அத்தியாயம் 247: போற போக்கில ஏதோ நம்மளால முடிஞ்சது
நாராயணன் பேலஸில்….
ஜாகிங் செய்வதற்காக வெளியே கிளம்பி வந்த வருண், உள்ளே வந்துகொண்டு இருந்த வைஷாலியின் காரை கவனித்தவன் அப்படியே அவளிடம் பேசுவதற்காக வாசலில் நின்று கொண்டான். வருண் தனக்காக வெளியில் செல்லாமல் வெயிட் செய்வதை கவனித்த வைஷாலி, வேகமாக தன்னுடைய காரை பார்க் செய்துவிட்டு அவனுடன் பேசுவதற்காக வந்து நின்றாள்.
“நேத்து நைட்டு வீட்டுக்கு வராம எங்க போன..???” என்று கண்டிப்பான குரலில் அவளிடம் கேட்டான் வருண். “நீங்க தான் என்ன இன்னைக்கு அமெரிக்கா போகணும்னு சொல்லிட்டீங்களே மாமா…!!! நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க. ஆனா அத என்னால ஈஸியா எடுத்துக்க முடியல. சோ, என்ன பண்றதுன்னு தெரியாம பாருக்கு போய் குடிச்சேன். குடிச்சிட்டு அப்புறம் எப்படி இங்கே வர முடியும்..?? அதான் என்னோட ஃப்ரெண்ட் வீட்டிலேயே தங்கிட்டேன்.
நான் மெண்டலி டிஸ்டர்ப் ஆ இருந்ததுனால நான் இப்ப செஞ்சது கூட தப்புன்னு சொல்ல போறீங்களா மாமா..?? உங்களுக்கு இதுவும் தப்புன்னு தோணுச்சுன்னா அதுக்கும் பனிஷ்மென்ட் கொடுங்க. பரவால்ல நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன்.” என்று நக்கலாக சொன்னாள். 😁 😁 😁
“போய் உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணு. உனக்கு மார்னிங் 11: 00 ஒ கிளாக் பிளைட். நான் ஆபீஸ் போறதுக்குள்ள இத பத்தி அத்தை கிட்ட பேசிறேன். அவங்களே வேணாம்னு சொன்னாலும், நீ அமெரிக்கா போறதுல எந்த சேஞ்சும்சும் இல்லை.” என்று சொன்ன வருண், பின் அவளை கண்டுகொள்ளாமல் ஜாகிங் செய்ய தொடங்கினான்.
செல்பவனின் முதுகை விரத்தியுடன் பார்த்த வைஷாலி, “இங்க நீங்க நினைக்கிறது மட்டும் தான் நடக்கும்னு எனக்கு தெரியும் மாமா.” என்று வேதனையில் தனக்குள் சொல்லி சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றாள். 😁 😁 😁
தன்னுடைய வீட்டு தோட்டத்தில் ஜாகிங் செய்து கொண்டு இருந்த வருணிற்கு அவன் வளர்க்கும் செல்ல நாய் ஆன புரூஸ்லீ தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருக்கும் சத்தம் கேட்டது. அதனால் தன்னுடைய வீட்டிற்குள் யாராவது அத்து மீறி நுழைந்து விட்டார்களோ என்று நினைத்து சந்தேகப்பட்ட வருண், சத்தம் வந்த திசையை நோக்கி நடந்து சென்றான். அவன் அருகே சென்று பார்க்கையில் புரூஸ்லீ, ஜான்வின் கல்லறையின் பக்கம் இருந்த ஒரு மரத்தை பார்த்து சத்தமாக குறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தான் வருண்.
அவனுக்கு தன்னுடைய கண்களில் தூரப்பார்வை சரியாக தெரியாமல் ஒரு குறைபாடு இருந்தது. அதனால் தூரத்தில் தன்னுடைய செல்ல புரூஸ்லீ எதை பார்த்து குறைக்கிறது என்று அவனால் சரியாக பார்க்க முடியவில்லை. ஆனால் சற்று அருகே சென்று புரூஸ்லீ நின்ற இடத்தில் இருந்து பார்க்கும்போது தூரத்தில் ஏதோ ஒரு வெள்ளை ஆடை அசைவதை போல் அவனுடைய கண்களுக்கு தெரிந்தது. அதை வைத்து கண்டிப்பாக தன்னுடைய வீட்டிற்குள் யாரோ அதை மீறி நுழைந்து விட்டார்கள் என்று முடிவு செய்துவிட்ட வருண், தன்னுடைய அதிக மெகாபிக்சல் கொண்ட விலை உயர்ந்த மொபைல் போனின் கேமராவை எடுத்து அந்த இடத்தை ஜூம் செய்து சரமாரியாக பல போட்டோக்களை எடுத்து குவித்தான்.
அந்த போட்டோக்களில் அவன் பார்த்தது போலவே ஏதோ ஒரு வெள்ளை உருவம் தெரிந்தது. அதனால் தான் எடுத்த பல போட்டோக்களை ஒவ்வொன்றாக ச்கிரால் செய்து பார்த்தான் வருண். அதில் அவன் ஒவ்வொன்றாக தள்ளிவிட்டு வர அது ஏதோ ஒரு பெண்ணின் உருவத்தை போன்று அவனுக்கு தோன்றியது. இப்படியே அவன் வேகமாக அந்த போட்டோக்களை செக் செய்து பார்க்க அதில் ஒரு போட்டோவில் மரத்தின் மீது அமர்ந்து இருந்த ஜான்வி தன்னை திரும்பி பார்ப்பதை போல தெரிந்தது.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வருண் தன்னுடைய கண்களை கசக்கி விட்டு மீண்டும் அந்த போட்டோவை பார்த்தான். அந்த போட்டோ சிறிது பிளர் ஆக இருந்தால் கூட அது ஜான்வியின் முகம் தான் என்று அவனால் அடித்து சொல்ல முடியும். அதுவும் அந்த போட்டோவில் தெரியும் அந்த வெள்ளை ஆடை, ஜான்வி இறக்கும் நாள் அன்று அவள் அணிந்து இருந்த அதே வெள்ளை கவுன் ஐ போல் இருந்தது.
அதையும் தன் கையில் இருக்கும் போட்டோக்களையும் தொடர்பு படுத்தி பார்த்த வருணிற்கு இது உண்மையாக ஜான்வி தானா என்ற சந்தேகம்் ஏற்பட்டது. அவனுடைய மனம் செண்பகம் தன்னிடம் சொன்னதுடன் இதை தொடர்புபடுத்தி பார்த்து இதை ஜான்வியின் ஆத்மா தான் என்று ஒப்பு கொண்டு விட்டாலும் கூட; அவனுடைய மூளை சத்தியமாக அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இந்த நவீன யுகத்தில் இப்படி எல்லாம் எப்படி நடக்கும்..??? ஒரு வேளை ஜான்வியை தோற்றத்தை போல்் சாயலுடைய யாரோ ஒருவர் தான் அவளுடைய பெயரை வைத்து தன்னை ஏமாற்றி இதை வைத்து மன உளைச்சலுக்கு தன்னை ஆளாக்க முயற்சிக்கிறார்களோ என்ற கோணத்தில் யோசித்துப் பார்த்தான் வருண்.
இப்படியே பரவாலாக எதை எதையோ தொடர்பு படுத்தி யோசித்துப் பார்த்தவனால் முடிவாக இது தான் என்று எதையும் சொல்ல முடியவில்லை. அதனால் ஜாகிங் செல்வதை விட்டுவிட்டு அப்படியே இதைப்பற்றி யோசித்தபடியே மீண்டும் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான் வருண்.
அவன் தன்னுடைய அறைக்கு வந்து பார்க்கையில் ஒரு சிவப்பு நிற நைட் கவுன் ஐ அணிந்து, பார்ப்பதற்கே அழகாக செதுக்கி வைக்கப்பட்ட சிலையாய் படுத்து கிடந்த ரித்திகாவை பார்த்தவுடன் அவனுடைய சிந்தனைகள் அனைத்தையும் மறந்துவிட்டு அவனுடைய மனம் நிம்மதி அடைந்தது. 😍 ❤️
அதனால் குறிஞ்சி மலர் போல அரிதாக பூக்கும் தன்னுடைய புன்னகையை அவளைப் பார்த்து சிந்திய வருண், மீண்டும் அவள் அருகே சென்று அவளை கட்டி அணைத்தபடி படுத்துக் கொண்டான். 😍 🤗 வருண் ஜாகிங் செல்வதற்காக எழுந்து சென்றதை கவனித்து இருந்த ரித்திகா; இப்போது மீண்டும் அவன் வந்து படுத்து விட்டதால் தூக்கத்தில் இருந்து எழுந்து அவன் தானா என்று பார்த்தவள், அவனுடைய முகத்தை தன்னுடைய இதயத்தின் அருகே பார்த்தவுடன், அவனைப் பார்த்து வெட்கத்துடன் அழகாய் ஒரு புன்னகை சிந்தி விட்டு அவளும் அவனை அணைத்து கொண்டு மீண்டும் படுத்து கொண்டாள். 😍 🤗 ☺️ 🥰 ❤️
தன்னுடைய அறையில் இருந்த வைஷாலி, சோகமாக தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் பெரிய பெரிய பெட்டிகளில் பேக் செய்து கொண்டு இருந்தாள். சிறு வயதில் இருந்தே அவள் விஷ்ணுவை காதலித்தால், அவன் ஞாபகமாக நிறைய பொருட்களை அவள் சேமித்து வைத்து இருந்தாள். ஆனால் இப்போது அவனை மொத்தமாக விட்டுவிட்டு அமெரிக்கா செல்ல போவதால், அங்கேயும் இவை அனைத்தையும் தூக்கி கொண்டு சென்று இதை பார்த்து பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாக விரும்பாத வைஷாலி; அவை அனைத்தையும் தன்னுடைய அறையில் இருந்த சீக்ரெட் அறையில் வைத்து பூட்டினாள்.
இப்போதும் விஷ்ணு தனக்கு இல்லை என்பதை ஏற்று கொள்ள அவளுடையய மனம் தயங்கியது. அதனால் சோகமாக தன்னுடைய அறையில் ஒரு மூலையில் அமர்ந்தவள், “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது கடவுளே… நான் என் விஷ்ணு மாமாவ உண்மையா தானே காதலிச்சேன்..!! அவன் மட்டும் என்னோட காதல அக்சப்ட் பண்ணி இருந்தா நான் எந்த தப்பும் என் வாழ்க்கையில பன்னிருக்கவே மாட்டேன். கடைசி வரைக்கும் என்னையும் என் லவ்வையும் விஷ்ணு புரிஞ்சுக்கவே இல்லையே…!!!
என்கிட்ட காசு, பணம், பப்ளிசிட்டி, அழகு, பேர், புகழ், எல்லாமே இருக்கு. ஆனா இது எல்லாமே இருந்து என்ன பிரயோஜனம்..?? எனக்கு ஸ்போர்ட்ஸ் தான் எல்லாமேன்னா, அத விட அதிகமா நான் ஏன் விஷ்ணு மாமாவை லவ் பண்ணேன். பட் இப்போ எல்லாருக்கும் முன்னாடியும் என்னோட லவ் ரொம்ப சீப் அ மாறிடுச்சு. நான் பண்ண வேலையால இனி என்னையும் சீப்பா தான் நினைப்பாங்க.
வருண் மாமாவுக்கே தெரிஞ்சு இருக்கும் போது, இந்நேரம் விஷ்ணுவுக்கும் நான் தான் ஷாலினியை கொலை பண்ண ட்ரை பண்ணேன்னு தெரிஞ்சிருக்கும். இதுக்கு மேல நான் எப்படி அவன் முகத்தில போய் முழிப்பேன்..!! அவன் என்ன பார்த்தா எவ்ளோ கேவலமா பாப்பான்..??? நான் ஒன்னும் ப்ரொபஷனல் கொலைக்காரி இல்லையே.. இதை நான் அவனுக்காக தான் பண்ணினேன் விஷ்ணு புறிஞ்சிப்பானா..?? இது வரைக்கும் அவன் ஷாலினிய லவ் பண்ணா கூட, எங்களுக்குள்ள இருந்த ரிலேஷன்ஷிப் ஐ ஆவது அவன் ரெஸ்பெக்ட் பண்ணான். இப்போ அந்த ரெஸ்பெக்ட் ஐ கூட நான் இழந்துட்டேன். அவன் மேல இருக்கிற கோவத்துல பார்ல போய் குடிச்சு, மகேஷ் கிட்ட என்னையே இழந்துட்டேன்.
இன்னும் நான் இலக்கறதுக்கு வேற என்ன இருக்கு..?? என்னோட உயிர் மட்டும் தான் இருக்கு. உனக்கு நான் உயிரோட இருக்கிறது புடிக்கலைன்னா, அதையும் எடுத்துக்கோ கடவுளே…!!! நான் பண்ணது தப்பு தான் என்ன மன்னிச்சிடு. ஆல்ரெடி வருண் மாமா எனக்கு பெருசா பனிஷ்மென்ட் கொடுத்துட்டாரு. நீயும் இதுக்கு மேலயும் எனக்கு எந்த பனிஷ்மெண்ட்டும் கொடுத்திடாத. அத தாங்குற சக்தி எனக்கு இல்ல.” என்று சொன்னவள் கதறி கதறி அழ தொடங்கினாள். 😭 😭 😭
காலை 7 :00 மணி…
தன்னுடைய உடமைகள் அனைத்தையும் தயார் செய்து வைத்த வைஷாலி, இந்தியாவிலேயே தன்னுடைய அனைத்து சோகங்களையும் தலைமுழுகி விட்டு அமெரிக்காவிற்கு செல்வோம் என்று நினைத்து தலைக்கு குளித்துவிட்டு வெளியே வந்தவள்; நேராக தன்னுடைய அம்மாவின் அறைக்கு சென்று நேற்று இருந்து நடந்த அனைத்தையும் அவளிடம் தெளிவாக சொன்னாள்.
ஆனால் பாரில் இருந்து கிளம்பி அவள் வருனிடம் சொன்னது போலவே ஏதோ தன்னுடைய பிரண்டு ஒருவரின் வீட்டில் தங்கி விட்டதை போல் தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டாளே தவிர, மகேஷ் என்ற ஒருவனை சந்தித்ததை பற்றியே சீதாவிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள் வைஷாலி. வைஷாலி பேசியது அனைத்தையும் பொறுமையாக கேட்ட சீதா, “விடு வைஷு. நம்ப இப்ப வருணை எதிர்த்து பேசுவது சரியா வராது. அவன் சொன்ன மாதிரி அவன் என்ன நினைக்கிறானோ அத தான் அவன் செய்வான். நம்மளால வருணை பகைச்சுக்க முடியாது. இப்ப என்ன உன்ன அமெரிக்காவுக்கு தானே போக சொல்றான்.. போய் கொஞ்ச நாள் இரு பாத்துக்கலாம்.
வருண் என்ன சொன்னாலும் நம்ப வேணா அமைதியா கேட்டுக்கிட்டு இருப்போம். ஆனா செண்பகம் அண்ணி ஷாலினிய எப்பையும் அவங்களோட மருமகளா ஏத்துக்க மாட்டாங்க. ஆராதனா கூட இப்ப இதே வீட்ல தான் ஏதோ ஒரு டேபிள் சேர் மாதிரி கிடக்கிறா.. ஆனா அவளால என்ன பண்ணிட முடிஞ்சது..??
ஆராதனா கூட எவ்ளோ பெரிய பணக்காரி..!! அவளாலேயே எதுவும் பண்ண முடியல. இந்த ஷாலினி எல்லாம் நமக்கு ஒரு ஆளா..??? வருண் என்ன சொன்னாலும் அத பயந்துகிட்டு இந்த உலகத்துல யார் வேணாலும் கேட்கலாம். ஆனா அவனோட அம்மா… அதான் எங்க அண்ணி… செண்பகம், அவங்க மட்டும் கேட்க மாட்டாங்க. அவங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உனக்கும் விஷ்ணுவுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. அந்த கடைசி வாய்ப்பும் இல்லாம போற வரைக்கும் நம்ம ட்ரை பண்ணுவோம். அதனால இப்போதைக்கு வருண் என்ன சொன்னாலும் அதை கேட்கிற மாதிரி கேட்டு அவன்கிட்ட நல்ல பெயர் வாங்குற வழிய பாரு.” என்று தன்னுடைய மகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தாள் சீதா.
சீதா பேசியதில் இருந்து வைஷாலிக்கு செண்பகம் நினைத்தால் தான் விஷ்ணுவையும், ஷாலினியையும், பிரிக்க முடியும் என்று மட்டும் தெளிவாக புரிந்தது. அதனால் அவள் அமெரிக்காவிற்கு போற போக்கில் தன்னால் முடிந்தவற்றை இறுதியாக செய்துவிட்டு போவோம் என்று நினைத்தவள், நேராக செண்பகத்தின் அறைக்கு சென்று அவளிடம் பேசத் தொடங்கினாள்.
வைஷாலி: அத்தை நான் அமெரிக்காவுக்கு போக போறேன். இன்னைக்கு காலைல 11 மணிக்கு ஃப்ளைட். அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.
செண்பகம்: என்ன மா திடீர்னு அமெரிக்காவுக்கு கிளம்பிட்ட..!!! அதுவும் இன்னைக்கு பிளைட்டுக்கு போற. இப்ப தான் உனக்கு என்கிட்ட சொல்லணும்னு தோணுச்சா..??
வைஷாலி: திடீர்னு முடிவு பண்ணது எல்லாம் இல்லை. அத்தை நான் அமெரிக்காவுக்கு போய் ப்ராக்டிஸ் பண்ணனும்னு தானே இங்கே வந்தேன்..!!! அங்க போற வரைக்கும் ஸ்கூலுக்கு போய் சும்மா தானே வொர்க் பண்ணினேன் உங்களுக்கு தெரியாதா…??
செண்பகம்: தெரியும் வைசு. ஆனா இப்ப திடீர்னு நீ வந்து கிளம்புறேன்னு சொல்றியா.. அதான் ஒரு மாதிரி இருக்கு.
வைஷாலி: “வருண் மாமா விசா பிராசஸ் எல்லாத்தையும் இத்தனை நாளா பண்ணிட்டு இருந்தாரு. இன்னைக்கு நான் கிளம்புறேன்னு எனக்கே அவரு நேத்து நைட்டு தான் சொன்னாரு. நான் இப்ப கிளம்பினாத்தான் டைம் கரெக்டாடா இருக்கும். நான் போயிட்டு வரேன். அத்தை நீங்க உங்கள பத்திரமா பாத்துக்கோங்க.” என்று போலியான பாசத்தில் செண்பகத்தை கட்டி பிடித்துக் கொண்டு கண்ணீர் நிறைந்த கண்களுடன் சொன்னாள். 😭 😭 😭
செண்பகம்: வைஷாலியின் கண்ணீரை துடைத்து விட்டவள், “இப்படி அழுதுகிட்டே கிளம்ப கூடாது. இங்க அமெரிக்காவுக்கு தானே போற.. அதுவும் உன்னோட ஃப்யூச்சருக்காக போற.. சோ, பீல் பண்ணாம போயிட்டு வா. நீ எப்ப இங்க வரணும்னாலும் வருண் கிட்ட ஒரு வார்த்தை சொன்னா, போதும் ஒன்னு டிக்கெட் போட்டு தருவான். இல்லைனா நம்ப பிரைவேட் ஜெட் எல்லாம் எதுக்கு இருக்கு..ம்ம் இதுக்கெல்லாம் அழுகலாமா…??” என்று கேட்டாள்.
வைஷாலி: “நானே இங்க வரணும்னு நினைச்சாலும் வருண் மாமா என்ன வரவிட மாட்டாரு அத்தை.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், “ஓகே அத்தை. நான் இங்க இருந்து கிளம்புறதுக்குள்ள உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு போலாம்னு நினைச்சேன். ஆனா அதை உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதை கேட்டு நீங்க ஷாக் ஆகி, உங்க உடம்புக்கு ஏதாவது ஒன்னுனா அதை என்னால தாங்க முடியாது.” என்று சொல்லி புதிர் போட்டாள்.
செண்பகம்: “அப்படி நான் ஷாக் ஆகி எனக்கு ஏதாவது ஆகிற அளவுக்கு நீ என்ன மா சொல்ல போற..??” என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.
வைஷாலி: இல்ல அத்தை. அத எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல…!!! நீங்க இத கேட்டு டென்ஷன் ஆகிட மாட்டேன்னு சொல்லுங்க. அப்ப தான் நான் சொல்லுவேன்.
