அத்தியாயம் 185: ஐ லவ் யூ (பார்ட் 2)
அன்று வைஷாலி செய்துவிட்டு சென்ற வேலையால் ஷாலினி தன் கைகளாலேயே அந்த சேலையை மிகவும் டேமேஜ் செய்து வைத்து இருந்தாள். பின் அவள் விஷ்ணுவை ஏற்றுக் கொண்டதால் அந்த புடவையின் மீது அவளுக்கு இருந்த கோபங்கள் அனைத்தும் மறைந்து விட, அரும்பாடு பட்டு ரித்திகா உடன் இணைந்து அந்த புடவையை சரி செய்த ஷாலினி அதை அணிந்து கொண்டு வந்து விஷ்ணுவிடம் தன்னுடைய காதலை சொல்லி அவனிடம் எப்படியாவது இன்று மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று நினைத்து இங்கே வந்திருந்தாள்.
ஷாலினியை லிப்ட் இன் உள்ளே அந்த புடவையில் பார்த்தவுடன்.. தன்னை அறியாமல் கண்கலங்கியய விஷ்ணு, வேகமாக அந்த லிஃப்ட்டின் உள்ளே சென்று… பத்தாவது மாடிக்கு செல்வதற்கான பட்டனை அழுத்திவிட்டு, ஷாலினியை இயக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டான். விஷ்ணுவை பார்த்தவுடன் அந்த நாளில் தான் வைஷாலியால் விஷ்ணுவை என்னவெல்லாம் சொல்லி காயப்படுத்தினோம் என்று யோசித்துப் பார்த்த ஷாலினியின் கண்கள் கலங்கிவிட்டன. அதனால் அவளும் அவனை இறுக்கமாக அனைத்து கொண்டாள். 😍 🤗 😥
அவனுடைய காதுகளில் மெல்லிய குரலில்… “ஐ அம் சாரி விஷ்ணு. நான் உன்ன அன்னைக்கு ரொம்ப ஹெர்ட் பண்ணிட்டேன். இன்னைக்கு வரைக்கும் என்னோட வாயை திறந்து நான் உன்கிட்ட என்னோட லவ் ஐ சொல்லவே இல்ல. ஆனா நீ எனக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்திருக்க. ஏன் சொல்லல எப்ப சொல்லுவேன்னு என்னை ஒரு வார்த்தை கூட கேட்காம.. என்னோட பீலிங்க்ஸ நீ எப்பவுமே மதிக்கிற. என் மேல இவ்வளவு பாசமா இருக்கிற உனக்கு நான் என்ன பண்ண போறேன்னு எனக்கு சத்தியமா தெரியல டா. ஐ லவ் யூ. ஐ லவ் யூ விஷ்ணு. ஐ லவ் யூ சோ மச்.” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவனை இறுக்கி அணைத்தபடி தன் மனதில் இருந்தவற்றை எல்லாம் அவனிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் ஷாலினி. 😥 😥 🤗 🤗
ஷாலினி அவளாகவே தன்னிடம் அவளுடைய காதலை வெளிப்படுத்தி விட்டதால் மகிழ்ந்த விஷ்ணு, உரிமையாக அவளுடைய இதழை தன்னுடைய இதழால் சிறை செய்தான். 😍 😚 😘 ஷாலினியும் மனதார அவனுக்கு ஒத்துழைத்தாள். இதற்கிடையில் பத்தாவது மாடி வந்துவிட, அவளை முத்தமிட்டபடியே மீண்டும் பர்ஸ்ட் ஃப்ளோருக்கு செல்ல வேண்டிய பட்டனை அழுத்தினான் விஷ்ணு. அதனால் சில நொடிகள் திறந்த அந்த லிப்டின் கதவுகள் மீண்டும் சாத்திக் கொண்டன.
நிமிடத்தில் சொல்லி முடித்து விட நீ நிமிடகதையும் இல்லை.
தேவைப்படும் இடத்தில் எல்லாம் ஒப்பனைகள் சேர்த்து எலுதி முடித்து விட, நீ காவியமும் இல்லை.
பாதியில் தொடங்கி பாதியில் முடிந்துவிட நீ என் வாழ்வின் ஒரு அத்தியாயம் அல்ல.
என் வாழ்வின் ஒட்டுமொத்த அர்த்தமும் நீயேதான்…. 🖤✨
நரைமுடியோடு இருக்கும் என்னை மரணம் தலுவிகொள்ளும் நொடி வரை உன்னையும் உன் காதலையும் தலுவி கொண்டு இருபேன் 🖤💫🌟 ✨
✒️ நர்மதா சண்முகம்.
அந்த லிஃப்ட் முதலாம் தளத்தில் வந்து நிற்க லிப்ட்டுக்காக காத்திருந்த ரித்திகா உள்ளே இருந்த விஷ்ணுவையும் ஷாலினியையும் பார்த்து அதிர்ந்தவள், அவர்களை சுய நினைவிற்கு கொண்டு வருவதற்காகவும் சுகந்தியின் கண்களில் அவர்கள் மாட்டாமல் இருப்பதற்காகவும் சத்தமாக இருப்பினாள். ரித்திகா இருமல் சத்தத்தால் அங்கே யாரோ வந்திருப்பதை உணர்ந்த ஷாலினி வேகமாக விஷ்ணுவிடம் இருந்து தன்னை பிரித்துக் கொண்டாள்.
வந்திருப்பது செண்பகமாக இருந்தால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த விஷ்ணுவும், ஷாலினியும், அதிர்ச்சியில் வாசலில் பக்கம் திரும்பி பார்க்க அங்கே இருந்த ரித்திகாவை பார்த்து சற்று நிம்மதி அடைந்தனர். இருப்பினும் இந்த கோலத்தில் ரித்திகா தங்களை பார்த்து விட்டதால் அவர்கள் சற்று சங்கடமாகவும் உணர்ந்தனர். அவர்களுடைய மன நிலையை புரிந்து கொண்டு அவர்களை சகஜமாக்க நினைத்த ரித்திகா, “சித்தார்த் ரெடி ஆயிட்டானா..??? வாங்க நம்ம அவன போய் பாக்கலாம்.” என்று சொன்னவள் லிப்ட்டின் உள்ளே ஏற, அவளைத் தொடர்ந்து சுதந்தியும் உள்ளே வர அவர்கள் அனைவரும் மீண்டும் தரை தளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
சீதாவின் அறையில் இருந்து அவளையும், சூர்யா, வைஷாலி மற்றும் தர்ஷினி ஐ அழைத்து கொண்டு வெளியே வந்த செண்பகம்; பிராத்தனாவிடமும், தர்ஷினி இடமும், மீதம் இருப்பவர்களை அழைத்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வைத்தாள். சில நிமிடங்களில் வருண் முதல் ஆதித்யா வரை அனைவரும் அங்கே வந்து விட, அனைவரையும் சீக்கிரம் செல்லும் படி விரட்டி கொண்டே இருந்த செண்பகம், சித்தார்த் ஐ அழைத்துக் கொண்டு தானும் ஒரு காரில் ஏறி கொண்டாள்.
செண்பகம் மற்றும் சித்தார்த்துடன் ரித்திகாவின் பெற்றோர்களும் அமர்ந்து கொண்டனர். அதனால் அந்த கார் நிரம்பி விட, அங்கு இருந்து அது கிளம்பி சென்றது. இப்போது ரித்திகா தான் யாருடன் செல்வது என்ற குழப்பத்தில் இருந்தாள். இந்த நிச்சயதார்த்தத்திற்கு வரும்படி வருண் தன்னை அழைத்து இருந்ததால் ஆராதனா கூட கிளம்பி கீழே வந்திருந்தாள். அதனால் ஹரி ஒருவழியாக அவளை கெஞ்சி சமாதானப்படுத்தி தன்னுடைய காரில் அவளை ஏற்றிக்கொண்டு அங்கு இருந்து சென்றான். சீதாவின் குடும்பம் அவர்களுடைய காரில் சென்று விட்டனர். முதன் முதலில் தன்னுடைய காரில் ஷாலினியுடன் செல்ல போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்த விஷ்ணு ரித்திகாவிடம் சொல்லிவிட்டு ஷாலினியை கூட்டி கொண்டு கிளம்பினான்.
தனக்கு அந்த மண்டபம் எங்கே இருக்கிறது என்று கூட சரியாக தெரியாத போது இப்போது தான் எப்படி அங்கே செல்வது என்ற குழப்பத்தில் இருந்தாள் ரித்திகா. சற்று தொலைவில் இருந்து மொபைல் போனில் யாருடனோ பேசி கொண்டு இருந்த வருண், ரித்திகாவை கவனித்தான். அவனுக்கு இப்போதே ரித்திகாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவளை தன்னுடைய காரில் ஏற்று கொண்டு செல்ல வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. அதனால் “ஐ வில் கால் யு பேக்.” என்று சொல்லி அந்த அழைப்பை துண்டித்து விட்டு ரித்திகாவின் அருகே வந்த வருண், ஒரு நொடி அப்படியே தயங்கி நின்று விட்டான். தானாக சென்று அவளிடம் பேச அவனுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை. அதனால், “இப்ப இவள இங்கே இருந்து கூட்டிட்டு போறதுக்கு வேற ஆள் இல்லைனா அவளே நம்பள கூட்டிட்டு போக சொல்லி நம்ம கிட்ட கேட்ப்பா. அப்புறம் நம்ம எதுக்கு இவ கிட்ட தேவையில்லாம போய் பேசணும்…???” என்று நினைத்தவன் அப்படியே நின்று மீண்டும் போனில் பேசுவதைப் போல் பாவலா செய்ய தொடங்கி ஓரக் கண்ணால் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆனால் சில நிமிடங்கள் கடந்து இருந்தும் ரித்திகா, வருண் இருக்கும் பக்கம் கூட அவனை திரும்பி பார்க்கவில்லை. இப்படியே ஒவ்வொருத்தராக சென்று கொண்டு இருக்க அங்கு சென்ற சிவாவை அழைத்த ரித்திகா, “சிவா அண்ணா நீங்க என்ன டிராப் பண்றீங்களா..???” என்று கேட்டாள். இன்னொரு பக்கத்தில் இருந்து சிவாவை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்த வருண், அவளுடன் செல்ல வேண்டாம் என்று சைகைகள் செய்துது கொண்டு இருந்தான். ஆனால் ரித்திகா பேசுவதை மட்டுமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்த சிவா, வருண் தனக்காக கொடுக்கும் சைகைகளை எல்லாம் கவனிக்கவே இல்லை. அதனால் வாங்க“ மேடம் போலாம்.” என்று சொன்ன சிவா, ரித்திகாவை கூட்டி கொண்டு தன்னுடைய காரில் அங்கு இருந்து கிளம்பினான். அதைக் கண்டு கடப்பான வருண் தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து அங்கு இருந்து கிளம்பினான். வழக்கம் போல பாடி கார்டுகளின் கார் அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் சென்று கொண்டு இருந்தது.
பிரவீன் இன் திருமணம் மண்டபத்தில் ..
திருமண கோலத்தில் பிரவினின் அருகே அமரந்து இருந்தாள் லக்ஷனா. அவளுடைய கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அது திருமணத்தில் ஏற்றப்படும் யாக குண்டங்களில் இருந்து வரும் புகையின் காரணமாகவா.. இல்லை.. அவளுடைய மனதில் எரிந்து கொண்டு இருக்கும் வேதனை தீயின் காரணமாகவா என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்.
அந்த ஓட்டு மொத்த அரங்கிலும் இந்த திருமணத்திற்காக ஏராளமானோர் வந்து குவிந்து இருந்தனர். அவர்களின் இந்த திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மூன்றே நபர்கள் மட்டும் தான்.
1) பிரவீன்.
2) பிரவீனின் அம்மா தேவி.
3) லக்ஷனாவின் அம்மா மங்கை.
இவர்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த திருமணத்தைப் பற்றி குறை கூறிக் கொண்டும் பிரவினை இழிவாக பேசிக் கொண்டும் தான் இருந்தனர். மணப்பெண் தோழியாக லக்ஷனாவின் அருகே நின்று கொண்டு இருந்த சௌபர்ணிகா, தன்னுடைய அக்காவின் வாழ்க்கை இப்படி நாசமாகிறது என்று நினைத்து சத்தம் இன்றி அழுது கொண்டு இருந்தாள். 😭 😭 😭
தன் அருகே அமர்ந்து இருப்பவள் என்ன மன நிலையில் இருக்கிறாள் என்று கூட அறிந்து கொள்ள முயற்சிக்காத பிரவீன், வருணிக்கு பார்த்த பெண்ணுடன் தனக்கு திருமணம் ஆகப்போவதை நினைத்து மகிழ்ச்சியில் அவளை உரசிக் கொண்டு வெட்கமின்றி அங்கு இருந்த கேமராக்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான். 😂 😂 😂
பின் சில நிமிடங்களில்…
அங்கு இருந்த ஐயர்…
கெட்டி மேளம்… கெட்டி மேளம்…. என்று சொல்லிவிட்டு….
தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் ஐயர்.
மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர். வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து இருக்கும் உறவினர் நண்பர்களிடம் “சார் , கொஞ்சம் இந்தப் பக்கம் பாருங்க” என்று கேட்கின்றனர்.
இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் கெட்டி மேளம் முழங்க வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் தான் இருக்கும் பரபரப்பில் தாலியை மணப் பெண்ணான லக்ஷனாவின் கழுத்தில் கட்டுகிறான் பிரவீன்.
பின்… புரோகிதர்
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
என்று சொல்ல…
இந்த தருணத்தில் லக்ஷனா எப்படி இருக்கிறாள் அவள் இந்த தாலியை மன நிறைவுடன் நான் ஏற்று கொள்கிறாளா என்று கூட கவனிக்காமல், லக்ஷனாவின் கழுத்தில் தாலி கட்டி முடித்தான் பிரவீன். அவன் தாலி கட்டி முடித்தவுடன் தாலியிலும், லக்ஷனாவின் நெற்றி வகுட்டிலும் குங்குமத்தை வைத்தவுடன், உரிமையாக அவன் அவளுடைய கைகளை பற்றிக்கொள்ள… லக்ஷனாவின் கண்களில் இருந்து வடிந்த ஒரு சொட்டு கண்ணீர் பிரவீன் கைகளை வந்து தொட்டது. 😭 😭 😭 அதைக் கூட உணராத பிரவீன் இன்னும் இறுக்கமாக லக்ஷனாவின் கைகளை இறுக்கி பிடித்து அவளுடைய கன்னத்தில் அனைவரின் முன்னிலையிலும் உரிமையாக முத்தமிட்டான். 😍 😘 😘 😘
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)