அத்தியாயம் 37
விஜயை ஹாஸ்பிடல்லை விட்டு வெளியே அழைத்து வந்த அமுதா அவளிடம் பணம் குறைவாக இருந்ததால் அவனிடம் கேட்டுவிட்டு ஆட்டோ பிடிப்பதற்காக ஓடி சென்றாள். அவள் இந்த சிறிய விஷயத்திற்காக எதற்கு இப்படி சந்தோஷமாக துள்ளி குதித்து ஓடுகிறாள் என்று புரியாமல் அவளை ஏதோ பைத்தியத்தை பார்ப்பதை போல பார்த்து வைத்தான் விஜய்.
அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து வந்த அமுதா “ஆட்டோல ஏறுங்க சார்.. நம்ம கிளம்பலாம்.” என்று சொல்ல, “இதுவரைக்கும் என் லைஃப்ல ஷூட்டிங்ல கூட நான் ஆட்டோல போனதே இல்லை. இவளால நான் இன்னும் என்னென்ன அனுபவிக்கனும்னு இருக்கோ தெரியல!” என்று நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட விஜய் தன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏரி அமர்ந்தான்.
அவனைத் தொடர்ந்து ஆட்டோவில் ஏறிய அமுதா அவன் அருகில் அமர்ந்து கொள்ள, கடைசியாக ஆட்டோவில் ஏறிய கலைச்செல்வி அமுதாவின் அருகில் அமர்ந்தவுடன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்த ஆட்டோக்காரர் “நீங்க எங்கம்மா போகணும்?” என்று கேட்டார். உடனே விஜயை திரும்பிப் பார்த்த அமுதா “நீங்க இப்ப எங்க சார் தாங்க இருக்கீங்க? ஆல்ரெடி நீங்க ஸ்டே பண்ணி இருந்த ஹோட்டல் ரூம்ல மீடியா பீப்பிள் நிறைய பேர் வந்ததுனால நீங்க vocate பண்ணிட்டு வேற எங்கயோ போயிட்டீங்க என்று கேள்விப்பட்டேன்.” என்று சொல்ல, தான் தங்கி இருக்கும் இடத்தின் அட்ரஸை அவளிடம் சொல்லு வாய் எடுத்த விஜய் எதையோ யோசித்து விட்டு “நீ கோவிலுக்கு போகணும்னு தானே கிளம்புன.. சோ நம்ம கோவிலுக்கு போகலாம்.” என்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்த அமுதா “என்ன சார் சொல்றீங்க? உங்களுக்கே ஆல்ரெடி உடம்பு சரியில்ல! நீங்க உங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல.. இந்த டைம்ல கோயில்ல கூட்டமா வேற இருக்கும். உங்கள strain பண்ணாம முக்கியமா 2, 3 நாளைக்கு நீங்க blind foldல இருக்கணும்னு டாக்டர் சொன்னாரு. மறந்துட்டீங்களா? இந்தாங்க முதல்ல இந்த கண்ணாடிய போடுங்க.. இப்ப நம்ம கோயிலுக்கு போக வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு டாக்டர் கொடுத்த மருந்துகள் அடங்கிய கவருக்குள் இருந்து கண்ணாடியை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
அந்த ஆட்டோ சைடில் ஓப்பன் ஆக இருந்ததால் நேரடியாக அவனது முகத்தில் வந்து விழுந்த சூரிய கதிர்கள் அவன் கண்களை மீண்டும் கலங்க செய்ததால் அவள் கொடுத்த கண்ணாடியை வாங்கி தன் கண்களில் மாட்டிக் கொண்ட விஜய் “கோவிலுக்கு போகணும்னு கிளம்பிட்டு போகாம இருக்க கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க. என்னமோ தெரியல.. இன்னிக்கி கோவிலுக்கு போனா நல்லா இருக்கும்னு தோணுது. நானே போகணும்னு சொல்றேன்.. உனக்கு என்ன பிரச்சனை?” என்று அவளிடம் மெல்லிய குரலில் கேட்க,
“உங்களுக்கு என்ன சார் பிரச்சனை? நீங்க ஜாலியா வருவீங்க! உங்கள யார் கண்ணிலையும் படாம பத்திரமா கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு ரிட்டர்ன் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிற வரைக்கும் எங்களுக்கு தானே பிரச்சனை!” என்று நினைத்து அமுதாவும், கலைச்செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் இருவரும் ஒரு பயம் கலந்த மரியாதையுடன் விஜய்யை பார்த்துக் கொண்டு இருக்க, தன் அம்மாவைப் பற்றி பேசிய பிறகு விஜய் அவன் வாயை திறந்து அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் கண்களுக்கு கண்ணாடி அணிந்திருந்தான். அவனது உடல் முழுவதையும் மூடியபடி ஆடை அணிந்திருந்தான். இருப்பினும் கூட, அவன் என்னவோ சோகமாக இருப்பதாக அமுதாவிற்கு தோன்றியது.
அதனால் ஏதோ ஒரு தைரியத்தில் சட்டென்று அவன் கையைப் பிடித்த அமுதா “சார் நீங்க ஓகே தானே? மறுபடியும் உங்களுக்கு கண்ணுல ஏதாவது இரிடேஷன் ஃபீல் ஆகுதா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க.. மறுபடியும் நம்ம ஹாஸ்பிடல் போய் ஒரு தடவ செக் பண்ணிட்டு வந்துரலாம்..” என்று அக்கறையுடன் சொல்ல, மெல்ல திரும்பி அவள் கண்களை பார்த்த விஜய் “I’m Alright!” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
எங்கே அவர்களைக் கொண்டு போய் இறக்கி விட வேண்டும் என்று ஆட்டோக்காரர் கேட்டதற்கு இன்னும் அவர்கள் பதில் சொல்லாததால், “ஏன் மா நான் பாட்டுக்கு ரொம்ப நேரமா அப்படியே போயிட்டே இருக்கேன்.. நீங்க எங்க போகணும்னு இன்னும் சொல்லவே இல்லையே!” என்று குரல் கொடுக்க, “அச்சச்சோ.. சாரி அண்ணா.. பெரிய மாரியம்மன் கோவில் போகணும். அங்க திருவிழா நடக்குது இல்ல.. முன்னாடி கடை நிறைய போட்டு இருப்பாங்க. அதனால பக்கத்துல ஒரு துணிக்கடை இருக்கும்ல அதுக்கு ஆப்போசிட்ல இருக்கிற சந்து வழியா உள்ள போய் கொஞ்சம் தூரத்திலேயே ஆட்டோவை நிறுத்துங்க. நாங்க இறங்கி நடந்து போயிடுறோம்.” என்றாள் அமுதா.
அவள் பேசி முடித்தவுடன் அவள் கையில் கலை லேசாக சுரண்டை “ஏய் என்ன டி பண்ற?” என்று சட்டென அவள் பக்கம் திருப்பி கேட்டாள் அமுதா. “என்ன நீ அவர மாதிரியே எத பத்தியும் யோசிக்காம எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லிட்டு இருக்க! ஏற்கனவே உங்க வீட்ல நீ படத்துல நடிக்க போறேன்னு ஒரு பிரச்சனை ஓடிட்டு இருக்கு. இப்ப ஒரு பையன் கூட ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் திருவிழா சமயத்துல கோயில்ல கூடியிருக்கும் போது நீ அங்க போனா யார் இந்த பையன் நம்ம கிட்ட எல்லாரும் கேட்க மாட்டாங்களா?
இவர் விஜய் சார்ன்னு தெரியாம நீ யாரோ ஒரு பையன் கூட ஊர் சுத்திட்டு இருக்கேன்னு உங்க அண்ணனுங்க கிட்ட போட்டு கொடுத்துட்டா என்ன பண்ணுவ? அப்புறம் நீ எவனையோ லவ் பண்றேன்னு இன்னொரு பிரச்சனை கிளம்பிடும். இதுல உன் கூட சிவனேனு வர்ற நானும் மாட்டுவேன். உன்ன திட்டுறது இல்லாம உங்க அண்ணனுங்க என்னையும் கூப்பிட்டு திட்டுவாங்க.” என்று தலை மெல்லிய குரலில் சொல்ல,
அவள் அப்படி சொன்ன பிறகு தான் அமுதாவின் மூளை வேலை செய்யவே தொடங்கியது. “விஜய் சார் கூட இருக்கும்போது எனக்கு அவரைத் தவிர வேற எதைப்பத்தியுமே யோசிக்க தோண மாட்டேங்குது. நீ சொல்றது கரெக்ட் தாண்டி.. ஊர்ல இருக்கிற எல்லா பெருசுகளும் இப்ப கோயில்ல தான் இருக்கும். இதுல நான் இவர் கூட அங்க போனா கண்டிப்பா நீ சொன்ன மாதிரி தான் நடக்கும். இரு, நம்ம அங்க ரீச் ஆகுறதுக்குள்ள யோசிச்சி ஏதாவது பண்ணலாம்.” என்ற அமுதா சில நொடிகள் அமைதியாக யோசித்தாள்.
அப்போது அவள் மண்டையில் பல்பு எரிய, உடனே தனது மொபைல் ஃபோனை எடுத்து “ஓய் வெற்றி இப்ப நீ எங்க இருக்க?” என்று அவள் வெற்றிக்கு மெசேஜ் அனுப்ப, தன் அம்மாவுடன் வயலுக்கு சென்று மணிகண்டன் உடன் பேசிக் கொண்டிருந்த வெற்றி “அம்மா மாமா கிட்ட என்ன பேசுறாங்கன்னு பாக்குறதுக்கு நானும் அவங்க பின்னாடியே வயலுக்கு கிளம்பி போறேன்னு உன் கிட்ட சொல்லிட்டுதானே வந்தேன்! இன்னும் அங்க தான் இருக்கேன். அம்மா ஏற்கனவே நம்ம கல்யாண மேட்டரை பத்தி மாமா கிட்ட பேசிட்டாங்க. அவர் என்ன சொல்ல போறாருன்னு தெரியல.” என்று அவளுக்கு ரிப்ளை அனுப்பினான்.
விஜயை பார்த்த பிறகு வெற்றியுடன் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பது பற்றி யோசிக்க மறந்திருந்த அமுதாவிற்கு இப்போது மீண்டும் வடிவு வந்த பின் நடந்தது எல்லாம் ஞாபகம் வர, “இது என்ன டா இது.. வாழ் போன பிறகு கத்தி வந்த மாதிரின்னு பொதுவா சொல்லுவாங்க கேள்விப்பட்டு இருக்கேன்.. ஆனா இன்னும் என் தலையை விட்டு வாழே போகல. அதுக்குள்ள கத்தி, கடப்பாறைன்னு எல்லாம் சுத்தி சுத்தி வந்து என அட்டாக் பண்ணா நான் என்ன பண்ணுவேன்?” என்று நினைத்து பெருமூச்சு விட்ட அமுதா,
“நான் இப்ப விஜய் சார் கூட கோயிலுக்கு போயிட்டு இருக்கேன். அவர் full body cover பண்ற மாதிரி டிரஸ் போட்டிருக்காரு. சோ மத்தவங்க யாராவது இந்த பையன் யாருன்னு என் கிட்ட கேட்டா, நான் வெற்றின்னு சொல்ல போறேன். இப்போ நீ எங்க இருந்தாலும் பரவால்ல. என்ன ஆனாலும் பரவால்ல. உனக்கு உடம்பு சரி இல்லாததுனால தான் நீ இப்படி டிரஸ் பண்ணி இருக்கேன் நான் சொல்ல போறேன். சோ அதை மெயின்டைன் பண்ற மாதிரி நீ உனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிரு.” என்று அவசர அவசரமாக அவனுக்கு டைப் செய்து அனுப்பி விட்டாள்.
தனக்கும் அவளுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் அமுதா தனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறாள் என்று நினைத்து கொஞ்சம் சந்தோஷப்பட்டு இருந்த வெற்றியின் முகம் அந்த மெசேஜை பார்த்தவுடன் சுருங்கி விட்டது. “என்ன நடக்குது இங்க? விஜய் சார் எதுக்கு அமுதா கூட கோயிலுக்கு போயிட்டு இருக்காரு? அந்த அளவுக்கு இவங்க ரெண்டு பேருக்குள்ள ஃபிரண்ட்ஷிப் வந்துடுச்சா? விஜய் சார் அவ்ளோ சீக்கிரம் யார் கூடையும் நல்லபடியாக பழக மாட்டார் என்று நான் கேள்விப்பட்டிருக்கேனே! இவர
கூட கோவிலுக்கு போற அளவுக்கு எப்படி இறங்கி வந்திருக்காரு!
இன்னும் அமுதா அவர் கூட சேர்ந்து படத்துல ஒரு சீன் கூட நடிக்கல. அதுக்குள்ள அவங்க ரெண்டு பேரும் இந்த அளவுக்கு கிளோஸ் ஆகிட்டாங்களா? சேச்சே.. அப்படி எல்லாம் தப்பா ஒன்னும் இருக்காது. நம்மளே நம்ம அம்முவா தப்பா நினைக்க கூடாது. அவ இப்படி பண்றான்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்.” என்று எதை எதையோ யோசித்து குழம்பிய வெற்றிக்கு அமுதா தனக்கு கிடைப்பாளா? என்று நினைத்து பரிதவிக்கும்போது உண்மையாகவே காய்ச்சல் வருவதைப் போலவே இருந்தது.
அதனால் தன் அம்மாவிடம் “நீ மாமா கிட்ட என்ன பேசணுமோ பேசிட்டு அவர் கூடவே கிளம்பி அப்புறமா வீட்டுக்கு வா மா. எனக்கு திடீர்னு என்னமோ குளிருது. காய்ச்சல் வர மாதிரி இருக்கு நான் வீட்டுக்கு போறேன்.” என்றவன், தான் இதற்கு மேல் அங்கே ஒரு நொடி நின்றாலும் தன்னிடம் கேள்விகளாக கேட்டு தன்னை அந்த இடத்தை விட்டு செல்ல விடமாட்டார்கள் என நினைத்து அவசர அவசரமாக தன் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான் வெற்றி.
வெற்றியுடன் நடக்கவிருக்கும் அமுதாவின் திருமணம் என்னவாகும்?
– காதல் மலரும்