Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 146

மூர்கனின் காதலி CH 146

by Thenaruvi Tamil Novels
8 views

அத்தியாயம் 146

“நீ உன் propertiesஐ மட்டும் எனக்கு எழுதிக் கொடு. அதுக்கப்புறம் promiseஆ நான் உன்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். நம்ம ரெண்டு பேரும் எப்பவும் happyஆ இருக்கலாம். Please டி.. open the door. வெளிய வா.” என்று மென்மையான குரலில் சொன்ன சேரன் தொடர்ந்து சௌபர்ணிகாவை வெளியே வரச் சொல்லி கதவை தட்டிக் கொண்டே இருந்தான்.

அந்த கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்கும்போது கூட அவளது உடல் பயத்தில் நடுங்கியது. பின் அவளால் எப்படி அவனை நம்பி வெளியே வர முடியும்? அதனால் கதவின் மீது சாய்ந்து தரையில் அமர்ந்து தன் காலங்களுக்கு நடுவில் முகத்தை புதைத்துக் கொண்டு மனதில் இருக்கும் வேதனையை எப்படியாவது காணாமல் போக செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து கதறி அழுது கொண்டிருந்தாள் அவள்.
ஆனால் அவனும் அவளை விடுவதாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் தொடர்ந்து சலிக்காமல் “I am sorry சௌபர்ணிகா. நான் ஏன் இப்படி பண்ணேன்னு புரிஞ்சுக்க try பண்ணுடி. இந்த ஒரு தடவை மட்டும் நான் சொல்றதை நீ கேட்டா, lifelong நீ சொல்றத நான் அப்படியே கேட்பேன்.‌ I swear.. எனக்கு தேவையானது கிடைச்சுட்டா, நான் ஏன் இப்படி எல்லாம் இருக்க போறேன் சொல்லு..??” என்றெல்லாம் Gap விடாமல் பேசி அவள் மனதை கரைத்துவிட போராடினான்.
அழுது அழுது சோர்ந்து போன சௌபர்ணிகா அப்படியே தரையில் படுத்து அவன் சொன்னதைப் பற்றி யோசித்துப் பார்த்தாள்.

“இத்தனை வருஷமாகியும் விஜய் செத்துப் போனதையே இன்னும் விஷ்வா ஏத்துக்க முடியாம தவிச்சிட்டு இருக்கான். இதுல இந்த சேரன் பண்ற கொடுமையை தாங்க முடியாம நானும் ஏதாவது பண்ணி செத்துப் போயிட்டா, அதை என் தம்பியால தாங்க முடியாது. இப்போ நான் ஒரு வார்த்தை எனக்கு சேரன்க் கூட பிரச்சனை. அவன் கூட வாழ பிடிக்கலைன்னு சொன்னா, என் தம்பி அடுத்த நிமிஷமே இவன கொன்னு போடக்கூட தயங்க மாட்டான். ஆனா, இதெல்லாம் தெரிஞ்சா நம்ம இருந்தும் நம்ப அக்கா Life இப்படி ஆகிடுச்சேன்னு நினைச்சு மறுபடியும் அவன் mentally disturb ஆகிட்டா என்ன பண்றது..?? இப்பதான் அவனும் மேகாவும் முன்ன மாதிரி சந்தோஷமா இருக்காங்க. அதை நானே கெடுக்கணுமா? இல்ல.. என்ன ஆனாலும் சரி. இன்னும் எவ்ளோ மோசமான situation வந்தாலும் கூட, என் lifeல இருக்கிற problemsஐ பத்தி நான் விஷ்வாவுக்கு எப்பவும் தெரிய விட மாட்டேன். என் வாழ்க்கை தான் சேரன் கையில மொத்தமா நாசமா போயிடுச்சுன்னு எனக்கே நல்லா தெரியுதே.. விஷ்வாவாவது அவன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்கட்டும். அவன் சந்தோஷத்தை எதுக்காகவும், எப்பவும் நான் கெடுக்க மாட்டேன்.” என்று நினைத்தவள், சட்டென எழுந்து அமர்ந்தாள்.
பின் ஏதோ முடிவு எடுத்தவளாக தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தைரியமாக இல்லை இல்லை.‌

“அதான் எல்லாம் போயிடுச்சு.. இதுக்கு மேல போக இந்த உசுர தவிர வேற என்ன இருக்கு? இப்போ இந்த properties போறதுனால மட்டும் என்ன ஆகிட போகுது? போனா போகட்டும் போ..!!” என்று நினைத்து வாழ்க்கையை மொத்தமாக வெறுத்திருந்த சௌபர்ணிகா வெளியில் சென்று அவன் முகத்தை பார்க்க கூட பிடிக்காமல் தரையை பார்த்து “நீ கேட்ட மாதிரி, நான் உனக்கு என் properties, shares எல்லாத்தையும் எழுதிக் குடுத்துடறேன். நீ documents ready பண்ணிட்டு என்கிட்ட சொல்லு. நான் register officeக்கு வந்து sign போட்டு கொடுக்கிறேன். இத பத்தி விஷ்வாவிற்கும், மத்தவங்களுக்கும் எதுவும் தெரிய வேண்டாம். இப்போதைக்கு even after registration, as usual எல்லாமே normalஆ இருக்கணும். அப்பதான் யாருக்கும் சந்தேகம் வராம இருக்கும்.” என்றாள்.

“பார்றா.. நான் கூட அப்படியே இவ சாப்பிடாம தூங்காம ரெண்டு மூணு நாள் அந்த ரூமுக்குள்ளயே கடந்து என்னால என் சொத்தை உனக்கு எழுதி தர முடியாதுன்னு அடம்பிடிப்பானு நினைச்சேன்.. ஆனா இவ்ளோ ஈஸியா ஓகே சொல்லிட்டா..?? அந்த அளவுக்கு இவளுக்கு என் மேல லவ் இருக்கா..?? இல்ல.. அவ தம்பி மேல இருக்ற பாசமா..?? எதுவா இருந்தா என்ன..‌‌ நம்ம போட்ட plan success. நமக்கு அது போதும்.” என்று நினைத்து மகிழ்ந்த சேரன் அவளை அணைத்துக் கொண்டு “Thanks baby. எனக்காக நீ என்ன வேணாலும் பண்ணுவேன்னு எனக்கு தெரியும். அதை இந்த தடவை நீ இன்னும் strongஆ எனக்கு Prove பண்ணிட்ட. நீ என்ன எவ்ளோ லவ் பண்றேன்னு நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். I am so lucky to have you.” என்றான்.

திரும்பி தனது சிவந்த கண்களால் அவனை முறைத்துப் பார்த்த சௌபர்ணிகா, “நான் உன்ன லவ் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு நீயும் எனக்கு strongஆ prove பண்ணிட்ட. I am so unlucky.” என்று உடைந்த குரலில் சொன்னவள், அவன் கையைத் தட்டிவிட்டு நேராக பாத்ரூமிற்க்கு சென்று ‌ அதன் doorஐ வேகமாக அடித்து லாக் செய்தாள். “என் கிட்டயே மூஞ்சிய திருப்பிட்டு போறியா? போடி.. இன்னும் எத்தனை நாளைக்கு..?? எங்க சுத்தினாலும் நீ திரும்ப வந்து என் கால்ல தான் விழுந்து கிடக்கணும். அதான் உன் தலையெழுத்து. இனிமே நீ இல்லடி designer. நான் design பண்ற lifeஐ தான் நீ வாழ போற.” என்று நினைத்து விழத்தனமாக சிரித்த சேரன், intercom மூலமாக kitchenக்கு call செய்து dinnerஐ அவர்களது roomக்கு கொண்டு வந்து கொடுக்கச் சொன்னான்.

விஷ்வாவின் மீது கோபமாக இருந்த மேகா எதுவும் பேசாமல் அவனுடன் பைக்கில் சென்று கொண்டிருக்க, “ஒரு candle light dinner கூட இல்லாம இந்த date எப்படி complete ஆகும்..??” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான் விஷ்வா. “ஓஹோ.. அதெல்லாம் தெரியுமா உனக்கு…??” என்று அவள் கோபமாக கேட்க,

“இப்பதாண்டி Googleல dating போகும்போது couples‌ என்னென்ன பண்ணுவாங்கன்னு search பண்ணி பார்த்தேன். நீதானே properஆ ஒரு dating போகணும்னு ஆசைப்பட்ட.. அதான் கேட்டேன்.‌ நீ இதுக்கும் கோச்சுக்கிட்டா நான் என்ன பண்றது..??” என்று பாவமாக கேட்டான் அவன்.

“அப்ப நான் எதுக்கு கோவமா இருக்கேன்னு உனக்கு தெரியாதுல்ல..??” என்று அவள் சற்று தன் குரலை உயர்த்தி கேட்க,

“ச்ச்‌… தெரியும் டி. இப்ப என்ன.. எங்க அப்பாவ பத்தி, எங்க family business பத்தி நான் உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன்.‌ அதானே..?? ஆமா நான் சொல்லல. Because அதெல்லாம் என்னோடதுன்னு நான் நினைக்கவே இல்ல. எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை பத்தி நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும்..?? ஆமா இன்னைக்கு நம்ம அங்க mallக்கு போனதுனால நைட்டு உன்கிட்ட இத பத்தி பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள அந்த ரிஷி stupid dog.. எல்லாத்தையும் உன்கிட்ட உளறிக்கொட்டி.. என்ன நல்லா மாட்டி விட்டுட்டான்.” என்றான் விஷ்வா.

சில நொடிகள் அமைதியாக இருந்த மேகா “அது ஏன் அப்படி உனக்கும் VS groupsக்கும் சம்பந்தமே இல்லைன்ற மாதிரி பேசுற..?? 24 hoursம் நான் உன்க்கூட தான் இருக்கேன். But நீ vs group of companies சம்பந்தமா எதுவுமே பண்ண மாதிரி எனக்கு தெரியலையே.. சௌபர்ணிகா அக்காக்கூட அந்த companyஐ பத்தி பேசுனதே இல்ல. அது உங்க family business தானே.. உங்க அப்பா அம்மாவுக்கு அப்புறம் நீங்கதானே அதெல்லாம் பாத்துக்கணும்..!!” என்று சொல்ல, “அது பெரிய கதை. நம்ம வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் சொல்றேன். And நான் இப்போ கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்.‌ அத பத்தி பேசினா எனக்கு mood off ஆயிடும். உன்க் கூட சேர்ந்து அங்கயும் இங்கயும் சுத்திட்டே இருந்ததுல எனக்கு செமயா பசிக்குதுடி. ப்ளீஸ் வா சாப்பிட்டு போலாம்.” என்று கெஞ்சும் குரலில் சொன்னான் விஷ்வா.

“இப்ப ரொம்ப லேட் ஆயிடுச்சே.. இதுக்கு மேல எப்படி candle light dinner சாப்பிட முடியும்..?? அதுக்கெல்லாம் pre book பண்ணனும் விஷ்வா.” என்று அவள் சொல்ல, “அதெல்லாம் பண்ணியாச்சு பண்ணியாச்சு. போற வழியில அப்படியே blue star restaurantக்கு போ. அங்க நம்ம எல்லாருக்குமே சேர்த்து table book பண்ணி இருக்கேன்.” என்றான் விஷ்வா. அதனால் மகிழ்ந்த மேகா “இதெல்லாம் எந்த gapல பண்ற நீ..??” என்று கேட்க, அவளுக்கு நெருக்கமாக சென்று அமர்ந்த விஷ்வா அவள் மெல்லிடையை வயிற்றோடு சேர்த்து இறுக்கிப்பிடித்து “இந்த gapல தான்.” என்றான்.

“ஏய் கூச்சமா இருக்கு விடுடா.” என்ற மேகா நெளிய, “அப்போ அப்படியே இரு. அப்பத்தான் சீக்கிரமா இந்த கூச்சம் எல்லாம் போகும். அப்புறம் நான் எங்க தொட்டாலும் கூச்சமே இருக்காது.” என்று சொல்லிவிட்டு சிரித்தான் அவன். “போடா.. bad boy.” என்று வெட்கப்பட்டு அவள் சொல்ல, “Will you be my bad girl..??” என்று அவள் தோள்களின் மீது தன் முகத்தை புதைத்தவாறு கேட்டான் விஷ்வா.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured