Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 249

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 249

by Thenaruvi Tamil Novels
17 views

அத்தியாயம் 249: பொண்ணு பார்க்க வரும்போது ஃபேமிலியோட தானே வரனும்…!!


அதுவரை ஈரோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த சிவாவால் இப்போது அங்கே செல்ல முடியவில்லை. தன்னுடைய திவ்யாவை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனியாக தவிக்க விட்டுவிட்டு, அவனால் இங்கேயே இருக்க முடியவில்லை. அதனால் தன்னுடைய கார் ஐ திருப்பிக் கொண்டு சேலம் மாவட்டம் ஏற்காடு மலையின் அடிவாரத்தில் உள்ள திவ்யாவின் வீட்டிற்கு வருனிடம் கூட ஒரு வார்த்தையும் சொல்லாமல், எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், தன்னுடைய காதலிக்காக தனியாக சென்றான் சிவா. 

செல்லும் வழி எல்லாம் திவ்யாவை பற்றி தான் அவனுடைய மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. தான் அங்கே சென்றால் என்ன நடக்கும் என்றெல்லாம் சிவா பெரிதாக யோசிக்கவில்லை. இப்போது அவனுடைய சிந்தனை முழுவதும் திவ்யா மட்டும் தான் நிறைந்து இருந்தாள். ஒரு நான்கு ஐந்து மணி நேர பயணத்திற்கு பின்பு சாயங்கால வேலையில் திவ்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சிவா. அவளுடைய வீடு விழாக்கோலம் பூண்டு சொந்த பந்தங்கள் கொடை சூழ அலங்காரங்களுடன் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு இருந்தது.

அதை பார்த்தவுடன் ஒரு வேளை திவ்யாவிற்கு இன்றே தான் வருவதற்குள் திருமணம் செய்து முடித்து விட்டார்களா என்று நினைத்து பயந்தவன் தன் கார் ஐ ஓரமாக நிறுத்திவிட்டு, கனத்த இதயத்துடன் அவளுடைய வீட்டிற்குள்ளே செல்ல தொடங்கினான். எவனோ ஒருவன் புதிதாக தங்களுடைய வீட்டிற்குள் நுழைவதை அங்கே இருந்தவர்கள் அனைவரும் வித்தியாசமாக பார்த்தனர். அதில் ஒருவர் “யாருப்பா நீ..??” என்று சிவாவிடம் விசாரித்தார். திக்கி திணறி… “நான் திவ்யாவோட ஃப்ரெண்ட். அவளுக்கு மேரேஜ் -ன்னு கேள்விப்பட்டேன். அதான் வந்தேன். இப்ப அவ எங்க இருக்கா சார்..??” என்று கேட்டான். 

சிவா பேசியதை கேட்டுவிட்டு வேகமாக அவனுடைய தோளில் நட்பாக கையை போட்டவர், “நம்ம திவ்யா பிரண்டா பா நீ..?? நான் அவளோட சித்தப்பா தான். நிச்சயதார்த்தம் எல்லாம் முடிஞ்சுது. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். சரியான சமயத்தில தான் பா வந்திருக்க. நாங்க முன்னாடி இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் கல்யாணம் பண்றது தான் முடிவு பண்ணி வச்சிருந்தோம். அப்புறம் எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. திடீர்னு எங்கயோ போய் ஜாதகம் பார்த்துட்டு வந்தாராம். 

திவ்யாவுக்கு கல்யாணம்னு பண்ணா இன்னும் ஒரு வாரத்துல பண்ணா தான் அவ வாழ்க்கை நல்லா இருக்குமாம். இல்லைன்னா, பொன்னும், பையனும், பிரிஞ்சிடுவாங்கன்னு அந்த படுபாவி பையன் சொல்லிப்புட்டான். அதான் நாங்க அவசர அவசரமா கல்யாணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கோம். என்ன தம்பி சொல்ற நமக்கு நம்ம புள்ளையோட வாழ்க்கை தானே முக்கியம்…???” என்று சிவாவிடம் கேட்டார். 

நல்லவேளையாக இன்னும் திவ்யாவிற்கு திருமணம் நடக்கவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்ட சிவா, “ஆமா சார். திவ்யாவோட வாழ்க்கை தான் முக்கியம்.” என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னான். 😁 😁 😁 “என்ன பா அங்க வெளியூர்ல பேசுற மாதிரி சாறு.. மோர்னு.. பேசிகிட்டு. இதெல்லாம் கிராமம். நாங்க எல்லாரும் தாயா, புள்ளையா, பழகுவோம். எங்க பிள்ளைக்கு பிரெண்டுன்னு சொல்ற, அப்ப நீயும் எங்க புள்ள மாதிரி தான். நீயும் என்னை இனி சித்தப்பான்னே கூப்பிடு சரியா..??” என்று அன்புடன் சிரித்துக் கொண்டே சொன்னார் . 😁 😁 😁

“பரவால்ல கிராமத்து காரங்கனாலே இப்படி தான் போல. வெள்ளந்தியா பாசமாசமா பேசுறாங்க.” என்று நினைத்துக் கொண்ட சிவா “சரிங்க சித்தப்பா.” என்று உற்சாகமான குரலில் சொன்னான். 😍 “நீ உள்ள போய் திவ்யாவ பாருப்பா. உன் பிரண்டும் என் பிள்ளைகளும் தான் தோஸ்து. எல்லாம் ஒன்ன தான் சுத்திக்கிட்டு இருக்குங்க. கல்யாண வேலை நிறைய இருக்கு நான் போய் பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தன்னுடைய வெள்ளை துண்டை எடுத்து தன்னுடைய தோளில் போட்டுவிட்டு அங்கே இருந்து நகர்ந்தார். 

எப்படியோ முதல் தடைகளை தாண்டி வீட்டிற்குள் நுழைந்த சிவா, திவ்யாவையும் அவளுடைய அப்பாவையும் தான் தேடினான். திவ்யாவின் அப்பா தன்னை அடையாளம் கண்டு கொண்டு பிரச்சனை செய்வதற்குள் யாருக்கும் தெரியாமல் எப்படி ஆவது அவன் திவ்யாவை இங்கே இருந்து அழைத்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். அவன் திவ்யாவின் வீட்டிற்குள் அங்கேயும் இங்கேயும் சுத்தி திரிந்ததால் அவனை அழைத்த ஒரு சிறிய பையன், “யார் நீங்க..?? இங்க என்ன பண்றீங்க..??” என்று கேட்டான். “இப்ப இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லனுமா..?? எல்லாம் என் நேரம் டா.” என்று நினைத்துக் கொண்ட சிவா, “நான் யாருன்னு சொல்றேன். முதல்ல நீ யாருன்னு சொல்லு.” என்று அவனிடமே பதிலுக்கு கேள்வி கேட்டான்.

அந்த குட்டி பையன், “என் பேரு ரோஷன். கல்யாண பொண்ணு திவ்யா இருக்காள்ல.. அவ எனக்கு சித்தி. எங்கம்மா அவளுக்கு அக்கா. என்னோட சித்தி அவளுக்கு தங்கச்சி.” என்று தெளிவாக அவனிடம் சொன்னவன், “அதான் நான் இவ்ளோ டீடைலா சொல்லிட்டேன்ல.. இப்ப நீ யாருன்னு சொல்லு. இல்லன்னா, நான் சத்தம் போட்டு எல்லாரையும் இங்க வர சொல்லி நீ திருடன்னு உன்ன புடிச்சு குடுத்துடுவேன். உன் பார்வையே வேற சரியில்லயே..!!! ஒரே திருட்டு முழியா இருக்கு. உண்மைய சொல்லு யார் நீ..??” என்று தன்னுடைய புட்டி கண்ணாடியை இன்னும் தன்னுடைய கண்களின் அருகே நகர்த்தி அவனை உற்றுப் பார்த்தபடி கேட்டான். 👀

சிவா: டேய் பெரிய மனுஷா… உனக்கு என்ன பார்த்தா திருடன் மாதிரியா இருக்கு..?? உன்னோட நாலு கண்ண வச்சு நல்லா பாரு டா. எந்த ஊர்ல டா திருட்டு பையன் எல்லாம் இவ்வளவு டீசன்ட்டா டிரஸ் பண்ணி பகல் நேரத்துல வந்து இப்படி வீட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பான்..??

ரோஷன்: லாஜிக் கரெக்ட் தான். ஆனா நீ இன்னும் யாருன்னு சொல்லவே இல்லையே..??

சிவா: “நான் திவ்யாவோட ஃப்ரெண்ட் சிவா. திவ்யா எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா..?? நான் அவளை தான் தேடிக்கிட்டு இருக்கேன். நீ அவளை பாத்தா, நான் இங்க வந்து இருக்கேன்னு சொல்லி அவளை இங்க கூட்டிட்டு வரியா..?? நான் உனக்கு பெருசு பெருசா நிறைய சாக்லேட் வாங்கி தரேன்.!!” 🍫 🍫 என்று சொல்லி எப்போதும் அவன் சித்தார்த்தை சமாதானப்படுத்துவதை போல் இவனிடமும் சொல்லி இவனை கரெக்ட் செய்ய பார்த்தான்.

ரோஷன்: “இல்லையே ஏதோ ஒன்னு உன்கிட்ட தப்பா இருக்கே..!!! நீ என்ன சும்மா திவ்யா சித்தியை கூட்டிட்டு வான்னு சொல்லி இருந்தா கூட அவளை கூட்டிட்டு வந்து இருப்பேன். ஆனா அதுக்கு லஞ்சமா சாக்லேட் அதுவும் பெருசு பெருசா தரேன்னு சொல்றியா.. அதான் ஏன்னு  எனக்கு டவுட்டா இருக்கு. நீ எங்க திவ்யா சித்திய தனியா கூட்டிட்டு வந்து பேசி கடத்திட்டு போகலாம்னு எதுவும் பிளான் பண்றியா..?? அது எல்லாம் இந்த ரோஷன் இருக்கிற வரைக்கும் நடக்காது.” என்று சரியாக கேட்டான். 

சிவா: அவன் பேசியவற்றை எல்லாம் கேட்டு இன்னும் நொந்து போனவன், “டேய்… யப்பா டேய்… போதும் டா.சாமி என்னால முடியல. பேசி.. பேசியே.. இன்னும் சாவடிக்கிற. நீ உன் என்கொயரி ஐ சீக்கிரம் முடிச்சிட்டு என்ன அனுப்புனின்னா, நானே போய் அவளை தேடிக்குவேன்.” என்றவன், அவனை கையெடுத்து கும்பிட்டான்.

அப்போது தன்னுடைய வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இருந்த திவ்யா, தூரத்தில் லேசாக கேட்ட சிவாவின் குரலை அடையாளம் கண்டு கொண்டு அவனை பார்ப்பதற்காக வேகமாக ஓடி வந்தவள். பின் அவன் ரோசனிடம் பேசி கொண்டு இருப்பதை கவனித்து வேகமாக வந்து அவன் மீது தாவி குதித்து அவனை அனைத்து கொண்டாள். 😍 🤗

 அந்த காட்சியை தன் வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தான் ரோஷன். 🙄 எங்கே அவன் சத்தம் போட்டு இவர்களை காட்டி கொடுத்து விடுவானோ என்று நினைத்து பயந்த அவனுடைய அம்மா நிரோஷினி, தன்னுடைய மகனின் வாயை பின்னே இருந்து பொத்தி அவனே அப்படியே தூக்கி கொண்டு வெளியே சென்று விட்டாள்.  திவ்யாவை பிரிந்த இத்தனை நாள் இருந்த சோகத்தை தீர்த்துக் கொள்ள நினைத்த சிவா அப்படியே அவளை தூக்கி கொண்டு தன் ஆசை தீர சுற்றி மகிழ்ந்தான். 😍 🥰 💝 

வெகு நாட்கள் கழித்து தன்னுடைய ஆசை காதலனை பார்த்ததால் ஆனந்தம் மற்றும் காதலின் வலி என அனைத்தையும் தன்னுடைய கண்ணீரில் கரைத்துக் கொண்டு இருந்தாள் திவ்யா. திவ்யா அழுவதை பார்த்தவுடன் சிவாவின் கண்களும் கலங்கியது. 😭 😭 😭

திவ்யா: “நான் கூப்பிட்ட உடனே, எனக்காக நீ வந்துட்டியா சிவா..??” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் கேட்டாள். 😭 😭 😭

சிவா:  அவளுடைய முகத்தை தன்னுடைய இரு கைகளிலும் ஏந்தியவன், “நீ கூப்பிட்டு நான் எப்படி டி வராம இருப்பேன்..?? உன்ன அப்படியே விட்டுவிடுவேன்னு நினைச்சியா..??” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான்.

திவ்யா: இல்லை என்று தன்னுடைய தலையை ஆட்டியவள், “எனக்காக நீ வருவேன்ற நம்பிக்கை எனக்கு இருந்ததுனால தான் நான் உனக்கு கால் ஏ பண்ணுனேன். ஆனா நீ என்னடா தனியா வந்தியா..???” என்று அவசரமான குரலில் கேட்டாள். 

சிவா: ஆமா நீ கால் பண்ணப்ப நான்  வைஷாலிய ஏர்போர்ட்ல விட்டுட்டு, ரிட்டன் ஆபீஸ்க்கு போயிட்டு இருந்தேன். நீ பேசுனத கேட்ட உடனே என்னால உன்ன பாக்காம இருக்க முடியல. அதான் எத பத்தியும் யோசிக்காம உடனே கிளம்பி இந்த பாக்க வந்துட்டேன்.

திவ்யா: “என்ன சிவா லூசுத்தனமா இப்படி பண்ணி வந்து இருக்க..?? நான் தான் உன்கிட்ட போன்லயே சொன்னேன்ல்ல.. வந்தின்னா யாரோட ஹெல்ப் எதுவும் இல்லாம வராத. உன்னால முடியலன்னா, வருண் சார்கிட்ட ஹெல்ப் கேளுன்னு… சொன்னேன்ல.. இப்படி தனியா வந்து இங்க மாட்டிக்கிட்டியே டா..!!! இது சிட்டி மாதிரி இல்ல. இங்க இருக்கிறவங்க எல்லாம் வெட்டுக்குத்து அடிதடிக்கு எல்லாம் பயப்பட மாட்டாங்க. 

நான் இவங்க வீட்டு பொண்ணுன்றதுனால என்ன எதுவும் பண்ண மாட்டாங்க. ஆனா உன்னோட உயிருக்கு ஏதாவது ஆபத்துன்னா, நான் என்ன பண்ணுவேன் சொல்லு..?? இப்ப வேணாம் சிவா. நீ இங்க இருந்து கிளம்பு. நான் உன் கூட வாழனும்ன்றத தாண்டி நீ நல்லா இருக்கணும். அது தான் எனக்கு முக்கியம். ப்ளீஸ் போயிடு.” என்று அழுது கொண்டே சொன்னவள், அவனுடைய இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டாள். 😭 😭 😭

வெளியில் ஒரு கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய திவ்யாவின் அப்பா, வந்ததும் வராததுமாக திவ்யாவை பற்றித்தான் தன்னுடைய தம்பி மகளிடம் விசாரித்தார். “திவ்யா அவ ரூம்ல தூங்கிட்டு இருக்கா பெரியப்பா.” என்று நிரோஷினி பொய் சொன்னாள். என்ன தான் நிரோஷினி எதையோ சொல்லி சமாளித்தாலும் கூட, திவ்யாவின் அப்பாவிற்கு மட்டும் ஏதோ சரி இல்லை என்று அவருடைய உள்ளுணர்வு அவரிடம் சொல்லிக் கொண்டே இருந்தது. “சரி மா. நான் போய் அவளை எதுக்கும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுறேன்.” என்று சொல்லிவிட்டு அவளையும் மீறி திவ்யாவின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கே திவ்யா இல்லாததால் நிரோஷினியை பார்த்து முறைத்தவர், “அவ எங்க போனா..?? எங்கேயாவது சும்மா போயிருக்காளா.. இல்ல ஒரேடியா வீட்டை விட்டு ஓடி போயிட்டாளா..??” என்று கோபமாக கேட்டார். 😕 🤨

அவருடைய குரலில் இருந்த கோபத்தைக் கண்டு பயந்து போன நிரோஷினி, “எனக்கு எதுவும் தெரியாது பெரியப்பா. நான் பார்த்தப்ப அவ இங்க தான் தூங்கிட்டு இருந்தா. நானே அவகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்ன்னு தான் இங்கே வந்தேன். ஆனா அவ தூங்கினா. சரி தூங்குற புள்ளைய எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னு நான் அவளை எழுப்பாமல் வெளியில வந்துட்டேன். அதுக்கு அப்புறம் அவ எங்க போனான்னு எனக்கு தெரியாது.” என்று பயத்தில் உடனடியாக ஒரு பொய் ஐ தயார் செய்து அவரிடம் சொன்னாள். 

“என் பொண்ணு எங்க போனான்னு நானே தேடிக்கிறேன்.”  என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கு இருந்து வெளியே வந்த திவ்யாவின் அப்பா, வீடு முழுவதும் அவளை தேடி இறுதியாக அவள் சிவாவுடன் பேசி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஓரமாகக் கிடந்த ஒரு அருவாளை தேடி கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு வந்து; “டேய் அன்னைக்கு உன்னை இந்த பக்கம் வராதுன்னு சொல்லி தானே அனுப்பிச்சேன்…!! நான் அவ்வளவு சொல்லியும் இன்னைக்கு நீ திரும்ப வந்திருக்கேன்னா, உனக்கு எவ்ளோ திமிரு இருக்கணும்..?? அன்னைக்கே உன்ன வெட்டி பலி போட்டு இருக்கணும் டா. அன்னைக்கு உன்னை சும்மா பேசி இங்க இருந்து அனுப்பி வெச்சிட்டேன்ல அதான் நீ திரும்ப இங்க வந்து என் முன்னாடியே நின்னு என் பொண்ணு கிட்ட கொஞ்சி பேசிக்கிட்டு இருக்க…!!!” என்று கோபத்தில் கர்ஜித்த படி கையில் அருவாளுடன் சிவாவை வெட்டுவதற்காக சீறி பாய்ந்தார்.

தன்னுடைய அப்பாவின் காலில் விழுந்து அவரை முன்னேறி செல்ல முடியாமல் அவருடைய கால் ஐ இறுக்கமாக பிடித்துக் கொண்ட திவ்யா, “அப்பா அப்பா ப்ளீஸ் பா..!! நானே அவனை ஏன் டா வந்த.. திரும்பி போன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. அவன எதுவும் பண்ணிடாதீங்க பா எனக்காக அவன விட்ருங்க. அவன் இங்க இருந்து இப்பவே கிளம்பிடுவான். அவனால எந்த பிரச்சனையும் வராது.” என்று சொல்லி அழுது கெஞ்சி கொண்டு இருந்தாள். 😭 😭 😭

லக்ஷனாவை தேடி சாப்பாடு தூக்கம் என்று எதுவும் இல்லாமல் பித்து பிடித்தவனை போல் அலைந்து கொண்டு இருந்தான். அப்போது ஒரு கால் ஐ பேசியபடி பிரவீனின் அருகே வந்த சங்கர், “சார் நம்ப லக்ஷனா மேடம் எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிருச்சு. நம்ம உடனே போனா அவங்கள ஈஸியா புடிச்சுடலாம்.” என்று சொல்ல அதைக் கேட்டு மகிழ்ந்த பிரவீன் வேகமாக தன்னுடைய கார் ஐ ஸ்டார் செய்து லக்ஷனா இருக்கும் லொகேஷன் -க்கு சென்றான்.

நார்த் இந்தியாவிற்கு செல்லும் ஒரு ட்ரெயினில் கையில் ஒரு சிறிய பையுடன், ஜன்னலில் சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் லக்ஷனா. அந்த ட்ரெயின் ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றது. இதுவரை அவள் ட்ரெயினில் எங்கேயும் சென்றதில்லை என்பதால் அவளுக்கு அது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அந்நேரம் திடீரென்று புயலைப் போல் தன்னுடைய ஆட்களுடன் அந்த ட்ரெயினிற்குள் நுழைந்த பிரவீன், ஒவ்வொரு பெட்டிகளாக தேடி இறுதியில் லக்ஷனாவை கண்டு பிடித்தான். 

இன்னும் அவள் ஜன்னலில் சாய்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். தன்னை ஏமாற்றிவிட்டு ஓடி வந்து இப்படி தன்னை தெருத்தெருவாக அலைய விட்டுவிட்டு இவள் மட்டும் ஒய்யாரமாக ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ரிலாக்ஸ்ட் ஆக இருக்கிறாளே என்று நினைக்கும் போதே பிரவீனின் ரத்தம் எல்லாம் கோபத்தில்  கொதித்தது. 😤 😡 🤬 

அதனால் வேகமாக அவள் அருகே சென்று அவளுடைய தலை முடியை பிடித்து கொத்தாக இழுத்து அவளை நிற்க வைத்தவன், அவளுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தான். அதில் நிலை தடுமாறிய லக்ஷனா, கீழே விழ போனாள். ஆனால் அவளுடைய கூந்தல் மொத்தமாக பிரவீன் கைப்பிடியில் இருந்ததால் அவள் கீழே விழுகவில்லை. ஒரே முறை அடித்து விடுவதில் அவனுடைய ஆத்திரம் தீராததால் மீண்டும் அவளை பார்த்து பார்த்து கோபத்தில் இரண்டு மூன்று முறை அவளை அடித்தான் பிரவீன். ஏற்கனவே மிகவும் வீக் ஆக இருந்த லக்ஷனா அவனுடைய தொடர்ச்சியான அடிகளை தாங்க முடியாமல் மயங்கி கீழே விழ போனாள். அதனால் அந்த ட்ரெயினில் இருந்து இறங்கி, தன்னுடைய கார் -க்கு அவளை மாற்றி தன்னுடைய வீட்டை நோக்கி பறந்தான் பிரவீன்.

அங்கே இருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கண் முன்னே நடக்கும் இந்த காட்சியை கண்டு அதிர்ந்து தங்களுக்குள், “பணக்காரங்களா இருந்தா இப்படி எல்லாமா கூட பொது இடத்தில பண்ணுவாங்க..?? ஒரு பொண்ணு அடிச்சு கொடுமைப்படுத்தி அவ மயக்கம் போட்டதுக்கு அப்புறமும் என்ன ஏதுன்னு பார்க்காம இப்படி தூக்கிட்டு போறான் இவன்…!!! இவன் எல்லாம் மனுசனே இல்ல. அந்த பொண்ண பாக்குறதுக்கே பாவமா இருக்கு.” என்று பலவிதமாக பேசிக் கொண்டார்கள்.

திவ்யாவின் வீட்டில்…

அரிவாள் முனையில் நின்று கொண்டு இருந்தான் சிவா. திவ்யாவின் வீட்டில் நிறைய மனிதர்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கே ஒரு சிறிய பிரச்சனை கை கலப்பு என்று தொடங்கியவுடன், அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். திவ்யாவின் அப்பா கையில் அருவாளுடன் சிவாவை பார்த்து மிரட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்களில் ஒருவர், “யார் மாமா இவன்.. நம்ம வீட்டுக்குள்ள வந்து ஏதாவது பிரச்சனை பண்றானா..?? சொல்லுங்க, ஒரே போடா போட்டு செஞ்சு விட்டுருவோம்.” என்று கையில் ஒரு அரிவாள் ஐ தேடி எடுத்துப் பிடித்தபடி அவரைப் பார்த்து கேட்டார். அதனால் அங்கே இருந்த மற்ற ஆண் மகன்களும் ஆங்காங்கே இருந்த அரிவாள் கத்தி என தங்களுக்கு கிடைத்த அனைத்தையும் எடுத்து கொண்டு வந்து சிவாவைை சூழ்ந்தனர்.

“ஆமா மாப்பிள்ளை என் பொண்ணுக்கு நான் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் வச்சிருக்கேன். இந்த பரதேசி நாயி எங்கிருந்து வந்தான்னு தெரியல என் பொண்ணு மனச கெடுத்து அவளை இங்க இருந்து கூட்டிட்டு போகணும்னு பார்க்கிறான். இவன உயிரோடவே விடக்கூடாது மாப்பிள்ளை. இவன் இருக்கிற வரைக்கும் என்னோட பொண்ணு கல்யாணத்தை நடக்க விட மாட்டான்.” என்று சொல்லிவிட்டு சிவாவை வெட்டுவதற்காக சீறி பாய்ந்தார்.

அதனால் அங்கே இருந்த மற்றவர்களும் கையில் ஆயுதங்களுடன் சிவாவை கொல்வதற்காக துரத்தினார்கள். தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக திவ்யாவின் வீட்டிற்குள்ளே சுற்றி சுற்றி ஓடிய சிவா, பின் வாசலின் சுவற்றின் வழியாக ஏரி வெளியே குதித்து தெருவில் ஓடி வந்து கொண்டு இருந்தான். தன்னுடைய சொந்த பந்தங்களின் பின்னே ஓடி வந்தத திவ்யா, “ஐயோ அவன விட்ருங்க. அவன எதுவும் பண்ணிடாதீங்க. நீங்க விட்டிருந்தா, அவனே இங்க இருந்து அமைதியா போயிருப்பான். ஏன் இப்படி நீங்களே பிரச்சனையை வளர்க்கிறீங்க..?? டேய் சிவா என்ன பத்தி யோசிக்காத. நான் உன்னை இங்க வர சொல்லி பெரிய தப்பு பண்ணிட்டேன் டா. இங்க இருந்து எப்படியாவது தப்பிச்சு போயிடு. திருப்பி வந்துடாத. நீ உயிரோட இருந்தாலே எனக்கு போதும்.” என்று கத்தியபடி மூச்சு வாங்க அவர்களின் பின்னே அவளும் ஓடி வந்தாள். 

சிவா இவர்களை எதிர்த்து சண்டையிட வேண்டும் என்று நினைத்தால் இந்த 10 பேர் எல்லாம் அவனுக்கு சாதாரண விஷயம் தான். இருப்பினும், அவர்கள் திவ்யாவின் சொந்தக்காரர்கள் என்பதால் அவன் பதிலுக்கு அவர்களிடம் சண்டையிட விரும்பவில்லை. இன்னும் திவ்யாவுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்ததால் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓடி கொண்டு இருந்தான் சிவா.

சிவா ஒரு ரோட்டில் வேகமாக ஓடி வந்து கொண்டு இருக்க, அப்போது அவன் எதிரே நான்கு ஐந்து விலை உயர்ந்த கார்கள் வரிசையாக வேகமாக வந்து கொண்டு இருந்தது. அதை பார்த்த உடனேயே வருவது யார் என்று புரிந்து கொண்ட சிவா சற்று நிம்மதி அடைந்தவன், அந்த கார் ஐ நோக்கி இன்னும் வேகமாக ஓட தொடங்கினான். சிவா வேகமாக ஓடி வருவதையும், அவன் பின்னே ஆயுதங்களுடன் பலர் அவனை துரத்தி வருவதையும், கண்ட அந்த காரில் வந்தவர்கள்” அவனை சுற்றி பாதுகாப்பாக வந்து தங்களுடைய கார்களை நிறுத்தினர்.

சிவாவின் பின்னே அவனை துரத்திக் கொண்டு வந்த திவ்யாவின் சொந்தக்காரர்கள் அந்த காட்சியை ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சி போல வாயை பிளந்து கொண்டு பார்த்தபடி அப்படியே நின்று விட்டார்கள். சிவாவிற்கு இத்தனை பெரிய செல்வாக்கு இருக்கும் என்று அவர்கள் சத்தியமாக எதிர்பார்த்து இருக்கவில்லை. அங்கே முன்னே நின்ற கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரில் இருந்து கீழே இறங்கி வந்த கோட் சூட் அணிந்த ஒருவன், “என்ன சிவா பொண்ணு பார்க்க வரும்போது இப்படியா தனியா வருவ..?? பொண்ணு பாக்க வரும்போது பேமிலியோட தானே வரணும். நீ தனியா வந்துட்டேன்னு பாரு நம்ம சம்பந்தி வீட்டுக்காரங்க கோவப்பட்டு கைல அருவாளும் கத்தியுமா உன்ன துரத்திட்டு இருக்காங்க இதெல்லாம் உனக்கு தேவையா டா..??” என்று சிவாவின் தோளில் கை போட்டபடி கூலாக கேட்டான்.

வந்திருப்பது யார் என்று தூரத்தில் இருந்து பார்த்த திவ்யா வேகமாக ஓடி வந்து அவனுடைய காலில் விழுந்து, “நீங்க தான் சார் எங்களை சேர்த்து வைக்கணும்..!!!” என்று சொல்லிவிட்டு அழுது கதறினாள். அவன் வந்த காரைக்கு அருகே இருந்த காரில் இருந்து வெளியே வந்த கருப்பு நிற யூனிபார்ம் அணிந்து இருந்த பாடிகார்டுகள் கையில் துப்பாக்கியுடன் அவர்களுக்கு பாதுகாப்பாக அவர்களை சுற்றி நின்றனர். அவர்களுடைய கையில் இருந்த துப்பாக்கி திவ்யாவின்  சொந்தக்காரர்களை பார்த்து நீட்டியபடி இருந்தது.

– நேசம் தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured