அத்தியாயம் 250: நீங்க பிரச்சனை பண்ணா, நானும் பிரச்சனை பண்ணுவேன்
திடீரென்று அங்கே இத்தனை கார்களுடன் வந்தவனிடம் திவ்யா மரியாதையுடன் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த அவளுடைய சொந்தக்காரர்கள் தங்களுக்குள் அவன் யாராக இருக்கும் என்று பேசி கொண்டனர். அவர்களுக்கு இவனை எங்கேயோ பார்த்ததைப்போல நன்று பரிச்சயமான முகமாக தான் இருந்தது. ஆனால் இவன் யார் என்று தான் அவர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை.
உறவினர் 1: இந்த பையன் யாராவது சினிமா ஹீரோவா இருப்பானோ.. இவன எங்கயோ நல்லா பார்த்த மாதிரி தான் இருக்கு. பாக்குறதுக்கே நல்ல அழகா இருக்கானே..!! பெரிய பெரிய சினிமா காரணுங்க தான் இந்த மாதிரி பாதுகாப்புக்காக அடியாளுங்கள் எல்லாரையும் துப்பாக்கியோட வச்சிக்குவாங்கன்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். கண்டிப்பா இவன் சினிமாக்காரன் தான்.
உறவினர் 2: அட யாருடா இவன் கூறு கெட்ட தனமா பேசிகிட்டு இருக்கான்..??? எந்த சினிமாக்காரன் இப்படி எல்லாரும் முன்னாடியும் பிரச்சனை பண்ணுவான்..?? அவனுக்கு பேரு கெட்டுப் போயிடும்னு பயம் இருக்காதா..?? எனக்கு தெரிஞ்சு இவன் வெந்து தணிந்தது காடு படத்துல கடைசில வர சிம்பு மாதிரி இவன் ஏதாவது ஊர்ல்ல பெரிய டான் ஆ இருப்பான். அதான் யாருக்கும் பயப்படாம துப்பாக்கி எல்லாம் கொண்டு வந்து இருக்கான். இங்கனைக்குள்ளேயே கிடக்கிற நம்மளுக்கு வெளியூர் ரவுடியை பத்தி எல்லாம் என்ன தெரியும்..??
உறவினர் 3: “அட சும்மா இருங்கப்பா. இந்த தம்பிய பாத்தா ரவுடி பையன் மாதிரி இருக்கு..??? எனக்கு என்னமோ இவரு பெரிய பணக்காரரா இருப்பாருன்னு தோணுது.” என்று சொல்லி கொண்டு இருக்க, அப்போது அங்கே ஓடிவந்த நிரோஷினியின் கணவர் ராகுல் அங்கே வந்திருப்பவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து தன்னை அறியாமல், “வருண் நாராயணன் சார் நீங்களா…???” என்று நம்ப முடியாமல் கேட்டான்.
அவன் பேசியது அங்கே இருந்த அனைவருக்கும் தெளிவாகவே கேட்டது. அதனால் பரிச்சயமாக இருந்த அந்த பெயரை தங்களுக்குள் சொல்லிப் பார்த்தவர்களுக்கு, சில நாட்களுக்கு முன் நடந்த இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான, உலக நாடுகள் மத்தியில் டாப் 5 இடத்தில் இருக்கும் முக்கிய பணக்காரரான வருண் நாராயணன் மற்றும் ரித்திகாவின் திருமணம் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து அவர்களுக்கு ஞாபகம் வந்தது.
அந்தத் திருமணம் ஒரு வித்தியாசமான திருமணம் என்பதால் அதில் இருந்து வருண் நன்கு பேமஸான ஒரு ஆளாக மாறிவிட்டான். இப்போது அவனுடைய முகத்தை உத்துப் பார்த்த திவ்யாவின் சொந்தக்காரர்களுக்கு சற்று நேரத்தில் தாங்கள் யாரிடம் மோதுவதற்கு தயாரானும் என்று நினைத்துப் பார்க்கும்போதே அடி வயிறு எல்லாம் கலக்கிக்கொண்டு வருவதைப் போல் இருந்தது. தங்கள் முன்னே இருக்கும் இந்த வருண் நினைத்தால் 5 நிமிடத்தில் தங்களை இல்லாமல் செய்து விட முடியும் என்று அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
அதனால் இப்போது வருணை பயத்துடன் பார்த்தவர்கள் திவ்யாவின் அப்பாவிடம் மெதுவான குரலில், “என்னப்பா நீ… இப்படி போய் பெரிய இடத்துல பிரச்சனை பண்ணி வச்சிருக்க..?? நம்ம வீட்டு பொண்ண காதலிக்கிறேன்னு வந்த பையன் அவங்க வீட்டு பையனாக இருப்பான் போல இருக்கு. அதான் அந்த தம்பி எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், அந்த பையனுக்காக அவரை கிளம்பி வந்து இருக்காரு…!!! காதலிக்கிறேன்னு வந்தா, யாரு என்னான்னு நீ விசாரிக்க மாட்டியா..?? உடனே வேணாம்னு சொல்லி விரட்டி விடுவியா…!!! இந்த மாதிரி சம்பந்தம் எல்லாம் யாருக்கு டா கிடைக்கும்..???
நீயே உனக்கு கிடைக்க இருந்த நல்ல சம்பந்தத்தை கெடுத்துக்கிட்டதும் இல்லாம இப்ப இவ்வளவு பெரிய ஆள் கூட எங்களுக்கும் சேர்த்து பகையாக்கி விட்டிருப்ப. இதெல்லாம் சுத்த முட்டாள் தனமா இருக்கு. நம்மெல்லாம் எறும்பு மாதிரி எறும்பு போய் மதயானை கூட மோதி ஜெயிக்க முடியுமா..?? புத்தி உள்ள ஆளா இருந்தா அவரு கையில கால விழுந்து அந்த பையனுக்கே உன்னோட பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்திரு. அதான் உங்க குடும்பத்துக்கும் நல்லது. இந்த ஊருக்கும் நல்லது. நாங்களும் எங்க சாதிசனத்துல இவ்ளோ பெரிய குடும்பத்துல எங்க பொண்ண கட்டிக் குடுத்து இருக்கிறோம்ன்னு பெருமையா பேசிக்குவோம்ல்ல…!!!” என்று ஓதி கொண்டு இருக்க தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார். திவ்யாவின் அப்பா.
தன்னுடைய காலில் விழுந்து தரையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த திவ்யாவின் தோலை பிடித்து அவளை மேலே தூக்கிய வருண், “இதுக்காக எல்லாம் ஏன் கால்ல விழுகிற மா திவ்யா..?? தைரியமா இரு. அதான் நான் வந்துட்டேன்ல எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.” என்று அவளிடம் சொன்னவன் பின்னே நின்று கொண்டு இருந்த தன்னுடைய காரை பார்த்து, “இந்த பொண்ணு ரொம்ப பயந்து போய் இருக்கா ரித்திகா. வாட்டர் பாட்டில் எடுத்துட்டு வா. நான் இவங்க ஃபேமிலி கூட கொஞ்சம் பேசிட்டு வரேன்.” என்றவன் மீண்டும் சிவாவின் தோள்களில் கை போட்டு அவனை அழைத்து கொண்டு தன்னுடைய பாடி கார்டுகள் குடை சூழ திவ்யாவின் சொந்தக்காரர்களை பார்த்த வருண், “இதுல யாரு திவ்யாவோட அப்பா..???” என்று கேட்டான்.
திவ்யாவின் அப்பாவின் மீது இருக்கும் கோபத்தில் அவன் யார் என்று தெரியாமல் யாரையாவது சுட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்தவர்கள், வேகமாக திவ்யாவின் அப்பாவை அடையாளம் காட்டினார்கள். திவ்யாவின் அப்பாவை மரியாதையுடன் பார்த்த வருண் அவர் முன் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி, “வணக்கம் சார். என் பேரு வருண் நாராயணன். உங்களுக்கு என்ன பத்தி தெரியுமான்னு தெரியல. ஆனா எனக்கு உங்கள பத்தி இப்ப தான் தெரிஞ்சது. எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா எப்பயோ இவ்ளோ தூரம் வராமல்லே பேசி முடித்திருப்பேன்.
சிவா எங்க குடும்பத்துல ஒருத்தன். நாங்க எங்க வீட்டு பையனுக்காக உங்க பொண்ண கேட்டு வந்திருக்கோம். இப்போதைக்கு நான் அமைதியா பேசி எல்லாத்தையும் சரி பண்ணலாம்ன்னு நினைக்கிறேன். அதே மாதிரி நீங்களும் நினைச்சீங்கன்னா, உங்க வீட்டுக்கு போய் நம்ம குடும் விஷயத்தை நமக்குள்ளயே பேசிக்கலாம். இல்ல நீங்க இங்க ஏதாவது பிரச்சனை பண்ணியே தீருவீங்க அடம் புடிச்சீங்கன்னா, நானும் பிரச்சனை பண்ண ரெடியா தான் இருக்கேன். இனிமே நீங்க தான் நான் என்ன பண்ணனும்னு சொல்லணும்.” என்று கம்பீரமான குரலில் சொன்னான்.
அவன் பேசிய விதத்தில் பயந்து போன திவ்யாவின் அப்பா, “கோச்சுக்காதீங்க தம்பி. நாங்க எல்லாரும் கிராமத்து ஆளுங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியாம அவசரப்பட்டுட்டோம். நீங்க எங்கள தப்பா நினைச்சுக்காம எங்க வீட்டுக்கு வாங்க. நீங்க எங்க வீட்டுக்கு வர்றதே எங்களுக்கு பெருமை தான்.” என்று வருனிடம் சொன்னவர் தன் அருகே இருந்தவர்களை பார்த்து, “வாங்க பா நம்மளும் வீட்டுக்கு போவோம். எவ்ளோ பெரிய ஆளு நம்மள தேடி நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு. அவர நல்லபடியா நம்ம தான் உபசரிச்சு அனுப்பனும்.” என்று சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி நடந்து செல்ல தொடங்கினார்.
சிவாவையும், திவ்யாவையும், தன்னுடன் காரில் ஏற்றிக்கொண்ட வருண் நேராக அவர்களுடைய வீட்டு வாசலில் சென்று இறங்கினான். வருண், சிவாவின் கையை பிடித்துக்கொண்டு கம்பீரமாக அவனை உள்ளே அழைத்துச் செல்ல; அவர்களின் பின்னே ரித்திகா திவ்யாவையும், சிவாவின் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். துப்பாக்கியை தங்களுடைய தோளில் மாட்டி இருந்த பாடி கார்டுகள் தங்களுடைய கையில் சம்பந்தம் பேசுவதற்காக பழங்கள், பூக்கள், இனிப்புகள் நிறைந்த தட்டுக்களுடன் திபுதிபு என்று உள்ளே வந்தனர்.
நிரோஷினியும் அங்கே இருந்த மற்ற பெண்களும் இந்த காட்சியை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். தன்னுடைய கையை பிடித்து கொண்டு தனக்காக வந்து நின்ற வருணை நன்றி உணர்வு கலந்த பாசம், மரியாதை உடன் பார்த்தான் சிவா. 😍 தங்களுடைய வீட்டில் முற்றத்தில் இருந்த மர பெஞ்சை தன்னுடைய தோள்களில் இருந்த துண்டை வைத்து இரண்டு மூன்று முறை துடைத்த திவ்யாவின் தந்தை, “உக்காருங்க தம்பி. உட்காருங்கள் அம்மா.” என்று வருணையும் ரித்திகாவையும் பார்த்து சொன்னார்.
சுகந்தியின் கையையும் பிடித்துக் கொண்டு தன்னுடன் அழைத்து வந்த ரித்திகா அவளை தன் அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டாள். “பரவால்ல மா நான் நிற்கிறேன்.” என்று சுகந்தி தயக்கத்துடன் சொல்ல, “சும்மா இருங்க அக்கா. இது உங்க பையனோட கல்யாணம். நீங்க தான் முன்னாடி இருந்து எல்லாத்தையும் பண்ணனும்.” என்று சத்தமாக அனைவருக்கும் கேட்கும் படி சொன்னாள்.
திவ்யாவின் அப்பா வருணை பார்த்தபடியே நின்று கொண்டு இருந்தார். அவரையும் அழைத்து தன் முன்னே இருந்த ஒரு பெஞ்சில் அமர சொன்ன வருண், “இங்கே பாருங்க சார்… நான் சுத்தி வளைக்காம நேராவே பேசுறேன். சிவாவும், திவ்யாவும், லவ் பண்றாங்கன்னு எனக்கு இப்ப தான் தெரிஞ்சது. ஆனா நீங்க அதுக்குள்ள உங்க பொண்ணுக்கு வேற ஒருத்தர் கூட கட்டாய கல்யாணம் முடிவு பண்ணிட்டீங்க.
எப்ப திவ்யா எங்க வீட்டு பையன லவ் பண்ணாளோ அப்பவே அவளும் எங்க வீட்டு பொண்ணுண்ணு ஆயிட்டா. அதான் எங்க வீட்டு பொண்ணு நீங்க எப்படி வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.” என்று கடுமையான குரலில் கேட்டான் .
“ஐயோ பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க தம்பி. எங்க பொண்ணுக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை பண்ணனும்னு எனக்கு மட்டும் ஆசையெல்லாம் இல்லை…!!! நாங்க இந்த கல்யாணத்தை பேசி முடிவு பண்ணதுக்கு அப்பறம் தான் இவங்க காதல் விவகாரமே எனக்கு தெரியும். திவ்யாவுக்கு அப்புறம் இன்னும் ரெண்டு புள்ளைங்க இருக்கிறாங்க. அவங்க வாழ்க்கையை பத்தியும் நான் யோசிக்கணும்ல்ல.. அதான் ஊருக்கு பயந்து என் பொண்ணுக்கு எப்படியாவது இந்த கல்யாணத்தை பண்ணி வச்சிடனும்னு நினைச்சேன்.
அதான் இப்ப நீங்க வந்துட்டீங்களே ஏற்கனவே முடிவு பண்ண கல்யாணம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல தம்பி. ஊர் பஞ்சாயத்துல வச்சி பேசி அந்த நிச்சயதார்த்தம் இல்லைன்னு முடிச்சு விட்றலாம். பெரியவங்க மனசு வச்சா நடக்காதுன்னு என்ன இருக்கு..???” என்று பயந்து போய் பவ்யமான குரலில் கேட்டார்.
தன்னை பெரிதும் சிரமப்படுத்தாமல் அவர் தன்னை புரிந்து கொண்டு தன்னுடைய வழிக்கு வந்து விட்டதால் கூலான வருண், “ஓகே சார். உங்கள பயமுறுத்துறதோ சிரமப்படுத்தறதோ என்னோட எண்ணம் இல்ல. நான் முறையா சிவாவுக்கு பொண்ணு கேட்டு திவ்யாவை கல்யாணம் பண்ணி இங்க இருந்து கூட்டிட்டு போகணும்னு தான் ஆசை படுறேன். எனக்கும் தங்கச்சி இருக்கா. அவ எனக்கு தங்கச்சியா இருந்தாலும் என் பொண்ணு மாதிரி அவளை நான் தான் வளர்த்தேன்.
அதனால ஒரு அப்பாவா உங்களோட பயமும் பதட்டமும் எனக்கு புரியுது. திடீர்னு எங்க இருந்தோ ஒருத்தன கூட்டிட்டு வந்து உங்க பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லி அவனை கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா யாரு என்னனே தெரியாம அவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்கிறது வேணாம்னு உங்களுக்கு தோன்றதுல ஒன்னும் தப்பு இல்ல.
இப்ப சிவாவுக்காக நான் வந்து இருக்கேன். கண்டிப்பா அவன் உங்க பொண்ண நல்லா பாத்துப்பான் அதுக்கு நான் கேரண்டி. சிவா அவன பத்தி உங்ககிட்ட அவன் என்னோட மேனேஜரா ஒர்க் பண்றான்னு சொல்லி இருப்பான். அதனால நீங்க அவன சாதாரணமா நினைச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன். சின்ன வயசுல இருந்தே சிவா எங்க வீட்டுல தான் வளந்தான். இப்பயும் எங்க வீட்ல தான் இருக்கான்.
