அத்தியாயம் 206: நீங்க என் கிட்ட பேசாதீங்க (பார்ட் 2)
விஷ்ணு அவனிடம் நேற்று தான் இருந்த நிலையைப் பற்றி சொல்லிவிட்டு சென்ற பின்பு தான் மீது இருக்கும் தவறை பற்றி யோசிக்கவே தொடங்கினான் வருண். இப்போது தான் நேற்று என்ன நடந்து இருந்தாலும் அதற்கு சரி பாதி தனக்கும் பங்கு இருக்கிறது என்று அவனுடைய மூளைக்கு உரைத்தது. அதனால் வலி நிறைந்த கண்களுடன் ரித்திகாவை திரும்பி பார்த்தான் வருண்.
அப்போது ரித்திகா லேசாக மயக்கம் தெளிந்து தன்னுடைய கண்களை திறக்க முயற்சித்து கொண்டு இருந்தாள். அதனால் வேகமாக அவள் அருகே சென்ற வருண், “ரித்திகா ” என்று அவளை அழைத்தான். அவனுடைய குரலைக் கேட்டு வேகமாக தன்னுடைய கண்களை திறந்த ரித்திகா முதலில் நேற்று இரவு அவள் வேதனையில் இருந்த வருணை அவள் சமாதானம் செய்ததும் பின் காலையில் எழுந்தவுடன் அவன் தன்னை அடித்து வேதனைக்கு உள்ளாக்கியதும் அவளுக்கு ஞாபகம் வந்தது.
அப்போதே வருண் ரித்திகாவின் கையை பிடிக்க வர அதை உணர்ந்து கொண்ட ரித்திகா தன்னுடைய கையை வேகமாக நகர்த்தியவள், “நீங்க என்கிட்ட பேசாதீங்க.” என்று உணர்ச்சி அற்ற குரலில் சொன்னவள், தன்னுடைய முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள். அப்போது அவள் வருண் அறைந்த கன்னத்தின் பக்கம் அழுத்தத்தை கொடுக்க, அவளுக்கு லேசான வலி ஏற்பட்டது. அதனால் தன்னுடைய முகத்தை சுளித்த ரித்திகா அவன் தன்னை அப்படி அத்தனை வேகமாக அடித்தது மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்தது. அவன் தன்னை அடிக்கும்போது தன்னை எதோ ஒரு விரோதியை போல் நினைத்து வன்மத்தில் அடித்ததை போல் உணர்ந்தாள் ரித்திகா . அதனால் அவளுக்கு வருணின் பேச கூட பிடிக்கவில்லை.
வருண்: “இட்ஸ் ஓகே உனக்கு என் கூட நார்மலா பேச பிடிக்கலைன்னா, நீ பேச வேண்டாம். ஆனா நேத்து நைட் என்ன நடந்துச்சுன்னு மட்டும் எனக்கு சொல்லு. ப்ளீஸ் எனக்கு அது தெரிஞ்சே ஆகணும்.” என்று கெஞ்சும் தோணியில் கேட்டான்.
ரித்திகா: “இந்த கொஸ்டின் ஐ நீங்க முன்னாடியே என்கிட்ட கேட்டு இருக்கணும். நீங்களா உன்ன புரிஞ்சிக்கிட்டு பேசி, நீங்களா என்ன மேல கோவப்பட்டு அடிச்சிங்க. இப்போ நீங்க வந்து என்கிட்ட என்ன நடந்துச்சுனு கேட்டா, நான் மட்டும் பொறுமையா உங்ககிட்ட்ட எல்லாத்தையும் சொல்லணும் இல்ல..???” என்று கோபமாக கேட்டாள். 😒 😡
வருண்: “நான் இதுவரைக்கும் அதிகமா யார்கிட்டயும் சாரி சொன்னது இல்ல. இப்ப உன்கிட்ட சொல்றேன் ஓகே.. ஐ அம் சாரி. நான் ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டேன். நான் உன்ன அடிச்சது தப்பு தான். ப்ளீஸ் இப்பவாவது நேத்து என்ன நடந்துச்சுன்னு உண்மையை சொல்லி தொல டி.” என்று பாவமாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். 😟 😓
அவனுடைய அந்த பாவமான முகத்தை பார்த்த பின்பும் ரித்திகாவால் அவன் மீது வெகு நேரம் கோபமாக இருக்க முடியவில்லை. அதனால் நேற்று நடந்த அனைத்தையும் மறைக்காமல் அவனிடம் சொல்லிவிட்டாள் ரித்திகா. அவள் பேசும்போது அவளுடைய ஒவ்வொரு முக அசைவுகளையும் கவனித்துக் கொண்டு இருந்த வருணிற்கு அவள் சொல்வது உண்மை தான் என்று அவனுடைய இத்தனை வருட அனுபவங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.
அதனால் தன் மீது அனைத்து தவறையும் வைத்துக்கொண்டு தேவை இல்லாமல் ரித்திகாவை குறை கூறி இருக்கிறோம் என்று புரிந்து கொண்டு வருண், குற்ற உணர்ச்சியுடன் ரித்திகாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான். ஆனால் ரித்திகாக்கு ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்ளும் வருணின் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை. அதனால் வேறு புறமாக திரும்பி படுத்துக் கொண்டாள் ரித்திகா.
அப்போது நேற்று இரவு அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியாமல் இப்போது தான் இந்நேரத்தில் ரித்திகாவை அழைக்க சென்று அவளை அழைப்பது சரியாக இருக்குமா? என்ற குழப்பத்தில் இருந்த செண்பகம் தான் நேரில் செல்வதற்கு பதிலாக போனில் அவளை தொடர்பு கொள்வது நல்லது என்று நினைத்தவள், முதலில் மருமகளாக நேற்று இந்த வீட்டிற்கு வந்த ரித்திகா நியாயமாக பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து இருக்க வேண்டும். ஆனால் அவள் நேற்று முழுவதும் மயக்கத்திலேயே இருந்ததால், அந்த விட்டுப் போன சடங்குகளை இது செய்ய வேண்டும் என்று நினைத்த செண்பகம் நல்ல நேரம் முடிவதற்குள் சீக்கிரமாக ரித்திகாவை கிளம்பி கீழே வரும்படி சுருக்கமாக சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தாள்.
இப்போதும் கூட ரித்திகாக்கு மிகவும் சோர்வாகத்தான் இருந்தது இருப்பினும் செண்பகத்தின் பேச்சை தான் மீற முடியாது என்பதால், வேறு வழி இன்றி எழுந்து தன்னை ரெப்ரெஷ் செய்து கொள்வதற்காக ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள். முதலில் அதை கவனித்த வருண், அவளிடம் எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களில் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்த ரித்திகா, தான் அடுத்து உடுத்துவதற்கான தன்னுடைய வீட்டில் இருந்து எடுத்து வந்த ஆடைகள் எங்கே இருக்கும் என்று சுற்றி தன்னுடைய கண்களால் தேடிப் பார்த்தாள்.
சில மினி அறைகள் மற்றும் வாட்றோர்களால் நிறைந்து இருந்த பெரிய அறையில் வருண் தன்னுடைய ஆடைகள் எங்கே இருக்கிறது என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி இதை பற்றி நேரடியாக வருணின் கேட்டுவிடலாம் என்றாலும் அவளுக்கு ஒரு பக்கம் தயக்கமாகும் இன்னொரு பக்கம் பயமாகவும், கோபமாகவும், இருந்தது. அதனால் குழப்பத்தில் தன்னுடைய புடவையின் முந்தானையை பிடித்து கசக்கி கொண்டு இருந்தாள்.
அவளுடைய முகத்தை வைத்து அவளுடைய மனதில் என்ன ஓடுகிறது என்று கண்டு கொண்ட வருண், மென்மையாக அவளுடைய கையை மென்மையாக பிடித்துக் கொண்டு ஏற்கனவே ஜான்வின் பொருட்கள் நிறைந்து இருந்த அறையின் அருகே அவளை கூட்டி சென்றான். வருண் ஏதோ ஒரு பட்டனை பிரஸ் செய்ய, அந்த அறை திறந்திடு சிசே என்பது போல திறந்தது. அதற்குள் ரித்திகாவை அழைத்து கொண்டு சென்றான் வருண். இது என்ன அறைக்குள் இன்னொரு அரை என்று நினைத்து குழம்பிய ரித்திகா அங்கு இருந்த அனைத்தையும் வருனை மாறி மாறி குழப்பமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். 🙄
இதே வேறு ஒரு நாளாக இருந்து இருந்தால் இது ஜான்விக்கு சொந்தமான இடம் அதில் இப்போது ரித்திகா ஆதிக்கம் செலுத்த போகிறாள் என்று நினைத்து அவள் மீது கோபமும், தன் மீது வருத்தத்திலும் விரத்தியும் இருந்து இருப்பான் வருண். ஆனால் இப்போது அவன் மனம் முழுவதும் ரித்திகாவின் மீது குற்ற உணர்ச்சியில் தான் இருந்தது. அதனால் ரித்திகாவை இதற்கு முன்பு ஜான்வியின் அறையாக இருந்த அறைக்குள்ளே அழைத்து சென்ற வருண், அவளுக்கென அங்கே இருந்த வாட்ரோபுகளை திறந்து அதில் இருந்த தங்க நகைகள், வைர நகைகள் முதல் டெய்லி வேர் ஆடைகள், காஸ்ட்லியான ஆடைகள், வரை அனைத்தையும் அவளிடம காட்டினான்.
அங்கு ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் என இல்லாமல் அவள் பயன்படுத்துவதற்கு என பிற உபகரணங்கள், காலணிகள், கைப்பைகள், சிகை மற்றும் முக அலங்கார பொருட்கள் என அனைத்துமே இருந்தது. இவை அனைத்தும் எனக்கே எனக்கா..?? என்பது போல அனைத்தையும் தன் வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா. அது ஒரு பெண்ணின் அறை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அது ஒரு மினி ஷோரூம் போல் பலவித பொருட்களால் நிரம்பி இருந்தது.
தன் மீது கோபமாக இருக்கும் ரித்திகாவை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்த வருண், அவனே அங்கு புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு அலமாரியின் அருகே அழைத்துச் சென்று அதில் ஒரு நல்ல புடவையை அவளுக்கு தேர்ந்தெடுத்தும் கொடுத்தான். இவை அனைத்தையும் தனக்கு வருண் தான் செய்கிறானா என்று நம்ப முடியாமல் அவனை ஆச்சரியமுடன் பார்த்தாள் ரித்திகா.
அவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தத வருண், “என் ஃபேஸ்ல என்ன தெரியுதுன்னு நீ என்னையே பாத்துட்டு இருக்க..?? அம்மா உன்ன கீழ வர சொல்லி தானே போன் பண்ணாங்க… போய் சீக்கிரம் ரெடி ஆகு போ.” என்று கேஷுவனாக சொன்னவன், தானும் ரெடி ஆவதற்காக அங்கே இருந்து சென்று விட்டான்.
சில நிமிடங்களுக்கு பின்…
குளித்து முடித்து தயாராகி வந்து தன்னுடைய அறையில் இருந்த சோபாவில் அமர்ந்த வருண், முன்பு ஜான்வியின் அறையாக இருந்து இப்போது ரித்திகா அறையாக மாறிவிட்ட அறையை எட்டிப் பார்த்தான். அங்கே இருக்கும் ரெஸ்ட் ரூமில் தண்ணீர் விழும் சத்தம் அவனுக்கு தெளிவாகக் கேட்டது. அதனால் அவள் குளித்துக் கொண்டு இருக்கிறாள் போல என்று நினைத்த வருண் அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.
இப்படியே அரை மணி நேரத்திற்கு மேல் கடந்து விட ரெஸ்ட் ரூமில் இருந்து தண்ணீர் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டு இருந்ததே தவிர, ரித்திகா வெளியே வருவதற்கான எந்த அடையாளமும் அவனுக்கு துளியும் தெரியவில்லை. அதனால் மீண்டும் எங்கே அவள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாளோ என்று நினைத்து பயந்த வருண், வேகமாக ரித்திகாவின் அறைக்குள்ளே சென்றான். ரெஸ்ட் ரூமின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் தண்ணீர் விழும் சத்தம் மட்டும் தொடர்ந்து அவனுக்கு கேட்டு கொண்டே இருந்தது. அதனால் அதன் கதவை தட்டிய வருண், ரித்திகாவின் பெயரைச் சொல்லி அவளை அழைத்தான்.
ஆனால் ரித்திகாவிடம் இருந்து அவனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் பயந்து போன வருண் , அங்கே இருந்த மாஸ்டர் கீயே எடுத்து கொண்டு அந்த ரெஸ்ட் ரூமின் கதவை திறந்தான். அவன் சிறிதும் தயக்கம் இன்றி பதட்டத்துடன் உள்ளே சென்று பார்க்க, குளித்துவிட்டு கையில் ஒரு ஆடையுடன் ரித்திகா நிர்வாணமாக தரையில் மயங்கி கிடந்தாள். அந்த காட்சியை கண்டு அதிர்ந்து போன வருண், முதலில் தன்னுடைய கண்களை மூடி கொண்டான். பின் தான் இவளை இப்படி பார்க்க விரும்பவில்லை என்பதற்காக அவன் இவளை இப்படியே விட்டுவிட்டால் இவள் ஜன்னி வந்து இறந்து போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த வருண்; வேறு வழியின்றி தன்னுடைய கண்களைத் திறந்து வேக வேகமாக ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு வந்து அதை ரித்திகாவின் மீது போட்டு சுற்றி அவளை தூக்கிக்கொண்டு தன்னுடைய கட்டிலில் வந்து படுக்க வைத்தான்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)