செண்பகம்: பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள், “நீ இப்ப சொல்லு அந்த நான் ஷாக்காக போற நியூஸ் ஐ கேக்குறதுக்கு நான் ரெடி ஆயிட்டேன். நான் அதைக் கேட்டு டென்ஷன் ஆக மாட்டேன். எனக்கு எதுவும் ஆகாது நீ தைரியமா சொல்லு.” என்று கேட்டாள்.
வைஷாலி: அது வந்து அத்தை நம்ப விஷ்ணு மாமாவை பத்தி தான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்.
செண்பகம்: அவனை பத்தியா..?? அவன் என்ன பண்ணான்..!!! உன்கிட்ட ஏதாவது சண்டை போட்டனா..?? நேத்துல இருந்து அந்த பைத்தியக்கார பையன் இன்னும் வீட்டுக்கு வரல. எங்க போய் தொலைஞ்சான்னு தெரியல. நான் போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான். உன்கிட்ட ஏதாவது சொன்னானா..???
வைஷாலி: அவன் என்கிட்ட எதுவும் சொல்லல. ஆனா இப்ப அவன் எங்க இருக்கான்னு எனக்கு தெரியும் அத்தை.
செண்பகம்: எங்க மா வைஷு இருக்கான் அவன்..??
வைஷாலி: “நேத்து நம்ப ஸ்கூல்ல வேலை பார்க்கிற ஷாலினிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சின்னு ரித்திகா அக்கா சித்தார்த்தை அப்படியே ஸ்கூல்ல விட்டுட்டு ஹாஸ்பிடலுக்கு போய்ட்டாங்களே.. உங்களுக்கு தெரியுமில்ல…!!!” என்று இழுத்தாள்.
செண்பகம்: ஆமா நம்ம ஷாலினியா.. தெரியுமே. அவள எப்ப பாத்தாலும் ரித்திகா கூடையே இருப்பாளே அவ தானே….!!! பாவம் வைஷு அந்த பொண்ணு. பாக்குறத்துக்கே ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா. அந்த பொண்ணுக்கு போய் இப்படி ஆயிடுச்சு.
வைஷாலி: ஆமா ஆமா நம்ம ஷாலினி தான் அத்தை. அதனால தான் உங்க பையன் விஷ்ணு அவளுக்கு ஆக்சிடென்ட் ஆனதுல இருந்து அவளை விட்டுட்டு வர மனசு இல்லாம அவ கூடையே அங்கயே இருக்கான். ரித்திகா அக்கா கூட அவளை பார்த்துட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க. ஆனா விஷ்ணுவை பாருங்களேன்… இன்னும் அங்கயே இருக்கான்.” என்று சொல்லி கொளுத்தி போட்டு விட்டாள்.
செண்பகம்: அவள் பேசியதை கேட்டு கடுப்பாகி அவளை முறைத்தவள், “இவன் எதுக்கு இவ்வளவு நேரமா அங்க இருக்கான்..?? பாக்குறதுக்கு போன பாத்துட்டு வர வேண்டியது தானே… அங்கேயே இருக்கணுமா..???” என்று கோபமாக கேட்டாள். 😒 🤨 😤
வைஷாலி: செண்பகத்தை பார்த்து லேசாக புன்னகைத்தவள், “அவன் தான் அவ தான் எல்லாமேன்னு மயங்கி கிடக்கிறானே அத்தை..!!! இன்னுமா அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கன்னு நீங்க கண்டு பிடிக்காம இருக்கீங்க..???” என்று கேட்டாள். 😁 😁 😁 😁
செண்பகம்: “நீ என்ன சொல்ற வைஷாலி..?? இது எல்லாம் உண்மையா..?? கொஞ்சூண்டு இடத்தை குடுத்தா அவ மடத்தை பிடிக்க பார்க்கிறாளா..?? இதுக்கு தான் நம்ம ரித்திகா பின்னாடி அக்கா அக்கான்னு சுத்திட்டு இருக்காளா அவ..??” என்று ஆத்திரம் நிறைந்த குரலில் கேட்டாள். 😒 😡
வைஷாலி: ஆமா அத்தை அவங்க ரெண்டு பேருமே லவ் பண்றாங்க. நான் அங்க ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் தான் எனக்கு இது எல்லாமே தெரியும். சின்ன வயசுல இருந்தே நான் விஷ்ணு மாமாவ லவ் பண்றேன். அத கூட சொல்ல தயங்கிக்கிட்டு இத்தனை வருஷமா நான் அவன்கிட்டயும் சொல்லல. ஏன் உங்ககிட்ட கூட சொல்லல. ஆனா அவளை பாருங்களேன்… அமைதியா இருந்துகிட்டு என் விஷ்ணு மாமாவை கரெக்ட் பண்ணிட்டா. அந்த திறமை எனக்கு இல்லாமல் போயிடுச்சு. அதான் அவங்களுக்கு நடுவுல பிரச்சனையா இருக்க வேண்டாமேன்னு நான் கிளம்பி அமெரிக்காகா போறேன்.
என்ன தான் மனதார அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழட்டும் அப்படின்னு எனக்கு தோணுனாலும், என்னால இங்க இருந்து அவங்க ரெண்டு பேரும் ஜோடியா சுத்துறது எல்லாத்தையும் பார்க்க முடியல அத்தை. அதான் வெளிநாட்டுக்கு சீக்கிரமா போகணும்னு நான் வருண் மாமா கிட்ட கேட்டேன். அவரும் அரேஞ்ச் பண்ணி குடுத்துட்டாரு. ஆனா இதுக்கு மேல விஷ்ணுவை கையில பிடிக்க முடியாது அத்தை நீங்க வேணா பாருங்க நல்ல நாளிலேயே அவன் அவளை தாங்கு தாஙகுன்னு தாங்குவான். இப்ப அவளுக்கு ஆக்சிடென்ட் வேற ஆகி இருக்கு. அவ கூடையே தான் உங்கள கூட கண்டுக்காம இருப்பான் பாருங்க. அத நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு. இதுல கொடுமை என்னன்னா ரித்திகா அக்காவுக்கும் அவங்க லவ் பண்றது தெரியும்.
நான் இப்ப இது எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டேன்னு நீங்க யார் மேலயும் கோபப்படாதீங்க. முக்கியமா ரித்திகா அக்கா கிட்ட இதை பத்தி கேட்காதீங்க. அவங்க சங்கடப்படுவாங்க. நீங்க இதே வீட்டுக்குள்ளேயே இருக்கீங்க ஆனா உங்களுக்கு எதுவும் தெரியாம அப்பாவியா ஒரு ஏமாளியா இருக்கீங்களேன்னு உங்கள பாக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அத்தை. அதான் நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி இதை உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சு சொல்லிட்டேன். உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல இதுக்கு மேல. என்னான்னு நீங்க பாத்துக்கோங்க. நான் கிளம்புறேன் அத்தை. இத பத்தி எல்லாம் நான் தான் உங்ககிட்ட சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அப்புறம் எல்லாரும் என்ன தப்பா நினைச்சு என்கிட்ட கோபப்படுவாங்க. ஏற்கனவே விஷ்ணு என்கிட்ட சரியா பேசுறதில்லை இப்போ இதுவும் தெரிஞ்சிட்டா, நான் அவங்கள பிரிக்கிறதுக்காக உங்ககிட்ட போட்டு கொடுத்துட்டேன்னு நெனச்சு கடைசி வரைக்கும் என்கிட்ட பேசவே மாட்டான்.
அவன் தான் எனக்கு இல்லைன்னு ஆயிடுச்சு. அவனோட பிரண்ட்ஷிப் ஆவது எனக்காக இருக்கட்டும். உங்களுக்கு என்னோட நிலைமை புரியும்னு நினைக்கிறேன். உடம்பை பார்த்துக்கோங்க அத்தை. நான் போயிட்டு வரேன் பாய். நான் சொன்னத பத்தி யோசிச்சு உங்க ஹெல்த் ஐ ஸ்பாயில் பண்ணிக்காதீங்க.” என்றவள் தன் வந்த வேலை சிறப்பாக முடிந்து விட்டதால் இதற்கு மேல் தான் இங்கே நின்று என்ன பேச வேண்டும் என்று நினைத்து அங்கே இருந்து செண்பகத்தின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்று விட்டாள்.
– நேசம் தொடரும்…