Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 150

மூர்கனின் காதலி CH 150

by Thenaruvi Tamil Novels
5 views

அத்தியாயம் 150

சௌபர்ணிகா வெளியில் சென்று விட்டதை உறுதி செய்த சேரன் யாருக்கோ call செய்து “எல்லாம் நம்ம நினைச்ச மாதிரிதான் நடந்துட்டு இருக்கு uncle. சௌபர்ணிகா அவ பேருல இருக்கிற propertiesஐ எனக்கு எழுதி கொடுக்கிறதுக்கு ஓகே சொல்லிட்டா. இன்னும் registration work மட்டும்தான் pending.” என்று சொல்ல, “Good. But இதெல்லாம் நமக்கு பத்தாது சேரன். இது just trailer தான். விஷ்வாவையும், அவன் familyல இருக்கிறவங்களையும் ஒவ்வொரு secondம் நம்ம ஏதாவது பண்ணி கதறவிட்டுட்டே இருக்கணும். அவங்களுக்கு மூச்சுவிட கூட நம்ம gap கொடுக்கக் கூடாது.” என்று மறுமுனையில் லைனில் இருந்த நடுத்தர வயதுமிக்கவர் சொன்னார்.

“நானும் அதுக்கு என்னால என்னென்ன முடியுமோ அது எல்லாத்தையும் பண்ணிட்டு தான் இருக்கேன் uncle. But இன்னும் வெளிப்படையா நான் ஏதாவது பண்ணா, கண்டிப்பா மாட்டிக்குவேன். Last time மேகாவ மண்டபத்துல இருந்து கடத்தும்போதே நான் மாட்டியிருக்க வேண்டியது. எப்படியோ CCTV cameraல சிக்காம தப்பிச்சிட்டேன். அதுக்கப்புறம் நானும் அவங்கள ஏதாவது பண்ண chance கிடைக்குமானு பாத்துக்கிட்டே தான் இருக்கேன். அந்த விஷ்வா உஷாரா மேகாவுக்கு கூட bodyguards போட்டு protectionஐ improve பண்ணிட்டான். எப்பயும் அவங்க ரெண்டு பேரையும் சுத்தி யாராவது இருந்துட்டே இருக்காங்க. அதான் எதுவும் பண்ண முடியல. சோ நானே directஆ fieldல இறங்கி எதுவும் செய்ய வேண்டாம்னு பார்க்கிறேன்.” என்று சேரன் சொல்ல, “Okay.. Swizல hotel roomல வேற ஆள வச்சு பண்ண மாதிரி ஏதாவது பண்ணு. சீக்கிரம் விஷ்வாவையும் மேகாவையும் பிரிக்கிறதுக்கு ஏதாவது plan பண்ணு. அவங்க எல்லாம் ஒண்ணா சந்தோசமா இருக்கிறதை பார்த்தாலே எனக்கு பத்தூக்கிட்டு எரியுது.” என்று அவர் தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னார்.

“எங்கயோ இருக்கிற உங்களுக்கே அப்படி இருக்குன்னா, டெய்லியும் அவங்க கூடவே இருந்து இங்கே நடக்கிற emotional scenesஐ பாக்கும்போதெல்லாம் எனக்கு எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க..!!” என்று சேரன் தன் பங்கிற்கு சொல்லி புலம்ப, “அப்போ சீக்கிரம் நீ போன வேலையை முடி.” என்று சொல்லிவிட்டு மறுமுனையில் பேசியவர் அந்த அழைப்பை துண்டித்து விட்டார்.

ஆபீஸில் தனது கேபினில் அமர்ந்திருந்த விஷ்வா சௌபர்ணிகாவிற்கு கால் செய்து “இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபீஸ்ல ஒரு celebration party இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும்.” என்று சொல்ல, “ஓகே வரேன்.” என்றாள் அவள். அதற்கு மேல் அவள் எதுவும் பேசாமல் மௌனம் காக்க, “நீங்க என்கிட்ட ஏதாவது சொல்லனுமா..??” என்று விஷ்வா கேட்க, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே. ஏன் கேக்குற..??” என்று கேட்டாள் சௌபர்ணிகா.

“இல்ல உங்ககிட்ட ஏதோ ஒன்னு சரியில்லைன்னு எனக்கு தோனிட்டே இருக்கு. அதான் கேட்கிறேன். எதா இருந்தாலும் நீங்க என்கிட்ட frankஆ சொல்லலாம். In case, உங்களுக்கு என் கிட்ட சொல்ல தயக்கமா இருந்துச்சுன்னா மேகாகிட்ட கூட சொல்லுங்க. அவதான் அப்பப்ப உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு சொல்லி புலம்பிட்டே இருப்பப்பா.” என்று விஷ்வா சொல்ல, அவள் கண்கள் கலங்கி விட்டது.

அதனால் பேச முடியாமல் தன் mobile phoneஐ இறுக்கிப் பிடித்த சௌபர்ணிகா, பெருமூச்சுவிட்டு தன்னைத்தானே சிரமப்பட்டு சமன் செய்தவள் “நான் நார்மலா தான் இருக்கேன் விஷ்வா. உங்களுக்கு ஏன் இப்படி தோணுதுன்னு எனக்கு தெரியல. Maybe இப்பெல்லாம் நான் உங்கக்கூட அதிகமா time spend பண்ணாம workல busyஆ இருக்கறதுனால உங்களுக்கு அப்படி தோணலாம். But எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. I am perfectly alright.” என்று பொய் சொன்னாள். அவள் சொல்வதை அப்படியே நம்பிய விஷ்வா “அப்போ ஓகே. Evening partyக்கு மறக்காம வந்துருங்க bye.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட்டான்.
அவன் ஃபோனை வைத்தவுடன் தனது கேபினில் தனியாக அமர்ந்திருந்த சௌபரணிகா முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

ஏற்கனவே தம்பியின் நல்வாழ்விற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் என்ற மனநிலையில் இருந்த அவளுக்கு இப்போது அவன் தன்மீது அக்கறைப்படுகிறான் என்று தெரிந்தவுடன் “இந்த உலகத்துல எனக்குன்னு இருக்கிறது விஷ்வா மட்டும்தான். அவனுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இந்த properties எல்லாம் ஒரு விஷயமா? போனா போகட்டும்.” என்று நினைத்து தனது முடிவில் உறுதியாக இருந்தாள். அப்போது திடீரென அவள் அறை கதவை திறந்து கொண்டு “may I come in mam..!!” என்று கேட்டபடி அவளது அசிஸ்டன்ட் நேத்ரா உள்ளே வர, உடனே தனது சேலை முந்தானையை வைத்து தன் கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்ட சௌபர்ணிகா உடனே முகத்தை சாதாரணமாக இருப்பதைப்போல மாற்றி “Yes, Come in.” என்றாள்.

“நீங்க சொன்ன alterations எல்லாத்தையும் பண்ணி அந்த designsஐ கொண்டு வந்திருக்கேன் மேம். நீங்க இத பாத்து okay பண்ணிட்டீங்கனா, stitching teamக்கு இந்த designஐ forward பண்ணி sample piece ready பண்ண சொல்லிடுவேன்.” என்று நேத்ரா சொல்ல, “நீ வச்சுட்டு போ. நான் பாத்துட்டு சொல்றேன்.” என்று எங்கேயோ பார்த்தபடி சொன்னாள் சௌபர்ணிகா. அதனால் “ஓகே மேம்.” என்ற நேத்ரா அவள் கொண்டு வந்த fileஐ table மீது வைத்துவிட்டு “இன்னைக்கு மேடம் பாக்கறதுக்கு ரொம்ப dullஆ தெரியுறாங்களே.. face வேற liteஆ வீங்கி போன மாதிரி இருக்கு.. ஒருவேளை அழுது இருப்பாங்களோ..?? இவங்களுக்கு என்ன problemன்னு தெரியலையே..!!” என்று யோசித்தவாறு அவளது கேபினினை விட்டு வெளியேறினாள்.

Evening time…

MV Techன் main branchல் உள்ள பிரம்மாண்டமான party hallல் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் launch செய்திருந்த smart phone models பெரிய அளவில் salesஆகி அவர்களது கம்பெனிக்கு நிறைய லாபத்தை ஈட்டி கொடுத்து அது successful project ஆகிவிட்டதால் அதற்கான celebration party நடந்து கொண்டிருந்தது.
அந்த partyக்கு விஷ்வாவின் clients, business partners மற்றும் business வட்டாரத்தில் உள்ளவர்கள் என்று ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். Formalityகாக வந்தவர்கள் அனைவரையும் பொதுவாக micல் பேசி வரவேற்ற விஷ்வா “Enjoy the party.” என்று சொல்லிவிட்டு மேகாவுடன் சென்று ஒரு tableல் அமர்ந்தான். அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருக்க, விஷ்வாவை personalஆக சந்திக்க இது ஒரு நல்ல chance என்பதால் ஒவ்வொருவராக விஷ்வாவை volunteerஆக தேடி வந்து முதலில் அவனை புகழ்ந்துவிட்டு பின்பு தற்பெருமை பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“அச்சோ.. இது celebration partyஆ இல்ல, business meetingஆ எல்லாரும் சும்மா சும்மா வந்து அவங்க businessஐ பத்தியே பேசிட்டு இருக்காங்க.. மத்தவங்ககிட்ட இந்த விஷ்வா ஒழுங்கா நாலு வார்த்தைக்கூட பேச மாட்டான். ஆனா இவங்ககிட்ட எல்லாம் சலிக்காம மாறி மாறி எப்படித்தான் பொறுமையா மணிக்கணக்கா பேசுறானோ..!! அந்த பொறுமை எனக்கில்ல சாமி.” என்று நினைத்த மேகா, “excuse me… நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க. I will be back soon.” என்றுவிட்டு நாசுக்காக அந்த tableல் இருந்து எழுந்து சென்று விட்டாள்.

“ஏய்.. போகாதடி இரு நானும் வரேன்.” என்று விஷ்வா அவளை பார்த்து கண்ணை காட்ட, “போயா.. இந்த வயசானவங்க கூட ஒக்காந்து நீ மொக்கை போட்டுட்டு இரு. நான் போறேன்.” என்று தன் கண்களாலையே சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மேகா.
அவள் சுற்றி முற்றி பார்க்க, அங்கிருந்த ஏராளமானவர்கள் அவளுக்கு தெரியாத ஆட்களாகவே இருக்க, “இப்ப நான் எங்க போறது..??” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மேகா. அப்போது அனுப்பமாவும், சாராவும் அவள் அருகில் சென்றார்கள்.

“என்ன மேம் தனியா நிக்கிறீங்க..?? விஷ்வா சார் எங்க..?? நீங்க அவர் கூட busyயா இருப்பீங்கன்னு நினைச்சுத்தான் நாங்க உங்கள disturb பண்ணல.” சாரா சொல்ல, “உங்க பாஸ் அவர் business circleல இருக்க வயசான business mansகூட மொக்க போட்டுட்டு இருக்காரு. அதையெல்லாம் உக்காந்து யார் கேட்டுட்டு இருக்கிறதுன்னு நான் எந்திரிச்சு வந்துட்டேன்.” என்று சலிப்புடன் சொன்னாள் மேகா.

“சரி வாங்க, இந்த partyல நம்ம enjoy பண்றதுக்கு நிறைய இருக்கு. நம்ம dance floorக்கு போலாம்.” என்ற சாரா மேகாவின் கையை பிடித்து அவளை dance floorக்கு அழைத்துச் சென்றாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured