Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 204

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 204

by Thenaruvi Tamil Novels
52 views

அத்தியாயம் 204 ரித்திகாவை அறைந்த வருண் (பார்ட் 2)

நேரம் இரவு 1:30 மணி… 

இன்னும் ஷாலினி உறங்காமல் தன்னுடைய அறைக்குள் உலாத்திக் கொண்டு தான் இருந்தாள். “இப்ப நம்ப அங்க போனா வெளியில யாரும் இருக்க மாட்டாங்க.” என்று நினைத்த ஷாலினி, தன்னுடைய மொபைல் போனை வேகமாக எடுத்து விஷ்ணுவிற்கு “தூங்கிட்டியா…??” என்று மெசேஜ் செய்தாள். 

 விஷ்ணு: “இன்னும் இல்ல டி. உன்னோட நெனப்பாவே இருக்கு. எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது. நானே உனக்கு மெசேஜ் பண்ணலாம்னு தான் இருந்தேன். ஆனா நீ அதுக்கும் கோச்சுக்கட்டினா என்ன பண்றதுன்னு தான் நான் பண்ணல.” 😣 😥 என்று அவளுக்கு ரிப்ளை செய்தான்.

 விஷ்ணுவின் மெசேஜை படித்த படியே ஷாலினி அவனுடைய அறை கதவின் முன்னே வந்து நின்றாள். அதனால், “போதும்.. போதும். ரொம்ப பீல் பண்ணாத. வந்து டோர் ஐ ஓபன் பண்ணு.” என்று மெசேஜ் செய்தாள் ஷாலினி.

விஷ்ணு: “அதான் நீ இங்க வர மாட்டேன்னு சொன்னில டி.. அப்புறம் எதுக்கு டோர் ஐ ஓபன் பண்ண சொல்ற..?? என்ன சின்ன பிள்ளைங்க கிட்ட விளையாட்டு காட்ற மாதிரி என்கிட்டயும் இப்படி பேசி என்னை ஏமாத்த பாக்குறியா..??”😒 என்று ரிப்ளை செய்தான். 

ஷாலினி: “டேய் கிறுக்கு பயலே.. நான் உன்னோட ரூமுக்கு வெளியில தான் டா நிற்கிறேன். இப்ப வந்து நீ கதவை திறக்கிறியா இல்ல நான் என்னோட ரூம் -க்கே போகட்டுமா…??” 😡 🤨 என்று மெசேஜ் செய்தாள். 

விஷ்ணு: இப்போதும் அவள் நிஜமாக தான் இங்கே வந்திருக்கிறாள் என்று அவனால் நம்ப முடியவில்லை. இருப்பினும் ஒரு வேளை அவள் மனம் இறங்கி நிஜமாகவே இங்கு வந்து இருந்து இவன் சென்று கதவை திறக்காமல் போனால் கண்டிப்பாக அவள் இதை வைத்தே பெரிய சண்டையை இழுத்து விட்டு விடுவாள் என்று நினைத்து பயந்தவன், வேகமாக சென்று கதவை திறந்தான். 

எப்படியும் அங்கே ஷாலினி இருக்கப் போவதில்லை என்று நினைத்த விஷ்ணு அலட்சியமாக வெளியே பார்க்க, அங்கே ஷாலினி இரவு நேரங்களில் உடுத்தும் பைஜாமாவை அணிந்து கொண்டு தன்னுடைய முடியை தூக்கி கொண்டை போட்ட படி நின்று கொண்டு இருந்தாள். அவள் நிஜமாகவே அங்கு வந்திருப்பது பார்த்து அதிர்ந்து போன விஷ்ணு இவளை யாராவது கவனித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்து அவளை வேகமாக உள்ளே இழுத்த பின் கதவை வேகமாக சாற்றி தாழிட்டான். 

விஷ்ணு ஷாலினியை வேகமாக பிடித்து இழுத்ததால் அவளுடைய கைகள் லேசாக  வலித்தது. அதனால் அவனை கோபத்தில் முறைத்துப் பார்த்த படி நின்று கொண்டு இருந்தாள் ஷாலினி. 😒 🤨 “இவ ஏன் இப்படி நம்மள பாத்து முறைக்கிறா..??” என்று ஒரு கணம் நினைத்து பார்த்த விஷ்ணுவிற்கு அப்போது தான் அவன் அவளுடைய கையை பிடித்து அழுத்தியது ஞாபகம் வர, “சாரி டி செல்ல குட்டி. உனக்கு கை வலிக்குதா டி தங்கம்..!!! நான் வேணா உன் கைய பிடிச்சு அழுத்தி விடட்டுமா..??” என்று கேட்டவன் ஷாலினியை ஒரு கையை பிடித்து அதை மெதுவாக அழுத்த தொடங்கினான்.

வேகமாக அவனுடைய கைகை தட்டிவிட்ட ஷாலினி வேறு புறமாக திரும்பி நின்று கொண்டாள். அப்போது தான் அந்த அறையின் அழகையும், ஆடம்பரத்தையும், அவள் கவனித்தாள். விஷ்ணு ஏற்கனவே அவளிடம் சொன்னதைப் போல அந்த அறை முழுவதையும் சிவப்பு மற்றும் பிங்க் நிற காம்பினேஷனில் வடிவமைத்து இருந்தான். அந்த அறைக்குள் ஷாலினிக்கு மிகவும் பிடித்த தலை அஜித்தின் போட்டோ கூட மாட்டப்பட்டு இருந்தது. ஒரு முறை ஷாலினி விஷ்ணுவிடம் தனக்கு மல்லிகை பூவின் மனம் மிகவும் பிடிக்கும் என்று சொல்லி இருந்ததால், அந்த அறை முழுவதும் மல்லிகை பூ ரூம் ஸ்பிரேவை அடித்து விட்டு இருந்தான் விஷ்ணு.

அது மட்டும் இன்று அந்த அறையில் ஒரு மூலையில் ஷாலினிக்கு மிகவும் பிடித்த சோட்டா பீம் பொம்மையும் என் கூட இருந்தது. அதை கண்டவுடன் குழந்தையாய் உற்சாகத்தில் குதித்த ஷாலினி, அந்த ஆள் உயர பொம்மையை எடுத்து வந்து அதை கட்டிப்பிடித்து கொண்டு உற்சாகத்தில் பெட்டில் அப்படியே சரிந்தாள். 😍 அவள் இப்போது தங்கி இருக்கும் அறையில் உள்ள பெட் ஐ விட இப்போது அவள் படுத்தி இருக்கும் விஷ்ணுவின் பெட் மிகவும் மிருதுவாகவும், அவளுக்கு கம்ப்பேட்டபில் ஆகவும் இருந்தது. மொத்தத்தில் அவள் தன்னுடைய கனவு வீட்டில் வாழ்வதை போல் உணர்ந்தாள் ஷாலினி. 

அந்த நொடி இப்போது விஷ்ணுவின் அறையாக இருக்கும் இந்த அறை ஒரு நாள் தன்னுடைய அறையாகவும் மாறும். அப்போது அவர்கள் இருவரும் இதே பெட்டி ஒன்றாக தினமும் தூங்க போகிறார்கள் என்று அவள் நினைத்துப் பார்க்கும்போதே  அவளுடைய உடல் சிலிர்த்து அடங்கியது. ☺️ 🥰 அதனால் அந்த சோட்டா பீம் பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டு அந்த கட்டிலில் அங்கும் இங்கும் உருண்டாள் ஷாலினி. சில நிமிடத்திற்கு முன் தன்னிடம் கோபத்தில் சிலிர்த்துக் கொண்டவள், பெற்றோர்கள் புதிதாக வாங்கி தரும் பொம்மையை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் குதிக்கும் குழந்தை போல் இப்படி பிஹேவ் செய்வதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான் விஷ்ணு. 😍 ❤️ 🥰

அந்த கணம் தான் ஏன் அந்த பொம்மையாக இருக்க கூடாது என்ற ஏக்கம் அவனுடைய மனதில் மேலோங்க, இது தன்னுடைய அறை. இங்கு தங்களைத் தவிர வேறு யாரும் இல்லை எண்ணும்போது, தன்னை யார் கேள்வி கேட்கப் போகிறார்கள்…??? என்று நினைத்த விஷ்ணு, ஷாலினி தன்னை தடுத்துவிட கூடாது என்பதற்காக வேகமாக ஓடு சென்று அவள் அருகே கட்டிலில் விழுந்தான். அவன் பக்கம் தன் கையில்  பொம்மையுடன் திரும்பி படுத்த ஷாலினி, “டேய் திருட்டு பயலே.. இங்க எதுக்கு டா வந்து படுத்த..??” என்று கேட்டாள். தன்னுடைய ஒரு கையால் அவனுடைய தலையை தாங்கிய படி படுத்து இருந்த விஷ்ணு, “நீதானே சொன்ன.. கல்யாணத்துக்கு முன்னாடி இது என்னோட ரூம் -ன்னு.. இப்ப நான் என்னோட ரூம்ல என்னோட பெட்ல படுத்து இருக்கேன். அதுல உனக்கு என்ன டி பிரச்சனை..??” என்று கூல் ஆக கேட்டான். 

ஷாலினி: தன் கையில் இருந்த பொம்மையை வைத்து அவனை இரண்டு அடி அடித்தவள் அந்த பொம்மையை அவன் மேலேயே தூக்கி போட்டு விட்டு, “ஆமா இது உன்னோட ரூம் தானே. நான் இங்க எதுக்கு இருக்கணும்..?? நான் சும்மா உன்ன பாத்துட்டு போலம்ன்னு தான் இங்க வந்தேன். சோ, பாத்துட்டேன். இப்ப கிளம்புறேன் பாய்.” என்றவள், எழுந்து வெளியே செல்ல முயன்றாள். ஆனால் அவளை இழுத்து தடுத்தான் விஷ்ணு. அதில் ஷாலினி அவன் மீது சென்று விழுந்தாள். அவளை இன்னும் தன்னுடைய உடலோடு இறுக்கிக் கொண்ட விஷ்ணு, அவளுடைய காதோரம் குனிந்தான். 

அவன் தன்னை முத்தமிட தான் முயற்சிக்கிறான் என்று நினைத்து வெட்கத்தில் நெளிந்த ஷாலினி, “டேய்.. விடு டா. கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு.” என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள். அவளுடைய காதோரம், “ப்ளீஸ் டி. நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் ஹக் பண்ணிகிட்டே தூங்கலாம்.” என்று அவன் கெஞ்சும் குரலில் சொல்ல… “யாராவது வந்துட்டா என்ன பண்றது..??” என்று கேட்டாள் ஷாலினி. “இந்த டைம் -க்கு மேல யாரு டி இங்க வரப்போற..??? நான் இயர்லி மார்னிங் சீக்கிரமா அலாரம் வைக்கிறேன். நீ அப்போ எந்திரிச்சு போய் உன்னோட ரூம்ல போய் படுத்துக்கோ. அவ்ளோ தானே சிம்பிள். யாருக்கும் தெரியாது.” என்று விஷ்ணு சொல்ல, “ம்ம்ம்..” என்ற ஷாலினி, அவனுடைய கைகளுக்குள் தஞ்சம் புகுந்து அவனுடைய நெஞ்சில் தன்னுடைய முகத்தை புதைத்து கொண்டு நிம்மதியாக தூங்க தொடங்கினாள். 😍 🥰

காலை பொழுது அழகாக விடிந்தது…. 🐓 🐓 

நேரம் காலை 7 :30 மணி…

வருணின் அறையில்…

இரவில் எப்போதும் இருப்பதை விட இன்று மிகவும் நிம்மதியாக தூங்கிய வருண், கண் விழித்தான். அவன் கண் விழிக்கும் போது என் கண் முன்னே என்ன இருக்கிறது என்று அவனால் தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் தான் பூ போன்ற , பஞ்சு போன்ற மெதுவான எதன்   மீதோ தான் படுத்து இருப்பதை போல உணர்ந்தான் வருண். அவனுக்கு இறுதியாக தான் என்னுடைய மினி பாரில் தொடர்ந்து குடித்து கொண்டே இருந்தது ஞாபகம் வந்தது. 

ஆனால் அந்த பாரில் கட்டில் கூட இல்லாத போது இப்போது தான் எங்கே இருக்கிறோம் என்று நினைத்து பார்த்த வருணிற்கு நேற்றைய இரவு நடந்த எதுவும் ஞாபகம் வரவில்லை. அதனால் ஒரு வழியாக சமாளித்து எழுந்து அமர்ந்தான். அப்போது தான் தன் அருகே படுத்து இருந்த ரித்திகாவை கவனித்தவன், அவளும் இப்போது அவனுடைய அறையில் இருப்பதை உணர்ந்தான். இப்போது தான் தான் அவளை கட்டிப்பிடித்து தூங்கி இருப்பது அவனுக்கு புரிந்தது. 

வருண் நேற்று ரித்திகாவை படுத்திய பாட்டில், ரித்திகாவின்  சேலை சற்று கலைந்தும், விலகியும் இருந்தது. அதைக் கூட சரி செய்ய செய்யமுடியாத நிலைமையில் அவள் இருந்ததால், எப்படியோ இருந்து விட்டு போகட்டும் என அவளும் விட்டு விட்டாள். ஆனால் அதை வேறு விதமாக புரிந்து கொண்ட வருண்; நேற்று தான் குடி போதையில் இருந்ததால் இவளிடம் அத்துமீறி விட்டேனா, நான் தான் குடிபோதையில் இருந்தான் இவள் நினைத்து இருந்தால் தன்னை தள்ளிவிட்டு விட்டு செருப்பால் அடித்து கூட வெளியே தள்ளி இருக்கலாம். ஒரு வேளை இவளுக்கும் இந்த எண்ணம் இருந்திருக்கும் போல… அதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் அதை சரியாக பயன்படுத்தி கொண்டாள் என்று நினைத்து ரித்திகாவின்  மீது கோபப்பட்ட வருண், ரித்திகாவுடைய ஒரு கை யை மட்டும் பிடித்து அவளை வேகமாக கட்டிலில் இருந்து இழுத்து தரையில் நிறுத்தினான். 

ஏற்கனவே அதே கையில் தான் அவளுக்கு குளுக்கோஸ் டிரிப்ஸ் போடப்பட்டு இருந்தது என்பதால் அவன் வேறு வெறித்தனமாக பிடித்து இழுத்தில் அதிக கை வலி ஏற்பட, அதில் அவளுடைய தூக்கம் எல்லாம் பஞ்ஜாய் பறந்து போனது. இருப்பினும் இந்த காலை பொழுதில் இவன் ஏன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் எதிர்ச்சியாக, “நைட்டு நல்லா தானே நீங்க பேசிட்டு இருந்தீங்க..!! இப்ப என்ன ஆச்சுன்னு இவ்ளோ  கோவமா இருக்கீங்க..???” என்று குழப்பமான குரலில் கேட்டாள்.😟 🙄

அவ்வளவு தான் ரித்திகா அப்படி கேட்டவுடன் வருணின் கோபம் அவனுடைய தலைக்கு ஏறியது. அதனால் தான் வாயை திறந்து எதுவும் பேசுவதற்கு முன் பளார் என்று ரித்திகாவின் கன்னத்தில் அறைந்தான். 😒 😡 அவன் வெறித்தனமாக அடித்ததால் அதை தாங்கிக் கொள்ள முடியாத ரித்திகா , தன்னுடைய கன்னத்தில் ஒரு கையை வைத்தவள், அப்படியே மயங்கி கீழேசரிந்தாள்.

  • நேசம் தொடரும் ❤️

( என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

அத்தியாயம் 24 ரித்திகாவை அறைந்த வருண் (பார்ட் 2)

You may also like

Leave a Comment

About Me

Featured