அத்தியாயம் 58: சித்தார்த்தின் குட்டியம்மா (பார்ட் 1)
நாராயணன் பேலஸுல்…
வருண்: இவ குடும்பத்தில் இருக்கிறவங்க பண்ண தப்புக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்க தப்பானவங்கன்னு புரிஞ்சுகிட்டு அவங்க கூட இருக்க பிடிக்காம தானே இவ வெளியில வந்து இத்தனை நாளா அவளுக்குன்னு ஓரு வேலை தேடிக்கிட்டு ஹாஸ்டல்ல இறந்து கஷ்ட படுறா… இது எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சும் நீங்க இப்படி பேசலாமா மா.. ??
செண்பகம்: “அதுக்காகலாம் என்னால இவள என் வீட்டுக்குள்ள சேத்துக்க முடியாது. உங்களுக்கு அவ தான் முக்கியம்ன்னா சொல்லிருங்க. அவ இங்க வந்து ராணியாட்டம் சொகுசா இருக்கட்டும். நான் இந்த வீட்டை விட்டு வெளிய போய்டுறேன்.” என்றாள் கோபமாக. 😡 😤
செண்பகத்தின் வார்த்தைகளை கேட்டு மனம் உடைந்த ஆராதனா அவளின் காலில் சென்று விழுந்து அழுதாள். 😭 ஆராதனா தன்னுடைய காலில் விழுவது செண்பகத்திற்கு பிடிக்கவில்லை அதனால் இரண்டு அடி பின்னே சென்று விட்டாள். அப்போதும் தலையில் இருந்து எழுந்திருக்காத ஆராதனா, மண்டியிட்டு செண்பகத்தை பார்த்து கதறி அழுதவள்; அவளிடம் பேசத் தொடங்கினாள். ஆராதனா இப்படி தன்னுடைய தாயின் காலில் விழுந்து கதறுவது ஹரியின் மனதை பெரும் அளவில் பாதித்தது. இருந்தாலும் அவளே தன் அம்மாவிடம் பேசினால் தன்னுடைய அம்மாவின் மனம் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தவன், தன் மனதை கல்லாக்கி கொண்டு நடப்பவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆராதனா: செண்பகத்தை கனத்த இதயத்தோடும், கண்ணீர் நிறைந்த கண்களோடும் பார்த்தவள், “நீங்க என் மேல எவ்ளோ பாசமா இருந்தீங்கன்னு எனக்கு தெரியும் ஆன்ட்டி. நான் உங்களை ஆன்ட்டி -ன்னு கூப்பிட்டாலும் நீங்களும் எனக்கு அம்மா மாதிரி தான். அப்பலாம் நானும், பிராத்தனாவும், உங்களுக்கு வேற வேற இல்லைன்னு நீங்க சொல்லி இருக்கீங்க. ஏன் நீங்களே உங்க வாயால ஹரிய கல்யாணம் பண்ணிக்கிட்டு சீக்கிரமா என் வீட்டுக்கு மருமகளா வான்னு என் கிட்டயே நிறைய தடவை சொல்லி இருக்கீங்க.” என்றவள், அந்த அழகான கடந்த காலத்தை நினைத்து சத்தமாக அழுதாள். 😭 😭 😭
இப்போது தான் ஆராதனாவிற்கு உடல் நிலை தேறி இருக்கும் நிலையில் அவள் இப்படி கதறி அழுவது அவளுக்கு நல்லதில்லை என்று நினைத்த ஹரி, அவள் அருகே வந்து அமர்ந்து அவளை சமாதானப்படுத்த முயற்சித்தான். கோபமாக அவர்கள் இருவரையும் பார்த்த செண்பகம், “என்ன டி அப்ப அப்டி எல்லாம் பேசிட்டு இப்ப மாத்தி பேசுறீங்கன்னு சொல்லி குத்தி காட்டுறியா…?? ” என்று அவளை முறைத்த படியே கேட்டாள். 😒 🤨
ஆராதனா கண்ணீர் நிறைந்த கண்களுடன் செண்பகத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள், “சத்தியமா நான் அப்படி சொல்ல வரல ஆன்ட்டி. உங்களுக்கு என் மேலயும், என் குடும்பத்து மேலயும், இருக்குற கோபம் நியாயமானது தான். அந்த குடும்பத்தில பிறந்ததுனால அவங்க செஞ்ச பாவத்த நான் இப்ப வரைக்கும் என் தலை மேல சுமந்துட்டு இருக்கேன். ஆனா அந்த குடும்பத்தில பிறந்தத தவிர நான் வேற எந்த தப்பும் செய்யல ஆன்ட்டி.
அவங்க செஞ்சது சரி பண்ண கூடிய தப்பா இருந்தா நான் எப்பவோ அத சரி பண்ணி இருப்பேன். அவங்க பண்ண தப்புக்காக இப்ப நான் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. நீங்களே சொல்லுங்க நான் என்ன பண்ணட்டும்..?? நீங்க என்ன சொன்னாலும் நான் அத செய்வதற்கு ரெடியா இருக்கேன் ஆண்ட்டி. ஆனா சத்தியமா சொல்றேன் ஆண்ட்டி எப்பயும் ஹரிக்கும், இந்த குடும்பத்துக்கும் நான் கெட்டது செஞ்சதும் இல்ல, துரோகம் நினைச்சதும் இல்ல.
என் சின்ன வயசுல நான் என்னோட வீட்ல இருந்தத விட இந்த வீட்ல இருந்தது தான் அதிகம். என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா…?? அந்த குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எப்ப அவங்க உங்களுக்கு பண்ண துரோகம் எல்லாம் எனக்கு தெரிஞ்சுதோ அப்பவே அவங்க எனக்கு வேணாம்னு முடிவு பண்ணி அந்த வீட்ட விட்டு வெளிய வந்துட்டேன். ப்ளீஸ்..!! ஆன்ட்டி என்னையும் ஹரியையும் பிரிச்சிடாதீங்க. ப்ளீஸ்…!!!” என்று கெஞ்சும் குரலில் சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தரையாக விளைந்தது. 😭 😭 😭
செண்பகம் கூர்மையாக அவளை பார்த்தவள், “உங்க குடும்பத்துல எல்லாரும் நல்லவங்கன்னு இப்படி தான் நாங்க பல வருஷத்துக்கு முன்னாடி நம்பி பழகுனோம். ஆனா நீங்க என்ன பண்னீங்க… ??? என் புருஷனையும், மருமகளையும், இந்த உலகத்தை கூட பாக்காத என் பேர குழந்தையையும் கொன்னுட்டீங்க. இப்ப மொத்தமா எல்லாரையும் விஷம் வச்சு கொறதுக்காக உன் அண்ணன் காரன் உன்ன பிளான் பண்ணி அனுப்பி வச்சு இருப்பான். நான் உன்ன வீட்டில சேத்துக்கனுமா..??
ஆராதனா: ஐயோ..!!! ஆண்ட்டி ப்ளீஸ்..!!! இப்படி எல்லாம் பேசி உங்க வார்த்தையாலயே என்ன கொல்லாதீங்க. சத்தியமா அந்த மாதிரி எல்லாம் என்னால யோசிக்க கூட முடியாது. நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை வரத்துக்கு முன்னாடியே நான் உங்க எல்லார் மேலையும் பாசமா தானே இருந்தேன்… இப்ப மட்டும் நான் எப்படி மாறியிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க…??
செண்பகம்: அது பாசமோ, வேசமோ, யார்க்கு தெரியும்..?? உங்க குடும்பத்துக்கு நடிக்க சொல்லி தரணும்..?? அவங்க இரத்தம் தானே உன் உடம்புலையும் ஓடுது… அப்ப நீயும் அவங்கள மாதிரி தானே இருப்ப. நாளைக்கே உன் அண்ணன் நீ இதை இப்ப செஞ்சு தான் ஆகணும் இல்லன்னா அவங்கள கொன்றுவேன், இவங்கள கொன்றுவேன்னு சொல்லி உன்ன பிளாக் மெயில் பண்ணா நீ என் குடும்பத்துக்கு எதிரா சதி செய்யாம இருப்பியா…???
ஆராதனா: “இங்க இருக்கிற நீங்க மட்டும் தான் என்னோட குடும்பம். நீங்க சொல்ற மாதிரி அவன் என்ன ஏதாவது சொல்லி பிளாக் மெயில் பண்ணாலும் இந்த குடும்பத்துக்கு எதிரா ஏதாச்சு செயறதுக்கு செத்து போறதே மேல்ன்னு செத்து போயிடுவேன். ஒரு நாளும் உங்களுக்கு கெட்டது நினைக்க மாட்டேன்.” என்றாள் தீர்க்கமான குரலில்…
செண்பகம்: “நீ என்ன சொன்னாலும் நான் உன்னை நம்ப மாட்டேன். உன்ன பாக்க.. பாக்க.. உன் அப்பன் எப்படி எல்லாம் எங்கள நய வஞ்சகமாக நடிச்சு ஏமாத்துனான்னு தான் எனக்கு நியாபகம் வருது. அந்த ஆளு ஒரு கிழட்டு நரி. அவனுக்கு பொறந்தவ தானே நீ…?? அவன் ரத்தம் தானே நீயும்.. நீ மட்டும் வேற எப்டி இருப்ப..???” என்று ஆராதனாவை பார்த்து ஏளனமாக சொன்னாள். 😕
அது வரை இவர்களுடைய சம்பாஷணகளை பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த வருண், இப்போது பேச தொடங்கினான். உணர்ச்சியற்ற முகத்தோடு செண்பகத்தை பார்த்தவன், “இப்ப அவ உடம்புல என்னோட ரத்தமும் தான் அம்மா ஓடுது.” என்றான் நிதானமான குரலில். அவன் சொன்னதை கேட்டு விஷ்வாவை குழப்பமாக பார்த்த செண்பகம், “என்ன டா ஒளர்ற இவ உடம்புல எப்படி உன்னோட ரத்தம் ஓடும்..?” என்றாள்.
வருண்: ஹரிய நினைச்சுட்டே அவன் இல்லமா வாழ்றதும் கஷ்டமா இருக்கு, அவன் கூட சேர்ந்து வாழறதுக்கும் வழியில்லைன்னு நினைச்சு அவ கைய கட் பண்ணி சூசைட் அட்டெம்ட் பண்ணி இருக்கா. அதனால அவ உடம்புல இருந்து நிறைய ரத்தம் வெளில போய் சாக கிடந்தா. நான் தான் அவள என் ரத்தத்தை குடுத்து காப்பாத்தி இருக்கேன். அப்போ அவ உடம்புல என் ரத்தமும் ஓடும் போது அவ எப்டி நம்ம குடும்பத்துக்கு எதிரா இருப்பா..??
வருண் இப்படி கேட்டதும் சட்டென்று அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்த செண்பகம், ஆராதனாவை உற்றுப் பார்த்தாள். அதிக ரத்த போக்கின் காரணமாக வெளிரி போயிருந்த ஆராதனாவின் தேகத்தையும், அவள் கையில் போடப்பட்டு இருந்த பெரிய கட்டையும் கவனித்தாள் செண்பகம். அப்போது அவளுக்கு ஹரி யாரோ தன்னுடைய நண்பனுக்கு உடம்பு சரி இல்லாததால் ஹாஸ்பிடலில் இருக்கிறேன் என்று சொல்லியது ஞாபகம் வர, அந்த நண்பன் யார் என்று இப்போது அவள் புரிந்து கொண்டாள்.
அவளுக்கும் ஆராதனாவின் நல்ல குணம் தெரியும் தான். ஆராதனா சொன்னதை போல அவளுடைய சிறு வயதில் நாராயணன் குடும்பத்தினருடன் தான் அவள் அதிக நேரம் செலவிடுவாள். அதனால் அவளை வளர்த்ததில் பெரும் பங்கு செண்பகத்திற்கும் உண்டு. தான் தூக்கி வளர்த்த ஆராதனாவின் அனைத்து அசைவுகளையும் நன்கு அறிந்து இருந்த செண்பகத்திற்க்கு இத்தனை நேரம் அவள் பேசியது அனைத்தும் உண்மை தான் என்று புரிந்தலும், அவர்கள் குடும்பம் தானக்கு கொடுத்த பெரிய கசப்பான நினைவுகளை அவளால் உடனே மறக்க முடியவில்லை. ஆராதனா அந்த குடும்பத்தை சேர்ந்தவள் என்ற ஒரு காரணமே அவளை வெறுக்க செண்பகத்திற்கு போதுமானதாக இருந்தது.
அதனால் என்ன ஆனாலும் சரி இன்று இவளை தன்னுடைய வீட்டிற்க்குள் விட கூடாது என்று நினைத்த செண்பகம், இப்போது வருணையும், ஹரியையும், என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்து கொண்டு இருந்தாள். எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கும் தன் அம்மாவை பார்த்த விஷ்வா, “இப்ப சொல்லுங்க மா.. ஆராதனா இந்த வீட்டுக்குள்ள வர கூடாதா..?? அவளும், ஹரியும், கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்ன..??” என்றான் நிதானமான குரலில்…
செண்பகம்: “நீ என்ன சொன்னாலும் என்னால இவள ஏத்துக்க முடியல. நீ சொல்ற மாதிரி இவ ரொம்ப நல்லவலாவே இருக்கட்டும். அதுக்காக நீ ஏதாவது அவளுக்கு காசு பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணு. இல்ல நம்மளே வேற யாராச்சு நல்ல பையனா பார்த்து நல்லா செலவு பண்ணி க்ரான்ட் ஆ இவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். ஆனா இவ என் வீட்டுக்குள்ள மட்டும் வர கூடாது. இந்த வீட்ல நான் இருக்கணுமா.. இல்ல இவ இருக்கணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.” என்று முடிவாக சொல்லி விட்டாள்.
அவள் பேசியதை கேட்டு மனம் உடைந்த ஆராதனா, “என்னால உங்களுக்குள்ள இவ்ளோ பிரச்சனை வேணாம் ஆன்ட்டி. நீங்க ஏன் உங்களோட வீட்ட விட்டு வெளியில போகணும்..?? நானே வெளில போறேன். முடிஞ்சா உங்கள கஷ்ட படுத்தினதுக்காக என்ன மன்னிச்சிடுங்க.” என்று சொன்ன ஆராதனா, தான் வந்த வழியிலேயே மீண்டும் திருப்பி செல்ல தொடங்கினாள்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)