Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 178

மூர்கனின் காதலி CH 178

by Thenaruvi Tamil Novels
10 views

அத்தியாயம் 178

சௌபர்ணிகாவிடம் “விஷ்வா சீக்கிரம் வந்துருவான். நீங்க அவன நினைச்சு கவலைப்படாதீங்க.” என்று எதை எதையோ சொல்லி மேகா அவளை சமாதானப்படுத்தினாள்.

உடலாலும் மனதாலும் சோர்ந்து போயிருந்த சௌபர்ணிகா மேகாவின் மடியில் படித்துக் கொண்டு “நமக்கு மட்டும் ஏண்டி இப்படி நடக்குது..?? நம்ம நமக்கே தெரியாம யாருக்கோ ஏதோ பெரிய பாவம் செஞ்சிட்டோமோ!” என்று உடைந்த குரலில் சொல்ல, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா. நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க. என்ன நடக்கணும்னு இருக்கோ, அது கண்டிப்பா நடக்கும். எதுனால இப்படி நடக்குது? நம்ம என்ன தப்பு செஞ்சோம்னு யோசிச்சுகிட்டே இருந்தா நமக்கு தான் hurtஆகும்.” என்றாள் மேகா.

“நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா சில சமயம் புத்திக்கு உரைக்கிறத, மனசு ஒத்துக்க மாட்டேங்குதே! என்ன பண்றது..?? எப்போ எது நடந்தாலும், நீ இந்த வீட்டுக்கு வந்ததில இருந்து.. என்னோட பெரிய ஆறுதலே நீதான் மேகா. எல்லாரையும் விட எனக்கு என் தம்பி விஷ்வாவ தான் ரொம்ப பிடிக்கும். But அவன்கிட்ட கூட இப்படி எல்லாம் மனசுவிட்டு நான் பேசுனது இல்ல. நான் உன்னை என் தங்கச்சி மாதிரிதான் நினைக்கிறேன். எது மாறினாலும், நீ மட்டும் மாறிடாத. நம்ம எப்பயும் இப்படியே இருக்கணும். ஓகேவா..??” என்று மேகாவின் மடியில் படித்திருந்த சௌபர்ணிகா அவள் முகத்தை பார்த்து கேட்க, “கண்டிப்பா அக்கா. நானும் உங்கள என் own sisterஆ‌ தான் நினைக்கிறேன். நம்ம எப்பயும் இப்படியேதான் இருப்போம்.” என்ற மேகா சாராவை பார்த்து “அக்காவுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வா. நம்ம எல்லாரும் இங்கயே சாப்பிடலாம்.” என்றாள்.

“ஓகே மேடம்.” என்ற சாரா அணுவுடன் அங்கிருந்து வெளியே சென்று தங்களுக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவுகளை கொண்டு வந்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் சாராவும் அனுவும் வெளியே சென்றுவிட; சௌபர்ணிக்காவும், மேகாவும் அப்படியே படுத்து உறங்கினார்கள். இரவு ஒன்பது மணி அளவில் வீட்டிற்கு வந்த சேரன் அவனது அறையில் சௌபர்ணிகா இல்லாததை கண்டு “எங்க போய் தொலைஞ்சா இவ..??” என்று யோசித்தபடி வெளியே வந்து servant ஒருவனிடம் “சௌபர்ணிகா மேடம் எங்க..??” என்று கேட்டான்.

“சார்.. திடீர்னு கிளம்பி விஷ்வா சார் எங்கயோ வெளிநாட்டுக்கு போய்ட்டாராம். அதனால மேகா மேடமும், சௌபர்ணிகா மேடமும், காலைல இருந்து ரொம்ப சோகமா இருந்தாங்க. அவங்க ரெண்டு பேருமே இப்ப விஷ்வா சார் ரூம்ல தான் இருக்காங்க.” என்று சொல்ல, “ஓஹோ.. அந்தக் கிழவி செத்துப்போன துக்கம் தாங்காம இங்க இருக்க பிடிக்காம அவன் abroad கிளம்பி போயிட்டானா.. எங்க போயிருக்கான்னு தெரியலையே..!!” என்று நினைத்த சேரன் “சரி.. சரி.. நீ போ. நான் பாத்துக்குறேன்.” என்று அந்த servantஇடம் சொல்லிவிட்டு தன் ரூமிற்கு சென்று doorஐ லாக் செய்தான்.

பின் உடனே மகேஷிற்கு கால் செய்தான். மேகா பாதியில் சென்று விட்டதால் அவளது வேலைகளையும் சேர்த்து பார்ப்பதில் busyஆக ஆபீஸில் தனது கேபினில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்த மகேஷ் அவன் அழைப்பை பார்த்துவிட்டு “ச்ச்.. இப்ப இந்த ஆளு எதுக்கு நமக்கு கால் பண்றாரு..?? இருக்கிற பிரச்சினைல இவர் வேற..!!” என்று நினைத்து சலிப்புடன் அவன் அழைப்பை அட்டென்ட் செய்து “சொல்லுங்க சார்.” என்றான்.

“விஷ்வா எங்க போனாரு..?? நீயும் இப்ப அவர் கூட தான் இருக்கியா..??” என்று சேரன் நேரடியாக விஷயத்திற்கு வர, “விஷ்வா சார் எங்க போயிருக்காருனு எனக்கு தெரியாதுன்னு சொன்னா, உடனே இவர் ஏன் என்னாச்சு என்ன problemன்னு ஆரம்பிப்பாரு.. தேவையா அதெல்லாம்..??” என்று நினைத்த மகேஷ் மற்றவர்களிடம் சொன்ன அதே பொய்யை அவனிடமும் சொல்லி சமாளித்தான்.

“விஷ்வா solo tour போயிருக்கிறது எல்லாம் ஓகே தான். But நீ கடைசி வரைக்கும் அவர் எந்த countryக்கு போயிருக்காருன்னு சொல்லவே இல்லையே.. இங்க என் பொண்டாட்டி அவ தம்பிய நினைச்சு feel பண்ணிக்கிட்டு விஷ்வா ரூமே கதின்னு போய் அங்க மேகா கூடவே உக்காந்திருக்கா. கிளம்பி போறதுக்கு முன்னாடி விஷ்வா எல்லார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்ல..??” என்று சேரன் கேட்க, “Sorry Sir. Boss அவர யாரும் இப்ப disturb பண்ண கூடாதுன்னு நினைக்கிறாரு. அவர் இப்ப எங்க இருக்கிறாருன்னு என்னை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. சௌபர்ணிகா அக்காகிட்ட நான் பேசிக்கிறேன். எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் work இருக்கு Bye.” என்ற மகேஷ் இதற்கு மேல் அவனிடம் பேசினால் அவன் தன்னிடம் கேள்வியாக கேட்டு சாவடிப்பான் என்று உடனே அவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

“வேலைக்கார நாய் நீ.. அந்த விஷ்வா எங்க போறான்னு உன்கிட்ட சொல்லிட்டு போவான். வீட்ல இருக்குறவங்ககிட்ட சொல்ல மாட்டானா..?? நான் கேட்டாலும், நீ சொல்ல மாட்ட.. அப்போ இந்த வீட்ல உனக்கு இருக்குற மரியாதை கூட எனக்கு இல்லையாடா..?? இருக்கட்டும் இருக்கட்டும். இது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நான் உங்களுக்கு பெருசா திருப்பி கொடுக்கிறேன். அப்போ இந்த சேரன் யாருன்னு எல்லாருக்கும் தெரியும்.” என்று நினைத்து வில்லத்தனமாக சிரித்த சேரன் மீண்டும் யாரையோ phoneல் அழைத்தான்.

“நான் busy-யா இருக்கேன். ஏதாவது Importantஆ இருந்தா மட்டும் சொல்லு. கண்டத பேசி என் timeஐ waste பண்ணாத.” என்று மறுமுனையில் ஒரு நடுத்தர வயதானவர் சொல்ல, “இல்ல uncle ஒரு செம மேட்டர் மாட்டிருக்கு. விஷ்வா கூட எந்த Bodyguardsம் இல்லாம தனியா கிளம்பி ஏதோ ஒரு countryக்கு போயிருக்கானாம். மகேஷ் கூட அவன் கூட போகல. நான் அவன்கிட்ட விஷ்வா எங்க போயிருக்கான்னு கேட்டு பார்த்தேன்.‌ அவன் விஷ்வா சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டான்னு நேரடியா என்கிட்டையே தைரியமா சொல்றான்.

எப்படியாவது விஷ்வா இப்ப எங்க இருக்கான்னு கண்டுபிடித்து, அவன போட்டு தள்ளனும் uncle. என் sideல இருந்து அவனை கண்டுபிடிக்க நானும் try பண்றேன். நீங்களும் உங்க ஆளுங்ககிட்ட சொல்லி அவனை தேடுங்க. இந்த வீட்டை விட்டு வெளியே போன விஷ்வா, மறுபடியும் இங்க வரவே கூடாது. அவன நினைச்சு நினைச்சு அவன் அக்காவும், பொண்டாட்டியும் feel பண்ணியே செத்துடனும்… அப்புறம் இங்க தனிக்காட்டு ராஜாவா இந்த சேரன் மட்டும்தான் இருப்பான்.” என்றான்.

“ம்ம்… உன் plan எல்லாம் நல்லாதான் இருக்கு. But எப்ப பாத்தாலும் அத execute பண்ணும்போது கரெக்டா ஏதாவது தப்பு பண்ணி எல்லாத்தையும் நீ சொதப்பீடுற. நீ பெருசா ஒன்னும் புடுங்கி கிழிக்க வேணாம். அவன் எங்க இருக்கான்னு மட்டும் கண்டுபிடித்து சொல்லு. மத்தத நான் பார்த்துக்கிறேன்.” என்ற அந்த நடுத்தர வயதானவர் அவன் அழைப்பை துண்டித்து விட, “கண்டுபிடிக்கிறேன் uncle. அதான் சௌபர்ணிகான்னு எனக்குன்னு ஒரு அடிமை இருக்காளே.. அவள வச்சே நான் அவனை கண்டுபிடிக்கிறேன்.” என்று நினைத்த சேரன் வேகமாக விஷ்வாவின் ரூமிற்கு சென்று வெளியில் இருந்த calling Bellஐ அடித்தாள்.

சத்தம் கேட்டு கண்விழித்த மேகா கதவை திறந்து வெளியே செல்ல, “சௌபர்ணிகா இங்கதான் இருக்களா..??” என்று அவளிடம் கேட்டான் சேரன். தன் அறைக்குள் எட்டிப் பார்த்த மேகா, “அவங்க நல்லா தூங்கிட்டு இருக்காங்க அண்ணா. எழுப்ப வேண்டாமே..!! இன்னைக்கு நைட்டு அவங்க இங்கயே தூங்கட்டும்.” என்று சொல்ல, “அவ என் பக்கத்துல இல்லனா எனக்கு தூக்கம் வராதுமா. நான் அவள கூட்டிட்டு போறேன். நீ நகரு.” என்ற சேரன் மேகாவை தாண்டி உள்ளே சென்று அப்படியே அவளது தூக்கம் கலையாமல் சௌபர்ணிகாவை தூக்கிக்கொண்டு தன் ரூமிற்கு சென்றான்.
அவர்கள் சென்ற பிறகு தனியாக அந்த அறையில் இருந்த மேகாவிற்கு மீண்டும் விஷ்வாவை பற்றிய ஞாபகம் வந்துவிட, மீண்டும் சோகமானாள்.

“எனக்கு இப்பவே என் விஷ்வா எங்க இருக்கான்னு தெரிஞ்சாகணும். அவன் அப்புறமா பொறுமையா.. அவனுக்கா தோணும்போது இங்க வந்தா கூட பரவால்ல. எனக்கு அட்லீஸ்ட் அவன்கிட்ட ஒரே ஒரு தடவை phoneலயாவது பேசணும். இங்க இருக்கிறவங்க எல்லாரும் நான் எப்ப கேட்டாலும், விஷ்வாவை கண்டுபிடிக்க try பண்றேன்… try பண்றேன்னு சொல்லிட்டேதான் இருக்காங்க. ஆனா உருப்படியா அவங்க சைடுல இருந்து ஒரு updateம் வரல.
இனிமே நம்ம யாரையும் நம்பிட்டு இருந்து பிரயோஜனம் இல்ல. நம்மளே தான் அவனை கண்டுபிடிக்க ஏதாவது பண்ணனும். என்ன பண்ணலாம்…??” என்று சில நொடிகள் யோசித்த மேகா தன் அண்ணன் முத்துவிற்க்கு கால் செய்தாள்.

Callஐ அட்டென்ட் செய்து “என்னம்மா நீ இன்னும் தூங்கலையா..?? மணி பத்துக்கு மேலே ஆகுதே..!!” என்று அவன் கேட்க, கண்ணீருடன் “அண்ணா.. அண்ணா விஷ்வாவ காணோம் அண்ணா. எனக்கு இப்பவே என் விஷ்வாவ பாக்கணும் போல இருக்கு. ஆனா என்ன பண்ணி அவனை கண்டுபிடிக்கிறதுன்னே எனக்கு தெரியல. ப்ளீஸ் அண்ணா.. நீங்க எனக்கு என் விஷ்வாவ கண்டுபிடிக்க help பண்றீங்களா..?? இத பத்தி என்னால வெளிய மத்தவங்க யார்கிட்டயும் சொல்ல கூட முடியல.” என்று உடைந்த குரலில் சொன்னாள் அவள்.

அதைக் கேட்டு ஷாக்கான முத்து “என்ன சொல்ற மேகா.. அவர் எங்க போனாரு..?? முதல்ல என்ன நடந்துச்சுன்னு புரியிற மாதிரி கிளியரா சொல்லு.” என்று கேட்க, தன் அண்ணனை விட அதிகமாக அவளால் யாரை நம்பி விட முடியும்..?? அழுது கொண்டே அனைத்தையும் மறைக்காமல் அவனிடம் சொன்னாள் மேகா.‌

“சரி நீ ஒன்னும் பதட்டப்படாத. நான் விடியற்காலையில காளி அண்ணன்கிட்ட சொல்லிட்டு கிளம்பி அங்க வரேன். விஷ்வா சார கண்டுபிடிச்சு, உன் கூட சேர்த்து வைக்காம நான் மதுரைக்கு திரும்பி வர மாட்டேன். அவர் உன்னை நம்பி உன் பேர்ல power of attorney எழுதி வச்சிருக்காரு.
சோ நீ office workல மட்டும் focus பண்ணு. அவர நெனச்சுக்கிட்டு நீ உன் உடம்பை கெடுத்துக்காத. நீ weakஆனா, அங்க வீட்ல இருக்கிற மத்தவங்களும் உன்ன பாத்து weak ஆயிடுவாங்க. நீதான் உன்னையும் பாத்துகிட்டு, அவங்களையும் பார்த்துக்கணும்.” என்று முத்து சௌபரணிகாவை மனதில் வைத்து சொல்ல, “என்னால முடியல அண்ணா. எல்லாரையும் பத்தி நான் யோசிக்கணும். ஆனா என்ன பத்தி யாரும் யோசிக்க மாட்டேங்கிறாங்க. முக்கியமா விஷ்வா. எனக்கு அவன் இப்படி சொல்லாம கொள்ளாம போனத நினைச்சு ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும், இன்னொரு பக்கம் கோவம் கோவமா வருது.” என்ற மேகா மீண்டும் அழ, காலையில் தான் அங்கே வருவதாக சொல்லி அவளை சமாதானப்படுத்தினான் முத்து.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured