை கேட்ட ஆராதனாவின் முகம் வெட்கத்தில் சிவக்க, ☺️ “ஆமா..!! ஆமா..!! நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு. போதுமா..?? என்ன விடு.” என்றவள், அவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டாள். ஆராதனா, செண்பகம் பேசியதை கேட்டு மிகவும் வருத்தத்தில் இருந்ததால், அவளை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காக தான் ஹரி இத்தனையும் செய்து கொண்டு இருந்தான். அவள் இப்போது நார்மல் ஆகி சிரித்து கொண்டு இருப்பதை கண்ட ஹரி, மகிழ்ச்சி அடைந்தான்.

மீண்டும் ஆபீஸ் செல்வதற்காக கிளம்பிய வருண், தன்னுடைய அறையில் இருந்து லிப்ட் வழியாக கீழே வரும்போது எதைச்சியாக இவர்களுடைய காதல் சேட்டைகளை பார்த்தவன் தன் உதட்டில் அரும்பிய சிறு புன்னகையுடன் ஹரியை பார்த்து, “என்ன டா என் தங்கச்சி பழைய படி இந்த வீட்டுக்கு வந்த உடனே உன் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டியா…?? இதெல்லாம் அம்மா கண்ணுல படாம பாத்துக்கோ. அவங்க மட்டும் பாத்தாங்க இத வச்சே பெருசா ஒரு சம்பவம் பண்ணி விட்டுருவாங்க. அப்புறம் நீ தான் ஹெல்ப் பண்ணனும் விஷ்வான்னு பாவமா மூஞ்சிய வச்சிகிட்டு என் முன்னாடி வந்து நீக்க கூடாது.” என்றான் கிண்டல் செய்யும் தோரணையில்… 😂

வருண் சொன்னதை கேட்ட ஆராதனா, அவளுடைய முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தால் வேறு புறம் திரும்பி நின்று கொண்டாள். ☺️ வருணை பார்த்து சிரித்த ஹரி, “போ டா கம்முன்னு. எங்கள டிஸ்டர்ப் பண்ணாத.” என்று வெட்கமே இல்லாமல் சொல்ல… அவர்களை பார்த்து சிரித்த வருண், “அது சரி..!!! நீ நடத்து டா.” என்றவன் அங்கு இருந்து சென்று விட்டான். வருண் அங்கு இருந்து சென்றவுடன் ஆராதனாவின் சிறு வயதில்… அவளும், அவளுடைய குடும்பமும், அங்கே வரும்போது தங்குவதற்காக அந்த வீட்டில் இருந்த அறைகளை சென்று பார்த்தாள். அதில் சில அறைகள் அவர்களுடைய தனி பட்ட அறையில் இருந்து பொதுவான கெஸ்ட் ரூமாக மாற்றப்பட்டு இருந்தது. 

– நேசம் தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured