Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 242

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 242

by Thenaruvi Tamil Novels
28 views

அத்தியாயம் 242: ரத்த வெள்ளத்தில் ஷாலினி (பார்ட் 1)


வருணின் அறையில்… 

விடியற்காலை வேளையிலே வருண், ரித்திகாவும், ஒருவரை ஒருவர் அணைத்தபடி தங்களுடைய போர்வைக்குள் தஞ்சம் புகுந்து இருந்தனர். 😍 🤗 அப்போது திடீரென்று அவர்களுடைய அறையின் குளுமை மிகவும் அதிவேகமாக அதிகரித்தது. வருண் போர்த்தி இருந்த அந்த உயர்தர பெரிய போர்வையை தாண்டி கூட அவனால் அந்த  குழுமையை உணர முடிந்தது. 🌬️ 💨 அதனால் திடீர் என்று ஏன் இவ்வளவு  குளுமையாக  இருக்கிறது என்று யோசித்த வருண், அண்ணாந்து தனக்கு மேலே இருந்த ஏசியின் அளவைப் பார்த்தான். 

ஏசி 16 -ல் இருந்தது. வருணிக்கும் சரி, ரித்திகா விற்கும் சரி, மிதமான குளிர் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்பதால் அவன் எப்போதும் 18 அல்லது அதற்கு மேல் வைத்து கூலிங் ஆணைப்பின் ஏசியை சில சமயங்களில் ஆப் செய்து விட்டு கூட பேனை போட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். அப்படி இருக்க இப்போது ஏசி எப்படி தானாக பதினாறுக்கு சென்றது என்று நினைத்து குழம்பிய வருண், எழுந்து ஏசியின் ரிமோட்டை தேடி கண்டுபிடித்து அதை அதிகப்படுத்தி வைத்துவிட்டு வந்து மீண்டும் படுத்தான்.

ஆனால் அவனுக்கு இம்முறை தூக்கம் வரவில்லை. ஏனோ இந்த விதி கூட தாங்கள் சரியாக தூங்க கூடாது என்று சதி செய்வதாக அவனுக்கு தோன்றியது. அதனால் வெகுநேரமாக தூக்கம் இன்றி தவித்த வருண், நேரத்தை பார்த்தான். அப்போது மணி விடியற்காலை 4:43 ஆக இருந்தது. அதனால் இதற்கு மேலும் தன்னால் தூங்க முடியாது என்று நினைத்த வருண் வேறு வழி இன்றி எழுந்து ஜாகிங் சென்று விட்டான். 

வருண் சென்றவுடன் சிறிது நேரத்தில் அசந்து தூங்கிக் கொண்டு இருந்த ரித்திகாவின் அருகே திடீரென்று ஒரு வெள்ளை உருவம் தோன்றியது. சில நொடிகளில் அந்த உருவம் தானாக ஒரு வெள்ளை கவுன் அணிந்த பெண்ணாக மாறியது. அந்த இளம் பெண் வருண் படுத்து இருந்த இடத்தில் வந்து அமர்ந்தவள், ஆத்திரம் நிறைந்த கண்களுடன் ரித்திகாவை எரித்துவிடும் பார்வை பார்த்தாள். 😒 😡🔥 😤 

ஆழ்ந்த உறக்கத்திலும் கூட அந்த பார்வையின் தாக்கத்தால் தொந்தரவு அடைந்த ரித்திகா, வேறு புறமாக திரும்பி படுத்து கொண்டாள். ரித்திகா திருப்பி படுத்தவுடன் அந்த பெண் அவள் அருகே இருந்து ஒரு நொடியில்  சட்டென்று காணாமல் மறைந்து போய்விட்டாள்.

காலைப் பொழுது அழகாக விடிந்தது..

கிச்சனுக்கு சென்ற செண்பகம் அங்கு இருந்தவர்களிடம் பிரேக்ஃபாஸ்ட் சமைப்பதற்கான மெனுவை சொல்லி கொண்டு இருந்தாள். அப்போது அங்கே வந்த வருண் செண்பகத்திடம், “அம்மா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உங்க ரூமுக்கு போய் பேசலாமா..??” என்று கேட்டான். தானே சென்று ஏதாவது பேச வேண்டும் நினைத்தால் கூட எப்போதும் தன்னை அவாய்ட் செய்யும் தன்னுடைய மகன் இப்போது அவனை தன்னை அழைத்து பேச வேண்டும் என்று சொல்வதால் ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்கும் என்று நினைத்து செண்பகம் தான் செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வருனுடன் தன்னுடைய அறைக்கு சென்றாள்.

செண்பகம்: என்ன வருண் ஏதாவது பிரச்சனையா..???

வருண்: பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல மா. ஆனா என் மனச போட்டு ஒன்னு உருத்திகிட்டே இருக்கு. அதான் அத பத்தி உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்.

 செண்பகம்: “நீ முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு.” என்று அவசரமான குரலில் கேட்டாள்.

நேற்று காலை அவன் ஜான்வியின் பெற்றோர்களுடன்  கல்லறைக்கு சென்றதில் இருந்து இரவு ரித்திகாக்கு நடந்தது வரை அனைத்தையும் செண்பகத்திடம் தெளிவாக சொன்னான் வருண். அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செண்பகம், “ஐயையோ… மறுபடியும் இந்த மாதிரி நடக்க ஆரம்பிச்சிருச்சா..???” என்று பயம் கலந்த குரலில் கேட்டாள். 😨

மறுபடியும்ன்னா.. அப்ப ஏற்கனவே இந்த மாதிரி நடந்திருக்கா மா…???” என்று குழப்பமான குரலில் கேட்டான் வருண். 🙄 ஆமாம் என்பது போல் தன்னுடைய தலையை ஆட்டிய செண்பகம், “நீயும் ஜான்வியும் போன கார் ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறமா; நாங்க விஷயம் தெரிஞ்சு சிவாவோட சீக்கிரமா ஹெலிகாப்டர் எல்லாம் அரேஞ்ச் பண்ணி உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆன இடத்துக்கு வந்துட்டோம்.

அப்ப உனக்கும் சித்தார்த்துக்கும் தலையில அடிபட்டு நீங்க ரெண்டு பேருமே சுயநினைவு இல்லாம இருந்தீங்க. அதனால எமர்ஜென்சிக்காக பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்ல உங்களை அட்மிட் பண்ணினோம். அது ரொம்ப சின்ன ஹாஸ்பிடல்னால உன்னையும், சித்தார்த்தையும் , ஒரே வார்டில அட்மிட் பண்ணி பக்கத்து பக்கதுல பெட்ல தான் படுக்க வச்சிருந்தாங்க. 

அப்போ ராப்பகலா நான் உங்க பக்கத்துலயே தான் உட்கார்ந்து இருந்தேன். அப்ப ஒரு நாள் நைட் திடீர்னு நான் கண் முழிச்சு பார்த்தப்போ உங்க பக்கத்துல ஒரு வெள்ளை உருவும் ஒக்காந்து இருந்த மாதிரி இருந்துச்சு. அப்புறம் சில சமயம் திடீர்னு கதவு தானா திறக்கிற மாதிரி, மூடுற மாதிரி.. யாரோ தூரத்தில அழுகிற மாதிரி எல்லாம் சத்தம் கேட்டுச்சு. எனக்கு அதனால ரொம்ப பயமா இருந்துச்சு ஹாஸ்பிடல்ல இந்த மாதிரி காத்து கருப்பு சுத்துறது எல்லாம் நார்மலா நடக்கும் தான். அதனால எனக்கு தெரிஞ்ச ஒரு சாமியாரை அங்க வர வச்சு நீங்க அட்மிட் ஆகி இருந்த ரூம்ல அவர பூஜை பண்ண வச்சு உங்க எல்லாருக்கும் கயிறு வாங்கி உங்க கையில கட்டி விட்டேன். இங்க பாரு இப்ப வரைக்கும் நான் அந்த கயிற கலட்டாம போட்டிருக்கேன். ஆனா நீங்க எல்லாரும் தான் கழட்டிடீங்க.

உனக்கு இதுல நம்பிக்கை இல்லைன்னு நீ சித்தார்த் கைலயும் இருக்குறத கழட்டிவிட்டுட்ட.” என்றவள் தன் கையில் இருந்த ஒரு பழைய கயிறை காட்டினாள். அவள் சொல்லுவதை பொறுமையாக கேட்ட வருண், “நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா அந்த மாதிரி எதுவும் நடக்கலையா மா..??” என்று ஆர்வம் நிறைந்த குரலில் கேட்டான். 

பெருமூச்சு ஒன்றை விட்ட செண்பகம், “அதுக்கப்புறமும் நிறைய நடந்துச்சுடா. அப்போ ஜான்வி பிரக்னண்டா இருக்கான்னு சித்தார்த் ரூம்ல அவனோட கட்டிலுக்கு பக்கத்துல ஒரு பெரிய சைஸ் மரத் தொட்டில் வாங்கி வைத்திருந்தீர்கள்ல… 

சித்தார்த் அப்போ எல்லாம் ரொம்ப பயந்துக்கிட்டே இருப்பான். அதனால அவன் தூங்கிட்டான்னு பாக்குறதுக்காக ஒரு நாள் நடுராத்திரியில நான் அவன் ரூமுக்கு போனேன். சுகந்தி எப்பையும் போல அவன் பக்கத்துல தூக்கிட்டு இருந்தா. ஆனா ஒரே ஒரு சேன்ஜ். பெட்ல படுத்துட்டு இருக்க வேண்டிய சித்தார்த் அந்த மரத் தொட்டிக்குள்ள படுத்துட்டு இருந்தான். நான் அப்பவே சுதந்திய எழுப்பி கேட்டேன். ஆனா அவ நான் அவன அதுக்குள்ள படுக்க வைக்கல. எனக்கு எப்படி அவன் உள்ள போனானே தெரியலன்னு சொன்னா. 

நீயே சொல்லு அவன் அப்போ  ரொம்ப சின்ன பையனா இருந்தான் அவ்வளவு பெரிய மர தொட்டிக்குள்ள அவனே ஏறி உள்ள போய் படுத்து தூங்கிருப்பானா என்ன..?? என்னையும், சுகந்தியையும், தவிர சித்தார்த்த ரூமுக்குள்ள வேற யாரும் போக மாட்டாங்க. எனக்கு அப்பவே அந்த விஷயம் புரிச்சுக்கிட்டே அதனால சித்தார்த்தை தூக்கிட்டு போய் அப்பையில இருந்து என்னோட ரூம்ல படுக்க வச்சிக்கிட்டேன் கொஞ்ச நாளைக்கு. 

ஆனா சித்தார்த் என் கூட இருந்த வரைக்குமே சில சமயம் நடுராத்தில என்னோட ஜன்னல் பக்கத்துல யாரோ ஒருத்தர் நின்னு எங்கள பாக்குற மாதிரியே இருக்கும். சில சமயம் காத்துல ஜான்வி போடுவாளே அந்த பர்ஃப்யூம் அதோட ஸ்மெல்லு கூட காத்துல வர மாதிரி இருக்கும். உங்க ரூம்ல கூட சில சமயம் அப்பப்ப அந்த மாதிரி ஸ்மெல் வந்திருக்கு. இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு நான் அப்பவே அந்த சாமியாருக்கு கால் பண்ணி கேட்டேன் அவரு ஒரு வேளை உங்க மருமகளோட நடமாட்டம் வீட்டுக்குள்ள இருக்கலாம் அதனால ஒரு பூஜை பண்ணா நல்லதுன்னு சொன்னாரு.  

நான் அப்ப கூட இத பத்தி உன்கிட்ட கேட்டன்லடா.. நீ தான் இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைன்னு வேணான்னு சொல்லிட்ட. அதனால கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வந்து நானே எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வந்து வாசல்ல கட்டி வச்சேன். அதையும் ஏதோ கிளீன் பண்றேன்னு யாரோ தூக்கி போட்டாங்க. 

நீ ஜான்வி ஓட கல்லறையை வீட்டுக்குள்ள வைக்கிறேன்னு சொல்லும்போதே நான் இதெல்லாம் வீட்டுக்குள்ள வச்சா சரிப்பட்டு வராது வேணாம்னு சொன்னேன். நீ தான் கேட்கவே இல்லையே… ஒரு மனுஷி என்ன தான் பண்றது..?? நானும் சொல்லி சொல்லி பார்த்தேன். என் பேச்சை தான் யாரும் கேட்கிற மாதிரியே இல்ல. அதனால என்னமோ நடக்கட்டும். ஏதாவது பெருசா பிரச்சனை வந்தா அப்ப பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். 

ஆனா இப்ப நீ சொல்றத பார்த்தா அந்த பெரிய பிரச்சனை ரித்திகாவிற்கு வந்துருவோம்ன்னு எனக்கு பயமா இருக்கு. என்ன தான் இருந்தாலும், ஜான்வி அல்பாய்ஸ்ல செத்துப்போனவ. இன்னைக்கு நீ வேற கல்யாணம் பண்ணி அவ வாழ்ந்த அதே இடத்தில இன்னொருத்தி கூட வாழ்ந்துகிட்டு இருக்க. அவளோட ஆத்மா அதை நினைச்சு கோபப்படலாம். ரித்திகா மேல வெறுப்ப கூட காட்டலாம். 

இங்க பாரு வருண் இப்பையும் சொல்றேன். நமக்கு இல்லாத நீலம் பலமா சொல்லு.. ஏதாச்சு ஒரு தோட்டத்துல ஜான்வி கல்லறையை மாத்திரு. அதைவிட நல்ல விஷயம் முடிஞ்சா அவளோட பாடியை எரிச்சிடு. செத்துப்போனவர்களுக்கு வாழ்ற வீட்டுக்குள்ள சமாதி கட்டி வைப்பதெல்லாம் கொஞ்சம் கூட நல்லதே இல்ல. இப்பயுமே அந்த பக்கம் எல்லாம் போனா ஜான்வி யூஸ் பண்ற பர்ஃபியூம் ஸ்மேல் வருது. நீயும், ரித்திகாவும், வாழ வேண்டியவங்க. செத்துப்போனவளுக்காக வாழ வேண்டிய உங்களுடைய நிம்மதியை நீங்களே கெடுத்துக்காதீங்க.

இந்த ஜான்வி பிரச்சனைக்கு சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவு பண்ணு. சித்தார்த் கூட முன்னாடி எல்லாம் அப்பப்போ யாரோ ஒரு ஆன்ட்டி என்னோட கனவுல வராங்க. அவங்க ஃபேஸ் எனக்கு சரியா தெரியல. அவங்க என்கிட்ட என்னமோ சொல்றாங்க அதுவும் எனக்கு புரியலன்னு  சொல்லிக்கிட்டே இருப்பான். என்னமோ ரித்திகா இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எல்லாம்  நடக்கிற மாதிரி நீ நினைக்கிற. ஆனா இதுக்கு அப்புறம் புதுசா எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கோ.” என்று சொன்னவள் வருணின் பதிலுக்காக  காத்திருந்தாள்.

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured