Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 195

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 195

by Thenaruvi Tamil Novels
60 views

அத்தியாயம் 195: ரித்திகாவை நெருங்கும் ஆபத்து (பார்ட் 2)

இதற்கிடையே போலீசார் இடம் இருந்து அவனுக்கு அந்த சம்பவம் நடந்தபோது அருகே இருந்த ஒரு கடையின் வெளியே இருந்த ஒரு சி. சி. டிவி.  கேமராவில் ரெக்கார்டான வீடியோ பதிவுகள் வந்து சேர்ந்தன. அந்த வீடியோ பதிவில்…

அந்த குண்டு வெடிப்பின் போது வருண் பதட்டப்பட்டு தன்னுடைய காரில் இருந்து வெளியே வந்தது போல, ரித்திகாவும் தான் வந்த காரை நிறுத்த சொல்லிவிட்டு வெளியே வந்திருக்கிறாள். அவள் அங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு இருக்கும் போது எங்கிருந்தோ திடீரென்று வந்த ஒரு சிறுமி ரித்திகாவின் புடவையைப் பிடித்து இழுக்கிறாள். பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்த அந்த சிறுமியுடன் ஏதோ ரித்திகாவும் பேச, அவளிடம் சில நொடிகள் எதையோ பேசிய அந்த சிறுமி, அவளை அங்கே இருட்டாக இருந்த ஒரு சந்திற்க்குள் அழைத்து செல்கிறாள். 

அவ்வளவு தான் அதற்குப் பின்பு அந்த இடத்தில் இருந்து ரித்திகாவையோ, அந்த சிறுமியோ, வெளியே வரவில்லை. இப்படியே அந்த புட்டேஜ் ஓடி கொண்டு இருக்க அதற்கு பின் வருணும் மற்றவர்களும்  ரித்திகாவை தேடிய காட்சிகள் தான் இருந்ததே தவிர ரித்திகா எங்கேயும் தென்படவில்லை. வருண் போலீசாரிடம் அவளை அந்த இடத்தில் தேட சொல்வதற்கு முன்பே அவர்களே அவளை நன்றாக தேடிவிட்ட போலீசார்கள் அங்கே ரித்திகா காணாமல் போனதை காண எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று அவனுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். 

அது மட்டும் இன்றி அந்த வீடியோ புட்டேஜில் இருக்கும் சிறுமி யார் என்றும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தங்களுடைய கையை விரித்து விட்டனர். ரித்திகாவை  கண்டுபிடிப்பதற்கான தன் முன்னே இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் இப்படி வீணாகி கொண்டு இருப்பதை வருணால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு கிடைத்த வீடியோ ஃபுட்டேஜை வைத்து அவனால் ரித்திகாவை யாரோ கடத்தி இருக்கிறார்கள் என்று ஒரு முடிவிற்கு வர முடிந்தது.

அதனால் அந்த நேரத்தில் அந்த சாலைகளிலும் அந்த சாலையை சுற்றியுள்ள சாலைகளிலும் கடந்து சென்ற ஒவ்வொரு வாகனத்தின் அடையாளங்களையும் கண்டு பிடித்து அதன் உரிமையாளர்களை விசாரிக்கும் படி போலீசார்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டு இருந்தான் வருண். ஆனால் நேரம் மட்டும் தான் கடந்து கொண்டே இருந்ததே தவிர, அவனால் ரித்திகாவை பற்றிய எந்த ஒரு உருப்படியான தகவல்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு புறம் வருண் ரித்திகாவை  தேடும் முயற்சியில் தொடர் தோல்வியை சந்தித்து கொண்டு இருக்க,  இன்னொரு புறம் விஷ்ணு சோபியாவுடன் இணைந்து அனைவரையும் பத்திரமாக நாராயணன் மஹாலிற்கு அழைத்து சென்று விட்டான். நேற்று இருந்ததை விட நாராயணன் மஹால் பிரம்மாண்ட அலங்காரங்களால் அந்த இரவு நேரத்தில் சொர்க்கலோகத்தை போல் ஜொலித்துக் கொண்டு இருந்தது. இந்நேரம் இந்த பிரச்சனை நடக்கவில்லை என்றால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். இந்த இடமே ஆடலும் பாடலும் என களைகட்டி இருக்கும். அவர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்நேரம் தொடங்கி இருக்கும். ஆனால் இப்போது ரித்திகாவை தொலைத்து விட்டு துக்க வீட்டில் இருப்பது போல அனைவரும் சோகமாக ஒவ்வொரு மூலையில் அமர்ந்து இருந்தனர். 😨 😓

க்ரிஷாவின் குழு ரித்திகா இருக்கும் இடத்தை அந்த ஜி. பி. எஸ். ஐ வைத்து எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று ஒரு நொடியை கூட வீணாக்காமல் வேலை செய்து கொண்டு இருந்தனர். 

ஃப்ளாஷ் பேக்…

காலை பொழுது விடிந்ததில் இருந்து பிரவீன் எப்படியாவது வருண் மற்றும் ரித்திகாவின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தான். அதனால் வருனுக்கு சந்தேகம் வராமல் நாராயணன் பேலஸை வெளியே இருந்தும், உள்ளே இருந்தும், பல ஆட்களை வைத்து கவனித்துக் கொண்டே இருந்தான் பிரவீன். அப்போது அவனுக்கு ரித்திகா தனியாக காரில் செல்லும் தகவல் ஒருவனின் மூலம் கிடைக்க, ரித்திகா நாராயணன் மஹால் சென்றடையும் முன்பே அவளை எப்படியாவது பாதி வழியில் கடத்தி விட வேண்டும் என்று திட்டமிட்டான். 

அதனால் சில ஆட்களை விலை பேசி யாருக்கும் தெரியாமல் பாம் செட் செய்து அதை யாருக்கும் தெரியாமல் வெடிக்கவும் வைத்தான். அந்த பாம் வெடிப்பின் காரணமாக அனைவரும் பதட்டப்பட்டு தங்களுடைய கவனம் மொத்தத்தையும் அதில் வைத்து இருக்கும் நேரத்தில் அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரவீன், ஒரு சின்ன பெண்ணை ஏற்பாடு செய்து, அந்தப் பெண்ணை ரித்திகா விடம் அனுப்பி அந்த குண்டு வெடிப்பில் தன்னுடைய அம்மாவிற்கு காயம் ஏற்பட்டு விட்டதாக அவளிடம் பொய் சொல்லி அவளை அந்த இருட்டான சந்தின் பக்கம் அழைத்து வரச் சொன்னான்.

அதுபோலவே ரித்திகாவை அந்த சிறுவி சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி, அவளுடன் அந்த சந்திற்குள்  நுழைந்தாள். அவள் உள்ளே வந்தவுடன் அங்கே மறைந்து இருந்த சில மர்ம நபர்கள் ரித்திகாவின் முகத்தில் ஒரு மயக்க மருந்து அடித்து வைத்திருந்த கர்சிப்பை ரித்திகாவின் மூக்கில் வைத்து அழுத்தி அவளை மயக்கமடைய செய்து, அவளை தூக்கிக்கொண்டு யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் அவள் அணிந்திருந்த ஆடைக்கு மேலே முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அணிவித்து அவளை சர்வ சாதாரணமாக பெண்களுடன் பெண்களாய் ஆட்டோவில் கடத்தி கொண்டு சென்றனர். 

அவனுடைய இந்த செயலின் மூலம் எளிதாக வருணின் கண்களில் மண்ணைத் துவி விட்டான் பிரவீன். எப்படியும் ரித்திகா கடத்தப்பட்ட செய்தியை வருண் அறிந்தவுடன் அவனுடைய சந்தேக பார்வை தன் மீதுதான் விழும் என்று ஏற்கனவே கணித்து வைத்து இருந்த பிரவீன், நாராயணன் பேலஸ் -க்கு மிக அருகே உள்ள ஒரு கோழி பண்ணையில் ரித்திகாவை மறைத்து வைத்தான்.

ரித்திகாவை கடத்துவதற்காக முதலில் அவளுக்கு பவர் குறைவான மயக்க மருந்தை தான் பிரவீன் கொடுத்திருந்தான். அவனுக்கு இரண்டே திட்டங்கள் தான் இருந்தன. ஒன்று, வருண் மற்றும் ரித்திகாவும் திருமணம் நடக்கக்கூடாது. அதனால் வருண் ஒரு வேலை இந்த இடத்தை கண்டுபிடித்து ரித்திகாவை  காப்பாற்றினாலும், அவள் திருமணம் நடக்கும் வரையிலும் மயக்கத்தில் இருந்து கண் விழிக்க கூடாது என்பதால் ஆபரேஷன் தியேட்டரில் ஆபரேஷன் செய்யும் போது ஒரு பேஷண்டிற்கு ஒரு நார்மலாக கொடுக்கப்படும் அனஸ்தீசியாவின் அளவைவிட சற்று அதிகமாகவே ரித்திகாவிற்கு உடலில் ஊசியின் மூலம் ஒரு ஆளை வைத்து செலுத்தினான். 

அதனால் ரித்திகாவும் சுய நினைவின்றி கீழே மயங்கி கிடந்தாள். அவனுடைய இரண்டாவது திட்டம்.. ஒரு வேளை வருண் தன்னுடைய சோசியல் ஸ்டேட்டஸை காப்பாற்றிக் கொள்வதற்காக ரித்திகாவை திருமணம் செய்து கொள்கிறான் என்றாலும் கூட, வருணிற்கு ரித்திகா முழுமையாக கிடைக்க கூடாது என்று நினைத்தான். அவனுக்கு ஏற்கனவே ரித்திகாவின் மீது வேறு ஒரு கண் இருந்ததால், வருனுடன் அவளுடைய திருமணம் நடப்பதற்கு முன்பே அவளுடன் தான் தன்னுடைய முதல் இரவை கழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தான். அதனால் அந்த கோழி பண்ணையில் இருக்கும் ஒரு அறையை ரித்திகாவுடன் ஆன அவனுடைய முதலிரவிற்காக ஏசி எல்லாம் போட்டு மலர் அலங்காரங்கள் முதல் சீரியல் லைட்டுகள் வரை அனைத்தையும் போட்டு ப்ராப்பராக டெக்கரேஷன் செய்து தயாராக வைத்து இருந்தான். 

அவனுக்கு இன்றைய இறையான ரித்திகா ஏற்கனவே அந்த கோழி பண்ணையில் அவன் தயார் செய்து வைத்து இருந்த அறையில் சுய நினைவின்றி கிடக்க, அவளுடைய ஆடைக்கு மேலே அவர்கள் அணிவித்து இருந்த புர்காவை மட்டும் நீக்கிவிட்டு அவளை கட்டிலில் கிடைத்தி வைத்திருந்தனர். அவளுடைய தேகம் முதல் அந்த கட்டில் வரை ஆங்காங்கே ரோஜாப்பூ இதழ்கள் தூவப்பட்டு இருந்தன. அந்த அறை முழுவதும் வாசனை திரவியங்களால் சூழப்பட்டு நறுமணம் வீசிக் கொண்டு இருந்தன. 

நிகழ்காலம்…

லக்ஷனாவிடம் தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு தான் சீக்கிரமே வந்து விடுவதாகவும் சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டின் பின் வாசல் வழியாக கிளம்பிய பிரவீன், ரித்திகாவை  தான்  அடைத்து வைத்து இருக்கும் இடத்தை நோக்கி யாருக்கும் தெரியாமல் வந்து கொண்டு இருந்தான்.

பிரவீன் அங்கே வருவதற்கு மிகவும் தாமதம் ஆகி கொண்டு இருந்ததால், ரித்திகாவை அவன் அடைத்து வைத்து இருக்கும் இடத்தில் பாதுகாப்பிற்காக இருந்த அடியாட்கள் அவ்வப்போது ரித்திகா இருக்கும் அறையை திறந்து பார்த்துவிட்டு சென்றனர். ரித்திகாவின் அழகு அவர்களை பெருமளவில்  ஈர்த்தது. அதனால் பிரவீன் வருவதற்கு முன்பே தங்களுக்கு அவளை அனுபவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பசியோடு இருக்கும் ஓநாய் போல தங்கள் முன்னே மாட்டிக்கொண்டு சிறையில் கிடைக்கும் முயல் குட்டியாய் ரித்திகாவை காமம் நிறைந்த பார்வையில் ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தனர். 😍🤤

ரித்திகாவை பற்றி ஏதேனும் ஒரு சிறிய தகவல் கிடைத்தால் கூட அதை தன்னிடம் தெரிவிக்குமாறு காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான் வருண். அவனால் முடிந்த அனைத்தையும் அவன் செய்துவிட்ட நிலையில் ரித்திகாவும் காணாமல் போய் இரண்டு மணி நேரங்களை கடந்து விட்டிருந்தும் அவனால் ரித்திகா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை இது கௌத்தமின் வேலையாக கூட இருக்கக்கூடும் என்று நினைத்து அவன் மீதும் சந்தேகப்பட்ட வருண், அவனையும் விசாரித்து பார்த்து விட்டான். ஆனால் அவன் மீது சந்தேகப்படும் படி தவறாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் அவனையும் விட்டுவிட்டான்.

க்ரிஷாவிற்கு கால் செய்து ரித்திகா இருக்கும்  லொகேஷன் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா என்று தானும் ஒரு முறை கேட்டு பார்க்கலாம் என்று நினைத்த ஹரி, அவளுக்கு கால் செய்தான். தன்னுடைய மொபைல் ஸ்கிரீனில் தெரிந்த ஹரியின் நம்பரை பார்த்த உடனே கடுப்பான க்ரிஷா,  தன்னுடைய மொபைல் போனை சந்தோஷிடம் கொடுத்து தான் பிஸியாக இருப்பதாக அவனிடம் சொல்லும் படி சொன்னாள். அதேபோல் சந்தோஷ் -ம் செய்ய, விரக்தியில் தன்னுடைய கால் ஐ கட் செய்ய போனனன் ஹரி.

அதுவரை எரிச்சலுடன் கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டு இருந்த க்ரிஷா திடீரென்று சந்தோஷ் இடம் இருந்து தன் மொபைல் போனை பிடுங்கியவள், “ஹலோ ஹரி.” என்று அவசரமான குரலில் சொன்னாள். அவளுடைய குரலில் இருந்த அவசரத்தை உணர்ந்து கொண்ட ஹரி, “ஹலோ க்ரிஷா..!! வாட் ஹேப்பண்ட்..?? ரித்திகா அண்ணி எங்க இருக்காங்கன்னு ஏதாவது தெரிஞ்சுதா..??” என்று அவனும் பதட்டத்துடன் கேட்டான்.

க்ரிஷா: “எஸ் ஐ பவுண்ட் ஹெர். நீ உடனே வருண் அண்ணாவ கான்ஃபரன்ஸ் கால் -ல ஆட் பண்ணு. நீங்க ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்கீங்க..??” என்று அவசரமான குரலில் கேட்டாள். 

ஹரி: “நான் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தான் இருக்கேன். வருண் எங்க இருக்கான்னு எனக்கு தெரியல. வெயிட் நான் அவனுக்கு கான் கால் போடுறேன்.” என்றவன், க்ரிஷாவின் கால் ஐ ஹோல்டில் வைத்துவிட்டு வருணுக்கு டயல் செய்தான். 

வருண்: இரண்டே ரிங்கில்  கால் ஐ அட்டென்ட் செய்தவன், “என்ன டா அவளை பத்தி ஏதாவது இன்பர்மேஷன் கிடைச்சதா..??” என்று அவசரமான குரலில் கேட்டான்.

ஹரி: எஸ் வருண். க்ரிஷா அண்ணி இருக்கிற லொகேஷன் ஐ கண்டுபிடிச்சிட்டா. நம்ம கூட அவளும் கான் கால்ல தான் இருக்கா.

வருண்: “இப்ப அவ எங்க மா இருக்கா…??” என்று பதட்டமான குரலில் கேட்டான். 

க்ரிஷா: “இப்ப அவங்க இருக்கிற லொகேஷன் நாராயணன் பேலசுக்கு  1 கிலோ மீட்டர் சரௌண்டிங்ல தான் காமிக்குது. சோ நீங்க யாராவது அங்க சீக்கிரம் போயிட்டு உங்களோட லைவ் லொகேஷன் ஐ எனக்கு ஷேர் பண்ணுங்க. அத வச்சு உங்களுக்கு எந்த டைரக்ஷன்ல அவங்க இருக்காங்கன்னு நான் அக்யூரேட்டா செக் பண்ணி சொல்றேன். சீக்கிரம் போங்க. நான் லைன்லயே வெயிட் பண்றேன்.” என்றாள்.

அதனால் வருனும் ஹரியும் தங்களுடைய கார் ஐ திருப்பிக் கொண்டு வேகமாக நாராயணன் பேலஸ் ஐ நோக்கி விரைந்தனர். செல்லும் வழியிலேயே அங்கு இருந்த தன்னுடைய ஆட்களுக்கு ரித்திகா அங்கே தான் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக இன்பார்ம் செய்த வருண், அவளை தேடுமாறு உத்தரவிட்டான். இன்னொரு பக்கம் அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு ரித்திகாவை  அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து கொண்டு இருந்தான் பிரவீன்.

  • நேசம் தொடரும்‌ ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured