அத்தியாயம் 144
“எனக்கு என்ன தெரியாதான்னு கேட்கிற நீ..??” என்று குழப்பமாக மேகா கேட்க, “இந்த shopping mallஏ உங்களதுதான்.” என்றான் ரிஷி. அதனால் மேலும் குழம்பிய மேகா, “என்னடா உலர்ற..!!” என்று கேட்க, “இது உங்க Husband.. அதாவது விஷ்வா அண்ணா familyக்கு சொந்தமான property. VS Groups கேள்விப்பட்டது இல்லையா நீங்க? அதோட ஓனர் வாசுதேவன் சார் தான் விஷ்வா அண்ணாவோட அப்பா. So இந்த VS Mall உங்களோடதும் தான். நீங்க இங்க purchase பண்ணா pay கூட பண்ணத் தேவையில்லை. இது தெரியாம Price அதிகமா இருக்குன்னு நீங்க எதுவுமே வாங்காம வந்தீங்களா?” என்று கேட்டுவிட்டு மீண்டும் கிண்டலாக கலகலவென சிரித்தான் ரிஷி.
“ஆமா, விஷ்வாவோட அப்பா பேரு வாசுதேவன் தானே… ஆனா VS Groups owner அவர்தான்னு எனக்கு தெரியாதே.. அது சரி.. விஷ்வா சொல்லாம எனக்கு எப்படி தெரியும்?” என்று நினைத்து அவள் விஷ்வாவை முறைத்து பார்க்க, “என்ன அண்ணா.. எவ்ளோ பெரிய விஷயம் இது.. அண்ணிகிட்ட இதையெல்லாம் சொல்ல மாட்டீங்களா நீங்க..?? பாருங்க.. அண்ணி உங்கள எப்படி கோவமா பாக்குறாங்க…!! Wife கிட்ட இருந்து எதையும் மறைக்கக் கூடாது. நீங்க அவங்கக்கூட போய் எல்லா உண்மையையும் சொல்லி அவங்கள சமாதானப்படுத்துங்க. நீ வா சாரா.. நம்ம கிளம்பலாம்.” என்ற ரிஷி வலுக்கட்டாயமாக சாராவின் கையை பிடித்து இழுத்து அவளை தன் பைக்கில் அமர வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அமைதியாக தன் பைக்கில் ஏறி அமர்ந்த மேகா அதை Start செய்து வேண்டுமென்றே acceleratorஐ போட்டு முறுக்க, பைக்கில் இருந்து தீப்பொறிகள் பறக்க.. படபடவென்று சத்தம் கேட்டது.
“அடப்பாவி ரிஷி.. நீ அந்த பொண்ணுக்கூட கிளுகிளுப்பா இருக்கணும்னு அநியாயமா என் Lifeல கும்மி அடிச்சிட்டு போயிட்டேடா.. என் பொண்டாட்டி சும்மாவே ஆடுவா. இதுல நீ வேற நல்லா சலங்கை கட்டி விட்டுட்டு போயிருக்க..!! இன்னைக்கு அவ முழுசா சந்திரமுகியா மாற போறா…!! என்னாக போகுதோ..!!” என்று நினைத்து பெருமூச்சுவிட்ட விஷ்வா அவள் தோள்களின் மீது கை வைத்து ஏற போக, நகர்ந்து கொண்டாள் மேகா. “Right-டு.. இன்னைக்கு அந்த dogனால எங்களுக்குள்ள சண்டை Confirm.” என்று நினைத்து அவள் மீது உரசாமல் கொஞ்சம் தள்ளி பைக்கில் ஏறி அமர்ந்தான் விஷ்வா.
“எதுக்கு நீ விஷ்வா சார மேகா மேடம் கிட்ட போட்டு கொடுத்தா? Maybe இத பத்தி எல்லாம் அவங்ககிட்ட இப்போதைக்கு பேச வேண்டாம்னு அவர் நினைச்சிருக்கலாம்ல?” என்று சாரா கேட்க, “நீ சொல்றது 200% correct. இத பத்தி எல்லாம் அவங்ககிட்ட பேச வேண்டாம்ன்னு தான் விஷ்வா அண்ணா அவங்ககிட்ட எதுவும் சொல்லல. But இது எப்பவுமே அண்ணிக்கு தெரியாம போய்டாதுல்ல… அதுவும் அண்ணா கூடயே அவங்க அங்க Shopping போயும் அவரு உண்மைய சொல்லலைன்னு நெனச்சு அவங்க Feel பண்ணுவாங்க. அதான் நானே சொல்லிட்டேன்.” என்றான் ரிஷி. “ஓ.. ஓகே ஓகே..!!” என்று சாரா சொல்ல, “என்ன ஓகே ஓகே..??” என்று கேட்டான் அவன். “ஓகேன்னா ஓகே தான்.” என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க, “ஓகே.. ஓகே…!!” என்று இழுத்து சொல்லிவிட்டு தானும் சிரித்தான் ரிஷி.
காலையில் வெளியே சென்றிருந்த சேரன் வீடு திரும்பினான். வீட்டில் யாரும் இல்லாததால் வீடே அமைதியாக இருக்க, “என்ன காலையில வெளிய போனவங்க இன்னும் வரலையா..?? என் மச்சான் பொண்டாட்டி கூட நல்லா மஜாவா வாழ்றான்.” என்று நினைத்தவன் servant ஒருவனை அழைத்து, “வீட்ல யாரும் இல்லையா..?? சௌபர்ணிகா மேடம் எங்க இருக்காங்க..??” என்று கேட்டான்.
“காலையில வெளிய போன விஷ்வா சாரும் மத்தவங்களும் இன்னும் வீட்டுக்கு வரல சார். சௌபர்ணிகா மேடம் மேல உங்க ரூம்ல தான் இருக்காங்க.” என்று அந்த servant சொல்ல, “ஓகே ஓகே. இன்னைக்கு night நாங்க ரொம்ப busyஆ இருப்போம். யாரும் எங்கள வந்து disturb பண்ண வேண்டாம். நான் சொல்லும்போது.. Dinner மட்டும் எங்க roomக்கே அனுப்பி வெச்சிருங்க.” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான் சேரன்.
அங்கே night dressக்கு மாறி இருந்த சௌபர்ணிகா தனது laptopஐ எடுத்து வைத்து new gown designs வரைந்து கொண்டிருந்தாள். அவள் வாழ்க்கையை போல அந்த designsகழும் அவள் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை போல. அவள் முகம் வாட்டமாக இருக்க, அவள் கண்கள் கூர்மையாக அந்த laptopஐயே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது. பூனை போல மெல்ல நடந்து அவள் அருகில் சென்ற சேரன் பின்னே இருந்து அவளை அனைத்தவாரு “என்னடி மணி 10ஆக போகுது. உன் புருஷன் இன்னும் வீட்டுக்கு வரலையே.. காலைல வெளிய போனவன் இவ்ளோ லேட் ஆகியும் ஆள காணோமேன்னு நெனச்சு feel பண்ணி பயந்து ஒரு phone call கூட பண்ண மாட்டியா..??” என்று கேட்டான். அவன் என்னவோ அதை சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் பயத்தில் ஏசி ஓடியும் அவளுக்கு வியர்த்து கொட்ட, “Sorry.. sorry.. நான் workல கொஞ்சம் busyஆ இருந்ததனால மறந்துட்டேன்.” என்றாள் சௌபர்ணிகா.
கடந்த சில மாதங்களாக தவணை முறையில் அவ்வப்போது சேரன் அவளை கொடுமைப்படுத்திக் கொண்டே இருந்ததால் சௌபர்ணிகாவிற்கு anxiety, depression, stress என அனைத்தும் அளவிற்கு அதிகமாக வந்து அவளை பலவீனப்படுத்தி இருந்தது.
அவள் கைகள் நடுங்கியது. அதை கவனித்து இன்னும் பதட்டப்பட்ட சௌபர்ணிகா தன் ஒரு கையால் மற்றொரு கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு “டைம் ஆயிடுச்சுல்ல.. நீ போய் சாப்பிடு. நான் இந்த workஐ முடிச்சுட்டு வரேன்.” என்று திக்கி திணறி சொன்னாள்.
சட்டென எழுந்து நின்ற சேரன் அவள் அருகில் இருந்த laptopஐ எடுத்து ஓரமாக கிடந்த tableன் மீது வைத்துவிட்டு அவள் கைகளைப் பிடித்து அவளை தன் பக்கம் இழுத்தான். திக்.. திக்… இதயத்துடன் வியர்த்து வடிய அவன் மீது மோதி நின்றாள் அவள். “உண்மைய சொல்லு.. உனக்கு என் மேல இருந்த பாசம் குறைஞ்சிருச்சு தானே..!!” என்று அவன் கொடூரமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, உண்மை அதுவாக இருந்தாலும் கூட அதை சொல்ல முடியாத நிலைமையில் இருந்த சௌபர்ணிக்கா பயத்தில் வேகமாக இல்லை என்று இடவலமாக தலையாட்டினாள்.
அவள் தலையை பிடித்து உயர்த்தி அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்த சேரன், “உண்மைய சொல்லுடி.. ஏன் வாய தொறந்து பேச மாட்டியா நீ..??” என்று அதட்டலாக கேட்க, “கிட்டத்தட்ட 13 வருஷமா நான் உன்ன லவ் பண்றேன் சேரன். உன்ன கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் நீயும் என்னை லவ் பண்றேன்னு நான் நம்பிட்டிருந்தேன். ஆனா இப்போ தான் என் feelings எல்லாமே one sidedன்னு எனக்கு புரியுது. But அதுக்காக என்னால உன்ன வெறுக்க முடியல. என்ன பண்ணி தொலையறது.. நான்தான் உன்ன trueஆ லவ் பண்ணி தொலைஞ்சுட்டனே..!!” என்று உடைந்த குரலில் சொன்ன சௌபர்ணிகாவின் கண்கள் குளமாகி கண்ணீர் அருவி போல கொட்டத் தொடங்கியது.
.
அவள் தோள்களை இறுக்கிப்பிடித்த சேரன் அவள் கண்களை பார்த்து “yes, you are right. Finally இப்பதான் உனக்கு எல்லா உண்மையும் புரிஞ்சிருக்கு. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. நான் உன்ன லவ் பண்ணல. நான் சொல்றது.. உன் மண்டைக்கு ஏறுதா..??” என்று கேட்டுவிட்டு அவளை உலுக்கினான். பின் அவளை bedன் மீது தள்ளிவிட்டுவிட்டு “அப்பவும் இப்பவும் எப்பவும் நான்.. உன்ன.. லவ்.. பண்ணவே இல்லடி. அதுதான் உண்மை.” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தினான்.
அவனுடன் சேர்ந்து வாழ்ந்த இத்தனை நாட்களில் அது அவளுக்கே புரிந்திருந்தது தான். இருப்பினும் அவளது காதல் கொண்ட மனதை அவனது வார்த்தைகள் ஆயிரம் ஊசிகளை வைத்து குத்துவதைப் போல இருக்க, தன் முகத்தை மூடி கொண்டு உடைந்து கதறி அழுதாள் சௌபர்ணிகா.
அவள் அருகில் சென்று அவள் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்த சேரன், “நீ இப்படி கதறி கதறி அழுகிறத பார்க்கும் போது உள்ளுக்குள்ள அப்படியே எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா…??” என்று கேட்க, அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தன் பலம் கொண்டு தள்ளிய சௌபர்ணிகா “ஏன்டா இப்படி பண்ண..?? நான் என்ன பாவம் பண்ணேன்னு என் வாழ்க்கையில இப்படி விளையாடிட்டு இருக்க..?? உன்னை நான் trueஆ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் நான் செஞ்ச தப்பா..??” என்று கண்ணீருடன் ஆத்திரம் பொங்க கோபமாக கேட்டாள்.