அத்தியாயம் 138
“யார் என்ன சொன்னாலும் நான் விரதம் இருப்பேன் போ.” என்று மேகா சொல்ல, “அப்போ நான் சொன்னாலும் நீ கேக்க மாட்ட..!!” என்று கேட்டுவிட்டு அவளை பார்த்து முறைத்தான் அவன்.
“அதான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல… அப்புறம் நீ சொன்னா மட்டும் கேட்கணுமா..??” என்ற மேகாவும் அவனைப் பார்த்து முறைக்க, “Okay Fine, அந்த சஷ்டி விரதம் என்னைக்கு இருக்கணும்னு பார்த்து சொல்லு. நம்ம ரெண்டு பேருமே விரதம் இருந்து evening கோவிலுக்கு போகலாம். நமக்கு குழந்தை பிறக்கனும்ன்னு தானே விரதம் இருக்க.. அப்போ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே விரதம் இருக்கலாம். பொண்ணுங்க மட்டும் எதுக்கு விரதம் இருக்கணும்..??” என்று கேட்டான் அவன்.
அதுவரை தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த மேகா அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து “சூப்பர்.. நம்ம ரெண்டு பேருமே சேர்ந்து விரதம் இருந்தா.. அந்த முருகன் சீக்கிரமாவே நம்ம வேண்டுதல நிறைவேத்திடுவாரு.” என்றவள், அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்து “You are chooo sweettt..!! தெரியுமா..??” என்று கேட்டுவிட்டு சிரித்தாள். “எல்லாம் தெரியும் போடி.” என்ற விஷ்வா தன் முகத்தை திருப்பிக்கொள்ள, “நீ கோபப்பட்டா.. அப்படியே உன் cheeks எல்லாம் red colourல மாறிடுது தெரியுமா..!! இந்த கோபத்தில் சிவந்த கன்னங்கள்ன்னு பொண்ணுங்களை எல்லாம் வர்ணிக்கும் போது poets சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இருக்குடா உனக்கு. எனக்கு கூட இப்படி எல்லாம் ஆகாது. Sometimes உன் glowing skinஐ பாத்தா எனக்கே கொஞ்சம் liteஆ பொறாமையா தான் இருக்கும்.” என்றாள் மேகா.
“ஓஹோ.. உனக்கு அப்படி எல்லாம் ஆகாதுன்னு யார் சொன்னது..??” என்று அவன் கேட்க, “வேற யார் சொல்லணும்..?? எனக்கே தெரியுமே.. நான்தான் டெய்லியும் கண்ணாடில என் faceஐ பாக்குறனே… எனக்கு தெரியாதா..??” என்றாள் அவள்.
“நான் உன்கிட்ட மெதுவா close upல வந்து.. அப்படியே உன் neckல இருந்து கிஸ் பண்ணிக்கிட்டே கீழ போகும் போது.. உன் காது எப்படி செவந்து போயிருக்கும்னு பாத்திருக்கியா நீ..?? நான் மெதுவா உன் lipsல kiss பண்ணும்போது, நீ வெக்கப்பட்டு உன் cheeksல ஓரு glow வரும் பாரு.. நீ makeup போட்டா கூட அவ்வளவு அழகா இருக்க மாட்டடி. அப்படி இருப்ப.. அப்படியே அந்த கன்னத்தை கடிச்சு திங்கலாம் போல இருக்கும். நான்தான் பாவம் உனக்கு வலிக்குமேன்னு விட்டுவிடுவேன். But உன்ன அப்படி பாக்குறதுக்காகவே அந்த டைம்ல இன்னும் எனக்கு என்னென்னவோ பண்ணனும்னு தோணும். அப்புறம் அந்த..!!” என்று விஷ்வா தொடர்ந்து husky voiceல் feel செய்து எதையோ சொல்ல வர, இப்போதே மேகாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்துவிட்டது.
அதனால் சட்டென அவன் வாயை பொத்திய மேகா “போதும் போதும் நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று சொல்ல, அவள் உள்ளங்கையில் முத்தம் கொடுத்தான் அவன்.
“ச்சீ.. போடா.. சும்மா இருக்க மாட்டியா..??” என்ற மேகா அவனிடமிருந்து தன் கையை விளக்கிக் கொண்டு சிவந்து போன தன் முகத்தை முன்னே இருந்த கண்ணாடியில் பார்த்துவிட்டு “நான் பாத்திருக்கேன்.. நான் பார்த்து இருக்கேன்னு சொல்லி.. என்னோட செவந்து போன முகத்தை என்னையே பாக்க வச்சிட்டான் இவன். சரியான பொறுக்கி பையன்.” என்று நினைத்து தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அன்றிலிருந்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஷ்வா, மேகா இருவருமே office workல் busyஆக இருந்தார்கள். அரவிந்த் தன்னிடம் பேசாததால் சோகமே உருவாக இருந்த வெண்ணிலா யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல், தூங்காமல், காலேஜுக்கு கூட செல்லாமல் நித்தமும் mobile screenஐ வெறித்து பார்த்தபடி இருந்தாள்.
“அந்த காலத்துல நாங்க எல்லாம் மனசுக்கு பிடிச்சவனை கட்டிக்கிட்டா வாழ்ந்தோம்..?? நினைச்ச வாழ்க்கை அமையலனா கெடச்ச வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சுக்கணும் அதுதான் கண்ணு புத்திசாலித்தனம். மத்தவங்களுக்கு உடம்பு சரி இல்லாம போனா வைத்தியம் பாக்கணும்னு ஆசைப்பட்டு நீ டாக்டருக்கு படிக்கிற. இப்ப நீ மனசு உடைஞ்சு போய், சாப்பிடாம தூங்காம ஹாஸ்பிடலுக்கு போற நிலைமையில இருக்கியே..!! இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் நம்ம குடும்பத்துக்கு வேணா நிலா. பேசாம அப்பா சொல்றதை கேளு.
உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல் சொல்லு..?? அவர் கூட சந்தோசமா வாழ்றதுக்கு என்ன வழின்னு மட்டும் யோசி. இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிட்டு, எங்களையும் கஷ்டப்படுத்தாதடி.” என்று வசந்தி கண்ணீருடன் நிலாவின் கையைப் பிடித்து புலம்பியும், அப்படியே அசையாமல் சிலை போல அமர்ந்திருந்தாள் அவள்.
“ஐயோ எப்படி இருந்த என் புள்ள.. இப்ப இப்படி எல்லாத்தையும் பறிக்குடுத்த மாதிரி மனசு உடைஞ்சு போய் மூளையில உட்கார்ந்திருக்கே..!!” என்று நினைத்து வசந்த தன் தலையில் அடித்துக் கொண்டு அழ, “நீங்க அழுகாதீங்க மா. நான் அவகிட்ட பேசி அவளை சாப்பிட சொல்றேன்.” என்ற கலைச்செல்வி வசந்தியை அனுப்பிவிட்டு தட்டில் சாப்பாட்டை போட்டு எடுத்துக்கொண்டு சென்று நிலாவின் அருகே அமர்ந்தாள்.
அவளையும் தட்டில் இருந்த உணவையும் வெறித்துப் பார்த்த நிலா “என்ன அத்தை.. நீங்களும் எங்க அம்மா மாதிரியே advice பண்ண போறீங்களா..?? நீங்க ஏதாவது சொல்லனும்னா, போய் எங்க அப்பாகிட்ட சொல்லுங்க. என்கிட்ட பேசி டைம் waste பண்ணாதீங்க. அவர் பொண்ணு தானே நானு.. அவருக்கு இருக்கிற வீராப்பு, ரோஷம், பிடிவாதம் எல்லாம் எனக்கும் இருக்கும்.” என்று சொல்ல, “அதெல்லாம் இருக்க வேண்டியதுதான். அதுக்கு எதுக்குடி நீ வயித்த காய போடுற..?? மத்தவங்கள நீ நம்புறியோ இல்லையோ… விஷ்வா சார நம்பு. அவர் அரவிந்த் அவருக்கு தம்பி மாதிரின்னு சொல்லி இருக்காரு. அப்படி இருக்கும்போது அரவிந்த்காகவாவது ஏதாவது பண்ணுவாருல்ல..?? அவங்க எதுவும் செய்யறதுக்குள்ள, நீ இப்படி திங்காம தூங்காம இருந்து உடம்பு சரி இல்லாம மேல போய் சேர்ந்துடாத. நான் அவ்வளவுதான் சொல்லுவேன். நம்ம நினைக்கிற எதுவும் உடனே ஈஸியா நடந்திடாது நிலா. லவ் பண்ணும் போது, பொறுமையா இருக்கறது ரொம்ப முக்கியம். அப்படி இத்தனை வருஷமா நான் பொறுமையா இருந்ததுனால தான், இன்னைக்கு நான் என் வெற்றிக்கு பொண்டாட்டியா இருக்கேன். இந்தா.. நல்லா சாப்பிடு. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். அப்படியே உன்னை விட்டுட மட்டோம்.” என்று அவள் மண்டைக்கு உரைக்கும்படி சொன்னாள் கலைச்செல்வி.
அதனால் கொஞ்சம் நார்மலான நிலா தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தாள். அதை கவனித்த காளீஸ்வரன், “இத்தனை நாளா மூஞ்சியை இழுத்துட்டு திரிஞ்ச புள்ள.. இப்ப எப்படி திடீர்னு சரியாச்சு..?? ஏதோ சரியில்ல. இந்த இளவட்ட புள்ளைங்க எல்லாம் சேர்ந்துக்கிட்டு ஏதோ திட்டம் போடுதுங்கன்னு நினைக்கிறேன்.” என்று நினைத்து நிலா அரவிந்தை தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் அவளது mobile phoneஐ புடுங்கி வைத்துக் கொண்டார்.
“நீங்க பண்ண வேலையால.. அவர் என்கிட்ட பேசறதே இல்ல. இத வச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்..?? எனக்கு ஒன்னும் தேவை இல்ல.” என்ற வெண்ணிலா இருந்த கோபத்தில் அவர் கையில் இருந்த தனது mobile phoneஐ புடுங்கி சுவற்றில் தூக்கி அடித்து உடைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
இன்று Sunday என்பதால் விஷ்வாவும் மேகாவும் வெகு நேரமாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் கீழே garden areaவில் wait செய்து கொண்டிருந்த 4 bodyguard பெண்களும் “இன்னைக்கு Sundayனால எல்லாரும் rest எடுத்துட்டு இருக்காங்க போல.. வாங்க நம்மளும் போலாம்.” என்று அவரவர் ரூமிற்கு சென்று விட்டார்கள்.
முதலில் கண் விழித்த மேகா தன்னை ஒட்டி கொண்டு படுத்திருந்த விஷ்வாவின் முகத்தில் தட்டி “மணி எட்டாவுது. நீ workout பண்ண போகலையா?” என்று கேட்க, தன் கண்களை கூட திறக்காமல் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட விஷ்வா “இன்னைக்கு Sunday. So எல்லாத்துக்கும் leave. உனக்கு தான் தூங்க பிடிக்கும்ல்ல.. கம்முனு கண்ண மூடி நல்லா தூங்கு. அப்புறமா afternoon எந்திரிச்சு கிளம்பி straightஆ lunchக்கு கீழ போய்க்கலாம்.” என்றான்.
அவன் தோள்களில் கை வைத்து அவனை தள்ளிய மேகா “போ.. எனக்கு தூக்கம் போயிருச்சு. நீயும் எந்திரி. நம்ம எங்கேயாவது வெளியே போகலாம்.” என்று கெஞ்சலாக சொல்ல, “டெய்லியும் தானேடி வெளிய போயிட்டு இருக்கோம்.. இன்னைக்கு ஒரு நாள் வீட்ல rest எடுக்கலாம் please. எனக்கு தூக்கம் வருது என்ன தூங்க விடு. நானெல்லாம் sleepy pills போடாம இவ்ளோ நேரம் தூங்குறதே பெரிய விஷயம்டி.” என்றான் அவன்.
“போதும் நடிக்காத விஷ்வா, எந்திரி. நீ இப்பலாம் டெய்லியும் நல்லாதான் தூங்குற. நம்ம டெய்லியும் வெளிய போயிட்டு தான் வர்றோம். பட் ஆபீஸ் தவற வேற எங்க என்னை கூட்டிட்டு போன நீ..?? நான் ஏதாவது movie பாக்கணும்னு சொன்னா கூட, உடனே வீட்ல இருக்கிற மினி தியேட்டர்ல பாருன்னு சொல்ற. இதுவரைக்கும் என்ன எங்கையாவது ஜாலியா வெளிய கூட்டிட்டு போய் இருக்கியா நீ..?? இன்னைக்கு நீயும் நானும் outing போறோம். இதுதான் நம்மளோட first dateன்னு நினைச்சுக்கோ.” என்றாள் மேகா.
நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்த விஷ்வா “ஏன் உனக்கு இந்த dating எல்லாம் evening timeல போனா ஆகாதா..??” என்று கேட்க, இல்லை என்று தலையாட்டிய மேகா, “இப்பவே கிளம்பினா தான் night வரை fun பண்ணி enjoy பண்ண முடியும். நீ வரலைன்னா போ. நான் வேற யாராவது stranger கூட blind date போறேன். ஆக மொத்தம் எனக்கு இன்னைக்கு dating போயே ஆகணும்.” என்றவள், அவனை தன்மீது இருந்து தள்ளிவிட்டு எழுந்தாள்.
தொடரும்..