அத்தியாயம் 147
“Will you be my bad girl..??” என்று அவள் தோள்களின் மீது தன் முகத்தை புதைத்தவாறு கேட்டான் விஷ்வா. “basically நான் ரொம்ப good girl தெரியுமா..?? But உன்கூட சேர்ந்து போக போக நானும் உன்னை மாதிரியே ஆடுவேன் போல..!!” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் மேகா. “ஏன் எனக்கு என்னடி குறைச்சல்…?? என்ன மாதிரி நீ ஆக்க கூடாதா..??” என்று அவன் விளக்கமாக கேட்க, “உனக்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்ல. But நானும் உன்ன மாதிரி feelings இல்லாம robot மாதிரி இருந்திருந்தா நீ இப்போ human ஆகிருக்கமாட்ட.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.
“நான் romantic hero ஆகி ரொம்ப நாளாச்சு டி. இன்னும் என்னை robotன்னு சொல்றத விடமாட்டியா நீ..??” என்று அவன் கேட்க, “நீ romantic heroல இருந்து promotion கிடைச்சு lovable fatherஏ ஆனாலும் எனக்கு எப்பயுமே நீ என் metal மண்டையன் தான்.” என்றுவிட்டு புன்னகைத்தாள் அவள்.
“அட போடி உன்னை திருத்தவே முடியாது.” என்ற விஷ்வா அவள் தோள்களில் சாய்ந்து தன் கண்களை மூடினான். அதை கவனித்த மேகா, “ஓய்.. என்ன பண்ற நீ.?? குழந்தன்னு நினைப்பா உனக்கு..?? எந்திரிடா.. நல்லா எருமை மாட்டு பண்ணி மாதிரி பெருசா இருந்துட்டு இப்படி என்னை போட்டு அழுத்தினா நான் தாங்குவனா..?? நானும் சரி ஆசையா மேல சாயிரவன எதுவும் சொல்லக்கூடாதுன்னு சும்மா இருந்தா, அப்படியே கண்ண மூடி தூங்க ரெடி ஆயிட்ட..!! அவ்ளோதான் இன்னும் 5 minutesல restaurant வந்துரும். ஒழுங்கா நேரா உக்காரு.” என்று அவனை மிரட்டினாள்.
“ச்சீ.. போ.. இனிமே இப்படி பண்ணவே மாட்டேன்.” என்ற விஷ்வா நேராக நிமிர்ந்து அவளை விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டான். அப்போது bike லேசாக ஆடியதால், “லூசு லூசு வேணும்னே பண்றியா இப்படியெல்லாம்..?? நீ பாட்டுக்கு bikeஐ ஆட்டுற..?? அப்படியே நான் எங்கயாவது தெரியாம கொண்டு போய் விட்டா.. restaurantக்கு இல்ல.. நம்ம ரெண்டு பேரும் நேரா கைலாசத்துக்கு தான் போவோம்.” என்று அதற்கும் அவனைத் திட்டினாள் மேகா.
“கைலாசான்னா.. நம்ம தலைவன் நித்தியோட place தானே.. இங்க விட அங்க இன்னும் சூப்பரா இருக்கும் டி. நம்ம அங்கயே போலாம்..!!” என்று அவன் கிண்டலாக சொல்ல, “you go man. Why me..??” என்று அவளும் கேட்டுவிட்டு சிரித்தாள். “நான் எங்க போனாலும் நீயும் அங்க வரணும். Because you are my better half. புரிஞ்சுதா My dear பொண்டாட்டி..??” என்று கேட்டான் விஷ்வா. இப்படியே தொடர்ந்து பேசியபடி அவர்கள் இருவரும் bluestar restaurantக்கு சென்று சேர்ந்தார்கள். விஷ்வா ஏற்கனவே அவர்களுக்காக book செய்து வைத்திருந்த roomக்கு மேகாவுடன் சென்றான். அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு மற்றவர்கள் அனைவரும் வெளியே உள்ள dining tableல் அமர்ந்து சாப்பிட தொடங்கினார்கள்.
“இந்த அண்ணா ஏன் இப்படி partiality பாக்குறாரு..?? நமக்கும் candle light dinner book பண்ணி தந்தா என்னவாம் இவருக்கு.. இதுக்கு செலவு பண்றதுனால இவர் சொத்து அழிஞ்சு போயிட போகுதா..??” என்று கேட்டு ரிஷி வாய்விட்டு புலம்ப, “நீ என்ன உன் girlfriend குடவா வெளிய வந்திருக்க..?? உனக்கு candle light dinner எல்லாம் book பண்ணி கொடுக்க..?? கம்முனு சாப்பிடுடா.” என்றான் தயாளன்.
“எங்க.. நானும் எவளையாவது கரெக்ட் பண்ணி என் girlfriend ஆக்கிடலாம்னு தான் பார்க்கிறேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குதே..!!” என்று ரிஷி ஓரக்கண்ணால் சாராவை பார்த்தபடி சொல்ல, “அதுக்கெல்லாம் ஒரு மகராசி வேணும்டா தம்பி. அது உனக்கு இல்லையே..!!” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.
“என்னது தம்பியா… யாரை பார்த்துடி தம்பின்னு சொல்ற..?? இன்னொரு தடவை என்னை தம்பின்னு சொல்லி பாரேன்.. சூடா இருக்கிற இந்த soupஐ அப்படியே எடுத்து உன் மூஞ்சில ஊத்தி விட்ருவேன்..!!” என்று கோபமாக ரிஷி சொல்ல, “என்னடா.. அவ்ளோ திமிரா உனக்கு..?? என் மூஞ்சிலயே soupஐ ஊத்திட்டு இங்க இருந்து ஒழுங்கா வீடு போய் சேர்ந்துருவியா நீ..?? எங்க ஊத்துடா பாப்போம்… இப்போ நீ ஊத்துற. அதை நான் பாக்கணும்.” என்று கோபமாக சொன்ன சாரா தனது சட்டையின் sleevesகளை எல்லாம் மடித்துவிட்டு சண்டைக்கு ரெடி ஆனாள்.
“பின்ன நீ எதுக்குடி என்ன தம்பின்னு சொல்ற…?? நான் என்ன உன் கூடவா பிறந்தேன்..??” என்று ரிஷி கோபமாக கேட்க, “நான் அப்படி தாண்டா சொல்லுவேன். என்ன டா பண்ணுவ நீ..??” என்ற சாரா அவன் அருகில் சென்றாள். அவர்கள் இருவரும் சத்தம் போட்டு பேசி கொண்டிருந்ததால் அந்த restaurantல் இருந்த அனைவரும் அவர்களைத்தான் பார்த்தார்கள்.
அதனால் “ஏய் சாரா.. மெதுவா பேசு. இப்ப எதுக்கு நீ அவருக்கு equalஆ எந்திரிச்சு நின்னு சத்தம் போட்டுட்டு இருக்க..??” என்று அனு கேட்க, “டேய் ரிஷி.. பாஸ் இன்னைக்கு ஏதோ நல்ல மூடுல இருக்கறதுனால dinnerக்கு வெளிய கூட்டிட்டு வந்திருக்காரு. உன்னால அவர் mood spoilஆன உன்னோட சேர்த்து எல்லாருமே மாட்டுவோம். அவர்கிட்ட punishment வாங்கி 3 மணி நேரம் நீ, நான், அரவிந்த், மகேஷ் எல்லாம் தலைகீழா நின்னோமே மறந்திரச்சா உனக்கு..?? ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க.” என்று தன் பங்கிற்கு சொன்னான் தயாளன்.
“நானே அவர் கிட்ட இவன பத்தி சொல்றேன் bro. இவனுக்கு எல்லாம் அந்த மாதிரி விஷ்வா சார் punishment குடுத்தாத்தான் இவன் அடங்குவான்.” என்று அப்போதும் சாரா கோபமாகவே சொல்ல, “உன்னையும் சேர்த்துதான்மா சொல்றேன். எங்க பாஸ் பசங்க பொண்ணுங்கன்னு எல்லாம் பாக்க மாட்டாரு. நீயும் தானே அவன்க்கூட சண்டை போட்டுட்டு இருக்க..!! So உனக்கும் தான் punishment கிடைக்கும்.” என்றான் தயாளன்.
அதனால் சத்தமாக வாய்விட்டு சிரித்த ரிஷி, “நல்லா அவ மண்டைல ஏறுற மாதிரி சொல்லுங்க bro. மேடம்க்கு அவங்க பெரிய மகாராணின்னு நினைப்பு.” என்று சொல்ல, “ச்சீ.. போ.. எனக்கு சாப்பாடும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம்.” என்ற சாரா அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
“ஏண்டா டேய்.. தேவையில்லாம இப்படி பண்ற… உன்னால அந்த பொண்ணு பாரு சாப்பிடாம போயிடுச்சு.” என்று தயாளன் சொல்ல, “அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு பண்றது bro. நீங்க ரெண்டு பேரும் சாப்டுட்டுட்டு இருங்க. நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்த ரிஷி சாராவை தேடி சென்றான்.
“love youடி பொண்டாட்டி” என்று எழுதப்பட்டிருந்த 3 tyre blueberry cakeஐ மேகாவுடன் சேர்ந்து வெட்டினான் விஷ்வா. அதை அவனுக்கு மேகா ஊட்டி விட, தானும் அவளுக்கு cakeஐ வெட்டி வாய் நிறைய ஊட்டி விட்ட விஷ்வா “எனக்கு இப்படி சாப்பிட தான் பிடிக்கும்.” என்று சொல்லி அவள் சுதாரித்துக் கொள்வதற்கு முன் அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.
அவள் அவனது t-shirtஐ இறுக்கி பிடித்துக்கொண்டு விழிகள் விரிய அவனைப் பார்க்க, அவர்களது அந்த இதழ் முத்தம் ஆழமாக நீண்டு கொண்டே சென்றது. சில நொடிகளுக்கு பிறகு மேகாவைவிட்டு பிரிந்தான் விஷ்வா. கொஞ்ச நேரத்திற்கு முன் அவள் இருந்த கேக் இப்போது அவன் வாயில் இருக்க, வெட்கத்தில் தலை குனிந்தவாறு தன் உதட்டில் இருந்த cake creamஐ tissue வைத்து துடைத்த மேகா “நான் இப்படி cake சாப்பிட்டதே இல்லை.” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஏண்டி அப்ப நான் மட்டும் என்ன daily இந்த மாதிரி ஏதாச்சும் ரெண்டு பொண்ணுக் கூட cake சாப்பிட்டுட்டு இருக்கனா.???” என்று அவன் கேட்க, “யாருக்கு தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அதான் இவ்ளோ professionalஆ perfectஆ ஊட்டி விடறயோ.. எல்லாமே ஒரு experienceல வர்றது தானே..!!” என்று கிண்டலாக சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.
“அடிங்கு.. என்ன பாத்தா உனக்கு experiencedஆன ஆள் மாதிரி தெரியுதா..??” என்று கேட்ட விஷ்வா விளையாட்டாக அவளை அடிக்க சொல்ல, அங்கிருந்து ஓடிய மேகா கொஞ்ச தூரம் சென்று அவனை திரும்பி பார்த்து “ஆமா.. உனக்கு என்னவிட வயசு கொஞ்சம் அதிகம் தானே.. So எவ்ளோ experience இருக்கும்..??” என்று கேட்டாள்.
“ஆமாண்டி ரொம்ப experienceதான். நான் கத்துக்கிட்ட வித்தையை எல்லாம் உனக்கும் சொல்லிக் கொடுக்கிறேன் வா.” என்ற விஷ்வா அவளை துரத்திக்கொண்டு ஓடினான். அவர்கள் இருவரும் அந்த ரூமிற்குள் ஓடி, விளையாடி, சண்டை போட்டு, கொஞ்சம் சாப்பிட்டு, நிறைய காதல் செய்து ஒரு வழியாக அந்த romantic candle light dinner dateஜ முடித்துவிட்டு Bikeல் வீட்டிற்கு சென்றார்கள்.
தொடரும்..