Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 188

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 188

by Thenaruvi Tamil Novels
5 views

அத்தியாயம் 188: உங்களுக்கு சிரிக்கவே தெரியாதா? (பார்ட் 1)

நாராயணன் மஹாலில்….

விஷ்ணு .ஷாலினி பிரார்த்தனா அவர்கள் மூவரும் சேர்ந்து வருண் மற்றும் ரித்திகாவையும் அழைத்து கொண்டு வந்து மேடையில் நிற்க வைத்தனர். வழக்கம் போல் வருனும் ரித்திகாவும் அதிக இடைவெளியை விட்டு நின்று கொண்டு இருக்க அதை கவனித்த போட்டோ கிராபிக் டீம், “சார் வந்து மேடம் பக்கத்துல நில்லுங்க.” என்று தங்களுடைய வழக்கமான டயலாக் ஐ சொன்னார்கள். அதனால் வேறு வழி இன்றி வருண் ரித்திகாவின் அருகே நெருங்கி செல்ல அவனைப் பார்த்து முறைத்த ரித்திகா, “கொஞ்சம் தள்ளி நில்லுங்க.” என்று அமைதியான குரலில் சொன்னாள். 😒 🤨

அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பான வருண்,  வேண்டுமென்றே அவள் அருகே சென்று அவளை உரசிக்கொண்டு நின்றவன் போதாத குறைக்கு அவளுடைய இடுப்பில் தன்னுடைய ஒரு கையை வைத்துக் கொண்டான். கூச்சம் கலந்த கோபத்துடன் வருணை பார்த்தாள் ரித்திகா . 😍 😒

வருண் அவளை குறும்பாக பார்க்க, ரித்திகா அவனை கோபத்துடன் பார்க்க, போட்டோகிராபர்கள் அதை ஒரு அழகான கேண்டிட் புகைப்படம் ஆக எடுத்தனர். இவர்கள் இருவரும் பொருத்தமான ஜோடியா என்று இதுவரை நினைத்துக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை பார்த்து உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டனர். 

வருணிக்கும் ரித்திகாவுக்கும் தங்களால் முடிந்த வரை எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்த ரித்திகாவின் பெற்றோர்கள், கையில் ஒரு தட்டுடன் மேடைக்கு வந்தனர். அந்தத் தட்டில் இரண்டு ஜுவல்லரி பாக்ஸ்கள் இருந்தன. செண்பகத்தையும் மேடைக்கு அழைத்த ரேவதி அவளின் முன்னே தன்னுடைய மகளுக்கு 10 பவுனில் ஒரு பெரிய ஆரத்தையும், வருணிக்கு இரண்டு பவுனில் பிரேஸ்லெட்டும், ஒரு பவுனில் மோதிரமும், மூன்று பவுனில் செயினும் அனைவரும் முன்னிலையில் அணிவித்தனர். 

முதலில் “இது எல்லாம் எதுக்கு அங்கிள் பரவாயில்லை.” என்று தான் சொன்னான் வருண். வருனை பாசமுடன் பார்த்த சுதாகர், “இல்லைங்க மாப்பிள்ளைளை எங்களுக்கு ரித்திகா ஒரே பொண்ணு. அவளுக்கு செய்யாம நாங்க வேற யாருக்கு செய்யப் போறோம்..??? ஏற்கனவே சம்மந்தி அம்மா தலையில இருந்து கால் வரைக்கும் அவளுக்கு தங்கத்துல நிறைய நகை செஞ்சு போட்டு இருக்காங்க. அவங்க செஞ்சதுக்கு முன்னாடி எல்லாம் நாங்க செய்றது ஒண்ணுமே இல்ல தான். 

இருந்தாலும் நாங்க எங்க பொண்ணுக்கு எங்க மாப்பிள்ளைக்கும் எதாவது செய்யணும்னு ஆசைப்படறோம். தயவு செஞ்சு இத வேணாம்னு சொல்லாதீங்க.” என்று சொல்ல வேறு வழியின்றி சுதாகர் தனக்கு அணிவித்தவைகள் அனைத்தையும் அமைதியாக போட்டுக் கொண்டான் வருண். இது மட்டும் இன்றி ரித்திகாவுக்கு ஒரு திருமண பரிசு தயார் செய்து வைத்திருந்தாள் செண்பகம். அதை நிச்சயதார்த்தம் முடிந்தபின் அதை ரித்திகாவிடம்  ஒப்படைக்கலாம் என்று தான் நினைத்து இருந்தாள். ஆனால் பங்க்ஷன் தொடங்கும் போதே ரித்திகாவின் பெற்றோர்கள் சீர் செய்து விட்டதால், தன்னுடைய மருமகளுக்கு என கொடுக்க வைத்திருந்த திருமண பரிசை செண்பகமும் இப்போதே கொடுக்க விரும்பினாள். 

அதனால் தாராவை அழைத்த செண்பகம், சோபியாவிடம் தான் ரித்திகா விற்காக தயார் செய்து வைத்து இருந்த திருமண பரிசை கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினாள். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை கவனித்த ரித்திகா, “அம்மா நீங்க ஆல்ரெடி எனக்கு நிறைய பண்ணிட்டீங்க. எனக்கு இந்த மாதிரி காசு பணம் நகை மேல எல்லாம் ஆசையே இல்ல அம்மா. இதவே நீங்க ஆசைப்பட்டீங்கன்னு தான் நான் வாங்கிகிட்டேன். எனக்கு இதுவே போதும்.” என்று அமைதியான குரலில் சொன்னாள். 

ரித்திகா சொல்வதை கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்ட வருண், “யப்பா… என்ன மா நடிக்கிறா இவ…!!! யாராவது எதையாவது குடுத்தா, உடனே நம்ப அமைதியா அத வாங்கிக்கிட்டா நம்ம இதுக்கெல்லாம் ஆசைப்படறோம்னு நம்மளையே தப்பா நினைப்பாங்கன்னு உடனே வேணாம் வேணாம்னு சீன் போடுறா. இவ இப்படி சீன் போட்டா, அம்மா உடனே கெஞ்சி வாங்கிக்கோ மா..  வாங்கிக்கோ மா -ன்னு சொல்லி இவ கிட்ட குடுப்பாங்க. அதுக்கு தான் இவ்ளோ பில்டப்.”என்று நினைத்து கொண்டான்.  😂 😂 😂

ரித்திகாவின் கைகளை பாசமாக பிடித்துக் கொண்ட செண்பகம், “நான் உனக்கு எவ்ளோ செஞ்சாலும் பத்தாது ரித்திகாமா.” என்றவள் ஓர கண்ணால் அவள் அருகே நின்று கொண்டு இருந்த வருனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன தான் இருந்தாலும் சில சமயம் நான் பெத்த பிள்ளைகளே நான் சொல்ற பேச்சை கேட்கிறதில்ல. ஆனா என் வார்த்தையை நம்பி என் வீட்டுக்கு இன்னைக்கு மருமகளா வரப்போற. நீ என் மேல வெச்ச நம்பிக்கைக்கு நான் உனக்கு என்ன திருப்பி செஞ்சாலும் அது ஈடாகாது மா.  நான் இருக்கிற வரைக்கும் நான் உனக்கு எந்த கஷ்டமும் வராம பாத்துக்குவேன். 

எனக்கு அப்புறம் உன் பையன் உன்னை அவன் வளந்து பாத்துக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என் காலத்துக்கு அப்புறம் உன் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேணும். உனக்குன்னு ஒரு செட்டில்மெண்ட் இருக்கணும். அதான் நான் உனக்கு இதை தரேன். இது என்னோட கிஃப்ட் -ன்னு நினைக்காத. என்னோட ஆசிர்வாதமா நினைச்சு நீ இத நோ சொல்லாம வாங்கிக்கணும்.” என்று செண்பகம் ரித்திகாவிடம் சொல்லிக் கொண்டு இருக்க, வழக்கத்திற்கு மாறாக லெகங்கா சோலி அணிந்து தன்னுடைய கூந்தலை அழகாக பின்னலிட்டு அதில் பூச்சூடி கையில் ஒரு தட்டில் சிவப்பு நிற துணியை வைத்து மூடி எதையோ மேடைக்கு கொண்டு வந்தாள் சோபியா. 

அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு இருந்த ஆதித்யா, திடீரென்று மேடையில் தோன்றிய சோபியாவை வாயை பிளந்து கொண்டு பார்த்த படியே தான் செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு சிலையாய் சமைந்து நின்றான். 😍 ❤️ அப்போது ஆதித்யாவை   அழைத்த ஒருவன், “சார் வெளியில ரிப்போர்ட்டர்ஸ் நிறைய பேர் அவங்கள உள்ள விடச் சொல்லி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு பிரவீனோட கல்யாணம் வேற நடந்திருக்கனால இந்த ரெண்டு நியூஸ்சையும் போட்டு அவங்க சென்சேஷன் கிரியேட் பண்றதுக்கு இங்க வந்து நம்ம உயிரை வாங்கிட்டு இருக்காங்க. மீடியாக்காரங்களை பார்த்தாலே வருண்சாருக்கு பிடிக்காது. இப்ப என்ன சார் பண்றது…?? ப்ளீஸ் நீங்க கொஞ்சம் எங்க கூட வாங்க.” என்று சொல்ல, மானசிகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு ஆதித்யா அவனுடன் என்ட்ரன்ஸ்சை நோக்கி வேகமாக சென்றான். 

சோபியா கையில் ஒரு தட்டுடன் செண்பகத்தின் அருகே வந்து அதை அவள் முன்னே நீட்ட, அதன் மேலே இருந்த சிவப்பு துணியை நீக்கிய செண்பகம், அதில் இருந்த ஒரு பத்திரத்தை எடுத்து ரித்திகாவின் முன்னே நீட்டினாள். குழப்பத்துடன் அதை வாங்கிய ரித்திகா, “என்னங்க அம்மா இது பாக்குறதுக்கு ஏதோ டாக்குமெண்ட் மாதிரி இருக்கு…???” என்று கேட்டாள். 🙄

செண்பகம்: அன்பாக ரித்திகாவை பார்த்து ஒரு புன்னகை சிந்தியவள் , “நம்மளோட டோட்டல் ஷேர்ஸ்ல என்னோடது 25% ஷேர். அதுல இருந்து 5% ஐ ஷேர் ஐ உன்னோட பேர்ல நான் ரிஜிஸ்டர் பண்ணி இருக்கேன். நீ விரும்பினா இதுல இருந்து 2% ஐ ஷேர் நீ என்ன பண்ணாலும்  உனக்கு ரைட்ஸ் இருக்கு. ஏதோ என்னால முடிஞ்சத நான் உனக்கு குடுக்கிறேன் மா. இத வச்சு நீ ஆசைப்படுற மாதிரி உன்னோட லைப்ப  நீ செட்டில் பண்ணிக்கோ.” என்று சாதாரணமாக சொன்னாள். 

செண்பகம் பேசியதை கேட்டு சோபியாவை தவிர அங்கு இருந்த அனைவரும் வாயடைத்து போய் நின்று விட்டனர். நாராயணன் குரூப்ஸ் இன் வெறும் ஒரு சதவீத பங்கை கணக்கிட்டு பார்த்தால் கூட அது பல நூறு கோடி தாண்டி இருக்கும்.  இப்போது கல்யாண பரிசு என்று சொல்லி தன்னுடைய வருங்கால மருமகளுக்கு செண்பகம் சாதாரணமாக இப்படி 5% சதவீத பங்குகளை எடுத்துக் கொடுத்து விடுவாள் என்று யாரும் எதிர்பார்த்துருக்கவில்லை. இதனுடைய மதிப்புகள் என்ன கணக்கிட்டு பார்த்தாகூட அதற்கு சில மணி நேரங்கள் தேவைப்படும். 

இதில் ட்விஸ்ட் என்னவென்றால் செண்பகம் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது இதுவரை வருணிக்கு  கூட தெரியாது. தன்னுடைய அம்மாநூறு பவுனிற்கு மேல் ரித்திகாவிற்கு  போட்ட போதெல்லாம் அதை அவன் கேள்வி கேட்கவில்லை. ஆனால் விலைமதிப்பு இல்லாத நாராயணன் குரூப்ஸ் இன் பங்குகளை சாதாரணமாக இப்படி எவ்வளோ ஒருத்தியின் கைகளில் செண்பகம் தூக்கி கொடுப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லைை. அதனால் கோபமாக ரித்திகாவின் கைகளில் இருந்து அந்த டாக்குமெண்ட் ஐ பிடுங்கிய வருண், “என்ன அம்மா இது எல்லாம் என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாமல் இப்படி பண்ணி வச்சிருக்கீங்க…??? நம்மளோட ஒரு பர்சனன்ட் ஷேர் ஓட வேல்யூ என்னான்னு உங்களுக்கு தெரியாதா..??? இவளுக்கு ஈசியா   5% ஷேர் ஐ எழுதிக் குடுத்து இருக்கீங்க…!!! இது எல்லாம் நீங்களா தான் பண்றீங்களா இல்ல அவ உங்களை இப்படி பண்ண சொல்லி பிளாக்மெயில் பண்ணாளா..??? எனக்கு இதுல கொஞ்சம் கூட சம்மதம் இல்ல அம்மா. 

உங்களுக்கு உங்களோட சேர்ஸ் ஐ பிரிச்சு கொடுக்கணும்னு தோணுச்சுன்னா… எங்க நாலு பேருக்கும் பிரித்துக் கொடுங்க. இல்லைன்னா, உங்களுக்கு அப்புறம் உங்களோட கிராண்ட் சில்ட்ரன்ஸ் -க்குன்னு எழுதி வைங்க. இவளுக்கு ஏன் குடுக்குறீங்க..???” என்று எரிச்சலான குரலில் கேட்டு சீறினான். 😒 😡

அதுவரை இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த ரித்திகா, “அம்மா எனக்கு இது வேண்டாம் நீங்க என்ன சொல்லி குடுத்தாலும் நான் இத வாங்கிக்க மாட்டேன். உங்களுக்கு இத எனக்கு தான் குடுக்கணும்னு தோணுச்சுன்னா, அதை எனக்கு பதிலா சித்தாரத்துக்கு குடுங்க. பட் ஐ டோன்ட் வான்ட் திஸ்.” என்று அவசரமான குரலில் சொன்னாள். 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured