அத்தியாயம் 149
காலை பொழுது அழகாக விடிந்தது. அதிசயமாக விஷ்வாவிற்கு முன்பாகவே early morningல் கண் விழித்த மேகா, சாரா தங்களை trainingகாக வரச் சொல்லி கீழே அழைப்பதற்குள் தானாக கீழே சென்றாள். அதனால் அவளைப் பார்த்து surpriseஆன ரிஷி “என்ன அண்ணி அதிசயமா யாருமே கூப்பிடாம நீங்களா சீக்கிரம் வந்துட்டீங்க.. அண்ணா வரலையா…??” என்று கேட்க, “அவர் தூங்கிட்டு இருக்காருடா. அக்கா வரலையா..??” என்று கேட்டாள் அவள்.
“நாங்க அவங்களையும், மாமாவையும் கூப்பிட போனோம். அக்கா நேத்து night workல busyஆ இருந்ததனால lateஆ தான் தூங்கினாங்களாம். அவங்க rest எடுக்கட்டும்னு மாமா சொல்லிட்டாரு. எப்படியும் நீங்களும் வரமாட்டீங்கன்னு நினைச்சோம்.. but பரவால்ல வந்துட்டீங்க..!! வாங்க workout start பண்ணலாம்.” என்று ரிஷி சொல்ல, “இல்லடா நான் இன்னைக்கு trainingக்கு வரல. அத சொல்லிட்டு போகத்தான் பார்த்தேன்.” என்றாள் மேகா.
“sorry madam. எங்களால உங்களுக்கு இன்னைக்கு Leave கொடுக்க முடியாது. already last 7 daysல 2 days நீங்க training attend பண்ணல. வேணும்னா coming Sunday நீங்க break எடுத்துக்கோங்க.” என்று சாரா கண்டிப்பான குரலில் சொல்ல, “ஏன்மா உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா..?? நான் என்ன schoolலயா படிக்கிறேன்? principal studentsக்கு strictஆ leave கொடுக்க மாட்டேன்னு சொல்ற மாதிரி சொல்ற.. இப்படியே எல்லாரும் டெய்லியும் என்ன போட்டு torture பண்ணிட்டு இருந்தீங்கன்னா, என்னை யாரும் தேட வேண்டாம்னு எழுதி வச்சிட்டு எங்கயாவது ஓடிப்போய்விடுவேன் பார்த்துக்கோங்க..!!” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் மேகா.
“அவ கிடக்கிறா… நீங்க போங்க அண்ணி.” என்று ரிஷி சொல்ல, “நானும், அனுப்பமாவும் தான் அவங்களோட trainers. அவங்க என்ன பண்ணனும்னு நாங்க தான் Decide பண்ணுவோம். நடுவுல நீ interfere பண்ணினா.. எனக்கு கெட்ட கோபம் வரும். ஒழுங்கா வாய மூடிட்டு போயிடு.” என்று கோபமாக சொன்னாள் சாரா. “Hey… stop.. stop.. என்னால நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சண்டை போட்டுக்குறீங்க? இப்ப என்னமா உனக்கு.. நான் கரெக்டா training attend பண்ணனும் அதானே.. நீ எனக்கு coming Sunday leave குடுக்கிறேன்னு சொன்னியே.. அதை நான் இன்னைக்கு எடுத்துக்குறேன். Sunday confirmஆ வந்துருவேன். ஓகேவா..??” என்று மேகா அவசரமான குரலில் கேட்க, “ஓகே மேம், நீங்க போங்க.” என்றாள் சாரா.
“இன்னைக்கு என்ன special மேகா? நீ trainingக்கு வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிருந்தா, இந்நேரத்துக்கு தூங்கி எந்திரிச்சிருக்கவே மாட்டியே..!! உன்னை எழுப்பி பார்த்து tiredஆகி பாஸ் தான் இங்க வந்து நீ வரலைன்னு சொல்லிருப்பாரு. யாரும் எழுப்பாம நீயா வந்து excuse கேக்குறது எல்லாம் புதுசா இருக்கே..!!” என்று சந்தேகமாக மகேஷ் கேட்க, “அதுவா.. அது surprise. நான் அத பத்தி அவருக்கே தெரியக்கூடாதுன்னு தான் அவர் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு alarmஐ off பண்ணிட்டு வந்தேன். So உங்ககிட்டையும் சொல்ல மாட்டேன் sorry.” என்றாள் அவள்.
“அப்படி என்ன அண்ணி surprise..?? அண்ணாவை Impress பண்ண ஏதாவது secretஆ plan பண்றீங்களா..?? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்..!! யாராவது இந்த மாதிரி சொல்லிட்டு.. அப்புறம் என்ன surpriseன்னு சொல்லாம விட்டுட்டாங்கன்னா, அத தெரிஞ்சுக்கிற வரைக்கும் எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருக்கும். மெதுவா என் காதுல மட்டும் சொல்லுங்க.” என்ற ரிஷி மேகாவின் அருகே சென்று தன் காதை காட்ட, “last time உன்க்கூட சேர்ந்து plan பண்ணித்தான் எல்லாமே சொதப்பிடுச்சு. So எதா இருந்தாலும் நானே பண்ணிக்கிறேன். Bye.” என்ற மேகா விளையாட்டாக அவன் கன்னத்தில் தட்டிவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டாள். அதனால் ரிஷி அவளை பாவமாக திரும்பி பார்க்க, “அவங்க symbolicஆ உன்ன unluckyன்னு சொல்லிட்டு போறாங்கடா. அதுகூட புரியலையா உனக்கு..??” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்து சிரித்தாள் சாரா.
“போடி சார பம்பு..!!” என்ற ரிஷி தரையில் இருந்த புற்களை புடுங்கி அவள் முகத்தின் மீது தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டான். “டேய்.. பைத்தியம் புடிச்ச குரங்கு பயலே.. நில்லுடா..!! நீ என் கையில மட்டும் மாட்டுனேன்னு வையன் ஆடு மாதிரி இதே புல்ல உன்னை திங்க வைக்கலனா என் பேரு சாரா ஜான்சன் இல்லடா..!!” என்ற சாரா தன் தலையில் இருந்த புற்களை தட்டிவிட்டு அவனை பிடிப்பதற்காக ஓடினாள்.
“அப்போ சாரா pensonன்னு வேணா மாத்திக்கோ.” என்ற ரிஷி தொடர்ந்து அவள் கையில் சிக்காமல் அங்கும் இங்கும் ஓடினான். “இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல..!!” என்று மகேஷ் சொல்லிவிட்டு சிரிக்க, “அவங்க எப்பவும் அப்படித்தான். ஆனா இவங்களை இப்படி பார்க்கதான் நல்லா இருக்கு. அவங்க அமைதியா இருந்தா நமக்கு bore அடிக்கும்.” என்றுவிட்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள் அனுப்பமா.
சௌபர்ணிகாவின் Bodyguardsஆன பிரியாவும் மகதியும் அவர்களைப் பார்த்து, “சௌபர்ணிகா மேம் தான் வரலையே.. மேகாவும் போய்ட்டாங்க. நாங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ண போறோம்..?? நாங்களும் போறோம்.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். “நீ போலையா..??” என்று மகேஷ் அணுவைப் பார்த்து கேட்க, “இல்ல, இன்னைக்கு என்னமோ mind ரொம்ப freshஆ இருக்கு. இப்ப Jogging போனா நல்லா இருக்கும்னு தோணுது. நீங்களும் வரீங்களா..??” என்று கேட்டாள் அவள்.
“ம்ம்ம்.. போலாமே..!!” என்ற மகேஷ் அவளுடன் jogging செல்ல தயாராக, அவர்கள் இருவரும் சேர்ந்து garden areaவில் ஓடத் தொடங்கினார்கள்.
நேராக kitchenக்கு சென்ற மேகா அங்கிருந்த servantsகளை “இன்னைக்கு உங்க விஷ்வா சாருக்காக நானே சமைக்கலாம்னு இருக்கேன். சோ நீங்க எல்லாரும் என்ன disturb பண்ணாம நான் cook பண்ணி முடிக்கிற வரைக்கும் வெளிய wait பண்ணுங்க.” என்று சொல்லி வெளியே அனுப்பி விட்டாள்.
பின் “எங்களுக்கு கல்யாணமான இத்தனை மாசத்துல இப்போ வரைக்கும் நான் அவனுக்கு ஒரு coffee கூட போட்டு கொடுத்ததில்ல. So இப்போ நாம செய்யப் போற இந்த breakfastஐ superஆ செஞ்சி அவன impress பண்ணிடனும்.” என்று நினைத்த மேகா “ஆனா அவனுக்கு என்ன பிடிக்கும்னு தெரியலையே..!!” என்று யோசித்தாள். அப்படியே நேரம் செல்ல, இறுதியில் அவளுக்கு தோன்றிய 2, 3 dishகளை செய்து hot boxல் எடுத்து வைத்தாள். அவள் சமையல் வேலையை முடித்துவிட்டு kitchenஐ விட்டு வெளியே வருவதற்கும், அவளை தேடிக்கொண்டு விஷ்வா கீழே வருவதற்கும் சரியாக இருந்தது.
“இங்க என்ன பண்ற..?? Trainingக்கு போகலையா நீ..??” என்று அவன் கேட்க, “இவ்ளோ நேரமா அங்கதான் இருந்தேன். இப்பதான் தண்ணி குடிக்காம்ன்னு இங்க வந்தேன்.” என்று பொய் சொல்லி சமாளித்தாள் அவள். “சரி குடிச்சிட்டியா..??” என்று அவன் கேட்க, “என்னது..??” என்று அவள் புரியாமல் கேட்க, “அதாண்டி.. தண்ணி குடிச்சியான்னு கேட்டேன்.” என்றான் விஷ்வா. “ஓ தண்ணியா.. குடிச்சிட்டேன் குடிச்சிட்டேன்.. நான் கூட நீ வேற எதையோ கேக்குறியோனு நெனச்சு பயந்துட்டேன்.” என்று மேகா அவசரமான குரலில் சொல்ல, “ம்ம்ம்.. இன்னைக்கு ஆபீஸ்க்கு சீக்கிரம் போகணும் ஞாபகம் இருக்குல்ல..?? போய் கிளம்பு.” என்றான் அவன். சரி என்று வேகமாக மண்டையை ஆட்டிய மேகா liftஐ நோக்கி ஓடினாள்.
2 மணி நேரத்திற்கு பிறகு அனைவரும் dining tableல் ஆஜராகி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். விஷ்வாவிற்கு மட்டும் specialஆக சப்பாத்தி, குருமா, மட்டன் கிரேவி, கொத்து பரோட்டா என்று பரிமாறப்பட, மற்றவர்களுக்கு இட்லி, தோசை, ஊத்தப்பம் என்ற பரிமாறப்பட்டது. முதலில் தனக்கு மட்டும் வேறு ஒரு menu serve பட்டிருப்பதை கவனிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த விஷ்வா “என்ன அண்ணாவுக்கு மட்டும் வித விதமா அடுக்கி வச்சிருக்கீங்க.. எனக்கு எங்க மட்டன் கிரேவி..?? அதோட smellஏ சும்மா கும்முனு வருது. எனக்கு கொஞ்சம் வைங்க.” என்று ரிஷி கேட்ட பிறகுதான் தன் தட்டில் இருந்த உணவுகளையும் மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுகளையும் பார்த்தான்.
அவன் எப்போது அதை கவனிப்பான் என்று அதுவரை ஆர்வமான முகத்துடன் காத்திருந்த மேகா, “இதுவரைக்கும் நல்லாத்தான் சாப்பிட்டுட்டு இருந்தான். இது நான் சமைச்சதுன்னு தெரிஞ்சா என்ன சொல்வானோ தெரியலையே..!!” என்று நினைத்து அவனையே பார்க்க, chef Samuel தாத்தாவை அழைத்த விஷ்வா “ஏன் எல்லாருக்கும் ஒரே மாதிரி செய்யாம எனக்கு மட்டும் differentஆ செஞ்சிருக்கீங்க..?? அதுவும் இன்னைக்கு foodஓட tasteம் differentஆ இருக்கே.. புதுசா யார் சமச்சது..??” என்று கேட்டான். அவனையும் மேகாவையும் மாறி மாறி பார்த்த Samuel, “மேகா மேடம் தான் சமசாங்க சார்.” என்று சொல்ல, தன் அனைத்து பற்களையும் காட்டி அவனைப் பார்த்து சிரித்த மேகா “நான்தான் சமைச்சேன். ஏன் நல்லா இல்லையா..??” என்று கேட்டாள்.
ஒரு நொடி அமைதியாக இருந்த விஷ்வா “நல்லா இருக்கு. பாட்டி செஞ்ச மாதிரி இருக்கு.” என்று சொல்ல, “அப்போ நெஜமாவே இதெல்லாம் உனக்கு புடிச்சிருக்கா..??” என்று உற்சாகமான குரலில் கேட்டாள் மேகா. “அதான் நல்லா இருக்குன்னு சொல்லிட்டேன்ல.. அது சரி, திடீர்னு என்ன kitchen பக்கம் எல்லாம் போய் எனக்காக சமச்சிருக்க.. அதுவும் சப்பாத்தி. Mutton gravy combinationஓட..!!” என்று குழப்பமாக அவன் கேட்க, “நான் உன்கிட்ட நிறைய தடவை உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு இருக்கேன். ஆனா நீ அப்படியெல்லாம் particularஆ எந்த dishம் இல்லைன்னு சொல்லுவ. அதான் ரொம்ப நாளா நீ சாப்பிடும்போது, எந்த dishஐ ரொம்ப லைக் பண்ணி சாப்பிடுறேன்னு நோட் பண்ணிட்டே இருந்தேன். இன்னிக்கி சமைக்கணும்னு கிச்சனுக்கு போனதுக்கப்புறம், இத செய்யணும்னு தோணுச்சு. அதான் செஞ்சேன்.” என்றாள் மேகா.
இப்படியே தொடர்ந்து அனைவரும் மேகாவின் சமையலைப் பற்றி பேசி கொண்டிருக்க, சௌபர்ணிகா யாரையும் கண்டுகொள்ளாமல் வேகமாக கிளம்பி வெளியே சென்று கொண்டு இருந்தாள்.
அவளை கவனித்த விஷ்வா “அக்கா ஏன் சாப்பிடாம போறீங்க..?? இன்னைக்கு மேகா சமைச்சிருக்கா. நல்லா இருக்கு. நீங்களும் வந்து கொஞ்சம் taste பண்ணி பாருங்க.” என்று dining tableல் இருந்து குரல் கொடுக்க, “it’s okay Vishwa. நீங்க சாப்பிடுங்க. எனக்கு லேட் ஆகுது. நீங்க சாப்பிட்டு மீதி இருந்தா fridgeல எடுத்து வைங்க. நான் night வந்து சாப்பிடுறேன். Bye.” என்றுவிட்டு வெளியே சென்று விட்டாள்.
“என்னாச்சு இவங்களுக்கு..?? நான் சும்மா ஏதாச்சு பேசினா கூட, எவ்ளோ busyஆ இருந்தாலும் அவங்க வேலையை விட்டுட்டு என்கூட பேசுவாங்க. இப்போ இவ்ளோ காலையில நான் சாப்பிட கூப்பிட்டும் சாப்பிடாம போறாங்க.. இவங்க கிட்ட ஏதோ சரியில்லைன்னு மேகா வேற அப்பப்ப சொல்லிட்டே இருக்கா.. இப்போ இவங்கள பார்க்கும்போது அப்படித்தான் இருக்கு. இவங்களுக்கு என்ன problemன்னு தெரியலையே..!!” என்று யோசித்தான் விஷ்வா.
தொடரும்..