அத்தியாயம் 241: ரித்திகாவை ஆறுதல் படுத்திய வருண் (பார்ட் 2)
வருணிற்கு நிஜமாகவே அவனுடைய கால் மிகவும் வலித்தது. அதனால், “ஆமா.” என்று மெல்லிய குரலில் சொன்னான். அதைக் கேட்டு எழுந்து அமர்ந்த ரித்திகா, “இங்க பாலிதீன் கவர் ஏதாவது பெருசா கிடைக்குமா..??” என்று வருனிடம் கேட்டாள். ”இப்ப அது எதுக்கு டி உனக்கு..??” என்று சலிப்பான குரலில் கேட்டான் வருண். அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இன்டர் காமை எடுத்து கிச்சனிற்கு கால் செய்த ரித்திகா, எழுந்து சென்று எதையோ போனில் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தாள். “இப்ப என்ன பண்ண போறா இவ..?? ஒரு வேளை நான் உயிரோட இருந்தா தானே எனக்கு இந்த கால் வலி எல்லாம் வரப்போகுதுன்னு என் மூஞ்சி மேல பாலித்தீன் கவர வச்சு என்ன அழுத்தி கொலை பண்ண ட்ரை பண்ண போறாளோ..??” என்று நினைத்த வருண், “இவ சூனியக்காரி தானே.. செஞ்சாலும் செய்வா.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இப்படி வருண் எதையோ யோசித்து கொண்டு இருக்க அவர்களுடைய அறையின் காலிங் பெல்லை யாரோ அழுத்தினார்கள். வேகமாக சென்று தங்கள் அறையின் கதவை திறந்த ரித்திகா; ஒருவர் கொண்டு வந்து கொடுத்த ட்ரேயை வாங்கிக்கொண்டு உள்ளே வந்துவிட்டு, மீண்டும் சென்று தங்களுடைய அறையின் கதவை சாற்றி விட்டு வந்தாள்.
குழப்பமான முகத்துடன் அவளை பார்த்து கொண்டு இருந்தான்் வருண். 🙄 அந்த ட்ரேவை கொண்டு வந்து கட்டிலில் வைத்த ரித்திகா, தான் அங்கே வேலை செய்பவரிடம் கொண்டு வரச் சொன்ன பிளாஸ்டிக் கவரை எடுத்து விரித்தவள் வருனிடம், “உங்க காலை மேல தூக்குங்க.” என்றாள்.
முதலில் எதுக்கு..?? என்று அவளை குறு.. குறுவென்று பார்த்தபடி கேட்டவன், இப்ப தூக்கு போறீங்களா இல்லையா என்பது போல அவள் தன்னை முறைத்து பார்த்தவுடன்; அமைதியாக தன்னுடைய கால்களை மேலே தூக்கினான். அங்கு அந்த பாலித்தீன் கவரிங் விரித்த ரித்திகா, அவனுடைய காலை அதில் வைத்தாள். பின் தான் வருணிற்கு ஸ்பெஷலாக ரெடி செய்ய சொல்லி இருந்த சூடாக இருந்த மசாஜ் ஆயிலை தன்னுடைய கைகளில் எடுத்து அதை வருணின் கால் முட்டியில் இருந்து விரல்கள் வரை தேய்த்து அவனுக்கு மசாஜ் செய்ய தொடங்கினாள் ரித்திகா.
ரித்திகா தன்னுடைய கால்களை தயக்கமின்றி தொட்டு தனக்கு இத்தனை சிரத்தையுடன் மசாஜ் செய்வாள் என்று பெரிதும் எதிர்பார்த்து இருக்காத வருண், அவளை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தான். இது அவனுக்கு சித்தார்த் பிறக்கும்போது ஜான்வி கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் அவளுடைய கால் வீங்கி இருக்கும்போது எல்லாம் வருண் அவளுக்கு மசாஜ் செய்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அதை நினைத்துப் பார்த்தவனுக்கு ஆனால் ஜான்வி தனக்கு உடல்நிலை சரி இல்லாத போது கூட இப்படி எல்லாம் தனக்கு ஒருபோதும் செய்ததில்லை என்று தோன்றியது. அதனால் தன்னை அறியாமல் ரித்திகாவையும், ஜான்வியையும், ஒப்பிட்டு பார்த்த வருணிற்கு ரித்திகா ஒரு புது காவியமாக ஒரு சிறந்த ஓவியமாக தெரிந்தாள்.
இப்படியே ரித்திகா செய்த மசாஜ் இல் தன்னை மறந்து அவளைப் பற்றி யோசித்து பூரித்துப்போன வருண், தன்னை அறியாமல் தூங்கி விட . வருண் தூங்கிவிட்டான் என்று உறுதி செய்த ரித்திகா, அந்த ட்ரேவை எடுத்துக்கொண்டு போய் ஒரு ஓரமாக வைத்துவிட்டு கை கழுவி விட்டு வந்து மீண்டும் படுத்தாள். வழக்கம்போல் சில நிமிடங்களிலேயே உறக்கம் அவளை தழுவி கொண்டது. அந்த ஆழ்ந்த நித்திரையில் அவளுக்கு ஒரு கனவு வந்தது.
அந்தக் கனவில்….
இப்போது ரித்திகா அணிந்து இருக்கும் அதே நைட் டிரஸ் இல் அவள் ஜான்வியின் கல்லறையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறாள். அவள் ஏன் இப்போது அங்கே செல்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவளுடைய உள்ளுணர்வு மட்டும் அவளை யாரோ அங்கே அழைப்பதாக சொல்லி கொண்டே இருந்தது. அதனால் அவளுடைய கால்கள் தானாக அங்கே சென்று கொண்டு இருந்தன.
ஜான்வின் கல்லறைக்கு வந்த ரித்திகா, காலையில் அவள் பார்த்த அதே ஜான்வியின் புகைப்படத்தை பார்க்கிறாள். ஆனால் காலையில் அதில் தெரிந்த அழகும் பொலிவும் இப்போது இல்லாமல் அது அவளுக்கு பார்க்க மிகவும் பயங்கரமாகவும், பயமுறுத்தக் கூடியதாகவும் தோன்றியது. அதனால் பயத்துடன் அவள் வருண் செய்ததை போல ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து அதை பற்ற வைத்து அங்கே இருந்த ஸ்டாண்டில் வைக்கிறாள்.
அவள் அதை செய்துவிட்டு திரும்பும் போது யாரோ அவளுடைய கழுத்தை பிடித்து பலமாக நெறிப்பதைப் போன்ற உணர்வு அவளுக்கு ஏற்படுகிறது. அதனால் அந்த கையிடம் இருந்து தன்னை விடுவிக்க போராடும் ரித்திகா ; தன்னை அறியாமல் “முருகா… முருகா…” என்று முணுமுணுத்தவள், அந்த கையிடம் இருந்து தன்னை விடுவிக்க போராடினாள். திடீரென்று அந்த கைகள் அவளை விட்டுவிட அங்கு இருந்து வேகமாக வீட்டிற்குள்ளே ஓடி வந்த ரித்திகாவை, மீண்டும் ஒரு வெள்ளை நிற உருவம் “பளார்” என்று அவளுடைய கன்னத்தில் அறைகிறது.
அது கனவு தான் என்றாலும் அந்த வலியை அப்பட்டமாக உணர்ந்த ரித்திகா, “அம்மா” என்று கத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். அவள் கத்தியதில் பதட்டம் அடைந்த வருண், அவனும் எழுந்து அமர்ந்தான். ரித்திகாவின் உடல் பயத்தில் வியர்த்துப் போய் இருந்தது. அவளுடைய இதயத்தின் வேகமான துடிப்பு அந்த அறையின் நிசப்தத்தால் வருணிற்கு தெளிவாக கேட்டது. ❤️ இது போன்று வருணிக்கும் இரவு நேரத்தில் கெட்ட கனவு கண்டு எழுந்து அமர்வதெல்லாம் பழகிப்போன ஒன்று தான். ஆனால் தன் முன்னே இடியே விழுந்தாலும் எழுந்திருக்காமல் கும்பகர்ணனுக்கு தங்கச்சியை போல் நன்றாக உறங்கும் ரித்திகா, இப்படி பயத்தில் எழுந்து அமர்வதை அவன் இப்போதுதான் முதன்முதலில் காண்கிறான் என்பதால், அவளுடைய முகத்தில் இருக்கும் பயத்தை வைத்தே அவளுக்கு இது போன்ற கனவு இப்போது தான் முதல் முறையாக வருகிறது போல என்று நினைத்துக் கொண்டவன்; “என்ன பேட் ட்ரீமா..??” என்று சாதாரணமான குரலில் கேட்டான் வருண்.
ஆமா என்று மூச்சு வாங்க சொன்ன ரித்திகா, தன் கனவில் அவள் கண்ட காட்சிகள் அனைத்தையும் வருனிடம் அப்படியே சொன்னாள். தன் அருகே இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்த வருண்; காலையில் அவர்கள் ஜான்வியின் கல்லறைக்கு சென்ற போதுகாலையில் அவர்கள் ஜான்வியின் கல்லறைக்கு சென்ற போது ஜான்வின் அம்மா சோனியா அவர்களிடம், “நம்ப இங்க இருந்து சீக்கிரம் போகணும்” என்றும், “இனி இங்க அடிக்கடி வராதீங்க.” என்றும் சொல்லிவிட்டு சென்றது அவனுக்கு ஞாபகம் வர, ஒரு வேளை அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில் யோசித்துப் பார்த்தான் வருண்.
அவன் அப்படி யோசித்த கணமே, “சேச்சா… அப்படியெல்லாம் இருக்காது. என்ன நீ இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்ட..!!!” என்று தன்னிடம் தானே சொல்லிக் கொண்டவன், திரும்பி ரித்திகாவின் முகத்தை பார்த்தான். அவளுடைய முகத்தை பார்த்தவுடனேயே அவன் கண்கள் அதிர்ச்சியில் பெரியதாக விரிந்தது. 🙄 👀
இதற்கு முன் வருண் ரித்திகாவின் கன்னத்தில் அறைந்ததால், அதன் தழும்பு அவளுடைய கன்னத்தில் லேசாக இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் அவள் மேக்கப் போட மாட்டாள் என்பதால் வெகு நேரமாக அவளுடைய முகத்தை அவன் ஏற்கனவே நன்றாக பார்த்திருந்தான். அந்த தழும்பு திடீரென்று பார்த்தால் லேசாக தெரியும் அளவிற்கு மட்டுமே தான் இருந்தது. ஆனால் இப்போது ரித்திகா, அந்த கனவினால் பயந்து எழுந்து அமர்ந்த பின் அவள் தன்னை யாரோ அறைந்து விட்டார்கள் என்று சொன்னாள் . அவள் சொன்னதைப் போல இப்போது அவளை யாரோ பலமாக அடித்ததைப் போல், அவளுடைய கன்னத்தில் பெரிய ஐவிரல் பதிந்த தழும்பு ஏற்பட்டு இருந்தது.
இதைப் பற்றி தான் அவளிடம் சொன்னால் அவள் பயந்து விடுவாள் என்று நினைத்த வருண், உண்மையில் இது உண்மையாக நடந்து இருக்கிறதா.. இல்லை தான் தான் ஏதேனும் கற்பனை செய்கிறோமா.. என்று பலவாறு யோசித்தவன்; முதலில் ரித்திகாவை சமாதானப்படுத்தி தூங்கவைக்க நினைத்து, “இது வெறும் கனவு தான் ஒன்னும் இல்ல நீ படுத்து தூங்கு. மத்தது எல்லாம் காலையில பேசிக்கலாம்.” என்று சொன்ன வருண் அவளை படுக்க, வைத்து தானும் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு அவளுடன் இணைந்து படுத்து கொண்டான். 🤗
எப்போதையும் விட இன்று வருணை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்ட ரித்திகா, அவனுள் தன்னை புதைத்துக் கொண்டு தன்னவனின் அருகாமையும் அவனுடைய தேகம் தன்னுடைய உடலுக்குள் பரப்பிக் கொண்டு இருக்கும் சூட்டின் ஆளுமையால் நிம்மதியாக உணர்ந்தவள், மீண்டும் அனைத்தையும் மறைத்துவிட்டு தூங்க தொடங்கினாள். 😍 🤗
வருண் அவளை சமாதானப்படுத்தி தூங்க வைத்து விட்டான். ஆனால் அவனை அவனால் சமாதானப்படுத்த முடியவில்லை. ரித்திகாக்கு நடந்த இந்த சம்பவம் அவனுடைய மனதை உருத்தி கொண்டே இருந்தது. அதனால் தன்னுடைய அம்மாவிடம் மறக்காமல் இது பற்றி காலையில் பேசிய ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்ட வருண், தன் மனைவி ரித்திகாவை இறுக்கமாக அணைத்து கொண்டு மீண்டும் உறங்கக தொடங்கினான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)