அத்தியாயம் 243: ரத்த வெள்ளத்தில் ஷாலினி (பார்ட் 2)
செண்பகம் என்ன தான் இத்தனை தெளிவாக அவனிடம் சொல்லி இருந்தாலும் கூட வருணால் இதற்கெல்லாம் ஜான்வி தான் காரணம் என்று நம்ப முடியவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதனால் இன்னும் குழப்பமான முகபாவனைகளுடன் செண்பகத்தை பார்த்தவன், “நான் கன்பியுஷனா இருக்குன்னு அதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு வந்தா, நீங்க என்ன இன்னும் கன்பியூஸ் பண்ணி விட்டுடீங்க மா. என்னமோ நீங்க என்ன சொன்னாலும் எனக்கு இதுல எல்லாம் இப்பயும் பெருசா நம்பிக்கை வரல. சரி விடுங்க பாத்துக்கலாம்.” என்று சொன்னவன், அங்கு இருந்து சென்று விட்டான்.
காலை 8:42 மணி…
குளித்துவிட்டு கிளம்பி லிப்டில் ஏறிய ரித்திகா கீழே வருவதற்காக தரை தளத்திற்குக்கு செல்லும் பட்டனை அழுத்திவிட்டு லிப்ட் குள்ளே காத்திருந்தாள். அப்போது திடீரென்று அவளுக்கு மூச்சு முட்டுவதைப் போல் இருந்தது. அங்கே இருந்த கொஞ்ச நஞ்சு காற்றும் கூட அனல் வீசுவதைப் போல அவளுக்கு தோன்றியது. அதனால் பயந்து போன ரித்திகாவும் கீழே செல்லும் பட்டனை வேகவேகமாக மீண்டும் மீண்டும் அழுத்த தொடங்கினாள்.
அதனால் அந்த லிஃப்ட் வழக்கத்தை விட வேகமாக கீழே வந்து நின்றது. அதில் இருந்து வெளியே மூச்சு வாங்க வந்து நின்ற ரித்திகா, அந்த லிப்டை பயத்துடன் திரும்பி பார்த்தாள். வர வர இந்த வீட்டில் ஏதோ சரியில்லை என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் அதேசமயம் இதை பெரிது படுத்தியும் அவளால் யோசிக்க முடியவில்லை.
பின் கீழே வந்து தானும் சாப்பிட்டுவிட்டு சித்தார்த்தை சாப்பிட வைத்து அவனை கிளப்பிய ரித்திகா, வழக்கம்போல் அவன் செல்லும் காரில் வழக்கம்போல் சாதாரண சுடிதார் ஐ அணிந்து கொண்டு அவனுடன் தானும் சித்தார்த்தின் பள்ளிக்கு செல்ல தொடங்கினாள். இவை அனைத்தும் செண்பகத்தின் ஏற்பாடு தான். செண்பகம் தான் இனி அவள் காரில் சித்தாத்ர்த்துடன் தான் செல்ல வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தாள்.
ரித்திகாவின் ஸ்கூட்டியை பயன்படுத்திக் கொள்ளும்படி சுதாகரும், ரேவதியும், அதன் சாவியை ஷாலினி இடமே கொடுத்து விட்டனர். அதனால் மகிழ்ச்சியுடன் ரித்திகாவின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு ஷாலினி பள்ளிக்கு செல்வதற்காக கிளம்பினாள். அவள் மெயின் ரோட்டை தாண்டி பள்ளியை நோக்கி மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தாள். அப்போது ஒரு பெரிய லாரி அவளை பாலோ செய்து கொண்டு இருந்தது.
அதை கவனிக்காத ஷாலினி, அவசரத்தில் ஹெல்மெட் கூட அணியாமல் வாகன நெரிசல்கள் இருக்கும் சாலைகள் அனைத்தையும் கடந்து, சிறிது ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் சாலைக்குள் நுழைந்தாள். அதுவரை அவளை சிறிது இடைவெளியில் பாலோ செய்து வந்து கொண்டு இருந்த அந்த லாரி இப்போது அவள் முன்னேயும் பின்னேயும் யாரும் இல்லை என்பதால் வேகமாக அவளை இடித்து தள்ளி பல மீட்டருக்கு அவளை தூக்கி எறிந்து விட்டு வேகமாக அங்கு இருந்து சென்று விட்டது.
அதில் தள்ளி போகாதே பாடல் காட்சியில் வரும் ஆக்சிடென்ட் சீன் போல மேலே பறந்து கீழே போய் விழுந்த ஷாலினியின் தலையில் பலமாக அடிபட்டு அதில் இருந்து இரத்தம் வெளியேறி கிட்டத்தட்ட ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அவள். அங்கே இருந்த பொதுமக்கள் சிலர் ஷாலினிக்கு உதவுவதற்காக அவள் அருகே வந்தனர். அதில் ஒருவர் ஷாலினி வந்த ஸ்கூட்டியை கண்டுபிடித்து அதில் இருந்த அவளுடைய செல்போனை எடுத்து லாஸ்டாக ஆக அவள் டயல் செய்து இருந்த “ஹஸ்பேண்ட்” என்று இருந்த விஷ்ணுவின் நம்பருக்கு கால் செய்தார்.
அந்த காலை அட்டென்ட் செய்த விஷ்ணு, “சொல்லி ஷாலினி.. நான் ஸ்கூலுக்கு தான் போயிட்டு இருக்கேன். நீ அங்க ரீச் ஆயிட்டியா..??” என்று பேசுவது ஷாலினி தான் என்று நினைத்துக் கொண்டு கேட்டான். மறுமுனையில் இருந்து விஷ்ணுவிடம் பேசியவர் விஷ்ணு பேசியதை வைத்து அடிபட்டு கிடப்பவளின் பெயர் ஷாலினி தான் என்று புரிந்து கொண்டு, “ஹலோ சார்.. நீங்க ஷாலினி மேடம் ஓட ஹஸ்பெண்டா…??”என்று கேட்டார்.
முதலில் அவர் தன்னை ஷாலினியின் ஹஸ்பெண்டா என்று கேட்டதை நினைத்து மகிழ்ந்த விஷ்ணு; “அவ நம்ம பேர ஹஸ்பண்ட் -ன்னு சேவ் பண்ணி வைத்திருப்பா போல.” என்று நினைத்துக் கொண்டவன் ஷாலினி தன்னிடம் விளையாடுகிறாள் போல என்று நினைத்து, “ஆமா நான் ஷாலினி மேடம் ஓட ஹஸ்பண்டா பேசுறேன். நீங்க யார் பேசுறதுசுறது..??” என்று விளையாட்டாக கேட்டான். 😂 😂 😂
மறுமுனையில் இருந்து இப்போது அவர் சீரியஸாக பேச தொடங்கி, “சார் அவங்களுக்கு சர்ச் ரோடு கிட்ட ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. மேஜர் ஆக்சிடென்ட் சார் நிறைய பிளட் லாஸ் ஆயிடுச்சு. நான் இங்கே இருக்கிறவங்களோட சேர்ந்து அவங்கள பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றேன் நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க.” என்று சொன்னார். அவர் பேசியதை கேட்ட அதிர்ச்சியில் விஷ்ணுவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்ட, தான் ஓட்டிக் கொண்டு இருந்த காரை அப்படியே நிறுத்திவிட்டான்.
இப்போதும் ஷாலினிக்கு அப்படி ஒரு ஆக்சிடென்ட் நடந்து விட்டது என்று அவனால் நம்ப முடியவில்லை. அதனால் துக்கம் அவனுடைய தொண்டையை அடைக்க பேச முடியாமல் பேசியவன், “சார் நீங்க யாருன்னே தெரியல ப்ளீஸ் விளையாடாதீங்க. அவளுக்கு ஒன்னும் இல்ல தானே.. அவளுக்கு அந்த மாதிரி எதுவும் நடக்கலைன்னு சொல்லுங்க ப்ளீஸ். என் ஷாலினிக்கு எதுவும் ஆக கூடாது.” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.
“ஐயோ சார் சீக்கிரம் வாங்க. உங்க கூட விளையாடுறது தான் என்னோட வேலையா..?? சுச்சுவேஷன் ஓட சீரியஸ்னஸ் புரியாம சின்ன பிள்ளைத்தனமா பேசிட்டு இருக்கீங்க..!!!” என்று எரிச்சலாக கேட்டார் ஷாலினியின் போனில் இருந்து பேசியவர். 😒 அப்போது தான் அங்கு இருக்கும் அவசரமான சூழ்நிலையை புரிந்து கொண்ட விஷ்ணு, “சாரி சார். நீங்க ஷாலினி கூட இருந்து அவளை பாத்துக்கோங்க. நான் சீக்கிரமா அங்கு வந்துடறேன். நீங்க என்கூட காண்டாக்ட்லயே இருங்க. நீங்க அவளை எந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறீங்கன்னு எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. நான் அங்க வந்ததுக்கப்புறம் அவளை வேற ஹாஸ்பிடலுக்கு சிப்ட் பண்ணிக்கிறேன். ப்ளீஸ் சார் நான் அங்க வர வரைக்கும் மட்டும் அவள நல்லா பாத்துக்கோங்க சார்.” என்று கண்ணீருடன் கெஞ்சும் குரலில் சொன்னவன், வேகமாக அவர் சொன்ன இடத்திற்கு அருகே உள்ள ஹாஸ்பிடலுக்கும் சென்றான்.
அவனுக்கு இருந்த பதட்டத்தில் விஷ்ணுவிற்கு தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை. எப்படியோ ஒரு வழியாக டிரைவ் செய்து ஷாலினி அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தவன் அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்டு விசாரித்துக் கொண்டு அவள் அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் வார்டிற்குள்ளே சென்றான். அங்கே விஷ்ணுவிடம் போனில் பேசியவர் ஷாலினியின் உடைமைகளுடன் நின்று கொண்டு இருந்தார்.
அவரிடம் பேசி அதை பெற்றுக்கொண்டு அவரை அங்கே இருந்து அனுப்பி வைத்த விஷ்ணு டாக்டரை பார்ப்பதற்காக சென்றான். அப்போது ஷாலினி இடம் பேசுவதற்காக அவளுடைய போனிற்கு கால் செய்திருந்தாள் ரித்திகா. ஷாலினியின் போனில் தெரிந்த ரித்திகாவின் பெயரை பார்த்தவுடனேயே விஷ்ணுவால் தன்னுடைய சோகத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை அதனால் உடனே அந்த காலை அட்டென்ட் செய்தவன், “அண்ணி ஷாலினி அண்ணி.. ஷாலினிக்கு..!!” என்று பாதி பாதியாக சொல்லிவிட்டு பேச முடியாமல் வேதனையில் அழ தொடங்கினான். 😭 😭 😭
ரித்திகா நேற்றில் இருந்து தொடர் நடந்த சம்பவங்களால் பதட்டத்திலேயே இருந்த ரித்திகா இப்போது ஷாலினியின் போனை எடுத்து விஷ்ணு உளறிக்கொண்டு இருப்பதை கேட்டு இன்னும் பதட்டம் அடைந்தவள், “விஷ்ணு எதுக்கு அழுகிற..?? ஷாலினிக்கு என்ன ஆச்சு.. நீங்க ஏன் இன்னும் ஸ்கூலுக்கு வரல..??” என்று கேட்டாள்.
தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட விஷ்ணு, “அண்ணி ஷாலினிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அண்ணி. அப்ப ரோட்ல போற யாரோ ஒருத்தர் பார்த்துட்டு அவள ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு, எனக்கு கால் பண்ணி சொன்னாரு. நான் இப்ப ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ப்ளீஸ் கொஞ்சம் கிளம்பி வாங்க அண்ணி. ஷாலினி எப்படி இருக்கான்னு கூட இன்னும் நான் போய் பாக்கல. அதுக்கான தைரியமும் எனக்கு இல்ல. அங்க போனா டாக்டர் என்ன சொல்ல போறாருன்னு நினைச்சாலே அவர்கிட்ட போய் பேசுறதுக்கே ரொம்ப பயமா இருக்கு அண்ணி.” என்று கண்ணீருடன் தேம்பித் தேம்பி அவளிடம் சொன்னான். 😭 😭 😭 😭
விஷ்ணு பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரித்திகாவின் கண்களில் இருந்தும் அவளை அறியாமல் கண்ணீர் அருவியாக வர தொடங்கியது. 😭 😭 😭 இருப்பினும் தானும் பயந்து விஷ்ணுவையும் பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தவள், “ஒன்னும் இல்ல விஷ்ணு. நம்ப ஷாலினிக்கு எதுவும் ஆகாது. நீ பயப்படாத. நான் உடனே அங்க கிளம்பி வரேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கால் பண்ணி சொல்லி அவங்களையும் வர சொல்றேன். நாங்க எல்லாம் இருக்கோம். அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டோம் நம்ம பாத்துக்கலாம். இப்ப நீ எந்த ஹாஸ்பிடல்ல இருக்க..??”
என்று கேட்டவள், விஷ்ணுவிடம் ஷாலினி எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்று கேட்டு தெரிந்து கொண்டு அங்கே செல்வதற்காக வேகவேகமாக கிளம்பி வெளியேே வந்தாள். அப்போது அவளை வழிமறித்த லாவண்யா, “என்னாச்சு அக்கா.. பாக்கறதுக்கே ரொம்ப டென்ஷ்டா இருக்கீங்க்க…!!! ஓனர் மேடம் நீங்களே ஸ்கூலுக்கு வந்துட்டீங்க இன்னும் உங்க தங்கச்சிக்கு ஸ்கூலுக்கு வருவதற்கு வழி தெரியலையா..???” என்று நேரம் காலம் தெரியாமல் ரித்திகாவிடம் கேள்வி கேட்டு கடுப்பேத்தி கொண்டு இருந்தாள்.
அவள் பேசியதை கேட்டு எரிச்சல் அடைந்த ரித்திகா, “ஷாலினி ஸ்கூலுக்கு வர்ற வழியில ஏதோ ஒரு லாரி இடிச்சு அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். 🚛 அங்கே இருந்த யாரோ ஒருத்தர் விஷ்ணுவுக்கு கால் பண்ணி சொல்லி இருக்காங்க. இப்ப அவ சீரியசான கண்டிஷன்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கா. நான் அவளை பார்க்க தான் போறேன். பிரின்சிபல் மேடம் கிட்ட நீ இத இன்பாம்ம் பண்ணிடு. விஷ்ணு அங்க தனியா இருக்கான். நான் உடனே போகணும் .” என்று அவசரமான குரலில் சொன்னவள் அவளை திரும்பி கூட பார்க்காமல் வேக வேகமாக ஒரு ஆட்டோவை பிடித்து ஷாலினி அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தாள்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)