இதோ இங்க இருக்காங்களே சுகந்தி அக்கா இவங்க தான் அவனோட அம்மா. இங்க நிக்கிறானே தர்ஷன், இவன் சிவாவோட தம்பி. எங்க அம்மா எப்ப கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்தாங்களோ அப்போல இருந்து சுகந்தி அக்கா எங்க வீட்ல வேலை செய்றாங்க. இப்ப சிவா எனக்காக வேலை செய்கிறான். தர்ஷன் என் தம்பி ஹரிக்காக வேலை செய்கிறான். ஆகமத்தம் அவங்க குடும்பமே எங்க குடும்பத்துக்கா வாழ்றவங்க.
நான் ஒரு பேச்சுக்கு அவங்க வேலை செய்றாங்கன்னு சொன்னாலும், அவங்களும் என்னோட குடும்பம் தான். எனக்கு என் தம்பிங்க ஹரியும், விஷ்ணுவும், எப்படியோ.. அதே மாதிரி தான் சிவாவும், தர்ஷனும். அவங்களுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீங்க ஓகேன்னு சொன்னா நானே கிராண்டா சிவாவுக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
அவன் ஆல்ரெடி அவன் பேர்ல ஒரு பிளாட் வாங்கி இருக்கான். நான் இவங்க மேரேஜ் கிஃப்டா, ஒரு வில்லாவும், 50 லேக்ஸ் கேசுவும் கொடுக்கிறேன். அதுக்கு மேலயும் அவங்களுக்கு எது எப்ப தேவைப்பட்டாலும் நான் கூட இருந்து செய்வேன். இப்ப சிவா வாங்கிக்கிட்டு இருக்கிற சேலரிய நான் அவனுக்கு டபுளா கொடுக்கிறேன். கடைசி வரைக்கும் சிவாவும் திவ்யாவும் நல்லபடியாக வாழ்வாங்க அதுக்கு நான் பொறுப்பு.
காசு பணம் எல்லாத்தையும் தாண்டி சிவா ரொம்ப நல்ல பையன். அவன் என்னோட மேனேஜர் என்றதுனால சும்மா ஏதோ கம்ப்யூட்டர்ல வேலை பாப்பான்னு நினைக்காதீங்க. அவனுக்கு நாங்க எல்லா ட்ரைனிங் -ம் குடுத்து இருக்கோம். 40, 50 பேர் ஒரேடியா அவன அடிக்க வந்தா கூட அவனால சமாளிக்க முடியும். ஆனா நீங்க வெறும் பத்து பேரு. அதுவும் பாதி பேரு வயசானவங்க. கைல அருவாளையும், கத்தியும், தூக்கிக்கிட்டு வந்தா அவன் உங்களை பார்த்து பயந்து ஓடிட்டான்னு நினைக்காதீங்க.
நீங்க எல்லாரும் திவ்யாவோட சொந்தக்காரங்க. அதனால உங்கள அவனும் தன்னுடைய சொந்தக்காரங்களா நினைச்சு இருக்கான். அந்த நல்ல மனச நீங்க நினைச்சு பார்க்கணும். உண்மையா காதலிச்சு ரெண்டு பேர் ஒன்னா சேர்ந்து வாழணும்னு நினைக்கும்போது அவங்கள பிரிக்கிறதுன்னு கடவுள் நினைச்சா கூட அது தப்பு தான். நம்ப எல்லாரும் சாதாரண மனுஷங்க. அடுத்தவங்க வாழ்க்கையில முடிவெடுக்கிறதுக்கு நமக்கு எந்த ரைட்சும் இல்லை. நம்ப பெத்த பிள்ளைங்களாவே இருந்தாலும் அவங்களுக்குனு ஒரு மனசு இருக்கு. அதனால அவங்க வாழ்க்கையில நம்ம துணையா கூட நிக்கணுமே தவிர, அவங்க சந்தோஷத்துக்கு தடையா நிக்க கூடாது. நான் சொல்ல வந்தது எல்லாத்தையும் சொல்லிட்டேன். இதுக்கு மேல நீங்க தான் சார் யோசிச்சு சொல்லணும்.” என்று அமைதியான குரலில் சொன்னான்.
வருண் இறுதியில் சொன்ன வார்த்தைகள் திவ்யாவின் அப்பாவை செருப்பால் அடித்தது போல் இருந்தது. வருண் பேசி கொண்டு இருக்கும்போது குறுக்கே பேசும் தைரியம் யாருக்கும் இல்லை என்பதால், அனைவரும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தனர். தனக்காக வருண் பேசுவதால் அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சிவா, “இங்க பாருங்க சார்.. என்கிட்ட என்ன இருக்கோ அத வச்சு என்னால உங்க பொண்ண நல்லா பாத்துக்க முடியும். அவர் என் மேல இருக்கிற பாசத்திலையும், அக்கறையிலையும் ,எனக்காஅது கொடுக்கிறேன் இத கொடுக்கிறேன் சொல்றாரு. அவருக்கு இருக்கிற நல்ல மனசுக்கு யோசிக்காம எல்லாருக்கும் எத வேணாலும் தூக்கிக் கொடுப்பாரு அவரு. இப்ப நான் அத ஏத்துக்கிட்டா, நீங்க அதுக்காக தான் உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிற மாதிரி ஆயிடும். உங்களுக்கு நான் அவளை நல்லா வச்சு காப்பாத்துவேன்ற நம்பிக்கை இருந்துச்சுன்னா மட்டும் என்ன நம்பி உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்க.” என்று திவ்யாவின் அப்பாவை பார்த்து சொன்னவன்..
வருணை பார்த்து, “சாரி சார். இதுவரைக்கும் நான் உங்களை எதிர்த்து பேசினதே இல்ல. இப்ப பேசுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க எனக்காக இருக்கிற எல்லா வேலையும் விட்டுட்டு வந்து இங்க உக்காந்து இருக்கீங்க. இன்னும் எனக்காக வேற ஏதாவது வேணும்னாலும் நீங்க செய்வீங்கன்னு எனக்கு தெரியும்.
நீங்க ஆல்ரெடி எனக்கு நிறைய செஞ்சுட்டீங்க. என்ன படிக்க வச்சு, எனக்குன்னு ஒரு வேலையும் குடுத்து இப்ப இந்த நிலைமையில நான் இப்படி இருக்கேன்னா, அதுக்கு நீங்க தானே சார் காரணம்..!!! ஆனா இது மட்டும் வேண்டாம் சார். இது என்னோட லவ். என்னோட திவ்யாவுக்காக நானே எல்லாத்தையும் பண்ணனும்னு நினைக்கிறேன். ப்ளீஸ் சார் டைட்டு அண்டர்ஸ்டாண்ட் மீ.” என்று சொன்னவன் வருணின் காலை பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்தான்.
சிவாவை பார்த்து முறைத்த வருண், “எந்திரிடா மொதல்ல.” என்று கடுமையான குரலில் சொன்னான். 😒 🤨 கண்ணீருடன் எழுந்து நின்றான் சிவா. அவன் அருகே வந்து நின்றாள் திவ்யா.
வருண்: இதுவரைக்கும் என்ன எதிர்த்து பேசினது இல்லைனா, இப்ப மட்டும் பேசுறதுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சாடா..?? தேவை இல்லாம எதையாவது பேசி என்ன டென்ஷன் பண்ணாத. இதுவரைக்கும் நான் யாருக்கும் மேரேஜ் கிப்ட் கொடுத்து நீ பார்த்ததே இல்லையா..??
சிவா: ஆனா மத்தவங்களுக்கு எல்லாம் நீங்க இவ்ளோ குடுக்க மாட்டீங்களே சார்…!!!
வருண்: “அப்ப மத்தவங்களும் நீயும் ஒன்னா..?? ஏன் டா இப்படி எனக்கு எரிச்சல் வர மாதிரியே பேசி தொலையுற..?? இப்ப சொல்றது தான் நல்லா கேட்டுக்கோ. உன்னையும் நான் என்னோட தம்பியா தான் நினைக்கிறேன். உனக்கு என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன்.
இல்ல எனக்கு அது எல்லாம் வேண்டாம் நான் வெறும் வேலைக்காரன் தான் அப்படி இப்படின்னு நீ டயலாக் பேசுற மாதிரி இருந்தா; எப்போ அந்த வார்த்தை உன் வாயில இருந்து வருதோ அந்த செகண்ட்டே உன்னோட ஜாப் உனக்கு இல்லைன்னு நினைச்சுக்கோ. உன்ன ஃபயர் பண்ணி பிளாக் லிஸ்ட் போட்டுடுவேன். என்னை மீறி உனக்கு எவனும் எங்கேயும் வேலை தர மாட்டான். வேணா பிரவீன் கம்பெனில போய் ஜாயின் பண்ணிக்கோ.” என்று எரிச்சலான குரலில் சொன்னான். 😒 😤
அவன் சொன்னதைக் கேட்டு கண்ணீர் நிறைந்த கண்களுடன் பயந்து போய் வேகமாக வருணை கட்டிப்பிடித்துக் கொண்ட சிவா, “அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க அண்ணா. என்னால உங்கள விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. என்ன வேலையை விட்டு அனுப்புவதற்கு பதிலா கொன்னு போட்டுருங்க. நிம்மதியா செத்துருவேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு உங்கள மாதிரி ஆகணும்னு தான் ஆசை. நீங்க தான் என் ஹீரோ தெரியுமா உங்களுக்கு..??” என்று பாசத்துடன் அவனை பார்த்து கேட்டான். 😍 🤗 😭 😭 😭
தானும் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு வருண் லேசாக அவனுடைய தலை முடியை கலைத்து விட்டவன், “தெரியும் டா. சும்மா பொண்ணு மாதிரி அழுகாத. அதுவும் இது உன்னோட மாமியார் வீடு. அப்புறம் அவங்க மாப்பிள்ளை ஒரு அழு மூஞ்சின்னு நினைச்சுக்க போறாங்க. மாமியார் வீட்டில மரியாதை முக்கியம் டா தம்பி.” என்று சிரித்துக் கொண்டே அவனுடைய முதுகில் தட்டி கொடுத்து கொண்டே சொன்னான். 🤗 😁 😁 😁
தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்ட சிவா வருணை பார்த்து சிரித்தவன், “தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்.” என்றான். 😁 😁 😁 பதிலுக்கு அவனைப் பார்த்து புன்னகைத்த வருனும் “இட்ஸ் மை டியூட்டி மை பாய்.” என்று பாசத்துடன் சொன்னான். என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன் மக்களே என்பது போல இவர்களுடைய இந்த பாசப்பிணைப்பையும் வருணிக்கும் இருக்கும் நல்ல குணத்தையும் பார்த்து அங்கே இருந்த மக்கள் தங்களுக்குள் மகிழ்ந்தனர். ரித்திகாவும் தனக்குள், “வாவ் ஹீ இஸ் சோ ஸ்வீட் என்று சொல்லிக் கொண்டவள், தன்னுடைய கணவனை காதலுடன் பார்த்து அப்பட்டமாக ரசித்து சைட் அடித்தாள். 😍 ❤️
கண்ணீர் நிறைந்த கண்களுடன் எழுந்து நின்று வருணின் கைகளை பிடித்துக் கொண்ட சுகந்தி, “ரொம்ப சந்தோஷம் சார். உங்களுக்கு ஒரே வார்த்தையில நன்றின்னு சொன்னா அது பத்தவே பத்தாது. எங்க குடும்பம் உங்களுக்காகவே வாழ்றோம்னு சொன்னீங்க. ஆனா எங்க குடும்பத்தை காப்பாத்தி எங்களுக்கு சாப்பாடு போடுற சாமியே நீங்க தானே..!!! நீங்க இல்லைனா என்னால என் ரெண்டு பாசங்களையும் இந்த மாதிரி வளர்த்திருக்கவே முடியாது. நீங்க எப்பயும் நல்லா இருக்கணும். உங்க நல்ல குணத்துக்கும், மனசுக்கும், நல்லா இருப்பீங்க. நாங்களும் சரி எங்க குடும்பத்துல இனி வரப்போறவங்களும் சரி உங்களுக்கு கடமைப்பட்டவங்களா விசுவாசத்தோட எப்பயுமே இருப்போம். இத தவிர வேற எங்களால என்ன செய்ய முடியும்னு எனக்கு தெரியல. ஆனா இன்னைக்கு உங்களால என் மனசு நிறைஞ்சு போயிடுச்சு.” என்றவள், வருணின் வளர்ப்பு தாயாக அவன் என்றென்றும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினாள். 🥺
– நேசம் தொடரும்…