அத்தியாயம் 205: நீங்க என் கிட்ட பேசாதீங்க (பார்ட் 1)
ஏற்கனவே ரித்திகாவுக்கு அதே கையில் தான் குளுக்கோஸ் டிரிப்ஸ் போடப்பட்டு இருந்தது என்பதால் அவன் வேறு வெறித்தனமாக பிடித்து இழுத்தில் அதிக கை வலி ஏற்பட, அதில் அவளுடைய தூக்கம் எல்லாம் பஞ்ஜாய் பறந்து போனது. இருப்பினும் இந்த காலை பொழுதில் இவன் ஏன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் எதிர்ச்சியாக, “நைட்டு நல்லா தானே நீங்க பேசிட்டு இருந்தீங்க..!! இப்ப என்ன ஆச்சுன்னு இவ்ளோ கோவமா இருக்கீங்க..???” என்று குழப்பமான குரலில் கேட்டாள்.😟 🙄
அவ்வளவு தான் ரித்திகா அப்படி கேட்டவுடன் வருணிற்கு கோபம் அவனுடைய தலைக்கு ஏறியது. அதனால் தான் வாயை திறந்து எதுவும் பேசுவதற்கு முன் பளார் என்று ரித்திகாவின் கன்னத்தில் அறைந்தான். 😒 😡 அவன் வெறித்தனமாக அடித்ததால் அதை தாங்கிக் கொள்ள முடியாத ரித்திகா , தன்னுடைய கன்னத்தில் ஒரு கையை வைத்தவள், அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்.
முதலில் மயங்கி விழுந்த ரித்திகாவை கோபமாக தான் பார்த்தான் வருண். 😡 தான் அவள் மீது கோபப்பட்டதால் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்ட வேண்டும் என்று அவள் மயக்கம் போட்டு விட்டதை போல் நடிக்கிறாள் என்று அவனுக்கு தோன்றியது. அதனால் அவளை ஏளனமாக பார்த்தவன், “போதும் ரித்திகா நீ இப்படி எல்லாம் நடிச்சு சீன் போட்டா அதை எல்லாம் நான் அப்படியே நம்பிடுவேன்னு நினைக்காத. நீ எப்படி ஆக்ட் பண்ணாலும் நீ பண்ணத நான் மன்னிக்கவே மாட்டேன்.” என்று ஆக்ரோஷமான குரலில் சொன்னான்.
அப்போதும் ரித்திகாவிடம் இருந்து ஒரு ஆசைவும் இல்லை. அதனால் கடுப்பான வருண் தன் இவ்வளவு கூறியும் இவள் தன்னுடைய நடிப்பை தொடர்கிறாளே என்று நினைத்தவன், தரையில் மயங்கி கிடந்த ரித்திகாவின் அருகே சென்று அவளுடைய தோள்களை பிடித்து உலுக்கினான். அப்போதும் அவள் எழுந்திருக்கவில்லை. பின் அவன் எதேச்சையாக அவளுடைய கைகளை தொட்டுப் பார்க்க, அவளுடைய உடல் மிகவும் குழுமையாக இருந்தது.
அதனால் பயந்து போன வருண், வேகமாக அவளுடைய பல்ஸை பிடித்து செக் செய்தான். நல்ல வேளையாக அவளுடைய நாடி துடிப்பு துடித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் அது மிகவும் மெல்லிதாக துடித்துக் கொண்டு இருந்தது. அதை உணர்ந்த பின்பு தான் அவள் நிஜமாகவே மயக்கம் போட்டு கீழே விழுந்திருக்கிறாள் என்று அறிந்து கொண்ட வருண், பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி அப்படியே அமைதியாக நின்று அவளுடைய முகத்தை பார்த்தான். அந்த நொடி அவனுடைய கண்களுக்கு ரித்திகாவோ மிகவும் நல்லவனாகவும், அப்பாவியாகவும், தெரிந்தாள்.
அதனால் குற்ற உணர்ச்சியின் வாடிய வருண் அவளை தூக்கி கட்டியில் படிக்க வைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் டாக்டருக்கு கால் செய்து அவரை அங்கே வர வைத்தான். டாக்டர் அங்கே வரும் வரை அவனுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் அவன் ஜான்வியை இழந்துவிட்டான். இப்போது திருமணம் ஆகி ஒரே நாளில் தான் ரித்திகாவையும் இழந்துவிட நேரிட்டால், என்ன செய்வது என்ற பயம் அவனை பிடுங்கி தின்றது. அதுவும் அவளுடைய இந்த அவலை நிலைக்கு அவன் தானே காரணம் என்று நினைக்கும் போதே அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை.
பொதுவாக தனக்கு கடவுள் நம்பிக்கையை இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் வருண், டாக்டர் வரும் வரை தன்னுடைய மனைவியான ரித்திகாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு இருந்தான். பின் சில நிமிடங்களில் அங்கே டாக்டர் வந்துவிட, அவரை விரைவாக சென்று ரித்திகாவை செக் செய்யுமாறு அவசரப்படுத்தினான் வருண். ரித்திகாவை செக் செய்த டாக்டர் அவளுக்கு ஒரு ஊசியை போட்டுவிட்டு, “நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி அவங்களுக்கு ஹெவியான டோஸ் மயக்க மருந்து குடுத்திருக்காங்க. அது முழுசா அவர்களுடைய பிளட்ல இருந்து போறதுக்கு ரெண்டு, மூணு, நாள் ஆகும்.
அது வரைக்கும் இவங்களுக்கு கொஞ்சம் ட்ரவுசியா தான் இருக்கும். நீங்க இவங்கள நல்லா பாத்துக்கோங்க. இவங்க மறுபடியும் இந்த மாதிரி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கனா, ஹாஸ்பிடல்ல வச்சு தான் இவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கணும். உங்க வைஃப் ரொம்ப வீக் ஆ இருக்காங்க மிஸ்டர் வருண்.” என்றவர் சில மாத்திரை மருந்துகளை எழுதி வருணின் கொடுத்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினார்.
அந்த டாக்டர் அங்கு இருந்து சென்ற பின்பும் அவர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருணின் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது. அவை இப்போது ரித்திகா இருக்கும் இந்த நிலைக்கு நீ தான் காரணம் என்று வருணை குறை கூறுவதைப் போல் இருந்தது. அதனால் மீண்டும் குற்ற உணர்ச்சியில் தவித்த வருண், சிவாவை அழைத்து அவனிடம் அந்த பிரிஸ்கிரிப்ஷனை கொடுத்து, அதில் இருக்கும் மாத்திரைகளை யாருக்கும் தெரியாமல் வாங்கிவரும் படி சொல்லி அனுப்பி வைத்தான்.
நேற்றைய இரவில் வருண் ரித்திகா விற்கும் இடையே என்ன நடந்தது என்று சிவாவிற்கு தெரியவில்லை. அதனால் உடல் நல குறைபாட்டின் காரணமாக தான் அவள் மயங்கி விழுந்து இருப்பாள் என்ற முடிவிற்கு வந்த சிவா, ரித்திகாவும் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து மருந்துகளை வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்றான்.
விஷ்ணுவின் அறையில்…
ஏற்கனவே மணி காலை ஏழரையை கடந்து இருந்தும், விஷ்ணுவும் ஷாலினியும் இன்னும் ஒருவரை ஒருவர் அணைத்த படி தூங்கிக் கொண்டு தான் இருந்தனர். 🤗 🥰 👩❤️👨 விஷ்ணு செட் செய்து வைத்த அலாரம் பல முறை அலறியும் அவர்கள் அதை ஆப் செய்துவிட்டு மீண்டும் தூங்க தொடங்கினர். விஷ்ணு கும்பகர்ணன் என்றால், ஷாலினி ஒரு கும்பகரணி. நல்ல நாளிலேயே அவள் இடி இடித்தாலும் தன் அருகே இடி விழுந்தாலும் கூட, தூக்கத்தில் இருந்து எழுபவள் கிடையாது. இப்போது அவள் அருகே விஷ்ணு வேறு இருப்பதால் நாம் அதைப் பற்றி சொல்லவா வேண்டும்..?? அவர்கள் இருவரும் தங்களை மறந்து தங்களுக்கான உலகத்தில் திளைத்து இருந்தனர்.
விஷ்ணுவின் அறையில் இருந்த ஒரு ஜன்னலின் வழியாக அவனுடைய முகத்தில் வந்து சூரிய வெளிச்சம் விழ, அதனால் கேஷுவலாக கண் விழித்த விஷ்ணு எதேச்சையாக தன் அருகே ஷாலினி படுத்து இருப்பதை கவனித்தவன், அதிர்ச்சிி அடைந்தான். 😨 😱 அப்போது தான் நேற்று இரவு நடந்தவை அனைத்தும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அதனால் தன் நெஞ்சில் சாய்ந்து படுத்து இருந்த ஷாலினியை தன் மீது இருந்து அவசரமாக விலக்கிவிட்ட விஷ்ணு, அவன் அலாரத்தை ஆப் செய்து எங்கேயோ தூக்கி போட்டு இருந்த மொபைல் போனை தேடி கண்டு பிடித்து அதில் நேரத்தை பார்த்துவிட்டு ஷாலினியை அவசர அவசரமாக எழுப்பி அவளை வெளியே கூட்டிக்கொண்டு வந்தவன், அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அவளை அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவன் மீண்டும் தன்னுடைய அறைக்கு வருகையில் லிப்டில் இருந்து வெளியே வந்த டாக்டர் ஐ கவனித்தான்.
அவர் வருணின் அறையில் இருந்து வருவதை வைத்து கண்டிப்பாக அவர் ரித்திகாவை தான் செக் செய்ய வந்திருப்பார் என்று புரிந்து கொண்ட விஷ்ணு அவர் அருகே சென்று ரித்திகாவை பற்றி விசாரித்தான். அந்த டாக்டர் வருனிடம் ரித்திகாவை பற்றி எதை சொல்லி விட்டு வந்தாரோ அதை அப்படியே விஷ்ணுவிடமும் சொன்னார். டாக்டர் பேசியதை கேட்ட உடனேயே வருணிக்கும் வருணிக்கும் ரித்திகா விற்கும் இடையே ஏதோ ஒரு சண்டை நடந்து இருக்கிறது என்று புரிந்து கொண்டான் விஷ்ணு.
அதனால் உடனே வருணையும், ரித்திகாயும் சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்தவன், வேகவேகமாக வருணின் அறைக்கு சென்றான். அங்கே வருண் தன்னுடைய கட்டிலில் இன்னும் மயக்கத்தில் கிடக்கும் ரித்திகாவை சோகமாக பார்த்தபடி ஒரு சேரில் அமர்ந்து இருந்தான். 😓 தன்னுடைய அண்ணனின் அனைத்து அசைவுகளையும் நன்கு அறிந்து வைத்து இருந்த விஷ்ணுவால் அவனுடைய முகத்தை வைத்து இப்போது அவன் குற்ற உணர்ச்சியில் வாடி கொண்டு இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளள முடிந்தது. ஆனால் அந்த அளவிற்கு என்ன நடந்தது என்று யோசித்த படியே அவன் கட்டிலில் மயங்கி கிடந்த ரித்திகாவை பார்க்க அவளுடைய முகத்தில் பதிந்து இருந்த வருண் விரல்களின் அச்சுக்கள் அவனுடைய கண்களில் பட்டது. எத்தனை பலமாக ரித்திகாவை வருண் அடித்து இருப்பான் என்று சொல்லாமல் சொல்லியது.
அதனால் முதன் முதலாக வருண் மீது அதிக கோவப்பட்ட விஷ்ணு அவனை பார்த்து முறைத்தவன், “ரித்திகா அண்ணிய அடிச்சீங்களா அண்ணா..??” என்று கோவமாக குரலில் கேட்டான். 😒 🤨 இதே வேறு ஒரு நேரமாக இருந்தால் தன்னை விட சிறியவனான விஷ்ணு என்ன தன்னைக் கேள்வி கேட்பது..?? என்று நினைத்து அவனிடம் எதையாவது சொல்லி அவனை மிரட்டி அனுப்பி வைத்து இருப்பான் வருண். ஆனால் இப்போது தவறு அவன் மீது என்பதால், அவனால் அப்படி செய்ய முடியாமலும், விஷ்ணுவிற்கு பதில் சொல்ல முடியாமலும், தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டான். 😓
அவனுடைய இந்த செய்கைகளை வைத்து அவன் தான் கண்டிப்பாக ரித்திகாவை அடித்து இருக்கிறான் என்று உறுதி செய்த விஷ்ணு கோபமாக வருணின் அருகே சென்றவன், “ஏன் அண்ணா இப்படி பண்ணிங்க..?? நியாயமா ரித்திகா அண்ணி தான் உங்க மேல கோபப்பட்டு இருக்கணும். ஆனா உடம்பு சரி இல்லாத அவங்க மேல போய் நீங்க கோவப்பட்டு அவங்கள அடிச்சு இருக்கீங்க.” என்று உச்ச ஸ்தூதியில் சொன்னான்.
வருண்: ஓர கண்ணால் விஷ்ணுவை பார்த்தவன், “நான் என்ன டா பண்ணேன்..?? அவ என்ன பண்ணான்னு தெரியாம.. நீ ஏன் என்னை மட்டும் தப்பு சொல்ற..?? என்று தாழ்ந்த குரலில் கேட்டான். 😓 😕
விஷ்ணு: நீங்க என்ன பண்ணிக்கலாம்… எனக்கெல்லாம் டவுட் ஏ இல்ல. கண்டிப்பா எல்லா தப்பும் உங்க மேல தான் இருக்கும். நேத்து நீங்க தான் மூச்சு முட்ட குடிச்சிட்டு உங்க ரூமுக்கு வந்தீங்க. அப்பயும் சிவா ப்ரோ உங்களை இப்ப ரூமுக்கு போவேனான்னு எத்தனையோ தடவை சொல்லி தடுத்தாரு.
நீங்க தான் அவர் சொன்னதை கேட்காம நான் உள்ளே போய் தான் தீருவேன் போனீங்க. நானும் இந்த நிலைமையிலயாச்சும் உங்களுக்குள்ள ஏதாவது ஒரு நல்லது நடந்தா, நல்லது தானேன்னு நெனச்சு சந்தோஷப்பட்டு கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா அது தான் நான் பண்ண தப்பு அண்ணா. உங்கள பத்தி தெரிஞ்சு இருந்தும் உடம்பு சரி இல்லாத அண்ணிய உங்க கூட நான் தனியா விட்டு இருக்க கூடாது. நீங்க அவங்கள இப்படி அடிச்சு மயக்கமாக வச்சிருக்கீங்க. ஏன் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க..??
மத்தவங்க கிட்ட எப்படியோ நம்ம ஃபேமிலில இருக்கவங்ககிட்ட நீங்க நல்லபடியா தானே பிஹேவ் பண்ணுவீங்க..!! ஆனா ஏன் அண்ணிகிட்ட மட்டும் இப்படி பிஹேவ் பண்றீங்க..?? ரித்திகா அண்ணி ரொம்ப பாவம். நான் எல்லாம் உங்களுக்கு இந்த மாதிரி அட்வைஸ் பண்றேன்னு என்னை தப்பா நினைச்சுக்காதீங்க. ரித்திகா அண்ணி ரொம்ப நல்லவங்க அவங்கள ப்ளீஸ் நல்லா பாத்துக்கோங்க.” என்று சொன்னவன் ஒருமுறை வருத்தம் நிறைந்த கண்களுடன் ரித்திகாவை திருப்பி பார்த்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். 😓
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)