அத்தியாயம் 187: கொஞ்சம் தள்ளி நில்லுங்க (பார்ட் 2)
அந்த மெசேஜ்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு இருந்தான் சிவா. கீ போர்டில் எதையோ டைப் செய்தபடி சிவாவை திரும்பி பார்த்த வருண் , “என்ன டா யாரு அப்படி எனக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறது..!!! இவ்வளவு நேரமா என்னத்த பாத்துட்டு இருக்க..???” என்று கேட்டான். “உங்க பிரெண்ட்ஸ் குரூப்ல தான் சார் மாறி மாறி மெசேஜ் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாம் உங்க மேரேஜ் ஐ பத்தின டாபிக் தான் போயிட்டு இருக்கு. நீங்க உங்களோட மேரேஜ் அண்ட் என்கேஜ்மென்ட் கூட யாரையுமே இன்வைட் பண்ணலன்னு சஞ்சனா மேடம் கோவமா பேசிட்டு இருக்காங்க. தினேஷ் சார் தான் நீங்க கூப்பிட்டாலும் கூப்பிடலேன்னாலும் ஃப்ரெண்ட்ஷிப்காக எல்லாரும் போவோம்னு பேசி எல்லாரையும் வர சொல்லிட்டு இருக்காரு. ஐ திங்க் எல்லாரும் கொஞ்ச நேரத்துல கிளம்பி வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்.
மத்தவங்க கூட ஓகே. இந்த சஞ்சனா மேடம் வந்தாங்கன்னா, அவங்கள எப்படி நீங்க சமாளிக்க போறீங்கன்னு தான் எனக்கு தெரியல.” என்று பெருமூச்சு ஒன்றை விட்ட படி சொன்னான் சிவா.
அப்போதுதான் தான் இன்னும் தன்னுடைய நண்பர்களுடன் பர்சனலாக இந்த திருமணத்தைப் பற்றி ஒரு முறை கூட பேசவில்லை என்று வருணிற்க்கு ஞாபகம் வர, “இருந்த டென்ஷன்ல அவங்களுக்கு இன்பார்ம் பண்ணவே மறந்துட்டேன் டா. நீ நான் பண்ற மாதிரி அப்படியே என்கேஜ்மென்ட் அண்ட் மேரேஜ் இன்விடேஷன் ஐ குரூப்ல ஷேர் பண்ணி விடு. லாஸ்ட்ல முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணாததுக்கு சாரிம்னு போட்டு விட்டுரு.” என்று சொல்ல சிவாவும் வருண் பேசுவதைப் போல் அப்படியே டைப் செய்து இன்விடேஷன்களை குரூப்பில் ஷேர் செய்து விட்டான்.
அதை பார்த்த உடனேயே வருணின் நண்பர்கள், “டேய் வருண் என்ன டா பண்ற..?? எங்ககிட்ட பேச கூட உனக்கு டைம் இல்லையா..?? ஓவர் ஆ பண்ற டா நீ. உன் வருங்கால வைஃப் ஐ கூட நீ எங்களுக்கு இன்ட்ரோ பண்ணி வைக்கல.” என்று மாறி மாறி மெசேஜ் செய்ய தொடங்கினர். அவற்றை எல்லாம் சலிப்புடன் படித்துப் பார்த்த சிவா, “சாரி கைஸ். இங்க நிறைய பிராப்ளம்ஸ் போய்ட்டு இருந்துச்சு. அது என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். எல்லாமே சடனா நடந்ததுனால நான் எப்பயுமே ரொம்ப பிசியாவே இருக்க மாதிரி இருக்கு. இப்ப கூட நான் ஒரு ஆன்லைன் கிளைன்ட் மீட்டிங்ல இருந்துகிட்டு தான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க எல்லாரும் சீக்கிரமா கிளம்பி என்னோட என்கேஜ்மென்ட் -க்கு வாங்க. நம்ப நேர்ல பேசிக்கலாம். சி யு சூன். பாய்.” என்று ஒரு மெசேஜை டைப் செய்து அனுப்பிவிட்டு மீண்டும் வருணின் மொபைல் போனை அவன் அருகையே வைத்து விட்டான் சிவா.
அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்துவிட்டு தரை தரத்திற்கு வந்தனர். ஆராதனாவிற்கு ஒரு புறம் தன்னுடைய வாழ்க்கையை பற்றிய கவலை இருந்தாலும், இன்னொரு புறம் இன்று தன்னுடைய அண்ணனின் திருமணம் நடந்து இருக்கும் நிலையில் தன்னால் அங்கு சென்று அவனையும் தன்னுடைய அண்ணியையும் வாழ்த்திவிட்டு கூட வர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதனால் சோகமாக தனக்கென ஒதுக்கப்பட்டு இருந்த வி.ஐ.பி. டேபிளில் வந்து அமர்ந்தாள்.
நிச்சயதார்த்தம் நடப்பதற்கு இன்னும் வெகு நேரம் இருப்பதால், ரித்திகாவும் ஷாலினியும் கூட அதே ஏரியாவில் ஒரு சீட்டில் தான் அமர்ந்த படி தான் பேசிக் கொண்டு இருந்தனர். ஆராதனாவை கவனித்த ஷாலினி, “அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா அக்கா..??” என்று ரித்திகாவிடம் கேட்டாள். அதற்கு ரித்திகா அவங்க யாருன்னு சரியாக தெரியவில்லை. அதனால் சற்று தொலைவில் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்த சித்தார்த் ஐ அழைத்த ரித்திகா ஒஆராதனாவை கை காட்டி.. “அந்த ஆண்டி யாருன்னு உனக்கு தெரியுமா..??” என்று கேட்டாள்.
ஆராதனாவை உற்றுப் பார்த்த சித்தார்த், “இவங்களும் நம்ம வீட்ல தான் இருக்காங்க. செண்பா பாட்டியும் இவங்களும் அடிக்கடி சண்டை போட்டுட்டே இருப்பாங்க. ஆனா எனக்கு இவங்க யாருன்னு தெரியாது. அவங்க பேரு ஆறு ஏழுன்னு என்னமோ வரும். எனக்கு மறந்து போய்டுச்ச ரித்தி.” என்று அப்பாவியாக சொன்னான். அவன் சொல்லப்போவதை கேட்க ஆர்வமாக இருந்த ஷாலினிக்கும், ரித்திகாவிக்கும் , அவன் பேசியதை கேட்டவுடன், “அட போடா” என்பது போல் ஆகி விட்டது.
ஆனால் ரித்திகாவிற்கு ஆராதனாவை பற்றிய ஒரு கருத்து இருந்தது அதை ஷாலினியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவள், “ஓகே சித்து நீ போய் விளையாடு.” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்துவிட்டு ஷாலினியுடன் பேச தொடங்கினாள்.
ஷாலினி: இப்ப தான் அக்கா எனக்கே ஞாபகம் வருது. நம்ப வரும்போது ஹரி மாமா அந்த பொண்ண ஆராதனான்னு கூப்பிட்டார் இல்ல… அத தான் அவன் ஆறு, ஏழுன்னு உளறிட்டு போறான். போல…
ரித்திகா : ஆமா அவங்க பேரு ஆராதனா தான். எனக்கு என்ன தோணுதுனா ஹரி சாரும், இவங்களும் லவ் பண்றாங்கன்னு போல.. ஆனா அப்புறம் எப்படி தர்ஷினிக்கும் ஹரி சாருக்கும் கல்யாணம் பேசி முடிவு பண்ணி இருக்காங்கன்னு எனக்கு தெரியல.
இவங்கள பார்த்தாலும் நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது. அந்த தர்ஷினிய பார்த்தாலும் தப்பான பொண்ணு மாதிரி தெரியல. ஆனா இவங்க மூணு பேரு லைப்லயும் என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல. பாப்போம் இனி நானும் அதே வீட்ல தானே இருக்க போறேன்.. என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறேன்.
ஷாலினி: “அது சேரி அக்கா. நீங்க கல்யாணம் ஆகி போனதுக்கு அப்புறம் என்ன மறந்துடாதீங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க. டெய்லியும் உங்க கூட பேசி உங்க கூட சுத்திக்கிட்டே இருந்து பழகிருச்சு. நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்..???” என்று சோகமாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள். 🥺 😓
ரித்திகா “நீ என்ன பாக்க முடியாதுன்னு பீல் பண்றியா..??? இல்ல விஷ்ணுவ டெய்லியும் பக்கத்துல இருந்து பார்க்கணுமேன்ற ஆசையில கேக்குறியா..???” என்று நக்கலாக கேட்டாள். 😂 😂 😂
ஷாலினி: “அட போங்க அக்கா எனக்கு அவன விட உங்கள தான் ரொம்ப பிடிக்கும். ஏன் உங்களுக்கு தெரியாதா…???” என்று அப்பாவியாக தன் முகத்தை வைத்து கொண்டுு கேட்டாள். 😕 😥
ரித்திகா அவளுடைய காதை பிடித்து திருகியவள், “எனக்கு தெரியும் டி. உடனே மூஞ்சிய இப்படி பாவமா வச்சுக்காத.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
இப்படியே இவர்கள் இருவரும் பேசி சிரித்து கொண்டு இருக்க சில நிமிடங்களில் அங்கே வந்த விஷ்ணு, அவனும் இவர்களுடன் இணைந்து கொண்டான். சில நிமிடங்களுக்கு பின்பு எங்கேயோ செல்வதற்காக வெளியில் வந்த வருண் இவர்களை கடந்து செல்லும்போது அனைவரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கும் ரித்திகாவை கவனித்தான். ரித்திகா சிரித்து கொண்டு இருப்பதை பார்த்தாலே.. அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. அதனால், “சூனியக்காரி அவளோட வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டா போல. இவ மட்டும் எப்படி நான் ஈஸியா எல்லாரையும் அவ பக்கம் இழுத்தறான்னு தெரியல. இவகிட்ட நீ ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் டா வருண். இல்லைனா.. கடைசியில அவ உனக்கே பாயாசத்தை போட்டுருவா.” என்று தனக்குள் நினைத்தவன், வேக வேகமாக அவர்களை கடந்து சென்று விட்டான்.
சில மணி நேரத்திற்கு பின்…
ரித்திகாவை 10 பேர் கொண்ட குழுவினர் தயார் செய்து கொண்டு இருந்தனர். ரித்திகா இப்போது ஒரு வெளிர் பச்சை நிற புடவை கட்டி இருந்தாள். அவளுடைய பிளவுஸ் கான்ட்ராஸ்ட் ஆக ப்ளூ மற்றும் பச்சை நிறத்தில் ஆரி வேலைப்பாடுகளுடன் தக… தகவென.. மின்னி கொண்டு இருந்தது. அவளுடைய நீண்ட கூந்தலில் இன்ஃபினிட்டி பிரைட் ஹேர்ஸ்டைல் ஐ பின்னி அதில் மல்லிகை மற்றும் முல்லை மலர்களை அழகாகக சூட்டிக் கொண்டு இருந்தனர்.
வெளியே நிச்சயதார்த்த மேடை சோழர்கால அரண்மனை போல பிரம்மாண்டமாக தயாராகி இருந்தது. அதன் மேல் புறத்தில் கோபுரங்கள் போன்ற அமைப்புகளை செட் செய்து வைத்திருந்தனர். அதன் நடுவே ஒரு ராஜா மற்றும் ராணி அமர்வதற்கான பெரிய சோபா போடப்பட்டு இருந்தது. அந்த இடம் முழுவதும் வண்ணமயமான பூக்கள்களால் நிரம்பி இருந்தது. ஆங்காங்கே ஸ்னோ எபெக்ட் மற்றும் சென்ட்ரலைஸ்ட் ஏசியின் உதவியால் அந்த இடமே ஒரு சொற்கலோகம் போல காட்சியளித்தது. நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தை கண்டுகளிப்பதற்காகவும் மணமக்களை ஆசீர்வாதம் செய்வதற்காகவும் நிறைய பேர் வர தொடங்கி இருந்தனர். அவர்களின் சிலர் வருணின் உறவினர்களாகவும் பலர் அவனுடைய பிசினஸ் பார்ட்னர்களாகவும் இருந்தனர்.
நடக்கவிருக்கும் வருணின் இந்த எங்கேஜ்மென்ட் புகைப்படத்தை ஒன்றே யாவது எடுத்து விட்டால் அது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்று நினைத்து பிரஸ் ரிப்போர்டர்கள் அனைவரும் வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். வருணிற்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்பதால் அங்கு இருந்தவர்களுள் மிகவும் பிரக்பலமான உயர்தர பத்திரிகைகளில் இரண்டை மட்டும் தேர்வு செய்து ஆதித்யா உள்ளே வர அனுமதித்தான்.
இப்படியே அவன் ஒரு பக்கம் முக்கியமான வேலைகளில் மூழ்கி இருந்தாலும் இன்னொரு பக்கம் அவன் இங்கே வந்ததில் இருந்து அவனுடைய தேவதை சோபியாவை அவனால் காண முடியவில்லை. அதனால் வருத்தம் நிறைந்த கண்களுடன் அங்கும் இங்கும் அவளைத் தேடிக் கொண்டு இருந்தான். சந்தோஷம் வருணின் ஆபீஸில் வேலை பார்ப்பதால் அவனுக்கும் இன்விடேஷன் வந்து இருந்தது. அதனால் தான் அழகாக தயாராகி செல்ல வேண்டும் என்று நினைத்த சந்தோஷ், காலையில் இருந்து தன்னிடம் இருக்கும் அனைத்து உடைகளையும் போட்டுப் பார்த்தான்.
அவனிடம் இருக்கும் எந்த ஒரு ஆடையும் அவனை திருப்தி படுத்தவில்லை அதனால் வேறு வழி இன்றி ஒரு வெள்ளை வேட்டியையும், சட்டையையும், அணிந்து கொண்டு இங்கே வந்தான். இன்னும் பங்க்ஷன் தொடங்குவதற்கு சிறிது நேரம் இருப்பதால், தனக்கென ஒதுக்கப்பட்டு இருந்த சீட்டில் அமர்ந்தவன், தன்னுடைய மொபைல் போனை எடுத்து அதை நோண்ட தொடங்கி விட்டான் சந்தோஷ். இறுதி வரிசையில் இருப்பவர்கள் வரை அங்கு நடக்கும் அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்பதால் ஆங்காங்கே பெரிய எல். இ. டி. ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது அங்கே நிறைய வி ஐ பி -கள் வந்த வண்ணம் இருந்ததால் அவர்களை ஃபோக்கஸ் செய்து அதை அந்த ஸ்கிரீனில் பிளே செய்து கொண்டு இருந்தனர்.
அந்த ஸ்கிரீனை சந்தோஷ் எதேர்ச்சியாக திரும்பிப் பார்க்க, ஹை ஹீல்ஸ் அணிந்து சிவப்பு நிற புடவையில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டு இருந்தாள் க்ரிஷா. இதுவரை சந்தோஷ் க்ரிஷாவை அவன் புடவையில் பார்த்தது இல்லை என்பதால் அவனுடைய கண்களுக்கு அவள் புதிதாகவும் திமிர் அழகியாகவும் தெரிந்தாள். 😍 ❤️
சில நிமிடங்களுக்கு பின்….
வருண் மற்றும் ரித்திகாவை விஷ்ணு ஷாலினி பிரார்த்தனா என அனைவரும் அழைத்து கொண்டு வந்து மேடையில் நிற்க வைத்தனர். இப்போதும் வருனும் ரித்திகாவும் அதிக இடைவெளியை விட்டு நின்று கொண்டு இருக்க அதை கவனித்த போட்டோ கிராபிக் டீம், “சார் வந்து மேடம் பக்கத்துல நில்லுங்க.” என்று தங்களுடைய வழக்கமான டயலாக் ஐ சொன்னார்கள். அதனால் வேறு வழி இன்றி வருண் ரித்திகாவின் அருகே நெருங்கி செல்ல அவனைப் பார்த்து முறைத்த ரித்திகா, “கொஞ்சம் தள்ளி நில்லுங்க.” என்று அமைதியான குரலில் சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பான வருண், வேண்டுமென்றே அவள் அருகே சென்று அவளை உரசிக்கொண்டு நின்றவன் போதாத குறைக்கு அவளுடைய இடுப்பில் தன்னுடைய ஒரு கையை வைத்துக் கொண்டான். கூச்சம் கலந்த கோபத்துடன் வருணை பார்த்தாள் ரித்திகா. 😍 😒
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)