Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 16

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 16

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 16: என்னை சாய்த்தாளே…

ஹரி ஒரு பெண்ணிடம் இருந்து தனக்கு வந்த மெசேஜை இக்னோர் செய்து விட்டு மாடிக்கு சென்று புகை பிடிக்கிறான். காலையில் சந்தோஷும், ரித்திகாவும் எதர்ச்சியாக சந்தித்து கொள்கிறார்கள். முதல் பார்வையிலேயே ரித்திகாவால் ஈர்க்க படுகிறான் சந்தோஷ்.

நாராயணன் பேலஸுல்…

லிவ்விங் ஏரியாவில் உள்ள சோபாவில் சித்தார்த்துடன் அமர்ந்து இருந்த செண்பகம்; வருண்ணையும், ஹரியையும், பிராத்தனாவையும், சாப்பிட்டு செல்லும் படி சொல்ல… அவர்கள் யாரும் அதை பொருட்படுத்தாமல் தங்களுக்கு வேலை இருப்பதாக சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.

செண்பகம்: சித்தார்த்தை பார்த்தவள், “பாரு… சித்து… யாரும் நான் சொல்றத கேட்க மாட்டேங்கிறாங்க. நீயும் நான் சொல்றத கேக்காம எல்லாத்துக்கும் அடம் புடிக்கிற… வர வர என் பேச்சை யாரும் மதிக்கவே மாட்டேங்கிறாங்க.” என்ற தன்னுடைய ஆதங்கத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் அந்த சிறுவனிடம் சொல்லி புலம்பி கொண்டு இருந்தாள்.

சித்தார்த்: “நான் குட் பாய் பாட்டி. இனி மேல் அடம் புடிக்க மாட்டேன். நேத்து ராகா என் கிட்ட சொன்னா குட் பாய்ஸ் எல்லாம் அடம் புடிக்க மாட்டாங்களாம். அதனால நான் அடம் புடிக்க மாட்டேன். அப்புறம்… சாப்பாடு நிறைய கொண்டு வந்து வேஸ்ட் பண்ண கூடாதாம். எனக்கு என்ன பிடிக்குமோ அத மட்டும் கொண்டு வந்து சாப்பிடனும்ன்னு ரித்தி சொன்னா. நானும் சரின்னு சொல்லிட்டேன்.”

செண்பகம்: “பார்றா… !! ரித்தின்னா? அது யாரு டா ரித்திகாவா..?”

சித்தார்த்: “ஆமா..!! அவ என் ஃபிரெண்ட்.”

செண்பகம்: “அந்த பொண்ணு உனக்கு ஃபிரண்டு இல்ல டா. அவங்க உன் ஸ்கூல்ல வேலை பாக்குற டீச்சர். பெரியவங்கள எல்லாம் அவ, இவ -ன்னு பேச கூடாது. மரியாதையா பேசு. ரித்திகா மேம்ன்னு சொல்லு.” என்றாள். 

சித்தார்த்: “அதெல்லாம் எனக்கு தெரியாது “ராகா” எனக்கு ஃபிரெண்டு தான். போங்க..” என்று முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு சொன்னான். 😒

செண்பகம்: “அட போ டா… யாரோ புதுசா உன் பிரண்ட் -ன்னு வந்தவ சொல்றத எல்லாம் கேக்குற. நான் சொல்றத கேட்க மாட்டேங்கிற….” 😞 என்று சலிப்பாக சொன்னவள், சுகந்தியை சீக்கிரம் வருமாறு அழைத்தாள்.

சுகந்தி: “இதோ வறேன் அம்மா..” என்று சமையல் அறையில் இருந்து கொண்டே குரல் கொடுத்தாள்.

அப்போது மாடி படியில் இருந்து பார்மல் டிரஸுல் கீழே இறங்கி வந்தான் விஷ்ணு. கீழே வந்தவன், செண்பகம் சித்தார்த்துடன் அமர்ந்து இருப்பதை கவனித்தான்.

விஷ்ணு: “குட் மார்னிங் அம்மா. குட் மார்னிங் சித்தார்த்.” என்று சிரித்து கொண்டே சொன்னான். 😁 😁

“ஆமா குட் மார்னிங் ஒண்ணு தான் குறைச்சல்..” என்று நினைத்து செண்பகம், அவனுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

சித்தார்த்: “குட் மார்னிங் விஷ்ணு. நீயும் என் கூட ஸ்கூலுக்கு வர போறியா? பாட்டி சொன்னாங்க.” 😁

விஷ்ணு: “ஆமா சித்து. இன்னிக்கு நான் உன்ன என் கூடயே கூட்டிட்டு போறேன்.” என்று சிரித்து கொண்டே சொன்னான். 😁 😁

சித்தார்த்: “நேத்து எனக்கு நிறைய ஹோம் வொர்க் கொடுத்தாங்க தெரியுமா… 😒 அதே மாதிரியே உனக்கு குடுப்பாங்களா?” 🙄

விஷ்ணு: “அய்யய்யோ… அப்படி எல்லாம் இல்ல 😂 🤣” என்று சொன்ன படி சிரித்து கொண்டே அவன் அருகில் சென்று அமர்ந்தவன், “சித்து நீ ஸ்கூலுக்கு படிக்க போற. நான் அங்க எல்லாரும் ஒழுங்கா வேலை செய்றாங்களான்னு பாத்துக்க போறேன் ஒகே வா..?” என்று கேட்க, 

சித்தார்த்  “ஓ.. அப்படியா… ?” என்று இழுத்தவன் எல்லாம் புரிந்தது என்பது போல் தலையை வேகமாக ஆட்டினான்.

விஷ்ணு: “என்னமோ.. மண்டைய மண்டைய அட்டுற என்ன தான் புரிஞ்சுதோ.. போ. 😂”  என்றான். 

அங்கே ஒரு தட்டில் சாப்பாட்டை எடுத்து கொண்டு வந்த சுகந்தி, இன்னொரு வகையில் சித்தார்த்திற்கு ஒரு குட்டி லஞ்ச் பேக்கை கொண்டு வந்தாள்.

விஷ்ணு: சுகந்தியை பார்த்தவன், “என்ன அக்கா எப்பயும் இவனுக்கு 10 பேர் சாப்பிடுற மாதிரி அவ்வளவு சாப்பாடு கொண்டு போவீங்க.. இன்னிக்கு என்ன லன்ச் பாக்ஸ் சுருங்கிடுச்சு…” 😂 😂 என்று சொன்னவன் நக்கலாக சிரித்தான். 🤣

சுகந்தி: “எல்லாம் ரித்திகானால தான் தம்பி. அந்த பொண்ணு நேத்து சின்ன பிள்ளைங்களுக்கு இந்த மாதிரி பழக்க கூடாதுன்னு சொல்லி… சித்தார்த் தம்பி கிட்டயும் பேசுனா. அதனால இனி மேல் லஞ்ச் பாக்ஸ் குட்டியா தான் கொண்டு போவேன்ன்னு சித்தார்த் தம்பி தான் சொன்னாரு.”

விஷ்ணு: “ஓ.. அப்படியா? ஓகே.. ஓகே.. அக்கா. யாராச்சும் ஒருத்தர் சொல்றத வாச்சு கேக்கிறானே அதுவே நல்லது தான்” என்றான்.

சுகந்தி: “ஆமா தம்பி.” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னவள், சித்தார்த்தை அழைத்து கொண்டு அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட சென்று விட்டாள்.

இவை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த செண்பகம், “இந்த ரித்திகா ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா. வருண்ணுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ண பாத்து தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்.” என்று தன் மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

“சாப்டீங்களா அம்மா.. ?” என்று செண்பகத்தை பார்த்து பாசத்துடன் கேட்டான்.

செண்பகம்: “இன்னும் இல்ல விஷ்ணு.”

விஷ்ணு: “ஏன் இவ்வளவு நேரமா சாப்பிடாம இருக்கீங்க? வாங்க சேர்ந்து சாப்பிடலாம்.” என அனைவரையும் சாப்பிட வரச் சொல்லி அழைத்தான். 

செண்பகம்: “ஏன் நீ வெளியில போய் எங்கையும் சாப்பிடலையா?”

விஷ்ணு: “ஏன் அம்மா வீட்ல தான் சமைச்சு இருக்கீங்கள? அப்புறம் ஏன் வெளியில சாப்பிடணும்?”

செண்பகம்: “ஆமா ஆமா. எல்லாம் ரெடியா தான் இருக்கு போய் சாப்பிடு.”

விஷ்ணு: “நீங்களும் வாங்க சேர்ந்து சாப்பிடலாம்” என்றவன், செண்பகத்தையும் கையோடு கூட்டி சென்று டைனிங் டேபிளில் அமர்த்த இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.

சித்தார்த்தின் பள்ளியில்…

ரித்திகா ஆட்டோவில் அடித்து பிடித்து ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தாள். நேராக கையெழுத்து போடுவதற்காக ஆபீஸ் ரூமிற்கு சென்றாள். அவள் எப்போது அங்கே வருவாள் என்று காத்துக் கொண்டு இருந்தாள் மானசா.

ரித்திகா கையெழுத்து போட்டு விட்டு வெளியே செல்ல இருக்க… அவளை அழைத்தாள் மானசா. ரித்திகாவால் சமாளிக்க முடியாத அளவிற்கு அவளுக்கு வேலைகளை கொடுத்து அவளே இந்த வேலையே எனக்கு வேண்டாம் என்று ஓடி விட வேண்டும் என்று திட்டம் போட்ட மானசா,

அன்று லீவ் போட்டு இருந்த ஆசிரியரின் பிரியரட்களுக்கு சப்டியுஷன் ஆக ரித்திகாவை போட்டு வைத்தாள். 

அதை ரித்திகாவிடம் சொல்லி அந்த ஆசிரியரின் பிரியட்களையும் அவளையே பார்த்து கொள்ள சொன்னாள்.

இது எல்லாம் பொதுவாக அனைத்து பள்ளிகளிலும் நடப்பது தான் என்று ரித்திகாவுக்கும் தெரியும் என்பதால்…. அவள் இதை அனைத்தையும் சாதாரணமாக எடுத்து கொண்ட ரித்திகா, “சரி மேடம்” என்று சொல்லி விட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டாள்.

நாராயணன் பேலஸுல் இருந்து சித்தார்த்துடன் காரில் கிளம்பிய விஷ்ணு சில நிமிட பயணத்திற்குப் பின் பள்ளியை வந்து அடைந்தான். விஷ்ணுவை பார்த்த செக்யூரிட்டி ஆபீஸர்கள் மரியாதையாக அவனை உள்ளே அழைத்து சென்றனர்.

சித்தார்த்தை அவனுடைய வகுப்பு அறையில் கொண்டு போய் விட்டு விட்டு ஆபீஸ் ரூமிற்கு சென்று கொண்டு இருந்தான் விஷ்ணு. தன்னுடைய மொபைல் போனை நோண்டிய படியே நடந்து வந்து கொண்டு இருந்தான் விஷ்ணு. அந்த ஆஃபீஸ் ரூமிற்க்கு செல்லும் வழியில் ஒரு சைடில் ரெஸ்ட் ரூம் இருந்தது.

பள்ளி மாணவர்கள் இன்டர்வளில் தான் ரெஸ்ட் ரூமை அதிகமாக பயன் படுத்துவார்கள் என்பதால்… காலையிலேயே கழுவி சுத்த படுத்தி விடலாம் என்று நினைத்த ஊழியர்கள் அப்போது தான் சுத்தப்படுத்தி விட்டு சென்று இருந்தனர். 

அதனால் அந்த இடம் இன்னும் ஈரமாகவே இருந்தது.

போனை பார்த்து கொண்டே வந்ததால் கீழே இருந்த ஈரத்தை விஷ்ணு கவனிக்கவில்லை. அவன் அந்த ரெஸ்ட் ரூம் இன் அருகே வரும் போது கீழே ஈரமாக இருந்ததாலும், அவன் ஷூ அணிந்து இருந்ததாலும், வழுக்கி கீழே விழ போனான்.

ஆஃபீஸ் ரூமில் சைன் போட்டு விட்டு வெளியே வந்து கொண்டு இருந்த ஷாலினி விஷ்ணு கீழே விழ போவதை கவனித்தாள். ஒரு நொடியும் தாமதிக்காமல் வேகமாக ஓடி வந்த ஷாலினி அவனை தன்னுடைய கைகளால் தாங்கி பிடித்தாள்.

கீழே விழ போகிறோம் என்று நினைத்த விஷ்ணு… எப்படியும் அடி பட போகிறது என்று நினைத்தவன், அதற்கு தயாராகும் பொருட்டு தன்னுடைய கண்களை இறுக்கமாக மூடி கொண்டு இருந்தான். அவனை யாரோ பிடித்து கொண்டு இருப்பது போல் உணர்ந்தவன், ஏன் அவன் இன்னும் கீழே விழவில்லை என்று ஆச்சரியமாக அவனுடைய கண்களை திறந்து பார்த்தான்.

அவன் கண் முன் காக்க காக்க திரை படத்தில் வரும் மாயா டீச்சர் போல் அழகாக நின்று கொண்டு இருந்தாள் ஷாலினி. 😍 ஷாலினியோ அவனுடைய கனத்தை தாங்க முடியாமல் அவளை தாங்கி பிடித்து கொண்டு இருந்தாள். ஆனால் அதை எல்லாம் அவன் கவனித்ததாக தெரிய வில்லை. அவளையே ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் விஷ்ணு.

விஷ்ணுவின் மனதில்…

“என்னை சாய்த்தாளே… 😍”

“உயிர் தேய்த்தாளே… 🥰”

“இனி வாழ்வேனோ இனிதாக 😘”

“தடுமாறாமல் தரை மோதாமல்”

“இனி மீள்வேனோ முழுதாக 😁”

“இதழோரத்தில் நகை பூத்தாளே”

“என் பாவங்கள் தீர்த்தேன்… 🤩”

“மழை ஈரத்தில் நனையாமல் நான்”

“வெளியேற தான் பார்த்தேன்… 👩‍❤️‍👨”

“நடக்கிற வரை நகர்கிற தரை”

“அதன் மேல் தவிக்கிறேன்… 😍”

“விழிகளில் பிழை விழுகிற திரை”

“அதனால் திகைக்கிறேன்… 😍 🥰 ❤️”

என்ற பாடல் ஓடி கொண்டு இருந்தது. அதில் அவனும், அவளும் ரொமான்ஸ் செய்வது போல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டு இருந்தான் விஷ்னு. ஷாலினியோ அவனுடைய வெயிட்டை தாங்க முடியாமல் அவனை தாங்கி பிடித்து கொண்டு இருந்தவள், கை நழுவி அவனை கீழே விட போனாள்.

பின் அவன் விழுவதற்கு முன் ஒரு நொடி சுதாரித்து கொண்டவள், தன்னுடைய ஒரு கையால் அவனுடைய கையை பிடித்து அவன் கீழே விழாமல் தடுத்தாள். அப்போது தான் சுய நினைவிற்கு வந்த விஷ்ணு, அவளுடைய கையை பிடித்தபடி எழுந்து நின்றான்.

-நேசம் தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured