அத்தியாயம் 148
வெகு நேரமாக ஷவரில் கொட்டும் தண்ணீருக்கு கீழே நின்று அந்த நீரோடு தன் கண்ணீரையும் கலக்கவிட்ட சௌபர்ணிகா Barth robeஐ அணிந்து கொண்டு ஈரம் சொட்டும் கூந்தலுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்தவுடன் எழுந்து நின்ற சேரன் “come baby.. Dinner ரெடியா இருக்கு. நான் உனக்காகத்தான் wait பண்ணிட்டு இருக்கேன். எவ்ளோ நேரமா குளிச்சிட்டு இருப்ப..??” என்று கேட்க, அவனை கண்டு கொள்ளாமல் நேராக wardrobeக்கு சென்று ஒரு night dressஐ எடுத்து அணிந்து கொண்ட சௌபர்ணிகா தனது ஈர கூந்தலை துவட்டாமல்க்கூட சென்று மெத்தையில் விழுந்து தன் கண்களை மூடினாள்.
தூங்குவதற்காக அல்ல. சேரனின் முகத்தை பார்க்கக்கூட அவளுக்கு பிடிக்கவில்லை.
“என்ன இவ இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் கோபப்படுறா… ஒருவேளை நம்மளும் கொஞ்சம் ஓவரா தான் போயிட்டமோ..!! ச்ச்ச்.. சரி.. போவோம்.. பின்ன எதுவும் பண்ணாம சும்மா பல கோடி மதிப்புள்ள சொத்து ஈஸியா வந்து வாயில விழுமா..??” என்று நினைத்த சேரன் கையில் ஒரு பெரிய towelஐ எடுத்துக்கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்து “ஏற்கனவே அவ்ளோ நேரம் பாத்ரூம்ல ஈரத்துல நின்னு குளிச்சிட்டு வந்திருக்க.. இப்படி தலையையும் துவட்டாம படுத்தா சேருமா..?? ஏண்டி இப்படி எல்லாம் பண்ற..?? இனிமே இப்படி carelessஆ இருக்காத.” என்று அன்பொழுக பேசினாள்.
அவன் எப்படி விதவிதமாக dialogues பேசி reel சுற்றினாலும் சௌபர்ணிகா தெரியாமல் கூட அவன் பக்கம் திரும்பவே இல்லை.
இருப்பினும் “நீ நம்பினாலும், நம்மலைனாளும், ஒன்னு மட்டும் உண்மை டி. என் heartல எங்கையோ ஒரு மூலையில உன் மேல பாசம் இருக்க தாண்டி செய்து. என்னதான் இருந்தாலும், நீ பொண்டாட்டின்னு வரும்போது ஒரு feel வரத்தானே செய்யும்.. கொஞ்சம் கூட emotionsஏ இல்லாம இருக்கிற அளவுக்கு நான் என்ன கல்லா..?? நிஜமாவே எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டி.” என்ற சேரன் தொடர்ந்து அவளது ஈர கூந்தலை towelஐ வைத்து உலர்த்தினான்.
ஆனால் அவளோ அசைவின்றி அப்படியே கிடக்க, “நீ சாப்பிடாம இருக்கும் போது, எனக்கு மட்டும் எப்படி டி சாப்பாடு இறங்கும்..?? நீ சாப்பிடலைன்னா நானும் சாப்பிட மாட்டேன்.” என்ற சேரன் அவள் மீது போர்வையை போர்த்திவிட்டு, தானும் அதற்குள் புகுந்து கொண்டு அவளை அணைத்துக் கொண்டு தான்.
அப்போதும் அவளிடமிருந்து ஒரு reactionம் வராமல் போக, “என்ன இவ.. அசையாம அப்படியே சிலை மாதிரி இருக்கா..?? ஒருவேளை போய் சேர்ந்துட்டாளா..??” என்று நினைத்து ஷாக்காகி அவள் மூக்கின் அருகே தன் விரல்களை கொண்டு சென்று மூச்சு வருகிறதா? என்று check செய்தான்.
சௌபர்ணிகா தன் கண்களை இறுக்கமாக மூடி இருக்க, அவள் மூச்சு சீராகத்தான் வந்து கொண்டிருந்தது. அதை உணர்ந்த பிறகுதான், சேரனுக்கு போன உயிர் மீண்டும் வந்ததைப் போல இருந்தது. விஷ்வாவைப் பற்றி அவனுக்கும் தெரியும் அல்லவா..?? அதனால் உள்ளுக்குள் ஒரு பயம் அவ்வளவு தான்.
வீட்டிற்கு வந்த மேகா விஷ்வாவுடன் சேர்ந்து அவர்களது ரூமில் உள்ள bedல் விழுந்தாள். அவர்கள் இருவரும் ceilingஐ பார்த்துக் கொண்டிருக்க, “இன்னைக்கு day ரொம்ப Jollyஆ இருந்துச்சுல்ல..!!” என்று கேட்டான் விஷ்வா. நகர்ந்து அவன் அருகில் சென்று அவனது நெஞ்சில் தலைஒ வைத்து படுத்த மேகா “Yes. I thoroughly enjoyed Every second. Thanks Vishwa.” என்று சொல்ல, அப்படியே அவளை அணைத்துக் கொண்ட விஷ்வா “நான்தான் உனக்கு Thanks சொல்லணும். You made my day special.” என்றான்.
“இனிமே நம்ம every Sunday இந்த மாதிரி outing போலாமா..??” என்று அவள் ஆசையாக கேட்க, “ம்ம்.. போலாம் போலாம். But again அந்த shopping mall மட்டும் வேண்டாம்.” என்றான் அவன்.
“அதான் ஏன்னு எனக்கு புரியல. நான் அப்போ கேட்டதுக்கு நீ அப்புறமா சொல்றேன்னு சொன்னில.. எவ்ளோ நேரமாகுது.. நீ எதுவுமே சொல்லல..!!” என்று மேகா கேட்க, பெருமூச்சுவிட்ட விஷ்வா “உனக்குதான் தெரியுமே எங்க அம்மா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்க. ஏன்னு தெரியல அவங்க நார்மலா இருக்கும்போது கூட, அவங்களுக்கும் எங்க அப்பாவுக்கும் நடுவுல terms சரியில்ல. அதனால எங்க அப்பாவும் எங்கள நல்லா பாத்துக்கல. எங்க அம்மாவும் எங்கள நல்லா பாத்துக்கல. அக்காவை மட்டும் அம்மா பாட்டி வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க.
அம்மா இறந்ததுக்கு அப்புறம் இன்னும் எங்க அப்பாவுக்கும் எங்களுக்கும் நடுவுல இருந்த relationship இன்னும் worst ஆயிடுச்சு. கரெக்டா சொல்லணும்னா அவர் எங்களுக்கு பேருக்கு மட்டும்தான் அப்பாவா இருந்தாரு. அதனால எங்க யாருக்குமே பெருசா அவரை பிடிக்காது. எங்கள பாத்துக்கறதுக்காக பாட்டி இங்க ஊருக்கு வந்தாங்க. அப்பவும் அப்பா பாட்டி கூட எங்களை தனியா guest houseல தங்க வச்சுட்டாரு. என் சொந்த காசுல அவர் இறந்து போனதுக்கப்புறம் இந்த Banglaவ அவர்கிட்ட இருந்தே நான் வாங்கி alter பண்ணி நாங்க எல்லாரும் இங்க வந்தோம். அது என்னமோ தெரியல அவர் எங்களுக்கு சரியான அப்பாவா இல்லாததுனாலையோ என்னமோ அவரோட properties மேல எங்களுக்கு உரிமை கொண்டாட பிடிக்கல.
சோ நானும், விஜயும் காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே MV Techஐ part time job போயி low budgetல startup companyஆ சின்னதா start பண்ணோம். அப்புறம் எங்க பாட்டி கொஞ்சம் எங்கள financially support பண்ணாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா developஆகி இப்ப இங்க வந்திருக்கோம். சௌபர்ணிகா அக்காவும்க்கூட அதே மாதிரி தான் அவங்க காலேஜ் daysல இருந்தே வேற ஒருத்தவங்ககிட்ட designerஆ work பண்ணிட்டு தான் V2 fashion houseஐ கொஞ்சம் கொஞ்சமா develop பண்ணாங்க. So totally VS groupsக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எங்க அப்பாவோட lawyer friend ஒருத்தர் தான் அந்த companiesஐ manage பண்ணிட்டு இருக்காரு.” என்றான்.
அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த மேகா, “உன்னையும், சௌபர்ணிகா அக்காவையும் பார்க்கும்போது ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருக்கு விஷ்வா. நான் பார்த்தவங்க எல்லாம் ஆதித்யா மாதிரி rich peoplesஓட spoiled kids தான். But நீங்க ரெண்டு பேரும் self made. உங்க ரெண்டு பேர்க்கூடயுமே சேர்ந்து நான் Work பண்ணி இருக்கேன். உங்க talent and hard workனால தான் நீங்க இந்த heightல இருக்கீங்க. இன்னும் மேல மேல நீங்க போயிட்டே இருப்பீங்க.” என்று சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொள்ள, “நான் மட்டும் உங்க வீட்ல பொறந்திருந்தா… இந்நேரம் எப்படி இருந்திருப்பேன்..??” என்று கேட்டான் விஷ்வா.
“எப்படி இருந்திருப்ப.. ஒருவேளை முத்து அண்ணா மாதிரி இருந்திருப்ப. But கண்டிப்பா நீ இப்ப இருக்குற மாதிரி இருந்திருக்க முடியாது. எங்க வீடு ரொம்ப சாதாரணமானது. எங்க அண்ணன்களை எல்லாம் பார்க்க கோவக்காரங்களா தெரிஞ்சாலும், பந்தம் பாசம்ன்னு வரும்போது உயிரைக்கூட குடுப்பாங்க தெரியுமா..??” என்று மேகா கேட்க, “தெரியும் தெரியும். அதே மாதிரி தேவைப்பட்டா மத்தவங்க உயிரையும் எடுப்பாங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்தான் விஷ்வா.
“ஆமாமா.. மனசுல அந்த பயம் இருக்கட்டும்.” என்று சொல்லிவிட்டு அவளும் சிரிக்க, “futureல பொறக்க போற நம்ம babies எப்படி இருப்பாங்கன்னு தெரியல. அதெல்லாம் நினைச்சாலே interestingஆ இருக்கு.” என்று ஆச்சரியமாக அவன் சொல்ல, “நீ ஒரு extremeன்னா, நான் ஒரு extreme. So நமக்கு பொறக்க போறது எந்த extremeல இருக்குமோ தெரியல. But ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும். நம்ம Babies உன்ன மாதிரி நல்லா fairஆ என்ன மாதிரி cuteஆ மொத்தத்துல நல்லா அழகா இருக்கும்.” என்றாள் மேகா.
“அவங்க பார்க்க எப்படி இருந்தாலும் பரவால்ல. அவங்க life மட்டும் என்ன மாதிரி tragicalஆ இருக்கக் கூடாது. அதுதான் என்னோட ஒரே wish. நம்ம Babiesக்கு நம்ம ஒரு Pleasantஆன lifeஐ create பண்ணி கொடுக்கணும். அவங்க என்ன பண்ணனும்னு நினைச்சாலும், நம்ம அவங்களுக்கு supportiveஆ இருக்கணும். முக்கியமா physically and mentally அவர்களுக்கு strongஆ இருக்க சொல்லிக் கொடுக்கணும்.” என்று விஷ்வா ஒவ்வொன்றாக உணர்ச்சி பொங்க feel செய்து சொல்ல, அவன் பேசுவதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த மேகா “நீ கண்டிப்பா ஒரு best fatherஆ இருப்ப விஷ்வா. நீ சொல்றத எல்லாம் கேட்கும் போது, நான் உனக்கு wifeஆ இருக்கிறதுக்கு பதிலா குழந்தையா பிறந்திருக்கலாம் போல..!!” என்று சொல்லிவிட்டு சிரிப்பாள்.
“நீ இப்பவே எனக்கு குழந்தை தாண்டி.” என்ற விஷ்வா அவளை அணைத்துக் கொள்ள, “daddy.. daddy.. Vishwa daddy..!!” என்று சொல்லி அவனைக் கூப்பிட்டு பார்த்த மேகா, “இப்படி கூப்பிடுறதும் நல்லா தான்டா இருக்கு.” என்றுவிட்டு அவன் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தாள்.
தொடரும்..