Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 226

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 226

by Thenaruvi Tamil Novels
5 views

அத்தியாயம் 226: மனசாட்சி இல்லாத மிருகம் (பார்ட் 1)

வருணின் ஷாப்பிங் மாலில்…

சித்தார்த்தையும், ஜான்வியின் பெற்றோர்களையும், ரித்திகாவுடன், கூட்டி கொண்டு சித்தார்த் எங்கே எல்லாம் போக வேண்டும் என்று ஆசை படுகிறானோ அந்த இடத்திற்க்கு எல்லாம் அவனை அழைத்துச் செல்வதாக அவனுக்கு வாக்களித்த வருண், முதலில் சித்தார்த் தான் ஒரு தீம் பார்க் -க்கு செல்ல வேண்டும் என்று சொன்னதால்; தன்னுடைய ஷாப்பிங் மாலிலும் ஒரு மினி தீம் பார்க் செட்டப் இருப்பதால், அவனை அழைத்த கொண்டு அங்கே சென்றான். 

தன்னுடைய அப்பா தான் கேட்கும் அனைத்தையும் தனக்காக உடனே செய்து கொடுப்பதால் மனம் மகிழ்ந்த சித்தார்த், “நீங்க தான் பெஸ்ட் டாடி. என் சூப்பர் ஹீரோ என்று சொல்லி விஷ்வா வை பாராட்டி தன் அன்பு மழையில் நினைய வைத்தான். 🤗 😍 😁 😁 😁

இனி..

வருணும், ரித்திகாவும், சித்தார்த்தின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க; அவர்களின் பின்னே ஜான்வியின் பெற்றோர்கள் மெதுவாக நடந்து வந்து கொண்டு இருந்தனர். அந்த மாலில் கீழ் தளம் முழுவதும் ஆடைகள், அழகு சாதன பொருட்கள், அழகு நிலையங்கள் என இருந்தன. சித்தார்த்துடன் தாங்கள் முதன் முதலில் இப்படி நேரடியாக மாலிற்கு வந்து  பர்ச்சேஸ் செய்வதால் அவனை கிட்ஸ் செக்ஷனுக்கு அழைத்துச் சென்றான் வருண். 

அங்கு டிஸ்பிலேவிலேயே குழந்தைகளுக்கான ஏராளமான ஆடைகள் வைக்கப்பட்டு இருந்தன. சித்தார்த்துக்கு பெரியதாக தான் இதை வாங்க வேண்டும் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதனால் அங்கே ஷோ பீசில் வைக்கப்பட்டு இருக்கும் பொம்மைக்கு அணிந்து இருந்த ஆடைகளை மட்டும் பார்த்துக் கொண்டே வந்தவன், ஒரு பொம்மையின் மீது போடப்பட்டு இருந்த ஸ்பைடர் மேன் ஆடையை பார்த்தவுடன் அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சித்தார்த், ரித்திகாவின் புடவையை பிடித்து இழுத்து; “ரித்தி அம்மா அது எனக்கு வேணும்.” என்றான். 

அந்த மாலின் மேனேஜரும் அவர்களுடனே அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடனே நடந்து வந்து கொண்டு இருந்தார். சித்தார்த் பேசியதை கேட்டவுடன் அவர், ஒருவரை அழைத்து அந்த ஸ்பைடர் மேன் டிரெஸ்ஸை சித்தார்த்தின் அளவிற்கு இருக்கும்படி  ஒன்றை எடுத்து பேக் செய்ய சொன்னான். ஜான்வியின் பெற்றோர்கள் அதற்கு தாங்கள் பணம் தருவதாக சொன்னார்கள். அவர்களைப் பார்த்து லேசாக புன்னகைத்த அந்த மாலின் மேனேஜர் அவர்கள் வடநாட்டுக்காரர்கள் என்பதை புரிந்து கொண்டு ஆங்கிலத்தில், “இந்த ஃபுல் மால் ஏ வருண் சார் உடையது தானே மேடம்..!! 🏬 அவரோட பையனுக்கு அவர் இங்க பே பண்ணி வாங்கணுமா…??” என்று கேட்டான். அதனால் ஜான்வியின் பெற்றோர்கள் அமைதியாகிவிட்டனர்.

பின் இதே போல் அங்கு இருந்த ஒவ்வொரு செக்சனாக வருண் அவர்களை அழைத்துச் செல்ல, தனக்கு பிடித்த ஒவ்வொன்றையும் தனக்காகவும்; தனக்கு பிடித்தவர்களுக்காகவும், ஏன் பூஜாவிற்காக கூட சிலவற்றை வாங்கினான் சித்தார்த். அந்த பைகளை எல்லாம் அவர்களுடன் வந்த மேனேஜரும் சில பாடி கார்டுகளும் சுமந்து கொண்டு வருணின் பின்னே வந்து கொண்டு இருந்தனர். 

இறுதியாக சித்தார்த்திற்க்கு வாக்கு கொடுத்ததை போல் அவனை அழைத்து கொண்டு தீம் பாக்கிற்குள்ளே நுழைந்தான் வருண். அந்த பார்க் ஐ பார்த்தவுடன் சித்தார்த்தை விட மிகவும் எக்சைட்டானது ரித்திகா தான். ஜான்வியின் பெற்றோர்கள் மிகவும் வயதானவர்கள் என்பதால், அவர்களால் சித்தார்த்துடன் அவன் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் அவனுடன் செல்ல முடியவில்லை. அதனால் அங்கே இருந்த வெயிட்டிங் ஏரியாவில் அவர்கள் அமர்ந்து கொண்டு இங்கு இருந்தபடியே தங்களுடைய பேரன் விளையாடி மகிழ்வதை கண்டு களிப்பதாக சொல்லிவிட்டு அங்கேயே அவர்கள் அமர்ந்து கொண்டு அவர்களை மட்டும்  அனுப்பி வைத்தனர். 

அங்கே நிறைய வாட்டர் கேம்கள் மற்றும் டிரை கேம்கள் இருந்தன. சித்தார்த் முதலில் தான் வாட்டர் கேமில் விளையாட வேண்டும் என்று தான் அடம் பிடித்தான். ஆனால், “சித்து குட்டி.. நேத்து தான் மழை பெய்ந்தது. அதுவும் இன்னைக்கு காலையில இருந்து நீ ரெண்டு தடவ குளிச்சிட்ட. இதுக்கு மேலயும் நீ தண்ணிக்குள்ளே இருந்தா உனக்கு சேராது காய்ச்சல் வந்துரும். அப்புறம் உனக்கு பெருசு பெருசா ஊசி போட்டு விட்டுருவாங்க. சோ நம்ம இன்னொரு தடவை வரும்போது வாட்டர்ல விளையாடலாம்.” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தி விட்டு ஃபேமிலியாக விளையாடும் கேம்கள் இருக்கும் பக்கம் அவனை அழைத்து சென்றாள். 

அங்கே புதியதாக ஸ்பைடர் டவர் என்ற ஒரு கேம் அமைக்கப்பட்டு இருப்பதாக அங்கே இருந்த மேனேஜர் அவர்களுக்கு ரெக்கமண்ட் செய்ய, அங்கே சென்று பார்த்தாள் ரித்திகா. அந்த கேமில் மேலே இருந்து கயிறு போன்ற ஒரு அமைப்பிற்குள் ஒவ்வொருவராக குதித்தால் அந்த அமைப்பு ஆழமாக அந்த கயிற்றுக்குள்ளே உள்ளே நம்மளை கொண்டு சென்று சுரங்கப்பாதை போன்ற மெத்தை விரிப்பில் நம்மளை கீழே கொண்டு போய் விழுகச் செய்துவிடும். அந்த குஷன் போன்ற அமைப்பில் நாம் விழுந்த பின்பே கீழே இருக்கும் ஒரு சுரங்க பாதை வழியாக வெளியே வந்து விடலாம். நாம் விழுந்து உள்ளே செல்லும் பாதை முழுவதும் பாக்ஸ் மாதிரியான கயிறுகள் நம்மை தடுத்து பின் நம்மை கீழே வெளிச்செய்யும். 

அங்கே வந்த பெரும்பாலானோர் புதிதாக வந்த இந்த கேமை தான் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்து கொண்டு இருந்தனர். 😍 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கேமை விளையாடுவதை கவனித்த சித்தார்த், “வாங்க நம்மளும் அதுல போய் விளையாடலாம்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான். “ஓய் அதுக்குள்ள போய் கீழ விழுந்து.. எந்திரிச்சு வெளிய வரணும் நீ பயப்பட மாட்டியா..???” என்று சித்தார்த்திடம் கேட்டாள்  ரித்திகா. 

“நான் தனியா போனா தான் பயப்படுவேன். நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க. நம்ம ஒன்னா சேர்ந்து உள்ள குதிக்கலாம். ஜாலியா இருக்கும்.” என்று ஆர்வமான குரலில் சொன்னான் சித்தார்த்.😍 “அங்க பாரு சித்… ஒவ்வொருத்தரா தான் உள்ள குதிச்சிட்டு இருக்காங்க. நம்ம மட்டும் எப்படி மூணு பேரும் ஒண்ணா போய் குதிக்க முடியும்..???” என்று கேட்டாள் ரித்திகா. “பரவால்ல அங்க ஸ்பேஸ் இருக்கு. எல்லாரும் ஒன்னாவே போய் குதிப்போம். அந்த ப்ராப்பர்ட்டி டேமேஜ் ஆக கூடாதுன்றதுக்காக தான் ஒவ்வொருத்தரா உள்ள குதிக்க சொல்றாங்க. நம்ப ஒன்னா ஒரு தடவை குதிக்கிறதுனால பெருசா ஒன்னும் டேமேஜ் ஆகிறது. இன்கேஸ் அப்படியே டேமேஜ் ஆனா கூட என்ன..?? பரவால்ல அவன் தான் ஆசைப்படுகிறான்ல…!!!” என்று வருண் உறுதியான குரலில் சொன்னான். 

வருண் தன்னுடைய மகனுடன் அந்த கேமை விளையாட தயாராகிவிட்டதால், அங்கே இருந்த மற்றவர்களை ஆட்களைை வைத்து அப்புறப்படுத்தினார் அந்த மேனேஜர். “ஏன் சார் நாங்க எல்லாரும் இங்க டிக்கெட் வாங்கிட்டு தானே வந்திருக்கோம் ஏன் எங்களை விளையாட விடாம அனுப்பி விடுறீங்க..???” என்று அங்கே இருந்த மக்கள் சிலர் அந்த மேனேஜரிடம் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.

அவர்களிடம் “எங்க பாஸ் வருண் நாராயணன் சார் ஃபர்ஸ்ட் டைமா அவரோட ஃபேமிலியோட இங்க வந்திருக்காரு. அவருடைய பையன் இங்க விளையாடனும்னு ஆசைப்படுறான். அவங்க டென் மினிட்ஸ்ல இங்க இருந்து போயிடுவாங்க. அவங்க போனதுக்கு அப்புறம், நீங்க எல்லாரும் லைன்னா விளையாடலாம்.” என்று சொல்லி அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி விட்டு வருணின் குடும்பத்தை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றார்.

சித்தார்த் அந்த இடத்தை பார்த்த உடனேயே மிகவும் எக்ஸைட் ஆனான். அங்கே நாம் நம்முடைய கைகளில் பிடித்துக் கொண்டு உள்ளே விடுவதற்கு ஒரே ஒரு கயிறு மட்டும் தான் இருந்தது. ஆனால் இப்போது அந்த கயிறை யார் பிடித்துக் கொள்வது என்ற கேள்வி அவர்கள் அனைவருக்குள்ளும் எழுந்தது. அதனால் சித்தார்த்தை பார்த்த ரித்திகா, “அப்பா உன்ன பிடிச்சிக்கிட்டு உள்ள போவாரு, நீ அவர் கூட போயிட்டு வரியா..?? என்று கேட்டாள். “நீயும் என் கூட வா ரித்திஅம்மா. அப்ப தான் நான் போவேன்.” என்று அடம் பிடித்தான் சித்தார்த்.

“அப்ப நீயும் நானும் மட்டும் போயிட்டு வரலாமா..?? அப்பா இங்கயே இருக்கட்டும்.” என்று மீண்டும் சித்தார்த்திடம் கேட்டாள் ரித்திகா. அப்போதும், “வேண்டாம். நம்ம மூணு பேரும் ஒண்ணா தான் போகணும்.” என்று சொல்லி மீண்டும் அடம் பிடிக்க தொடங்கினான் சித்தார்த். அதனால், “நம்ப என்ன மலையா ஏற போறோம்..??? எல்லாரும் ஒன்னாவே போலாம். நான் பாத்துக்குறேன்.” என்ற வருண் சித்தார்த்தை தூக்கிக்கொண்டு அங்கே சென்றவன் ரித்திகாவை பார்த்து வா என்று அழைத்தான். 

ரித்திகா அங்கே வந்தவுடன் அவளையும் சேர்த்து சித்தார்த்துடன் தன்னுடன் அழைத்துக் கொண்ட வருண், இன்னொரு கையில் கயிறை பிடித்து கொண்டு மெது.. மெதுவாக உள்ளே இறங்கினான். அங்கே இருந்த சிறிய சிறிய பாக்ஸ் வடிவ கயிறுகளுக்குள் அவர்கள் மாட்டி, முன்னும் பின்னும் புரண்டு ஒருவரின் மீது ஒருவர் இடித்துக் கொண்டனர். வருண் ரித்திகா மற்றும் சித்தார்த் இருவரையும் தன்னை விட்டு பிரியாமல் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். 😍 🤗

ரித்திகாவும் பயத்தில் அவர்கள் இருவரையும் இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டாள். 🤗 சித்தார்த் பயத்திலும், உற்சாகத்திலும், ஒரே சேர ஆ…ஆ..ஆ.. என்று கத்த தொடங்கினான். அதனால் ரித்திகாவும் ஆ…ஆ… என்று கத்த தொடங்கினாள். “அவன் குழந்தையா இல்ல.. இவ குழந்தையான்னே தெரியல.” என்று நினைத்துக் கொண்ட வருண், “பயப்படாதீங்க. ஒன்னும் ஆகாது. கீழ போய் குஷன் மேல தான் விழுவோம். யாருக்கும் அடிபடாது.” என்று அவனும் சத்தமாக கத்தி சொன்னான்.

பின் வருண் சொன்னதைப் போலவே சில நொடிகளிலேயே அவர்கள் கீழே வந்து ஒரு குஷனில் விழுந்து சேப்டியாக லேண்ட் ஆனார்கள். இருப்பினும் அதீத கியூரியாசிட்டியில் இருந்த சித்தார்த், ஆ…!!! என்று கத்தியப்படியே அந்த குஷனில்   படித்து உருள தொடங்கினான். வருனிடம் இருந்து பிரிந்து சித்தார்த்தின் அருகே சென்ற ரித்திகா, “போதும் டா கத்தாதே கம்முனு இரு. இவ்ளோ காத்து கத்ததுனின்னா, தொண்டை வலி வந்துரும்.” என்றவள், அவனை தூக்கிக்கொண்டு அங்கே இருந்த சுரங்கப்பாதை வழியாக வெளியே செல்ல தொடங்கினாள். இது அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ் ஆக இருந்தது.

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured