அத்தியாயம் 246…
வைஷாலியை அந்த பாரில் இருந்து வெளியே அழைத்து வந்துவிட்டான் மகேஷ். ஆனால் இப்போது அவளை எங்கே அழைத்து செல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. கண்டிப்பாக அவளை இந்த நிலையில் அழைத்துக் கொண்டு நாராயணன் பேலஸிற்கு செல்லும் தைரியம் அவனுக்கு இல்லை. அவளை வெளியே ஏதேனும் ஒரு ஹோட்டலில் தங்க வைப்பதும் அவளுக்கு பாதுகாப்பாக இருக்காது என்று யோசித்தவன் இறுதியில் அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.
அவனுடைய பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்பவர்கள் என்பதாலும், அவர்களுடைய வேலை முடிந்த பின்பு மகேஷிற்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவர்கள் ஏதோ வெளியூரில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு நாளை தான் வீடு திரும்புவதாகவும் அவனிடம் சொல்லிவிட்டு சென்று சென்று இருந்ததால், வைஷாலியை தன்னுடைய வீட்டிலேயே பத்திரமாக அவள் சுயநினைவிற்கு வரும் வரை வைத்திருக்கலாம் என்று நினைத்தான் மகேஷ்.
அதனால் வைஷாலி உடைய காரில் அவளை ஏற்றிக்கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி கிளம்பியவன், வரும் வழியில் தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு கால் செய்து அவனை வரவழைத்து தன்னுடைய பைக் சாவியை அவனிடம் கொடுத்து அதை தன் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை சொல்லி அதை கொண்டு வந்து தன்னுடைய வீட்டில் நிறுத்தும்படி சொல்லிவிட்டு சென்றான்.
இன்னமும் தன் விஷ்ணுவுடன் எங்கேயோ சென்று கொண்டு இருப்பதாக நம்பிக் கொண்டு இருந்த வைஷாலி மகேஷை பார்த்து விஷ்ணு விஷ்ணு என்று சொல்லி புலம்பி கொண்டு இருந்தாள். இவளை எப்படியாவது யாருடைய கண்களிலும் படாமல் பத்திரமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டால் போதும் என்று நினைத்த மகேஷ் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
சில நிமிட பயணத்திற்கு பின்பு ஒரு வழியாக வைஷாலியுடன் தன்னுடைய வீட்டிற்கு வந்த மகேஷ் அவளுடைய முகத்தில் அவள் அணிந்து இருந்த ஷால் ஐ போட்டு அவளுடைய முகத்தை யாரும் பார்த்திடாத வண்ணம் பத்திரமாக அவளை தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு சென்றான். இன்னும் தான் விஷ்ணுவுடன் தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்த வைஷாலி; தான் அதிகமாக குடித்து இருப்பதால் தன்னை அங்கே வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதால் விஷ்ணு அவனுடைய நண்பன் யாரோ ஒருவரின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் போல என்று நினைத்துக் கொண்டவள், “தேங்க்ஸ் மாமா. ஐ லவ் யூ சோ மச். எப்பயுமே நீ என்ன பத்தி யோசிக்கவே மாட்டேங்குறேன்னு நெனச்சு நான் எவ்ளோ பீல் பண்ணி இருக்கேன் தெரியுமா..!! ஆனா ஒன் டே ல நீ ரொம்ப மாறிட்ட. என்ன ரொம்ப கேர் பண்ணி நல்லா பாத்துக்கிற.
இத தான்.. நீ இப்படி தான் இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். யூ ஆர் சோ ஸ்வீட். இனிமே அந்த ஷாலினிய பத்தி எல்லாம் யோசிக்காத. நான் உன்ன பத்திரமா பாத்துப்பேன். இனிமே எனக்கு நீ. உனக்கு நான். நமக்கு வேற யாரும் வேண்டாம். இன்னைக்கு கோவத்துல வருண் மாமா என அடிச்சுட்டாரு தெரியுமா..??? இப்ப கூட எனக்கு வலிக்குது.” என்று மகேஷின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதபடியே புலம்ப தொடங்கினாள். 😭 😭 😭
வைஷாலியை அப்படி பார்ப்பதற்கே மகேஷுக்கு மிகவும் பாவமாக இருந்தது. தானாக மகேஷின் சட்டையை இழுத்து அதில் தன்னுடைய கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டாள் வைஷாலி. “நீ ரொம்ப டென்ச்டு ஆ இருக்க. கண்டதை யோசிச்சு ஃபீல் பண்ணாத. போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நீ நார்மல் ஆனதுக்கு அப்புறமா நான் உன்னை கொண்டு போய் உன்னோட வீட்டில விடுறேன்.” என்று சொன்ன மகேஷ் அவளை கை தாங்கலாக தன்னுடைய பெட்ரூமிற்கு அழைத்து சென்று அவளை தன்னுடைய கட்டிலில் படுக்க வைக்க முயன்றான்.
சிறிய வயதில் இருந்து தான் எதற்காக காத்திருந்தோமோ அந்த நாள் இன்று வந்து இருக்கும்போது அதை நினைத்து மிகுந்த்த மகிழ்ச்சியிலும், தான் இத்தனை நாள் காத்திருப்பிற்கு பின் தன்னுடைய விஷ்ணு மாமா தனக்கே கிடைத்துவிட்ட வெற்றிக் களிப்பில் இருந்த வைஷாலி; தனக்கு இருந்த போதையிலும் காதல் மயக்கத்திலும் கிறங்கிப் போய்க் கிடந்தவள்; மகேஷ் அவளை பெட்டில் படுக்கச் சொன்னதை, விஷ்ணு சொன்னதாக அவளை நினைத்துக் கொண்டு அவனை காதலுடன் பார்த்தவள், அவனையும் தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தபடி அந்த பெட்டில் விழுந்தாள். 😍 🥰
வைஷாலியின் மீது விழுந்த மகேஷ் விழி விரிய அவளை பார்த்தான். 👀 அவனுடைய கழுத்தில் தன்னுடைய கைகளைய மாலையாக போட்ட வைஷாலி காதல் நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்தவள், சட்டென்று அவனுடைய இதழில் தன்னுடைய இதழை பொருத்தி.. அவனுள் தன்னை தொலைக்கத் தொடங்கினாள். 😍 😗 😘 🥰
மகேஷ் ஐ விஷ்ணு என்று நினைத்துக் கொண்டு இருந்த வைஷாலி காதல்கலந் போதை மயக்கத்தில் அவனை தனதாக்கி கொள்ளும் ஆர்வத்தில் இருந்தாள். 😍 அவளுடைய இந்த திடீர் செய்கைகளால் அதிர்ச்சியில் இருந்தான் மகேஷ். 😨 இவள் தன் மீது பொழியும் இந்த ஆசை முத்தங்கள் அனைத்தும் தனக்கானதே இல்லை என்று அவனுக்கு நன்றாக தெரியும் போது, அதை எப்படி அவனால் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளள முடியும்..?? அதனால் அவனுடைய மனசாட்சி அவனை செருப்பால் அடித்து இது தவறு என்று அவனிடம் சொல்லிக் கொண்டே இருக்க, என்ன தான் அவன் வைஷாலியை காதலித்தாலும் வேறு ஒருவன் என்று நினைத்து அவள் தன்னிடம் நெருங்கும் போது அந்த தருணத்தை தான் பயன்படுத்திக் கொண்டால் தன்னை விட கேவலமானவன் யாரும் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள் என்று நினைத்த மகேஷ்; அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினான்.
ஒவ்வொரு முறையும் மகேஷ் அவளிடம் இருந்து விலக முயற்சிக்கும்போதும் அது விஷ்ணு என்று நினைத்த வைஷாலி, எங்கே அவனை தான் இப்போது விட்டுவிட்டால் அவன் மொத்தமாக ஷாலினியிடம் சென்று விட்டு தனக்கு மீண்டும் கிடைக்காமல் போய்விடுவானோ, என்று நினைத்து பயந்தவள்; அவனை இன்னும் தன்னுள் இருக்கி புதைத்துக் கொள்ள முயன்றாள். தன்மீது இருந்த மகேஷ் ஐ கீழே தள்ளி அவன் மீது படர்ந்த வைஷாலி, அவனை தன்னுடைய முத்த மழையில் நினைத்து, மோக கடலில் ஆழ்த்த முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தாள். 😍 😘
என்ன தான் மகேஷிற்குள் இருக்கும் நல்லவன் அவனை வைஷாலி இடம் இருந்து விலகச் சொன்னாலும், வைஷாலி நடத்தும் காதல் யுத்தத்தில் அவனுடைய ஆண்மை வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது. ☺️ 😪 🥵
அப்போது அவனுடைய மனதில் வைஷாலி அவனிடம், “வருண் மாமா நாளைக்கு என்னை அமெரிக்கா அனுப்பி வைக்கப் போறாரு. நான் அங்க போயிட்டா, என்னால திரும்பி இந்தியாவுக்கு வர முடியுமான்னு கூட தெரியல.” என்று சொன்னது மட்டும் தான் மீண்டும் மீண்டும் ஓடி கொண்டே இருந்தது. வைஷாலியை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவளை தனது கனவு தேவதையாக நினைத்து அவளுடன் வாழ்வது தான் தன்னுடைய வாழ்க்கை என்று இருந்தவன் மகேஷ்.
அவனுக்கு இப்போது வைஷாலியை நேரில் பார்த்து அவளுடன் தனக்கு பேசி பழக்க ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் இது கடவுள் தனக்கு கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவும் அவளை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பல நாள் அவன் கனவு கண்டு இருக்கிறான். இப்போது கிடைத்து இருக்கும் இந்த வாய்ப்பும் அவனுக்கு கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பாக தான் தோன்றியது.
ஒரு வேளை இப்போது வைஷாலியின் வற்புறுத்தலால் தான் அவளுடன் இணைந்து விட்டால் இதையே காரணமாக வைத்து, அவளுடைய மனதில் இருக்கும் விஷ்ணுவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டு தான் அந்த இடத்திற்கு சென்று வைஷாலியை திருமணம் செய்து கொள்ள கூட ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தவனுக்கு இந்த வாய்ப்பையும், வைஷாலியையும், நழுவ விட மன இல்லை.
இது தவறாகவே இருந்தாலும் அவன் இந்த தவறை செய்தால் வைஷாலி தன்னுடையவள் ஆகிவிடுவாள் என்றால், அவள் அமெரிக்கா செல்லாமல் தன்னுடனே வாழ சம்மதிப்பாள் என்றால், தான் இந்த தவறை தெரிந்தே வைஷாலிக்காக செய்தால் கூட பரவாயில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டான் மகேஷ். இதுவரை வைஷாலி தனக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறாள் என்று நினைத்து அவனுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை எல்லாம் அவளுடைய நெருக்கத்தால் தவுடு பொடி ஆனது.
அதனால் ஒரு கட்டத்தில் வைஷாலிக்கு ஈடு கொடுக்க தொடங்கி விட்டான் மகேஷ். அந்த தருணம் அவர்கள் இருவருக்குமே தங்களுடைய வாழ்வில் மிகச் சிறந்த மறக்க முடியாத தருணமாக இருந்தது. விஷ்ணுவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தனக்கு இருந்த பல வருடக் கனவு இன்று நிறைவேற போகிறது என்ற அனைப்பில் இருந்த வைஷாலி, பேரின்பத்தில் திளைத்தாள். ☺️ 🥰 🥵
அவர்களுடைய தேகங்கள் இரண்டும் பின்னிப் பிணைந்து உரசி கொள்ள, அதில் பற்றி எரிந்த காதல் நெருப்பின் 🔥 கதகதப்பில் அவர்கள் இருவரும் ஒரு மோன நிலைக்கு சென்று விட்டனர். 😍 🥰
அவர்களுடைய இதயங்கள் இரண்டும் இதமாய் பரிமாறி கொள்ளப்பட்டனவா என்று தெரியவில்லை. ஆனால் அவளுடைய உயிருள் ஊடுருவியவன், அவளை தனதாக்கிக் கொண்டான். 🥰
இதுவரை அவளிடம் சொல்லப்படாத தன்னுடைய காதலை இம்முறையில் அவளுக்கு தெரியப்படுத்தினான். 💕
மகேஷ் பேசிய காதல் மொழிகள் எல்லாம் வைஷாலிக்கு புரிந்ததோ புரியவில்லையோ.. அவள் தன்னுடைய காதல் வென்றுவிட்டதாக நினைத்து தன்னுடைய உலகில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தாள். 💭 😍 🥰
சித்தார்த்தின் பள்ளியில்…
மதிய உணவு வேலை முடிந்து இருந்தும் ரித்திகா சித்தார்த்தை பார்க்க வராததால் சோகமாக இருந்த சித்தார்த், சுகந்தியிடம் தான் தன்னுடைய ரித்திஅம்மாவை பார்க்காமல் சாப்பிட மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லி அடம் பிடித்துக் கொண்டே இருந்தான். அதனால் வேறு வழி இன்றி ரித்திகாக்கு கால் செய்த சுகந்தி, அவளையே சித்தார்த்திடம் பேசி சமாதானப்படுத்தும் படி சொன்னாள்.
சித்தார்த்: “நீ எங்க போயிட்ட ரித்திஅம்மா…!!! நான் உன்னை ரொம்ப நேரமா தேடினேன் தெரியுமா..?? ஏன் என்கிட்ட சொல்லாம போன..???” என்று சோகமான குரலில் கேட்டான்.
ரித்திகா: திடீர்ன்னு ஷாலினிக்கு உடம்பு சரி இல்லைன்னு எனக்கு கால் வந்துச்சு. அதான் அவளை பாக்குறதுக்காக கிளம்பி வந்துட்டேன் சித்து. சாரி உன்கிட்ட சொல்லாம வந்துட்டேன். அவ்ளோ தான் ஸ்கூல் ஏ முடியப்போகுதுல நீ சாப்பிட்டுட்டு சுகந்தி ஆன்ட்டி கூட வீட்டுக்கு போயிடு. அம்மா நைட் சீக்கிரமா வீட்டுக்கு வந்துடறேன்.
நீ அம்மா இல்லாத டைம்ல தான் இன்னும் குட் பாய் ஆ இருக்கணும். நான் வந்து நீ என்னென்ன பண்ணேன்னு சுகந்தி ஆன்ட்டி கிட்ட கேட்பேன். அவங்க கிட்ட சாப்பிடுறதுக்கெல்லாம் அடம் பிடிக்க கூடாது ஓகேவா…???
சித்தார்த்: “ஓகே மா நான் குட் பாய் ஆ இருப்பேன். அப்புறம் ஷாலி -க்கு சீக்கிரம் சரியாகனும்னு நான் காட் கிட்ட ப்பிரே பண்ணிக்கிறேன். நீயும் சீக்கிரமா வீட்டுக்கு வா.” என்று சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தான்.
மருத்துவமனையில்…
ஷாலினி அட்மிட் செய்யப்பட்டு இருந்த அறையில் இருந்து வெளியே வந்த ஒரு நர்ஸ் அங்கே இருந்தவர்களிடம் ஷாலினி கண் விழித்து விட்டதாக சொன்னாள். அதைக் கேட்ட உடன் விஷ்ணு வேகமாக அவளை உள்ளே சென்று பார்ப்பதற்காக எழுந்தான். ரித்திகாவும் அவளுடைய பெற்றோர்களும் விஷ்ணுவின் தவிப்பை புரிந்து கொண்டு முதலில் அவனே சென்று ஷாலினியை பார்க்கட்டும் என்று விட்டுவிட்டனர்.
திக் திக் இதயத்துடன் ஷாலினியின் அறைக்குள் வந்தான் விஷ்ணு. ❤️ அவனை கண்டவுடன் தன்னுடைய முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க் ஐ நீக்கும்படி நர்சிடம் சைகை செய்தாள் ஷாலினி. அதனால் அந்த நர்ஸ் ஷாலினியின் முகத்தில் இருக்கும் ஆக்சிஜன் மாஸ்க் ஐ நீக்கிவிட, விஷ்ணுவை பார்த்து லேசாக புன்னகைத்தாள் ஷாலினி.
அவள் அருகே சென்று மண்டியிட்டு தரையில் அமர்ந்த விஷ்ணு, “எப்படி டி இந்த டைம்லயும் உன்னால சிரிக்க முடியுது…???” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான். 💔 “அதான் நீ இங்க வந்துட்டியே… இதுக்கு மேல எனக்கு எதுவும் ஆகாது. நீ என்ன பாத்துக்க மாட்டியா..???” என்று பேச முடியாமல் கஷ்டப்பட்டு தன்னுடைய வாயைத் திறந்து பேசினாள். ஷாலினியின் கட்டுப்போட்டு இருந்த கையின் மீது மெதுவாக தன்னுடைய கையை வைத்த விஷ்ணு, “நான் உன்ன நல்லா பார்த்துப்பேன். யாருக்காகவும், எதுக்காகவும், உன்ன விட்டுட்டு போக மாட்டேன். ஐ ப்ராமிஸ்.” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் சொன்னான்.
அவனை காதலுடன் பார்த்த ஷாலினி, “உண்மையை சொல்லு டா எனக்கு இப்படி ஆன உடனே நமக்கு ரூட் கியர் ஆயிடுச்சு. இனிமே அந்த உன் அத்தை பொண்ணு வைஷாலிய கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா இருக்கலாம்னு தானே நினைச்ச…!!! நான் தான் உன் ஆசையில மண்ணள்ளி போட்டுட்டு சரியாகி வந்துட்டேன். அப்படி தானே…!!! உன் தலையில இந்த ஷாலினிய கல்யாணம் பண்ணிக்கிட்டு டெய்லியும் அவகிட்ட டார்ச்சர் அனுபவிச்சு சாகணும்னு எழுதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்..???” என்று கிண்டலாக கேட்டாள்.
அவள் பேசியதை கேட்டு கடுப்பான விஷ்ணு, “நீ என்ன வேணா சொல்லு. ஆனா என்னையும், அவளையும், மட்டும் சேத்து வைச்சு பேசாத. உனக்கு இப்படி ஆனதுக்கு அவ தான் காரணம். நானே ஏற்கனவே அவ மேல கொலை வெறியில இருக்கேன். ரித்திகா அண்ணி மட்டும் என்ன தடுக்கலைனா, இந்நேரம் அவளை கொன்னு போட்டுட்டு நான் ஜெயிலுக்கு போய் இருப்பேன். ச்சீ கருமம். மனுஷ ஜென்மமே இல்ல அவ. அவ பேர கேட்டாலே எனக்கு இரிடேட் ஆகுது.” என்று கோபத்தில் சொல்லி கொண்டு இருந்தான்.
விஷ்ணு அவளிடம் உள்ளே வந்து பேசும் வரை தனக்கு நடந்தது ஆக்சிடென்ட் தான் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி. ஆனால் இப்போது தான் அது திட்டமிட்ட கொலை முயற்சி என்றும், அதை ரவியை வைத்து செய்ய நினைத்தது வைஷாலி என்றும் ஷாலினிக்கு தெரிய வந்தது.
பிரவீனின் அலுவலகத்தில்….
பிஸியாக தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த பிரவீனுக்கு திடீரென்று லக்ஷனாவை பற்றிய ஞாபகம் வந்தது. அதனால் இன்னும் அவள் ஏன் வீட்டிற்கு வரவில்லை..?? என்று அவளுடைய அம்மாவிற்கு கால் செய்து கேட்டான். அவன் பேசியதை கேட்டு குழம்பிய லக்ஷனாவின் அம்மா மங்கை, “இல்லையே மாப்பிள்ளை… அவ இங்க வரல. நானே நேத்துல இருந்து உங்க ரெண்டு பேரையும் மறு வீட்டுக்கு வந்து எப்ப அழைக்கிறதுன்னு அவகிட்ட கால் பண்ணி கேட்கலாம்ன்னு கால் பண்ணிக்கிட்டே இருக்கேன். காலும் போகுது. ஆனா அவ எடுக்க மாட்டேங்கற. நீங்க ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போனதுக்கு அப்புறமா அவளை என்கிட்ட பேச சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு அந்த காலை கட் செய்து விட்டாள்.
“அடியே லக்ஷனா நீ உன்னோட வீட்டுக்கும் போகலைன்னா அப்ப எங்க தான் டி போய் தொலைஞ்ச..!!! மொத்தமா என்கிட்ட இருந்து தப்பிச்சு போயிடலாம்னு கணக்கு போடுறியா..??? நடக்காது டி. நீ என்ன நெனச்சாலும், என்ன பண்ணாலும், என்கிட்ட இருந்து உன்னால தப்பிச்சு போகவே முடியாது.
நீ வேணா பாரு… நீ எங்க போய் ஒளிஞ்சிருந்தாலும், இன்னும் 24 ஹார்ஸில உன்ன கண்டுபிடிச்சு என் வீட்டுக்கு உன்னை தூக்கிட்டு போறேன். இந்த பிரவீன நீ ரொம்ப சாதாரணமா நினைச்சு தப்பு பண்ணிட்ட. நீ பண்ற எல்லா தப்புக்கும் உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு. வெயிட் ஃபார் மீ மை லவ். ஐ ஆம் கம்மிங்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் வில்லத்தனமாக சத்தமாக புன்னகைத்தான். 😁 😁 😁
அடுத்த நாள் காலை 5 மணி….
மகேஷின் வீட்டில்..
மகேஷின் கட்டிலில் அரைகுறை ஆடைகளுடன் ஒரு போர்வையை போர்த்தி கொண்டு படுத்து இருந்தாள் வைஷாலி. அவள் அருகே படுத்து இருந்தான் மகேஷ். அந்நேரம் போதை தெளிந்து எழுந்து அமர்ந்த வைஷாலி குழப்பத்துடன் தான் இருக்கும் இடத்தையும் தன்னறுகே படுத்து கிடக்கும் மகேஷையும் ஒரு நொடி பார்த்தவளுக்கு நேற்று காலையில் இருந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.
அதை எல்லாம் நினைத்து பார்த்துவிட்டு தன் மீது இருந்த போர்வையை வேகமாக தூக்கி எறிந்தாள் வைஷாலி. தன்னுடைய உடல் இருந்த நிலைமையை பார்த்தவளுக்கு நேற்று நடந்தது அனைத்தும் உண்மை தான் என்று புரிந்தது. அவளுடைய அந்த ஒரு சில அசைவுகளால் தூக்கத்தில் இருந்து கண் விழித்த மகேஷ் குற்ற உணர்ச்சியுடன் அவளை ஓர கண்ணால் பார்த்து கொண்டு இருந்தான்.
தன்னுடைய இரு கைகளையும் அவள் தலையின் மீது வைத்து கொண்டு தன் குடியே முழுகி விட்டதை போல அமைதியாக அமர்ந்து இருந்த வைஷாலி, சில நிமிடங்களுக்கு தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டு இருந்தாள். பின் வேகமாக எழுந்து தன்னுடைய ஆடைகளை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டவள், மகேஷை அழைத்து தன் அருகே அமரும்படி செய்கை செய்தாள். அவள் தன்னை தவறாக மட்டும் இணைத்து விட கூடாது கடவுளே என்று நினைத்து வேண்டி கொண்ட மகேஷ், அமைதியாக வந்து அமர்ந்தான்.
வைஷாலி: நேத்து நடந்தது எல்லாமே எனக்கு ஞாபகம் இல்லைன்னாலும் அரைகுறையா ஞாபகம் இருக்கு. ஐ நோ. இட் வாஸ் மை மிஸ்டேக். நான் தான் விஷ்ணுன்னு நினைச்சு உன்னை டெம்ப்ட் பண்ணி இருக்கேன். எனக்கு தெரியும். பிகினிங்ல நீ இத அவாய்ட் பண்ண தான் ட்ரை பண்ண.
அட் தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி, நீயும் பையன் தானே.. சோ, இட் ஹேபன்ஸ். வாட் எவர்.. இட் இஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட். சோ இதை நம்ப ரெண்டு பேருமே சீரியஸா எடுத்துக்க வேண்டாம். நீயும் இத மறந்திடு. இதுல நான் உன்ன மட்டும் பிலேம் பண்ண விரும்பல. இன் பாக்ட் அந்த பார்ல இருந்து என்ன கூட்டிட்டு வந்து நீ எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணிருக்க. நான் அங்கவே குடிச்சுட்டு விழுந்து கடந்து இருந்தா இன்னும் பெரிய பிராப்ளம் ஆகி இருக்கும்.
இன்னும் விஷ்ணு எனக்கு இல்லைன்றதையே என்னால ஏத்துக்க முடியல இந்த டைம்ல நான் இப்ப எத நெனச்சு பீல் பண்றதுன்னு எனக்கே தெரியல. வருண் மாமா சொன்ன மாதிரி நான் அமெரிக்காவுக்கு போறதே நல்லதுன்னு இப்ப தோணுது. ஐ திங்க் ஐ நீட் எ பிரேக் ஃப்ரம் ஆல் ஆஃப் திஸ் திங்ஸ். ஐ ஷூட் கோ. தேங்க்ஸ் அண்ட் சாரி ஃபார் எவ்ரிதிங் மகேஷ்.” என்றவள் அவனுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல், தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு தன்னுடைய கார் ஐ ஸ்டார் செய்து நாராயணன் பேலஸிற்கு கிளம்பி சென்று விட்டாள்.
- நேசம் தொடரும்…