“மம்மு!” என்று அவளை தன் பக்கம் திருப்ப முயல, அடுத்த நொடி அவள் வயிற்றை பிரட்டிக் கொண்டு வந்து வேகமாய் எழுந்தவள், “வ்லாக்” என்று வாந்த போக, அவனோ பதறி தன் கரங்களை ஏந்தினான்.
அதில் திடுக்கிட்டு தன் வாயில் கை வைத்து அடக்கியவள், அவன் மீது வாந்த கூடாது என்று அவசரமாய் திரும்ப போக, அடுத்த நொடி மொத்தமாய் பிரட்டிக் கொண்டு வரவும் திரும்பிய இடத்தில் மொத்தமாய் வாந்தியிருந்தாள். அடுத்த நொடி அங்கிருந்த அவனின் லேப்டாப் மொத்தமும் வாந்தியால் நனைய, அவன் இவ்வளவு நேரம் செய்த உழைப்பு மொத்தமாய் நாசமானது.
அதில் அவள் அகல விழி விரிக்க, அவனுக்குமே இதயமே நொடியில் நின்றிருந்தது.
அவன்வேறு அதை சேவ் செய்யாமல் இருக்க, வேகமாய் பொத்தாங்களை அழுத்தி சேவ் செய்ய முயன்றான். ஆனால் அதுவோ ஜேம் ஆகியிருக்க, அவசரமாய் மீண்டும் தட்டி பார்த்தான். அதற்குள் புகை வாடை வந்திருக்க, ஸ்க்ரீன் மொத்தமாய் ஆஃப் ஆனது. அதில் அவன் பதறி மீண்டும் பவர் பட்டனை அழுத்தி பார்க்க, திடீரென்று தீபொறியே வந்துவிட்டது.
அதில் பதறி பின்னால் விலகியவன் பொத்தென்று மெத்தையில் விழுந்திருந்தான். “ஏங்க..” என்று அவள் அவனை பிடிக்க வர, அவளை அத்தனை கோவமாய் முறைத்தான் அகன். அதில் அவள் பயத்தோடு பின் வாங்க, அவசரமாய் எழுந்து அமர்ந்தவன், “அறிவிருக்கா உனக்கு?” என்று கோபமாய் கத்தினான்.
அவளோ திடுக்கிட்டு அரண்டு பார்வையை தாழ்த்த, ” எவ்ளோ கஷ்டப்பட்டு ரெடி பண்ண வொர்க் தெரியுமா? இத நா எப்பிடி..” என்றபடி லேப்டாப்பை பார்க்க அதுவோ மொத்தமாய் நாசமாகியிருக்கவும் கோபம் ஏறி, “உன்ன..” என்றபடி அவளை அறைய வர, அவளோ பயந்து முகத்தை திருப்பிக்கொண்டு கரத்தால் கன்னத்தை மறைத்தாள்.
அடுத்த நொடி தன் மீது அடி விழாமல் இருக்கவும் பயத்தோடு திரும்பி மெல்லியதாய் கரத்தை இறக்க, அவனோ பெருமூச்சாய் கோபத்தை இறக்கிவிட்டு ஓங்கிய கரத்தாலே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அதில் அவள் வாயில் ஒட்டியிருந்த வாந்தி மொத்தமும் அவன் தோள் சட்டையில் பூச, அவளோ புரியா பதற்றத்தோடு குனிந்து அவனை பார்த்தாள்.
அவனோ அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, “ஐயம் சாரி.” என்றான் நொந்த பெருமூச்சாய்.
அதில் அவளோ புரியா பதற்றத்தோடே தலையை மெல்லியதாய் திருப்பி அவனை பார்க்க, அவனோ வேகமாய் விலகி, “திரும்ப வாமிட் வருதா?” என்று அவள் கன்னம் பற்றி பதறி கேட்டான்.
அவளோ இல்லை என்று மெல்ல தலையசைக்க, அப்போதே அவளின் இதழில் ஒட்டியிருந்த வாந்தியை கவனித்தவன், திரும்பி தன் தோள்சட்டையை பார்த்தான். அதிலும் அப்பியிருக்கவும் புருவம் குறுக்கியவன் திரும்பி தன் கர்சீப்பை தேடினான். அதுவோ அவனிடம் இல்லாமல் போக, அவளோ அவசரமாய் தன் முந்தாணையை எடுத்து அவனிடம் நீட்டினாள். அதை பார்த்தவன் சரியென்று அதை வாங்கிக் கொண்டு தன்னையல்ல முதலில் அவளின் வாயை அழுத்தி துடைத்துவிட்டான்.
அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவனோ கவனமாய் பொறுமையாய் அவள் வாயில் ஒட்டியிருந்ததை பார்த்து பார்த்து துடைத்துவிட, இவளுக்கோ தன் பிறந்து வீட்டின் நினைவில் கண்கள் கலங்கியது. அங்கிருக்கும் அனைவரின் முகமுமே இன்று இந்த ஒருவனின் முகத்தில் தெரிந்தது. அதற்குள் துடைத்து முடித்தவன் திரும்பி தன் தோள் சட்டையையும் பிறகுதான் துடைத்துக் கொண்டான்.
அதில் அவள் கண்ணீருடன் அவனையே பார்க்க, அவனோ முழுதாய் துடைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி, “வா வாஷ் ரூம் கூட்டிட்டு போறேன்.” என்றபடி அவள் கரத்தை பிடிக்க, அதில் திடுக்கிட்டு அவன் கரத்தை பார்த்தவள், மெல்ல அதை பிடிக்க, அப்படியே அவள் இடையையும் தாங்கி பிடித்தவன் மெல்ல அவளை தூக்கி விட, அவளும் அவனை தாங்கி பிடித்து கட்டிலைவிட்டு இறங்கினாள்.
அவள் தரையில் கால் வைத்த நொடி அவன் வேகமாய் அவளை அள்ளி தூக்க வர, “இல்ல இல்ல வேண்டா ப்ளீஸ்.” என்றாள். அதில் அவன் திடுக்கிட்டு அவளை பார்க்க, அவளின் பார்வையோ தவிப்புடன் தழுவியது அவனின் காயம்பட்ட கரத்தை தான்.
“இல்ல இரு நானே..” என்று அவன் தூக்க வர, அதற்குள் அவளுக்கு குமட்டிக் கொண்டு வர, வேகமாய் வாயில் கை வைத்தபடி குளியலறைக்குள் ஓடினாள்.
அதில் அவன் பதறி “ஹேய் பாத்து” என்று அவளின் பின்னால் ஓட, உள்ளே வந்த அவளோ வாஷ் பேசினில் குனிந்து மொத்தமாய் வாந்தி எடுத்தாள்.
ஏற்கனவே மொத்த சக்தியையும் இழந்திருந்தவளுக்கு வாந்தியெடுக்கும் தெம்புக்கூட இல்லாதிருக்க, எடுக்க எடுக்க மூச்சு வாங்க நிறுத்தியவளின் தலையெல்லாம் சுற்றியது. அந்த தலையை இரு பக்கமும் தாங்கி பிடித்தவன், “ஒன்னும் இல்ல இன்னும் கொஞ்சம்தா.” என்றபடி அவளை முழுதாய் குனித்து எடுக்க வைத்தான். அவளும் முழுதாய் எடுத்து முடித்து முழு சக்தியையும் இழந்து அவன் மீது சாய, அவளை தன் மார்பில் தாங்கி பிடித்து மென்மையாய் தட்டி கொடுத்தவன், “ஒன்னும் இல்லடா செரியாயிரும்.” என்றபடியே மறு கரத்தால் பைப்பை திருகி தண்ணீரை எடுத்து அவள் வாயை கழுவிவிட்டான்.
அப்போதும் அவள் அவன் மீதே சாய்ந்து கிடக்க, அவள் கரம் தன் அடி வயிற்றை இறுக்கி பிடித்தது. ஓரளவு அடங்கியிருந்த வலி இப்போது அடிவயிற்றை பிரட்டிக்கொண்டு வந்த வாந்தியில் மீண்டும் கிளம்பியிருக்க, அவளோ வலியில் முகத்தை குறுக்கியபடி அவன் மார்பில் முழுதாய் புதைந்தாள்.
அவனுமே அவள் தலையை தாங்கி தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, “ஒன்னும் இல்ல செரியாயிரும் ம்ம்?” என்றபடி தட்டி கொடுக்க, அவளோ அப்படியே அரை மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.
அதில் அவன் அப்படியே அவளை அள்ளி தூக்க வர, அவன் சட்டையை இறுக்கி பிடித்து அவனுள் புகுந்தவள், “வ்..வேண்டா ப்ளீஸ்” என்றாள் முனங்கலாக. அதில் அவளை அணைத்து தாங்கியவன், “என்ன ஆச்சு ம்மு தூக்கும்போது வலிக்குதா?” என்று கேட்க, அவளும் அவன் மார்புக்குள் மூச்சு வாங்கியபடி, “ம்ம்” என்றாள்.
அதற்குமேல் அவனும் தொந்தரவு செய்யாமல் அவளை கை தாங்கலாய் அப்படியே அழைத்து வர, அவளோ தடுமாறி சாயவே முயன்றாள்.
அதில் அவளை தாங்கி பிடித்தவன், “என்ன புடிச்சுக்கோ.” என்றபடி அவள் கரங்களை தன் இடையில் சுற்றி பற்றிக்கொள்ள, அவளும் அவனை முடிந்த மட்டும் இறுக பிடித்தபடி மெல்ல நடந்து வந்தாள்.
அப்படியே அவன் அவளை அறைக்கு அழைத்து வர, அங்கே மெத்தையில் கிடந்த அவன் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அதை கவனித்தவன் சிறிதும் அவசரப்படாமல் முதலில் தன் மனைவியை பொறுமையாய் அந்த மெத்தையில் அமர வைத்தான். அதில் மெல்ல சாய்ந்து அமர்ந்தவளின் அரை விழிகள் அந்த லேப்டாப்பை தழுவ, அவள் விழியோரம் நீர் துளிர்த்தது. தன்னால் மட்டுமே இவனுக்கு இவ்வளவு கஷ்டம் என்று.
“இப்ப ஓகேவா?” என்று அவன் பதற்றமாய் கேட்க, அவளோ ம்ம் என்று மெல்ல தலையசைத்தாள். அதன் பிறகே அவன் திரும்பி தன் மொபைலை எடுக்க போக, அவன் கரத்தை பிடித்தாள் மௌனா.
அதில் அவன் திரும்பி அவளை பார்க்க, அவளோ சோர்வாய் இமைகளை பிரிக்க முயன்று, “ஐயம் சாரி.” என்றாள். அடுத்த நொடியே அவள் விழியோரம் கண்ணீர் துளி கசிய, இவனோ பதறி அவளை நெருங்கி அவள் கன்னம் பற்றி, “என்ன ஆச்சு ம்மு? இப்ப எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற?” என்று அத்தனை மென்மையாய் கேட்டான்.
சற்று முன் அவள் செய்ததையே உதறி தள்ளிவிட்டு அவன் காட்டும் இந்த அக்கறையில் அவளுக்கு கண்ணீர் மட்டுமே பெருகியது. அந்த கண்ணீரை மெல்ல துடைத்துவிட்டவன், எக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கன்னம் பற்றி, “நா அப்ப சொன்னதுதா எப்பவும். உன்னவிட முக்கியமானது எனக்கு எதுவும் இல்ல.” என்றான் அவள் விழிகளிடம்.
அதில் அவன் விழிகளையே பார்த்தவளின் தவிப்பு விழியில் தழும்ப, “எதுக்காக என்மேல..” என்று கேட்க வர, மீண்டும் அவன் கைப்பேசி சத்தமாய் ஒலித்தது.
அதில் திடுகிட்டு திரும்பியவன், “ஒரு நிமிஷம்.” என்றபடி அதை எடுக்க, அந்த மொபைல் திரையில் லோகன் என்ற பெயர் பெரிதாய் வந்தது.
அடுத்த நொடி அவன் புருவங்கள் விரிய, வேகமாய் அட்டன் செய்தவன், “டேய் மச்சான்!” என்றான் அத்தனை நிம்மதியாக.
“என்னடா ஆச்சு? ஏ இன்னிக்கு ஆஃபிஸ் வரல?” என்றான் லோகன்.
“நல்லவேளடா நீயே கால் பண்ணிட்ட.” என்றவன் திரும்பி தன் மனைவியை பார்த்து, “நீ ரெஸ்ட் எடு. இப்ப வந்தர்றேன்.” என்று கூற, அவளும் சரியென்று மெல்ல தலையசைத்தாள்.
அதில் அப்படியே எழுந்து பால்கனிக்கு வந்தவன், இப்போதே முகத்தில் மொத்த டென்ஷனையும் வெளிப்படையாய் காட்டி, “மச்சான் என்ன பண்றதின்னே தெரியலடா.” என்றபடி நெற்றியை பிடித்தான்.
“என்னடா ஆச்சு? மொதல்ல சொல்லு.” என்று அவன் கூற, இவனும் தன் மனைவியின் உடல் நிலை மற்றும் தனக்கு ஏற்பட்ட காயம் லேப்டாப் பழுதானது என்று அனைத்தையும் அவனிடம் சுருக்கமாய் விவரித்தான்.
அதை கேட்டு அத்தனை அதிர்ச்சியடைந்தவன், “என்னடா சொல்ற? இந்த கையோட வேல பாத்தியா?” என்று அவன் பதறி கேட்க, “வேற என்ன பண்ண சொல்ற? அந்த மூங்கில் தலையன் லீவ் தர மாட்டன்னு சொல்லிட்டான். என் ப்ராஜக்ட் டெட் லைன் வேற நெருங்கிருச்சு. அதா வேற வழியும் இல்ல எனக்கு.” என்றான் அகன்.
அதில் பதற்றமாய் யோசித்த இவனுக்குமே அந்த டீம் ஹெட் முகிலனின் மீது கோவமாய் வர, அதைவிட தன் உயிர் தோழனின் நிலையை எண்ணிதான் அத்தனை கவலையாக இருந்தது. அதில் நெற்றியை சொரிந்தபடி எதையோ யோசித்தவன், “சரிடா இனி நீ ஒன்னும் பண்ண வேண்டா. உன் லாகின் பாஸ்வேர்ட் மட்டும் சொல்லு. நா பாத்துக்குறேன்.” என்றான் லோகன்.
“டேய் டேய் அதெல்லா வேண்டா. நா என் பழைய லேப்டாப்ல கனைக்ட் பண்ணி..” என்று கூற வர, “ஒன்னும் தேவல்ல. இந்த கைய வெச்சுட்டு கண்டிப்பா சொன்ன டைம்ல உன்னால முடிக்க முடியாது. நீ டீட்டியல்ஸ் அனுப்பு நா பாத்துக்குறேன்..” என்றான் லோகன்.
“அவன் கண்டுபுடிச்சான்னா கொன்னிருவான்டா.” என்று இவன் பதறி கூற, “கிழிப்பான். அந்த மூங்கில் மண்டயன் மண்டைய பொளந்தர்றேன் உடு நீ குடு.” என்றான் லோகன்.
அதில் பட்டென்று சிரித்துக் கொண்டவன், “சரி பட் உன்னோட வொர்க்..” என்று கேட்க வர, “என் ப்ராஜக்ட் டெட் லைனுக்கு இன்னும் டைம் இருக்கு. இன்னிக்கு ஒரு நாள்தான நா பாத்துக்குறேன். நீ அண்ணிய நல்லா பாத்துக்கோ.” என்றான் லோகன்.
அதில் நிம்மதியாய் சுவாசத்தை இறக்கியவன், “சரி ஓகே மச்சான். தேங்க்ஸ்டா.” என்று கூற, அதில் புன்னகைத்தவன், “என்னடா.. நீ பண்ணாததையா நா பண்ணிட்டேன்?” என்று கேட்டான் லோகன்.
அதில் புன்னகைத்த அகன், “செரிடா நா அனுப்புறேன்.” என்று கூற, “ம்ம். ஃபோன ஆன்லைனே வெச்சுக்கோ. ஓடிபி வரும்.” என்றான் லோகன்.
“ம்ம் சரி. பத்தரம்.” என்று இவன் கூற, “நா பாத்துக்குறேன். நீ உன் ஹெல்த்த ஃபர்ஸ்ட்டு பாத்துக்கோ. வேற எத பத்தியும் யோசிக்காம அண்ணியையும் நல்லா பாத்துக்கோ. இந்த மாதிரி நேரத்துல உன் கவனம் ஃபுல்லா அவங்க மேலதா இருக்கணும்.” என்றான் லோகன்.
“சரிடா நா பாத்துக்குறேன்.” என்று கூற, “சரி நா வெச்சர்றேன். மேனேஜர் வேற இந்த ப்க்கமா வர்றான்.” என்றான் லோகன்.
“ம்ம் சரிடா பாத்துக்கோ” என்றபடி இணைப்பை துண்டித்தவன், இப்போதே நிம்மதியாய் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு திரும்பி அறையை பார்த்தான். இனி எந்த டென்ஷனும் இல்லாமல் தன் மனைவியுடன் முழு நேரத்தையும் செலவிடலாம் என்று உள்ளுக்குள் ஒரு இன்பம் துளிர்க்க, புன்னகைத்தபடி உள்ளே சென்றான்.
அங்கே அவளோ மெத்தையில் சாய்ந்து அமர்ந்த நிலையில் விழி மூடி உறங்கிக் கொண்டிருக்க, அதில் புன்னகைத்தபடி அவள் அருகில் வந்தான். அங்கே அவள் காலருகே கிடந்த லேப்டாப்பை எடுத்து அப்புறப்படுத்தியவன், அங்கே அவளின் கால்களை மென்மையாய் பிடித்து வசதியாய் நீட்ட வைத்தான்.
அதில் திடுக்கிட்டு விழித்தவள், பதறி தன் கால்களை உருவிக்கொள்ள, “என்ன ஆச்சு?” என்றான் பதறலாக.
அவளோ தயக்கமாய் தன் கால்களை குறுக்கிக் கொண்டு பார்வையை தாழ்த்தி, “அ..அது பொண்டாட்டியோட கால.. ப்..புருஷன் தொட கூடாது.” என்றாள் தடுமாற்றமாக.
அதில் புருவத்தை சுழித்தவன், “யாரு சொன்னது?” என்று கேட்க, அதில் அத்தனை தயக்கமாய் அவள் விழிகள் அலைப்பாய, “எங்..க ஊர்ல சொல்லுவாங்க.” என்றாள்.
அதில் பட்டென்று புன்னகைத்தபடி அவள் காலருகே அமர்ந்தவன், அவள் கால்களை தூக்கி தன் மடியில் வைக்க, அவளோ திடுக்கிட்டு “ஐயோ என்ன பண்றீங்க?” என்றபடி விலக்க முயல, அதை அழுத்தி பிடித்து நகராமல் வைத்தவன், “அப்றம்?” என்றபடி அவளை பார்த்தான்.
அதில் அவளோ புரியாது ஆன் விழிகளை பார்க்க, அவனின் அந்த விழிகளிலோ இரசனையோடு அவளை தழுவியது.
அதில் அவள் இமைகள் தடுமாற குழப்பமாய் அவன் விழிகளை பார்த்தாள். அந்த தடுமாறும் விழிகளில் இவனின் இரசனை இன்னும் கூட, “உங்கிட்ட ஒன்னு கேக்கவா?” என்றான்.
அதில் குழப்பமாய் அவன் விழிகளை பார்த்தவள், “ம்ம்” என்று கூற, அவனோ சிறு ஆசையோடு அவள் விழிகளுள் எதையோ தேட ஆரம்பித்தபடி, “உங்க ஊருல புருஷன எப்பிடி கூப்புடுவாங்க?” என்று கேட்டான்.
அடுத்த நொடி சட்டென்று இவள் இதயம் பலமாய் துடிக்க, அவள் ஊரில் மனைவிகள் உச்சரிக்கும் அனைத்து பெயர்களும் அவள் கண்முன் வந்து குவிந்தது. அப்படியெல்லாம் அழைக்க வேண்டும் என்றால் நேரம் எடுக்குமே. இவன் இப்போதே அழைக்க கூறினால் என்ன செய்ய என்று அவள் மனம் படபடத்தது.
– காதல் தீ தொடரும்…