Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 10

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 10

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 10: ரித்திகா நல்லவளா? இல்லை கெட்டவளா?

அட்மின் ஆபீஸில்..

சிவா, அவளிடம் கேட்ட அனைத்து தகவல்களையும் செக் செய்து கொண்டு இருந்தாள் மானசா. முதலில் ரித்திகா உடைய ஃபுல் பயோடேட்டாவையும் செக் செய்து அதை வருண்னின் மேனேஜர் சிவாவிற்கு மெயில் செய்தாள். பின் செக்யூரிட்டி ஆபிசர்க்கு கால் செய்த மானசா, நேற்று ரித்திகா பள்ளிக்கு வந்ததிலிருந்து, வெளியே செல்லும் வரை உள்ள வீடியோ புட்டேஜ் ஐ எடுத்துக் கொண்டு வர சொன்னாள்.

அவள் தான் அங்கே அட்மின் ஆபீசர் என்பதால், எந்த தயக்கமும் இன்றி அந்த செக்யூரிட்டி ஆபீஸர்களும் வீடியோ புட்டேஜ் ஐ ஒரு பென் டிரைவில் போட்டு காப்பி செய்து கொண்டு வந்து அவளிடம் கொடுத்தனர். அதை வாங்கி தன்னுடைய லேப்டாப்பில் பிளே செய்த மானசா அதை கவனமாக பார்த்தாள்.

அந்த வீடியோவில் சித்தார்த்தும், ரித்திகாவும், என்ன பேசி கொள்கிறார்கள் என்று கேட்கவில்லை என்றாலும்; அதைப் பார்த்த மானசா, அவர்கள் இடையில் உள்ள நெருக்கத்தை புரிந்து கொண்டாள். ஆனால் அவள் பார்த்த காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை.

மானசா: “ச்சே..!! இது எப்பிடி உண்மையா இருக்க முடியும்? சித்தார்த் எப்படி இவ கூட இவ்வளவு க்ளோஸ் ஆ பேசுறான்..? இந்த ஸ்கூலுக்கு அவன் வந்ததுல இருந்து நான் அவன் கிட்ட பேசி க்ளோஸ் ஆகுறதுக்கு நான் எவ்வளவோ ட்ரை பண்ணி இருக்கேன். ஆனா இந்த ரித்திகா எப்படி இவன் கூட ஈசி ஆ செட் ஆயிட்டா… நோ. இத இப்படியே விட கூடாது…

பாக்குறதுக்கு ரொம்ப இன்னசென்ட் மாதிரி இருந்து கிட்டு இவ சத்தமே இல்லாம என்னென்ன வேலை பாத்து இருக்கா.? என்னோட பிளானுக்கு நீ தான் பெரிய பிரச்சினையா வருவ போலயே ரித்திகா.. நல்ல வேளை இது வருண் சார்னால எனக்கு ஸ்டார்டிங் லேயே தெரிஞ்சிருச்சு. இத கண்டுக்காம விட்டு இருந்தா ரித்திகா நாராயணன் பேமிலி கிட்ட பெருசா ஸ்கோர் பண்ணி இருப்பா.

இத நீ தெரிஞ்சு பண்ணியா.. தெரியாம பண்ணியான்னு எனக்கு தெரியல. ஆனா நீ என்னோட வழியில குறுக்க வந்துட்ட ரித்திகா. இனி மேல் உன்ன நான் சும்மா விட மாட்டேன்.” என்று தன் மனதிற்குள்ளே ரித்திகாவையும், சித்தத்தையும், பிரிக்கவும்; நாராயணன் குடும்பத்தினரிடம் அவளை ஒரு தப்பான ஆளாக காட்டி விட வேண்டும் என்று தன் மனதிற்குள்ளே ரித்திகாவை அழிக்க சதி திட்டம் தீட்டி கொண்டு இருந்த மானசா, அந்த வீடியோ புடேஜ் ஐ சிவாவிற்கு மெயில் செய்தாள்.

மானசா: “இப்போதைக்கு நான் உனக்காக பெருசா எதுவும் பிளான் பண்ண தேவை இல்லன்னு தான் நினைக்கிறேன் ரித்திகா. ஏன்னா ஆல்ரெடி நம்ம ஹன்ட்சம் டெவில் வருணோட கூர்மையான பார்வை உன் மேல பட்டுருச்சே.. ஐ திங்க் அவன் உன்ன சந்தேக படுறான். அத நான் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆக்குன போதும். அந்த வருண்வே உன்ன இருக்குற இடம் தெரியாம அழிச்சுருவான்.” என்று லேப்டாப்பில் ரித்திகாவின் போட்டோவை பார்த்த படியே வில்லத்தனமாக பேசி விட்டு சிரித்தாள்.😈 😁

ஸ்டாஃப் ரூமிற்கு வந்த ரித்திகா தன்னுடைய பேக்கை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு ஒரு சேரில் அமர்த்து அவளுடைய டைம் டேபிளை பார்த்து கொண்டு இருந்தாள்.

“ஹாய் சிஸ்டர் நீங்க தான் நியூ என்ட்ரியா?” என்று ஒரு அழகான பெண்ணின் இனிமையான குரல் அவளுக்கு அருகில் கேட்பது போல் உணர்ந்த ரித்திகா திரும்பி பார்த்தாள். 

அப்போது ரித்திகாவின் அருகில் அந்த பள்ளியின் ஆசிரியருக்கான யூனிபார்ம் சாரியை கச்சிதமாக அணிந்து, தன்னுடைய கூந்தலை சுருட்டி கொண்டை போட்டு இருந்த அழகான பெண் ஓருத்தி ரித்திகாவை பார்த்து புன்னகைத்த படி அங்கே நின்று கொண்டு இருந்தாள்.”

“ரித்திகா வாயை திறந்து பேசுவதற்குள், அவளே மீண்டும் பேசினாள்.

அந்த பெண்: “ஹாய்..!! ஐ அம் ஷாலினி.” என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டவள், ரித்திகாவின் முன் தன் கையை நீட்டினாள். பதிலுக்கு தன்னுடைய கையை நீட்டி அவளுடன் ஹாண்ட் ஷேக் செய்த ரித்திகா, தன்னை அவளிடம் அறிமுக படுத்தி கொண்டாள்.

ஷாலினி: “அப்புறம் ரித்திகா அக்கா உங்களுக்கு இப்ப கிளாஸ் இருக்கா?” என்றவள், “சாரி நான் உங்கள அக்கான்னு கூப்பிடலாமா?” என்று தயங்கிய படி கேட்டாள்.

ரித்திகா: “அதுக்கு என்ன மா.. பரவால்ல அக்கான்னு கூப்பிடு.”

ஷாலினி: “ஓகே.. கா. அண்ட் நீங்களும் என்ன நீ, வா, போன்னே சொல்லுங்க. இந்த வா மா, போ மா லாம் வேணா.” என்று நட்பாக பேசினாள்.

ரித்திகா: “ஓகே..!! ஷாலினி. நீ கிளாஸ்க்கு போலையா..?”

ஷாலினி: “இல்ல கா எனக்கு இப்போ ஃப்ரீ தான். உங்களுக்கு கிளாஸ் இருக்கா?”

ரித்திகா: “இல்ல. என்க்கும் ஃப்ரீ தான்.”

ஷாலினி: “சூப்பர் கா. எப்பயும் எல்லாருக்கும் இந்த பீரியட் க்ளாஸ் இருக்கும். நான் மட்டும் தான் ஸ்டாப் ரூம் ல தனியா இருப்பேன். பரவால்லை இப்ப கம்பெனி -க்கு நீங்க வந்துட்டீங்க.”

ரித்திகா: “😁😁 நீ எந்த சப்ஜெக்ட் ஹேண்டில் பண்ற?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

ஷாலினி: “நான் சப்ஜெக்ட் ஹன்ட்ல் பண்ற டீச்சர் இல்ல கா. அசோசியேட் டீச்சர்.”

ரித்திகா: “அசோசியேட் டீச்சர் ஆ? ஆப்டினா?”

ஷாலினி: “கிளாஸ்ல டீச்சர் டீச் பண்ணிட்டு இருக்கிறப்ப , நம்ப அவங்களுக்கு அசிஸ்டன்ட் மாதிரி.. சுடென்ட்ச் ஆ மேனேஜ் பண்ணனும் அவ்வளவு தான்.”

ரித்திகா: “அவ்வளவு தானா..? என்ன இவ்ளோ ஈஸியா சொல்ற.? அதானே மெயின் டாஸ்க்கே..”

ஷாலினி: “அது உங்களுக்கு தெரியுது. மத்தவங்களுக்கு தெரிய மாட்டேங்குதே..” என்று சலிப்பாக சொன்னவள், “சரி அத விடுங்க நீங்க என்ன டீச்சர்?” என்றாள்.

ரித்திகா: “நானா.. நான் இங்கிலிஷ் அண்ட் டேன்ஸ் டீச்சர்.”

ஷாலினி: “பார்றா…!! அப்போ உங்களுக்கு டபுள் பேமென்ட் ஆ?”

ரித்திகா: “ஆமா” 😁😁 என்று மெல்லிதாக சிரித்த படி சொன்னாள். இப்படியே ரித்திகாவும், ஷாலினியும், ஒருவரைப் பற்றி ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர்.

நாராயணன் குரூப்ஸ்  அலுவலகத்தில்…

மீட்டிங் முடிந்து மீட்டிங் ஹாலில் இருந்து வெளியே வந்தான் வருண். வருண்னின் அருகில் சென்ற சிவா, “சார் நீங்க கேட்ட டீடெயில்ஸ் எல்லாமே ரெடியா உங்க டேபில்ல இருக்கு.” என்றான்.

வருண்: “ஒகே. நீ அத செக் பண்ணியா..?” என்று தன் ரூமை நோக்கி நடந்த படியே கேட்டான்.

சிவா: “எஸ் சார் ஃபுல்லா செக் பண்ணிட்டேன். சஸ்பிசியஸ் ஆ எதுவும் இல்லை.” என்று வருண்ணிற்கு இணையாக ஓட்டமும், நடையுமாக அவன் பின்னே சென்ற படி சொன்னான்.

வருண்: “ஒகே. லேட் மீ சீ.” என்று பேசிய படியே இருவரும் வருண்ணின் ஆபிஸ் ரூமுக்குள் நுழைந்தனர். வருண் தன்னுடைய சேரில் சென்று அமர்ந்தான்.

சிவா: “சார் நான் எல்லா டிடெய்ல்சையும் உங்க மெயில்க்கு சென்ட் பண்ணிட்டேன்.”

வருண்: “ஓகே. நான் பாத்துக்கிறேன் நீ கிளம்பு.”

சிவா: “ஓகே. சார்.” என்றவன் அங்கு இருந்து சென்று விட்டான்.

தன்னுடைய சிஸ்டம் ஐ ஆன் செய்து, அதில் சிவா அனுப்பிய மெயிலை ஓப்பன் செய்து, அதில் இருந்த டாக்குமென்ட் ஐ டவுன்லோட் செய்தான் வருண். முதல் டாக்குமென்டில் ரித்திகா உடைய போட்டோ இருந்தது. அதை கிளிக் செய்து ஓப்பன் செய்தான்.

அதில் சிரித்த முகத்துடன் எளிமையான ஒரு சுடிதார் அணிந்து, பெரிதாக எந்த ஒப்பனையும் இன்றி, அழகாக இருக்கும் ரித்திகாவின் புகைப்படம் இருந்தது. இந்த போட்டோவை வேறு யாரேனும் பார்த்திருந்தால், ரித்திகாவின் எளிமையான அழகினால்.. அவள் பாக்கம் ஈர்க்க பட்டு இருந்திருப்பார்கள்.

ஆனால் வருண்ணோ.. போலீஸ் ஸ்டேஷனில் வான்டட் லிஸ்டில் ஒட்ட பட்டு இருக்கும் குற்றவாளியின் போட்டோவை பார்ப்பது போல் ரித்திகாவின் போட்டோவை உற்று பார்த்தான். பின் அதற்கு அடுத்து அடுத்து இருந்த அனைத்து டாக்குமெண்ட் -களையும் திறந்து அதில் இருந்த அவளது தகவல்களை படித்தான்.

சிவா அவனிடம் சொன்னதைப் போல அவை அனைத்தும் சாதாரணமாக தான் இருந்தது. அவர்களுடைய வெரிஃபிகேஷன் டீமும் அவளைப் பற்றி விசாரித்ததில், அவளை பற்றி நல்ல படியாக தான் சொல்லி ரிப்போர்ட் சப்மிட் செய்து இருந்தனர். இருந்தாலும் இவை அனைத்தையும் வருண் ஏற்று கொள்ளவில்லை. ரித்திகா இடம் ஏதோ ஒரு தவறு கண்டிப்பாக இருக்க வேண்டும், அதை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று முழு மூச்சாக தேடி கொண்டு இருந்தான்.

வெகு நேரம் அவளைப் பற்றிய தகவல்களை அலசி ஆராய்ந்தும், வருண்ணிற்கு எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ஸ்கூலில் இருந்து பெறப்பட்ட வீடியோ புடேஜ் ஐ பிளே செய்து பார்த்தான்.

அதில் முதலில் பள்ளியின் உள்ளே வந்த ரித்திகாவின் நேராக ஆபிஸ் ரூமுக்கு சென்றதும், பின் அவள் வெளியில் வரும் வரை இருக்கும் காட்சிகள் இருந்தது. அதை இரண்டு, மூன்று முறை பிளே செய்து பார்த்தான் வருண். அதில் தவறாக எதுவும் இல்லை.

அடுத்து சித்தார்த் ரித்திகாவை வந்து அணைத்துக் கொள்ளும் வீடியோவை பார்த்தான். ரித்திகா தன்னுடைய மொபைலை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் போது திடீரென்று தான் அந்த நிகழ்வு நடந்தது. அந்த சம்பவத்திற்கான அதிர்ச்சியும் அவளுடைய முகத்தில் லேசாக தெரிந்தது.

இந்த காட்சி தெளிவாக சித்தார்த் தான் ரித்திகாவை சென்று பார்த்து பேசி இருக்கிறான், ரித்திகா எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என்று காட்டி கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் மனம் இது தான் உண்மை என்று ஏற்க மறுத்தது.

ஒரு வேளை சித்தார்த் அங்கு வந்து கொண்டு இருக்கிறான் என்று யாராவது அவளுக்கு மொபைலில் மெசேஜ் அனுப்பி இருக்கலாம் என்று பலவாறு யோசித்து ரித்திகாவின் மீது சந்தேகப் பட்டான் வருண்.

கேமராவில் வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை கண்டு பிடித்து அதை ப்ளே செய்து பார்த்தான். சரியாக ரித்திகா நின்றிருந்த இடத்தில், அவளுக்கு மேலே ஒரு கேமரா இருந்ததால், அவளுடைய மொபைல் ஸ்கிரீன் அதில் தெளிவாக பதிவாகி இருந்தது. அவளுடைய மொபைல் ஸ்கிரீன் வரும் பகுதியை அப்படியே ஸ்கிரீன் ஷாட் செய்து ஜூம் செய்து பார்த்தான் வருண்.

அது தெளிவாக காட்டியது அவள், அவளுடைய அம்மாவிற்கு டயல் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தாள் என்று. அனைத்தும் ரித்திகாக்கு சாதகமாகவே இருந்தாலும், ரித்திகா தான் தவறானவள் என்று வருண்ணின் மனம் மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தது.

பின் ரித்திகாவும், சித்தார்த்தும், பேசி கொண்டு இருந்த வீடியோவை மீண்டும் ப்ளே செய்து பார்த்தான். அவர்களின் இடையே இருந்த நட்பும், நெருக்கமும், அவனை கோபப்படுத்துவதற்கு போதுமானதாக இருந்தது. அவனுடைய கண்களை சுருக்கி அந்த வீடியோவை பார்த்தான்.

அவனுடைய மனைவியின் இறப்பிற்குப் பின் அவனுடைய மகனிடம் நெருங்கி பழக அவன் எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறான். ஆனால் சித்தார்த்தோ, எப்போதும் வருண்ணை பார்த்தால் பயந்து அவனிடம் பேசவே மாட்டான். இத்தனை வருடங்கள் ஆகியும் சித்தார்த் அவனை “அப்பா” என்று ஒரு முறை கூட அழைத்தது இல்லை.

இன்று புதிதாக வந்த இந்த ரித்திகா, எதுவும் செய்யாமல் அவனுடைய மகனின் மொத்த பாசத்தையும் திருடி கொண்டு சென்று விட்டதாக நினைத்து அவளின் மீது கோபப்பட்டான் வருண். இது கோபம் என்று சொல்வதை விட, தன் மகன், தன் மீது பாசம் காட்டுவது இல்லையே.. என்ற அப்பாவின் ஏக்கம் ஆக கூட இருக்கலாம். வருண்ணிற்கு சித்தார்த்தின் மேல் இருக்கும் பாசமே ரித்திகாவின் மீது கோபமாக திரும்பியது.

– நேசம் தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured