அத்தியாயம் 38
ஆட்டோவில் பயணித்த அமுதா விஜய்,அ கலைச்செல்வி மூவரும் திருவிழா நடந்து கொண்டு இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சேர்ந்தார்கள். விஜய் கெத்தாக முன்னே நடந்த செல்ல, பெண்கள் இருவரும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள். அவன் தனது முழு உருவத்தையும் மறைத்துக் கொண்டு பார்ப்பதற்கு தீவிரவாதியைப் போல இருந்ததால் அனைவரும் அவனை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அது திருவிழா சமயம் என்பதால் அங்கே குவிந்திருந்த ஏராளமான போலீசார்களில் ஒருவன் சந்தேகத்திற்கு இடமாக அங்கே சுற்றிக் கொண்டிருந்த விஜயை பார்த்துவிட்டு அவன் அருகில் சென்று “யார் நீங்க? கோவிலுக்கு இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்கீங்க? பப்ளிக் பிளேஸ்க்கு இப்படி எல்லாம் வரக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்க, “யாரு டா நீ பொடிப் பையன் என்னையே கேள்வி கேக்குறியா?” என்று நினைத்த விஜய் பத்து கோபத்திற்கு அவனை அடிப்பதற்காக கை ஓங்கினான்.
அவளை கவனித்தபடி அவனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த அமுதா அவன் கையை உயர்த்தப் போவதை கவனித்து விட்டு வேகமாக அவன் அருகில் சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “சார்.. சார்.. கோவப்படாதீங்க சார்.. இவன் என் அத்தை பையன். இன்னைக்கு இவனுக்கு பர்த்டே. பாவம் இவன் பர்த்டே அதுவுமா typhoid fever வந்திருச்சு. இப்போ கொரோனா கேசஸ் கொஞ்சம் வர ஸ்டார்ட் பண்ணி இருக்கிறதுனால டாக்டர் வெளியே எங்கேயாவது போனா கவர் பண்ணிட்டு போக சொல்லி இருக்காரு.
அதான் நாங்க இவர இப்படி கூட்டிட்டு வந்திருக்கோம். நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. நாங்க இந்த ஊர்க்காரங்க தான். பிரசிடெண்ட் கூட எங்களுக்கு தெரிஞ்சவர் தான். நீங்க வேணும்னா அவருக்கு கூட கால் பண்ணி என் பேரு அமுதான்னு சொல்லுங்க. அவர் உடனே என்ன கண்டுபிடிச்சுடுவாரு. நானே கூட அவர் கிட்ட பேசுறேன்.” என்று அந்த போலீஸ்காரரிடம் அவசரமான குரலில் சொன்னாள்.
அமுதாவை மேலும் கீழும் பார்த்த அந்த போலீஸ்காரர் மேலும் அவர்களிடம் ஏதோ சொல்ல வர, அப்போது வெளியில் யாரோ இருவர் பூக்கடையில் நின்று கொண்டு பிரச்சனை செய்வதாக வாக்கிடாகியில் தகவல் வந்ததால் “இதோ நான் உடனே வரேன்.” என்று சொல்லிவிட்டு அவர் வெளியில் சென்று விட்டார்.
அதன் பிறகு பெருமூச்சு விட்ட அமுதா அபிஷே என் கையை பிடித்து அவனை அந்த பெரிய கோவிலில் உள்ள பிரம்மாண்ட தூணுக்கு பின்னே அழைத்துச் சென்று “சார் கோவிலுக்குள்ள இப்படி எல்லாம் இருந்தா எல்லாருக்கும் டவுட் வர தான் செய்யும். நீங்க தான் கேப் போட்டு இருக்கீங்க இல்ல… அப்புறம் எதுக்கு முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி இப்படி ஒரு மாஸ்க்? இப்போ நீங்க போட்டு இருக்கிற கிளாஸ் மட்டுமே போதும். முதல்ல அந்த மாஸ்கை ரிமூவ் பண்ணுங்க. இல்லைனா போற வர்றவங்க எல்லாரும் நம்மள நிறுத்தி கேள்வி கேப்பாங்க.” என்று சொல்ல, “இவ சொல்லி அதை நம்ம கேட்கிற அளவுக்கு ஆயிடுச்சு!” என்று நினைத்து கோபமாக பெருமூச்சு விட்ட விஜய் அவள் சொன்னதைப் போலவே வெறும் தொப்பியையும் கண்ணாடியையும் மட்டும் அணிந்து கொண்டான்.
இப்போது அவனது முகத்தில் வெறும் இருபது பர்சன்ட் மட்டுமே வெளியில் தெரிந்தது. இந்த கூட்டத்தில் யாரும் அவனை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில் அவனை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள் அமுதா. சாமி தரிசனத்திற்கு செல்ல பெரிய லைன் நின்றது. அதை கவனித்த அமுதா இவன் கண்டிப்பாக பொறுமையாக லைனில் நின்று செல்ல மாட்டான் என நினைத்து விஜயிடம் சொல்லிவிட்டு சென்று அவர்கள் மூவருக்கும் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தாள்.
அவள் ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கி இருந்ததால் நேரடியாக அவர்கள் பல மக்களைக் கடந்து நேராக கோவில் கருவறைக்குள் நுழைந்தார்கள். அங்கே அலங்காரத்தில் சாந்த ஸ்வரூபிணியாக திருவிழா நடக்கும் சந்தோஷத்தில் மாரியம்மன் சிலையாக அமர்ந்திருக்க, அந்த தெய்வத்தின் உருவத்தை தன் கண்களில் பதித்துக் கொண்டு கண்களை மூடிய அமுதா, “நான் வெற்றிய கல்யாணம் பண்ணிக்கனும்னு எப்பயும் நினைச்சதே இல்ல. அவனை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு சொல்ற அளவுக்கு அவன் ஒன்னும் மோசமானவன் இல்ல.
அவன பத்தி நல்லா தெரிஞ்சதுக்கப்புறம் நானே அப்படி சொன்னா அது தப்பாயிடும். அது வீட்ல இருக்குறவங்களோட சேர்த்து அவனையும் ரொம்ப கஷ்டப்படுத்தும். எனக்கு வாழ்க்கையில முன்னேறி போக ஒரு வாய்ப்பையும் கொடுத்துட்டு, இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என மாட்டிவிட்டுட்டியே மா.. எல்லாத்தையும் பண்றது நீதான்.. இதுல என்ன பண்றதுன்னு எனக்கு சுத்தமா தெரியல. நீதான் என் வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லணும்.” என்று பிராத்தித்து கொண்டு இருந்தாள்.
தன் வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு தெய்வங்களின் மீது நம்பிக்கை வைப்பதை மறந்திருந்த விஜய் மனம் விட்டு கடவுளிடம் பிரார்த்திக்க கூட முடியாமல் அப்படியே வெறுமனே சாமி விக்ரகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அம்மனுக்கு தீப ஆராதனை காட்டிவிட்டு வந்த ஐயர் அவன் கையில் வலுக்கட்டாயமாக குங்குமத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
அதை தன் கைகளில் ஏந்தி கொண்டிருந்த விஜய் என்ன செய்வது என்று தெரியாமல் தன் அருகில் நின்று கொண்டு இருந்த அமுதாவின் கையைப் பிடித்து இழுத்து அவள் கையில் அதைக் கொட்டி விட்டான். சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த அமுதா திடீரென்று விஜய் அப்படி செய்ததால் கொஞ்சம் பதட்டமானாள். ஆனால் அவள் எதற்கும் ரியாக்ட் செய்வதற்குள் அவள் அருகில் வந்த பூசாரி அவளிடம் தீபா ஆராதனை தட்டை காட்டி “எடுத்துக்கோ மா அமுதா!” என்று சொல்ல, “சரிங்க சாமி” என்ற அமுதா தொட்டு கும்பிட்டு விட்டு அவர் கொடுத்த குங்குமத்தை வாங்கி ஏற்கனவே தன் கையில் இருந்த குங்குமத்துடன் கொட்டினாள்.
பின் அவள் தன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ள, அவளையே கவனித்துக் கொண்டிருந்த விஜயின் கண்களுக்கு அவள் இயற்கையான அழகுடன் இப்போது மங்களகரமாக மரியாதைக்குரிய பெண்ணாக தெரிவதாக தோன்றியது. அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அமுதா என்ன என்பதைப் போல அவனைப் பார்க்க, “அதான் சாமி கும்பிட்டாச்சு இல்ல.. சீக்கிரம் அவரை கூட்டிக்கிட்டு வா போகலாம்.” என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தாள் கலைச்செல்வி.
அதனால் விஜயை பார்த்து “இன்னும் கொஞ்ச நேரத்துல அன்னதானம் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. அதனால வெளியே போன கூட்டமா இருக்கும். சீக்கிரம் வாங்க சார் கிளம்பலாம்.” என்ற அமுதா அவன் கையைப் பிடித்து வெளியில் அழைத்து சென்றாள். தன்னை விட சிறிய பெண் இப்படி அவன் என்னவோ திருவிழாவிற்கு வந்திருக்கும் சின்ன குழந்தை போல அவன் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதை ஆச்சரியமாக பார்த்தபடி அவள் பின்னே சென்றான் விஜய்.
அவனுக்கு இது எல்லாம் புதிதாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அதேசமயம் இப்போது அவன் அவளை தடுக்கவோ அவளிடம் எதிர்த்து பேசவோ இல்லை. அவனது இறுக்கமான மனநிலையை மாற்றி மெல்ல மெல்ல அமுதா அவனை ஏதோ செய்து கொண்டிருந்தாள். அதை உணராமல் மரம் போல அவள் பின்னே சென்று கொண்டிருந்த விஜய் திடீரென்று அவள் கையைப் பிடித்து “எனக்கு பசிக்குது.” என்றான்.
உண்மையில் அவனுடன் சேர்ந்து அவர்கள் ஹாஸ்பிடலுக்கு எல்லாம் சென்று விட்டு வந்ததில் கிட்டத்தட்ட காலை உணவு நேரம் கடந்து இப்போது மதியமாகி இருந்தது. அவன் பசி என்று சொன்னவுடன் தான் அவர்களுக்கும் தங்கள் வயிறு சத்தம் எழுப்புவதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது. உடனே என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கிய அமுதா “பேசாம லஞ்சுக்கு இவரை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாமா? ஆனா அப்படி மட்டும் பண்ணா நான் தொலைஞ்சேன். அப்புறம் எனக்கே சோறு இல்லைன்னு சொல்லி என்ன வீட்டை விட்டு துரத்தினாலும் துரத்திடுவாங்க. கேப் புக் பண்றதுக்கு கூட காசு இல்லாம நானே இவரை ஆட்டோ பிடிச்சு கூட்டிட்டு வந்தேன். இப்ப பசிக்குதுன்னு சொல்றாரு சாப்பிடுவதற்கு என்ன பண்றது?” என்று நினைத்து சோகமாக சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கொஞ்ச நேரத்திற்கு முன்பு விஜயிடம் சொன்னதைப் போலவே கோவில் மண்டபத்தில் வடை, பாயாசத்துடன் தலைவாழை இலை போட்டு அனைவருக்கும் சமபந்தி போஜனம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரில் உள்ள பெரும்பாலான மக்கள் அங்கே சாப்பிடுவதற்காக குவிந்து கொண்டிருந்தார்கள்.
அந்தக் காட்சியை பார்த்தவுடன் அவள் மண்டையில் ஒரு பல்பு எறிய, “இதை விட்டா வேற வழியில்ல.” என்று நினைத்த அமுதா “சாமி பிரசாதத்தை சாப்பிடாம கோயிலை விட்டு போக கூடாது. அப்புறம் தெய்வ குத்தம் ஆயிடும். சீக்கிரம் வாங்க.. சூடா இருக்கிற சாப்பாடு நம்மள வா வான்னு கூப்பிடுது போய் திருப்பியா சாப்பிடலாம்.” என்று சொல்லி யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் விஜய் கலைச்செல்வி இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு ஓடி சென்று அந்த கூட்டத்திற்குள் அங்கே இருந்தவர்களை தள்ளிக் கொண்டு நுழைந்தாள் அமுதா.
விஜய் இந்தியாவின் சைனீங் ஸ்டார். அவனிடம் இருக்கும் சொத்துக்கள் மதிப்பிற்கு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கூட அவனால் ஒருவேளை இலவசமாக உணவளிக்க முடியும். இதுவரை இது மாதிரியான பொது இடங்களுக்கு கூட வந்திருக்காத விஜயை அவனிடம் பார்மாலிட்டிக்கு பர்மிஷன் கூட கேட்காமல் வலுக்கட்டாயமாக முதல் பந்தியில் சென்று அமர்வதற்காக கூட்டமாக மண்டபத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த மக்களுக்கு நடுவில் இழுத்துக் கொண்டு சென்ற அமுதா விஜயும் கலைச்செல்வியும் சுதாரித்துக் கொள்வதற்குள் உள்ளேயே சென்று ஒரு டேபிளை கண்டுபிடித்து அவர்களுடன் சாப்பிட வரிசையில் அமர்ந்து விட்டாள்.
அவர்களை தொடர்ந்து ஏராளமானவர்கள் முண்டியடித்துக் கொண்டு இடம் பிடிப்பதற்காக ஒருவரை பிடித்து மற்றொருவர் தள்ளியபடி உள்ளே ஓடினார்கள். அதில் சிலர் ஓரமாக இருந்த சேரில் விஜய் அமர்ந்து இருந்ததால் அவன் மீது மோதியபடி எப்படியாவது இன்று ஒரு புடி பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நொடி அதை பார்த்து திகைத்துப் போன விஜய் வந்த கோபத்தில் கண்கள் சிவக்க திரும்பி அமுதாவை தன் அனல் கக்கும் பார்வையால் தாக்க, அவனை பார்த்து தன் அனைத்து பற்களும் தெரிய புன்னகைத்த அமுதா “ப்ளீஸ் கோச்சுக்காதீங்க சார்! அதான் அம்மன் பிரசாதம் சாப்பிட்டா நல்லதுன்னு சொன்னேனே.. இதுக்கு எல்லாம் கூச்சப்படலாமா? நீங்க கார்னர்ல உட்கார்ந்து இருக்குறதுனால தான் உங்க மேல எல்லாரும் மோதிட்டு போறாங்க. அதுக்கு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க. நீங்க இங்க வந்து கலை பக்கத்துல உக்காந்துக்கோங்க. நான் அங்க போய் உட்கார்ந்துகிறேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்றாள்.
“நான் யாரு, என் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரிஞ்சும் என்னை வச்சு இவ என்ன காமெடி பண்ணிட்டு இருக்கா? யாருக்காவது விஜய் இப்படி அன்னதானம் சாப்பிடுற இடத்துல ஒக்காந்து லோ கிளாஸ் ஆளுங்க கூட எல்லாம் சேர்ந்து சாப்பிட்டது தெரிஞ்சா, என் நேம் என்ன ஆகிறது? முதல்ல இத எல்லாம் நான் எதுக்கு சாப்பிடணும்? ச்சே… இவனுங்க இந்த சாப்பாட்டை எப்படி எல்லாம் சமச்சான்களோ தெரியல.. இதை சாப்பிட்டு எனக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது? இவளை வச்சுக்கிட்டு…
தெரியாம இவ கிட்ட பசிக்குதுன்னு சொல்லிட்டேன்.. அந்த பாவத்துக்கு என்னை இங்கே கொண்டு வந்து மாட்டிவிட்டுட்டா.. கண்டிப்பா இவ இப்படி பண்ணதுக்கு நான் இவளை பழிவாங்காம விடவே மாட்டேன். என் ப்ரொடக்சன்ல நடிக்கப் போறல்ல இருக்கு டி உனக்கு.. இரு, உன்னை சோறு போடாமலே சாகடிக்கிறேன்.” என்று நினைத்த விஜய் ஆத்திரம் போங்க அவ்வளவு கூட்டத்தில் தன் வாயை திறந்து எதுவும் பேச முடியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
– காதல் மலரும்