Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 186

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 186

by Thenaruvi Tamil Novels
8 views

அத்தியாயம் 186: கொஞ்சம் தள்ளி நில்லுங்க (பார்ட் 1)

நாராயணன் மஹால்….

ஈரோடு மாவட்டத்தின் நகர்ப்புறத்திற்கு வெளியே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் பல்லாயிரம் சதுர பரப்பில் வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் நாராயணன் மஹாலை தன்னுடைய அப்பாவின் இறப்பிற்கு பின்பு அவருடைய ஞாபகத்திற்காக  கட்டினான் வருண். இந்த  மஹாலின் முன்னே ஒரு சிறிய விநாயகர் கோயிலும் அதன் அருகே இறந்து போன வருண் தந்தை நாராயணனுக்கு ஒரு ஆள் உயர மெழுகு சிலை வைத்து அவருக்கு என ஒரு சிறு மண்டபத்தையும் கட்டி வைத்து இருந்தான் வருண். 

அதனால் நாராயணன் குடும்பத்தில் நடக்கும் விசேஷங்கள் அனைத்தும்   இங்கே தான் நடக்கும். இங்கே தன்னுடைய அப்பாவின் உருவ சிலை இருப்பதால், இங்கே தங்களுடைய அனைத்து சுப காரியங்களும் நடக்கும்போது அவருடைய ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வருணிற்கு அவனுடைய குடும்பத்தினருக்கும் இருக்கிறது. 

தனி தனியாக கிளம்பி வரிசையாக ஒவ்வொருவரும் நாராயணன் மஹாலிற்கு வந்து சேர்ந்தனர். அங்கே முதலில் வந்தது செண்பகம் மற்றும்  அவளுடன் வந்தவர்கள் தான். சித்தார்த்தின் கையை பிடித்துக் கொண்டு நாராயணன் மஹால் இன் வாசலின் வந்து இறங்கிய செண்பகம், அந்த மஹால் ஐ பார்த்தவுடன் கண் கலங்கினாள். 😥 🥺 இந்த மஹால் ஐ வருண் கட்டிய பின் அதில் நடக்கப்போகும் முதல் விசேஷம் இப்போது நடக்கவிருக்கும் வருண் மற்றும் ரித்திகாவின் திருமணம் தான். இப்படி இருக்கையில் அந்த திருமணத்தை தன்னுடன் இருந்து பார்க்கவும் தன்னுடைய மகன் மற்றும் மருமகளை ஆசீர்வாதம் செய்யவும் தன்னுடைய கணவன் தன் அருகே இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டாள் செண்பகம். 

செண்பகம் அதை தன்னிடம் சொல்லாமலேயே அவளுடைய மன வருத்தத்தை புரிந்து கொண்ட ரேவதி அவள் அருகே சென்று அவளுடைய கையை ஆதரவாக பிடித்தவள், “வருத்தப்படாதீங்க சம்மந்தி அம்மா. சம்மந்தி சாமியா இருந்து நம்மள பாத்துட்டு இருப்பாரு. அவரோட ஆசிர்வாதம் எப்பயுமே நம்ம பிள்ளைகளுக்கு இருக்கும். நல்ல நேரம் முடிஞ்சிடும்ன்னு தானே நம்ம அவசர அவசரமா கிளம்பி வந்தோம்… வாங்க நம்ம உள்ள போகலாம்.” என்று சொல்லி அவளையும் சித்தார்த்தையும் அழைத்துக் கொண்டு சுதாகர் உடன் உள்ளே சென்றாள் ரேவதி.

செண்பகத்திற்கு பெரிதாக தோழிகள் என்று யாரும் இல்லை. உறவினர்கள் என்று பார்த்தால் கூட, சீதாவை தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு செண்பகம் பேசிப் பழக யாரும் அவளுடன் இல்லை. அதனால் தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளை அவள் பெரிதாக யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்போது தான் சொல்லாமலேயே தன்னுடைய வேதனைகளை புரிந்து கொள்ளும் தன்னுடைய சம்மதியை, தன்னுடைய மருமகளின் அம்மா என்பதை தாண்டி ஒரு நல்ல தோழியாக பார்க்க தொடங்கி விட்டாள் செண்பகம். அதனால் செண்பகமும், ரேவதியும், எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். 

சுதாகரின் அருகே ஒரு சாரில் அமர்ந்து இருந்த சித்தார்த், “தாத்தா ரித்திஅம்மா எப்ப வருவா…??” என்று நிமிடத்திற்கு நாலு முறை கேட்டுக் கொண்டே இருந்தான். “நான் இப்ப தான் கால் பண்ணேன் சித்து குட்டி. பக்கத்துல வந்துட்டாங்களாம். சீக்கிரம் வந்துருவாங்க. வெயிட் பண்ணு.” என்று அவரும் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களிலேயே ரித்திகா, விஷ்ணு, ஷாலினி, ஹரி, வருண், என அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். 

ரிசப்ஷனில் இருந்த பெண்களின் குழு அவர்கள் அனைவரையும் வரவேர்த்தனர். அந்த பிரம்மாண்டமான நாராயணன் மஹால் ஐ முதன் முதலில் பார்க்கும் ரித்திகா , ஷாலினி, ஆராதனா அனைவரும் வியந்து அதை பார்த்து ரசித்த படியே உள்ளே வந்தனர். ரித்திகா உள்ளே வரும்போது அவளை ஸ்பெஷலாக மேலே இருந்து பல வண்ண மலர்களை தூவி இளவரசியை போல் உள்ளே வரவேற்றனர். 

ஒரு கணம் அந்த தருணத்தை என்ஜாய் செய்த ரித்திகா, பின் வருண் மீது அவளுக்கு இருந்த கோபத்தால் அதை புறக்கணித்துவிட்டு சாதாரணமாக நடக்க தொடங்கினாள். ஆனால் ரித்திகாவின் அருகே வந்த விஷ்ணுவும் ஷாலினியும் அதை என்ஜாய் செய்தனர்.  அவர்களை பொறுத்தவரை தங்களுடைய திருமணத்தில் இவை எல்லாம் நடக்கப்போகிறதோ இல்லையோ ஆனால் இப்போது தாங்கள் ஜோடியாக வரும்போது இப்படி ஒரு விஷயம் நடப்பது இது தங்களுடைய திருமணம் இல்லை என்றாலும், இவை அனைத்தும் தங்களுக்காக தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று நினைத்து கற்பனை உலகில் சிறகடித்து பறந்து மகிழ்ந்தனர். 😍  

ரித்திகா ஒரு பக்கம் ஆராதனாவும் ஹரியும் நடந்து வர இன்னொரு பக்கம் ஷாலினியின் கையை இறுக்கமாக பிடித்த படி விஷ்ணு நடந்து வர அவர்கள் நாராயணன் மஹால் இன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வந்த உடனே இது காலை உணவு சாப்பிடும் நேரம் என்பதால் முதலில் தங்களுடைய வயிற்றை சமாதானம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம் என்று நினைத்த விஷ்ணு, அனைவரையும் அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்று விட்டான். 

தன்னுடைய காரை தானே பார்க்கிங்கில் சென்று பார்க் செய்துவிட்டு, தனியாக நடந்து உள்ளே வந்தான் வருண். ரிசப்ஷனில் இருந்த பெண்கள் அவனையும் ரித்திகாவை வரவேர்த்ததை போல் சிரித்த முகத்துடன் வரவேற்றனர். 😁 😁 😁 அவன் மீதும் பல வண்ண மலர்கள் மேலே இருந்து பொலிந்தன. ஆனால் அவை எதையும் துளியும் கண்டு கொள்ளாத வருண், எங்கேயோ இடி இருக்கிறது மழை பெய்கிறது அதனால் எனக்கு என்ன என்பது போல் நடந்து வந்து கொண்டு இருந்தான். 

வருணின் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்த சிவா, அவனுடன் இணைந்து உள்ளே சென்றான். வழக்கத்தை விடவும் வருண் இறுக்கமான மனதுடனும் சோகமான முகத்துடனும் இருந்தான். அதை கவனித்த சிவா, “ஆர் யு ஓகே சார்..??” என்று வருத்தமான குரலில் கேட்டான். 

வருண்: “யா ஐ அம் பைன். எல்லாரும் வந்துட்டாங்களா..???” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டான். 

சிவா: எஸ் சார். சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலுக்கு போயிருக்காங்க. நீங்களும் வாங்க நம்மளும் போய் சாப்பிடலாம்.

வருண்: “இப்ப சப்ப்பாடு ஒன்னு மட்டும் தான் குறை..  அட போட.” என்று சலிப்பான குரலில் சொன்னான். 

சிவா: இப்போ ஜான்வி மேடம் ஐ நெனச்சு பீல் பண்றீங்களா சார்..??? 

வருண் “புதுசா நான் என்ன டா அவளை நினைச்சு பீல் பண்றது..?? 24/ 7 அவளோட தாட்ஸ் மட்டும் தான் என்னோட மைண்ட்ல இருக்கு. இன்னைக்கு அவ மட்டும் உயிரோட இருந்திருந்தா, எனக்கும் என் பையனுக்கும் இந்த நிலைமை வந்திருக்குமா..??? அவ அநியாயமா எங்களை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டா.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னான். 💔

சிவா: “அது உண்மையா இருந்தாலும், நீங்களும் சித்தார்த்தும் அப்படி தனியா இருந்து கஷ்டப்படக் கூடாதுன்னு தான் உங்களுக்காக நம்ப ரித்திகா மேடம் ஐ கடவுள் அனுப்பி வச்சிருக்காரு. எனக்கு நம்பிக்கை இருக்கு சார். ஒரு நாள் நீங்களும் அந்த பொண்ணு சேர்ந்து சந்தோஷமா வருவீங்க.” என்று யோசிக்காமல் தன் மனதில் இருந்தவற்றை அப்படியே அவனிடம் சொன்னான். 

அதைக் கேட்ட வருண் விரத்தியுடன் சிவாவை பார்த்து லேசாக சிரித்து விட்டு தன்னுடைய அறையை நோக்கி நடந்தான். தன்னுடைய ஜான்வியின் இடத்தை இன்னொருத்திக்கு கொடுக்கப் போகிறோமே என்ற மன வேதனையை அவனை போட்டு வாட்டிக் கொண்டு இருந்தது. அதனால் தன்னுடைய சிந்தனையை வேறு புறமாக திருப்ப நினைத்த வருண், தன்னுடைய அறைக்கு வந்தவுடன் பெண்டிங் இல் இருக்கும் அனைத்து வேலைகளையும் பார்க்க தொடங்கி விட்டான்.

வேறு வழி இன்றி சிவாவும் சாப்பிட செல்லாமல் வருணின் அருகே அமர்ந்து விட்டான். சில நிமிடங்களின் வருணின் மொபைல் போனில் இருந்து நோட்டிபிகேஷன் சவுண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதனால் கடுப்பான வருண் தன்னுடைய மொபைல் போனை எடுத்து சிவாவின் அருகே தூக்கி எறிந்தவன், “இது யாருன்னு பாரு டா.. சும்மா whatsapp -ல மெசேஜ் பண்ணிட்டு் இருக்காங்க.” என்று எரிச்சலான குரலில் சொன்னான். 😒

சிவா வருணின் மொபைலை ஆன் செய்து அதில் அவனுக்கு வந்திருக்கும் whatsapp குறுஞ்செய்திகளை எடுத்துதுப் பார்த்தான். அதில் பெரும்பாலானவை வருணின் பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய குரூப்பில் இருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தது. அவர்கள் அனைவரும் மாறி மாறி விஷ்வாவின் திருமணத்தை பற்றியும் அவன் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணைப் பற்றியும் தான் பேசிக் கொண்டு இருந்தனர். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் வருண் தன்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கே இன்னும் முறையாக ஒரு இன்விடேஷன் கூட அனுப்பி இருக்கவில்லை. 

இந்த திருமணமே பல பிரச்சினைகளுக்குள் நடப்பதாலும், அவன் முதலில் இதை ஒரு திருமணமாகவே நினைக்கவில்லை என்பதாலும், இதற்கு தன்னுடைய நண்பர்களையும் அழைக்க வேண்டும் என்று கூட அவனுக்கு தோன்றவில்லை. ஆனால் அவன் சொல்லவில்லை என்றாலும் உலகத்திற்கே தெரிந்த விஷயம் அவனுடைய நண்பர்களின் காதுகளுக்கு மட்டும் சென்றிருக்காதா என்ன..??? அதனால் தன்னுடைய நண்பன் தங்களை முறையாக அழைக்கவில்லை என்றாலும் தாங்களாக வந்து சேர்ப்பவர்கள் தானே நல்ல நண்பர்கள் ஆதலால் நாம் அனைவரும் வருண் நிச்சயதார்த்தத்திற்கு செல்வோம் என்று அந்த குரூப்பில் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured